Skip to main content

Posts

Showing posts with the label புத்தகங்கள்

புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு

கற்போரைக் கைப்பிடித்துச் செல்லும் புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு (1) ஒரு சிறுவனின் கதை: நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒரு சிறுவன், தன் வீட்டுத் தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டான். அப்பா எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்குத்தான் விற்றிருந்தான் என்றாலும், சொல்லாமல் செய்ததால் கோபமடைந்த தந்தை அவனை அடித்து விரட்டினார். வெள்ளாற்றின் மறுகரையில் இருந்த கீரப்பாளையம் கிராமத்திற்கு ஓடிப்போன அந்தச் சிறுவன், அங்கே வசித்த தன் பெரியப்பா வீட்டுக்கு சென்று தஞ்சம் புகுந்தான். பெரியப்பா சிறந்த வைணவ அறிஞர். ஸ்ரீமத் அழகிய மணவாள ராமானுஜ ஏகாங்கி சுவாமிகள் என்பது அவர் திருநாமம். அங்கேயே தங்கி, தன் பெரியப்பாவிடமே தமிழ் இலக்கியத்தையும் வைணவத்தையும் கற்கத் தொடங்கினான். பெற்றோர் எவ்வளவோ அழைத்தும் அந்தச் சிறுவன் மீண்டும் வீட்டிற்குச் செல்லவில்லை. (2) என் சொந்தக் கதை: முப்பது வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில், எழுத்தாளர் சுஜாதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை ஆழ்வார் பாடல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் திரு. புருஷோத்தம நாய...

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.  கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நான் சென்னை பு.காட்சிக்குச் செல்கிறேன். தொடர்ச்சியாகப் பல விஷயங்கள் மாறிவிட்டன. மேலட்டை மாறி, அரங்குகள் கூடி, எழுத்தாளர்கள் அதிகரித்து.. வாசகர்கள்?  “எப்படிப்பா இவ்வளவு பெரிய புக் படிக்க உனக்கு டைம் இருக்கு?”  கடந்த ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்த போதே கூட்டம் வேகமாக உள்ளே சென்று கொண்டு இருந்தது. நானும் வேகமாக உள்ளே சென்றேன்.  நுழைவாயிலில், ’வெரேலி ஆர்ட்’ படங்களுடன் ஜூட் பைகள் கீழே பரப்பி கூவிக் கூவி விற்க ஆரம்பிக்க, அருகில் ‘சார் இலவசப் பைபிள்’ வாங்கிக்கோங்க என்று கூடாரத்தில் கூவிக்கொண்டு இருந்தார்கள். அனுமதிச் சீட்டு இல்லை. உள்ளே நுழைந்த போது, ’சார் அந்த கேட் வழியா போங்க’ என்றார்கள். முதல் வரிசையில் நுழைந்த ஏழாவது நிமிடம் ஒரு 6-7வது படிக்கும் சிறுவன் தன் அப்பாவின் கையைப் பிடித்து இழுத்து… கண்ணீருடன் கண்ணில் பட்டான். அப்பாவிடம் புத்தகம் வாங்கித்தர அடம் பிடிக்கிறான் என்று நினைத்து அவன் அருகில் சென்றேன். “அப்பா இப்பவே வீட்டுக்கு போகலாம். போர் அடிக்குது” “இப்பத்தானேடா உள்ளே நுழைந்திருக்கிறோம்...

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம்

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம் சென்ற வருடம் ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கவலைப் படாதீர்கள். இந்தக் கட்டுரை அதைப் பற்றியது இல்லை. மொழிபெயர்த்த சமயம்  ‘பிபேக் டெப்ராய்’ (Bibek Debroy) என்ற பெயர் அடிபட்டது. (விவேக் டெப்ராய் என்றும் பாடம்). அவரைக் குறித்துத் தேடிய போது, கிட்டத்தட்ட எல்லா இதிகாசப் புராணங்களையும் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். இவரை வியந்துகொண்டு இருந்த சமயத்திலேயே இந்தப் பூவுலகை விட்டு(நவம்பர் 2024) சென்றுவிட்டார். இவர் எழுதிய புத்தகங்களை வரிசையாகப் பார்த்த போது  ’Manmatha nath dutt - translator extraordinaire ’ ( மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர்) என்ற புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. கீழடியில் தோண்டி எடுத்த அழுக்கு புத்தகம் ஒன்றை அமேசான் அனுப்பியது. திருப்பி அனுப்பினேன். மேலும் ஆழமாகத் தோண்டி எடுத்த வேறொரு புத்தகத்தை அனுப்பினார்கள். திருப்பி அனுப்பும் விளையாட்டை நிறுத்துவிட்டு, புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.  இந்தப் புத்தகம் சீரியஸ் ரீடிங் வகையைச் சார்ந்தது. நி...

