Skip to main content

(5) குருவான உடையவரும், சிஷ்யனான வைஷ்ணவ நம்பியும்

(5) குருவான உடையவரும், சிஷ்யனான வைஷ்ணவ நம்பியும்



ஸ்ரீராமானுஜர் திக்விஜயமாக சென்ற போது திருக்குறுங்குடி அழகிய நம்பியைச் சேவித்து நின்ற போது, அழகியநம்பி அர்ச்சகரிடம் ஆவேசித்து

“ராம, கிருஷ்ண’  என்று பல அவதாரங்களை எடுத்தும் என்னால் மக்களைத் திருத்த முடியவில்லை. ஆனால் நீரோ இக்குறுகியகாலத்தில் இத்தனை பேரையும் எப்படித் திருத்தினீர் ? அதன் ரகசியத்தைச் சொல்லும்” என்று கேட்க அதற்கு உடையவர்

”கேட்கும் அளவில் கேட்கப் பட்டால், சொல்லும் அளவில் சொல்லுவோம்” என்றவுடன் நம்பி உடனே தனது ஆசனத்தை விட்டுக் கீழே இறங்கி ஸ்ரீராமானுஜருக்கு ஓர் ஆசனம் போடச் சொல்லி அவரை ஆசாரப் பீடத்தில் அமர்த்தி, தான் கீழே சிஷ்யன் போல அமர்ந்தார்.

ராமானுஜர் தன் ஆசாரியனான பெரியநம்பி அதில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து பெருமாளின் திருச்செவியில் ’திருமந்திரம், ‘த்வய’ மஹா மந்திரங்களை உபதேசம் செய்தார்.

நம்பியும் கேட்டு உகப்படைந்தவராய் “நாம் இராமானுசனை உடையேன்” என்று அருளிச்செய்ய, எம்பெருமான், எம்பெருமானாரின் சிஷ்யர் ஆனார்.

ஸ்ரீராமானுஜர் அவருக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்று திருநாமம் அருளி, தம்முடைய அபசாரங்களைப் பொருத்தருள வேண்டும் என்று வேண்டினார். நம்பியும் அவருக்குத் தீர்த்த ப்ரஸாதமும், திருமாலை பிரசாதம், ஸ்ரீசடகோபம், பிரசாதித்து விடை கொடுத்தனுப்பினார்.

4.5.2025
படத்தில் : (அழகிய நம்பி)/ஸ்ரீவைஷ்ணவ நம்பியுடன் உடையவர்.
’சித்திர’ திருவாதிரை - இளையாழ்வாரின் 1008 திருநட்சத்திரம்
படம்: கஸ்தூரி ரங்கன்

Comments