சித்திர ராமானுஜர் - அறிவிப்பு
2017ல் மேல்கோட்டை சென்றிருந்த போது ‘Academy of Sanskrit Researchல் பல ஓலைச்சுவடிகளுக்கு மத்தியில் ஸ்ரீராமானுஜரின் வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அழுக்கு படிந்து அடுத்த மழைக்கு நாசமாகிவிடும் போல இருந்தது. அங்கே இருப்பவர்களிடம் மொத்தச் சரித்திரமும் இருக்கிறதா என்று கேட்டேன். சில படங்கள் தான் இருக்கிறது என்றார்கள்.
இது யாருடையது, எங்கே கிடைக்கும் என்று தேடி ஓய்ந்துவிட்டேன். பிறகு சமீபத்தில் அந்தப் படங்கள் கருப்பு வெள்ளையில் கிடைத்தது. ராமானுஜருடைய வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 108 படங்கள்.
இந்தப் படங்களை ‘ராமானுஜர் தேசிக முனிகள்’ அறக்கட்டளை மூலம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் கொண்டு வர வேண்டும் என்று ஸ்ரீராமானுஜரின் 1008வது திருநட்சத்திரம் அன்று தோன்றியது. இதன் வேலைகளை இன்று முதல் எம்பெருமானாரின் ஆசிகளுடன் ஆரம்பிக்க இருக்கிறேன்.
புத்தகம் குறித்து மேலும் விவரங்களை அவ்வப்போது சொல்லுகிறேன்.
உடையவர் திருவடிகளே சரணம்
-சுஜாதா தேசிகன்
சுஜாதாவின் 90வது பிறந்த தினம்
Great work 🙏
ReplyDelete