108 திவ்ய தேசங்கள் புத்தக அனுபவம்.

108 திவ்ய தேசங்கள் புத்தக அனுபவம். திருச்சியில் கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு உத்தியோகத்துக்கு சென்னைக்கு வந்த போது என் அப்பா ’சென்னையை சுற்றி நிறைய திவ்ய தேசங்கள் இருக்கிறது, வாரயிறுதியில் முடிந்தால் செல்’ என்று கைச்செலவுக்குக் கொஞ்சம் பணமும், லிப்கோ 108 திவ்ய தேசங்கள் என்ற புத்தகம் ஒன்றையும் எனக்குக் கொடுத்தனுப்பினார். திருவல்லிக்கேணியில் ஒண்டியாக இருந்த போது பைக்கில் பல திவ்ய தேசங்களுக்குச் சென்று அதைக் குறித்து எழுதினேன். என் முதல் எழுத்து இப்படித் தான் ஆரம்பித்தது என்று கூடச் சொல்லலாம். என்றாவது ஒரு நாள் எல்லா திவ்ய தேசம் குறித்து எழுதி படங்களுடன் தொகுக்கலாம் என்ற எண்ணத்தில் திவ்ய தேசப் பெருமாள் படங்களையும், புத்தகங்களையும் சேகரிக்கத் தொடங்கினேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு பிரபல வார இதழில் 108 திவ்ய தேசம் என்ற தொடர் வந்தது, அதில் ஆச்சரியமான திவ்ய தேசப் படங்கள் வந்துகொண்டு இருந்தது. இது போன்ற படங்கள் அவர்களுக்கு எங்கேயிருந்து கிடைக்கிறது என்று வியப்பாக இருந்தது. ஒரு வாரம் அந்தப் படத்துடன் ஓரத்தில் வாட்டர் மார்க் ஒன்று தெரிந்தது. ‘தஞ்சை மூர்த்தி’ என்று பிரபலப் புகைப்படக்காரர் திர...

சித்திர ராமானுஜர் - அறிவிப்பு

சித்திர ராமானுஜர் - அறிவிப்பு 2017ல் மேல்கோட்டை சென்றிருந்த போது ‘Academy of Sanskrit Researchல் பல ஓலைச்சுவடிகளுக்கு மத்தியில் ஸ்ரீராமானுஜரின் வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அழுக்கு படிந்து அடுத்த மழைக்கு நாசமாகிவிடும் போல இருந்தது. அங்கே இருப்பவர்களிடம் மொத்தச் சரித்திரமும் இருக்கிறதா என்று கேட்டேன். சில படங்கள் தான் இருக்கிறது என்றார்கள்.  இது யாருடையது, எங்கே கிடைக்கும் என்று தேடி ஓய்ந்துவிட்டேன். பிறகு சமீபத்தில் அந்தப் படங்கள் கருப்பு வெள்ளையில் கிடைத்தது. ராமானுஜருடைய வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 108 படங்கள்.  இந்தப் படங்களை ‘ராமானுஜர் தேசிக முனிகள்’ அறக்கட்டளை மூலம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் கொண்டு வர வேண்டும் என்று ஸ்ரீராமானுஜரின் 1008வது திருநட்சத்திரம் அன்று தோன்றியது. இதன் வேலைகளை இன்று முதல் எம்பெருமானாரின் ஆசிகளுடன் ஆரம்பிக்க இருக்கிறேன்.  புத்தகம் குறித்து மேலும் விவரங்களை அவ்வப்போது சொல்லுகிறேன்.  உடையவர் திருவடிகளே சரணம்  -சுஜாதா தேசிகன் சுஜாதாவின் 90வது பிறந்த தினம் 

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர் ( தமிழில் சுஜாதா தேசிகன்)

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர்  ( தமிழில் சுஜாதா தேசிகன்)  ஸ்ரீமத் ராமாயணம் ஓர் இதிகாசம். இதிகாசம் என்றால் ‘அப்படித்தான் இருந்தது’ என்று பொருள். அதனால் ராமர் இருந்தார் என்று நம்பப்படுகிறது இல்லை. ராமர் இருந்தார்.  ஸ்ரீமத் ராமாயணத்தை ஆழ்வார்களும், ஆசாரியார்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் வாக்குக்கு ஏற்றார் போல், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றுக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருமலைக்குச் சென்றார். குலசேகர ஆழ்வார் மொத்த ராமாயணத்தையும் ’இன்தமிழில்’ சுருக்கமாக அருள, ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்ற அற்புதமான ஒன்றை நமக்குச் சமஸ்கிருதத்தில் அருளினார். கம்ப ராமாயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயம். வடக்கே துளசிதாசர் என்ற மஹான் ’ராமசரிதமானஸ்’ (ராமரின் செயல்களால் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள்) என்று ஸ்ரீராமரின் செயல்களைத் தொகுத்து வழங்கினார். இப்படி ராமாயணத்தைப் பல விதமாக, பல மொழிகளில் நமக்குப் பலர் தந்துள்ளார்கள். எந்த மொழியில் எப்படி இருந்தாலும் அதில் ஸ்ரீராமர் குடிகொண்டிருக்கிறார்.  ஸ்ரீமத் ராமாயணத்துக்கு இன்னொரு...

சில விஷயங்கள்

சில விஷயங்கள்  ராஜாஜி நான் பிறப்பதற்கு முன் எழுதிய தலையங்கங்களை அவ்வப்பொது படிப்பது உண்டு. அப்படிப் படிக்கும்(உண்மைகள் உறங்குவதில்லை) போது அந்தப் புத்தகத்தின் முன்னுரையை (வானதி ராமநாதன்) மீண்டும் ஒருமுறை படித்தேன்.  ”என்னுடைய சக்கரவர்த்தித் திருமகன், வியாசர் விருந்து என்ற இரண்டு நூல்களையும் 'இராமாயணம்', 'மகாபாரதம்' என்ற பெயரில் வானதி பதிப்பகத்தார் என்னுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெளியிடுகிறார்கள்.' - சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி' என்று 26-8-72 தேதியிட்டு ஓர் அறிவிப்பைக் 'கல்கி' வார இதழ் வெளியிட்டது. அப்போது என் தந்தையாருக்கு ராஜாஜி அவர்கள் ஆசீர்வாதம் செய்து இரண்டு பழங்களையும் எடுத்துத் தந்தார். "நான் கவர்னர் ஜெனரலா இருந்தது வெறும் ரெகார்டுலதான் இருக்கும். ஆனா இந்த மகாபாரதமும் இராமாயணமும் எழுதினேன் பாரு, அது இரண்டுமே இரண்டு கனிகள். கற்பகக் கனிகள். அதை இல்லை என்று சொல்லாமல் எப்பவும் மக்களுக்குக் கிடைக்கும்படியா மலிவான விலையிலே புத்தகமாப் போட்டுத் தந்து கொண்டே இருக்கணும். அதை நீ கட்டாயம் செய்வாய். அதற்கு அச்சாரம்தான் இந்தக் கனி" என்று அப்போது தி...

நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு

 நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு  இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அன்று தான் குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம். குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் ( திருவஞ்சிக்களம் ) என்னும் ஊரில் மாசி மாதம் புனர்பூசம்  நட்சத்திரத்தில் அவதரித்தார். இது உங்களுக்குத் தெரிந்த தகவல் தான்.  தாய்மொழியான மலையாளம், தமிழ், வடமொழி என்று மும்மொழிக் கொள்கையை அன்றே கடைப்பிடித்தவர் இந்த ஆழ்வார்.  அதே கேரளத் தேசத்தைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி அவர்கள் அருளியது தான் நாராயணீயம். சுமார் 18,000 ஸ்லோகங்கள் கொண்ட பாகவதத்தின் சாரமாக,  சுமார் 1000 உயர்ந்த வடமொழி ஸ்லோகங்களாகத் தந்துள்ளார்.  அதை நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் தமிழ்ப் பாடல் வடிவில் வடித்திருக்கிறார். ஞாயிறு மாலை இந்தியா கெலித்து விடுமா என்ற கெலியிலும் பலர் நாரத கான சபாவில் அதன் புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்தார்கள்.   வீடியோ காமராவில் பின்னந்தலை தெரியாமல் குனிந்துகொண்டு சென்ற போது, அடியேனை ஸ்ரீநிவாசன் வரவேற்று முன் வரிசையில் அமர வைத்...

காற்றினிலே வரும் கீதம்

  காற்றினிலே வரும் கீதம் ’காற்றினிலே வரும் கீதம்’, இசையரசியின் வாழ்க்கைப் பயணம் என்ற புத்தகம் சில வாரங்களுக்கு முன் கைக்குக் கிடைத்தது. ஆசிரியர் ரமணன். அவ்வப்போது அதைப் படித்து வந்தேன். பொதுவாகப் புத்தகத்தின் முன்னுரை, நூலாசிரியரின் ஒருப்பக்கவுரை படித்துவிட்டுப் படிப்பேன் ஆனால் இந்தப் புத்தகத்தைக் கடைசி அத்தியாயத்திலிருந்து தொடங்கினேன். பல வருடங்கள் முன் கௌரி ராம்நாராயண் எழுதிய ‘MS and Radha: Saga of Steadfast Devotion’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்த காரணமாக இருக்கலாம். சுஜாதா ஒரு முறை சுயசரிதம் எழுதுவதில் சில ஆபத்து இருக்கிறது. உண்மையை எழுத வேண்டிவரும். கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும் என்றார். நான் அவரை தொடர்ந்து நச்சரித்த போது, சரி என்று ஒப்புக்கொண்டார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இந்தச் சுயசரிதத்தை நீ எழுதுவது போல எழுதாதே, தன்னிலையில் ( first person ) நான் எழுதுவதைப் போலவே என் ஸ்டைலில் எழுது என்றார். இதற்காக அவருடன் நான் பல சந்திப்புகளை நிகழ்த்தினேன். எல்லாவற்றையும் ஒலிப்பதிவு செய்தேன். ஆனால் நடுவில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்...

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்!

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்! கோவிட் வருவதற்கு ஒரு வாரம் முன்  அமெரிக்கா சுற்றுலா விசா வாங்கச் சென்றிருந்தேன். பராக்குப் பார்க்கும் போது ஒன்றைக் கவனித்தேன். எல்லோரும் ஒழுங்கான  உடை, திருத்தப்பட்ட  முகமண்டையுடன், நாற்றம் அடிக்காத ஷூ-சாக்ஸ் கையில் ஒரு ஃபைல் என்று ஒழுங்காக வந்திருந்தார்கள். பெரும்பாலோர் முகத்தில் கனவுகளுடன் பதற்றமாகக் காணப்பட்டார்கள் ( விசா ரிஜக்ட் ஆகிவிடுமோ ?). டோக்கன் நம்பர் கூப்பிட்ட சமயம் சிலர் கை கூப்பி வேண்டிக்கொண்டு சென்றார்கள். அமெரிக்காவிற்குள் போவதற்குத் தடையாக நம்மை அறியாமல் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்று பயந்துகொண்டு, கேட்ட வேள்விகளுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற துடிப்பில் பதில் கூறினார்கள். இவர்களுடைய அடுத்த இலக்கு பச்சை அட்டை வாங்கி அந்தச் சொர்க்கப் பூமியில் நிரந்தரமாக வாசம் செய்வது தான். அமெரிக்காவுக்குப் போவதற்கே இந்த மாதிரி தயார் செய்துகொண்டால், பரமபதம் செல்ல எப்படி எல்லாம் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் ?  ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கரின் அமுத மொழி ஒன்றில் நம்மைத் தனியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ‘இந்த மானிடப் பிறவி...

சித்திர ராமாயணத்தின் சரித்திரம்

 சித்திர ராமாயணத்தின் சரித்திரம்  ’அந்தக் கால’ விகடன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் திருப்திப்படுத்தும். பல வருடங்களாக அதில் பிஸ்ரீ எழுதிய சித்திர ராமாயணம் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவல். பல பழைய புத்தகக் கடை, வாட்ஸ்ஆப் குழுக்கள் என்று பல வருடங்களாக தேடி அலைந்தேன். அந்த நூலைக் குறித்துச் சிறு குறிப்பு  பி. ஸ்ரீநிவாச்சாரி என்ற பி.ஸ்ரீ 1944 - முதல் 1957 வரை 13 வருடங்கள் தொடர்ந்து கம்ப ராமாயணத்தை ’சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் வெளிவந்தது. சில பக்கங்களைத் திரு பசுபதி அவர்களின் வலைப் பதிவில் படித்த போது என்னைப் போலவே அவரும் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று அறிந்து. அவரிடம் எங்கே கிடைக்கும் என்று கேட்டதற்கு  ”கிட்டாது ! பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்....  வர்த்தமானன் விளம்பரம் கொடுத்தனர்... பிறகு வரவில்லை.... 'சக்தி' விகடன் சுருக்கி வெளியிடத் தொடங்கியது.... பிறகு ஆரண்யக் காண்டத்துடன் நின்று விட்டது... நானும் கேட்டுச் சலித்து விட்டேன்.... என்னிடம் இருந்த சில அத்தியாயங்களை வெளியிட்டு விட்டேன். ....உங்களுக்கு வர்த்தமானனில் யாரேனும் தெரிந்தால்.... கேட்டுச் ச...

ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி

  ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதனும் இந்தப் புத்தகப் பொக்கிஷமும் சேர்ந்து இன்று கிடைத்தது. ஸ்ரீமத் ஆசாரியன் என்றால் அது நம் வேதாந்த தேசிகனே. சப்தசதி குழம்ப வேண்டாம் - எழு நூறு (சப்த ஸ்வரங்கள் ; சதம் அடித்தார்) சமூக ஊடக சத்ருக்கள் நிறைந்த இந்த அவசர உலகில் நமக்கு இது போன்ற புத்தகங்களைப் படிக்க நேரமும், கவனமும் இருப்பதில்லை. சமஸ்கிருதத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவை இரண்டு தலைமுறைக்கு முன்பே ‘extinct’ ரகங்களில் சேர்ந்துவிட்டது. ஸ்வாமி தேசிகனின் வாழ்கை வரலாற்றைச் சுமார் 700+ ஸ்லோகங்களில் ‘ஆர்யா சந்தஸ்.’ என்று சமஸ்கிருதக் கவிதைகளில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சந்தஸ் எழுதப்பட்டது. தமிழில் வெண்பா போன்று மன்னார்குடி ஸ்ரீ உவே.கோபாலசாரியார் 118 வருடங்களுக்கு முன் எழுதியுள்ளார். இந்த 700 ஸ்லோகங்களுக்கும் எளிய ஆங்கிலத்தில் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே வே.கண்ணன் ஸ்வாமியும், முனைவர் உ.வே. ஆர். திருநாராயணன் அவர்களும் எழுதியுள்ளார்கள். முதல் ஸ்லோகத்தைப் படித்தேன். I worship Sri-Rama, (i) who is of black-complexion like a fresh water- bearing cloud,...

வைணவத்தின் ‘பிக் டேட்டா' - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்

வைணவத்தின் ‘பிக் டேட்டா' - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்களை இதுவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. கடந்த வருடம் (2021) சந்தி பிரித்த நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது சில சந்தேகங்களுக்கு விடை தேடும் பொருட்டு அவரைத் தொலைப்பேசியில் தொந்தரவு செய்தபோதெல்லாம் வெள்ளம் போல வைணவம் சம்பந்தமாக பல விஷயங்களை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார். கடந்த வருடம் தான் அவருடன் பரிச்சயம் என்றாலும் அவர் எழுத்து எனக்குக் கடந்த இருபது வருடங்களாகப் பரிச்சயம்! இருபது வருடத்துக்கு முன் புத்தகக் கண்காட்சி ஒன்றில் புத்தகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த போது 'திவ்வியப்பிரபந்த இலக்கிய வகைகள்' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. இன்றைய புத்தகங்கள் போல் கவர்ச்சியான அட்டைப்படம் இல்லாத சாதாரண புத்தகம் போல் காட்சி அளித்தது. கையில் எடுத்துச் சில பக்கங்களைப் படிக்க ஆரம்பித்த போது அசாதாரண படைப்பாக, பிரமிப்பை ஏற்படுத்தியது. பிரமிப்புக்கான காரணத்தைக் கூறும் முன் இன்றைய கணினி உலகில் ‘பிக்-டேட்டா' (big data) என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு விஷய...