மணவாள மாமுனிகள் திருவஹிந்திரபுரம் இந்த ஆனி மூலம் என் கைக்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யான புத்தகம் புத்தகம் கிடைத்தது. அன்று தான் "ஸ்ரீசைலேச தயாபாத்ரம்" அவதார தினம். சில ஆண்டுகளுக்கு முன் திருவஹிந்திரபுரத்துக்கு முதல் முறை சென்றிருந்தேன். தேவநாதப் பெருமாள், ஸ்வாமி தேசிகன் அவர் அங்கே தன் கையாலேயே வெட்டிய அழகான கிணறு என்று எல்லாவற்றையும் சேவித்துவிட்டு வரும் போது வடக்கு மாட வீதியில் மணவாள மாமுனிகள் சந்நதியை பார்த்தவுடன் அவரையும் சேவித்துவிட்டு வந்துவிடலாம் என்று உள்ளே சென்றேன். அதுவரை எங்கள் கூடவே வந்த ஒரு உறவினர் ( அந்த ஊர்க்காரர் தான் ) இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை “நீங்க உள்ளே சென்று சேவித்துவிட்டு வாங்க... அடியேன் இங்கேயே இருக்கிறேன்” என்றார். எனக்குப் புரியவில்லை. சந்நதியின் உள்ளே மணவாள மாமுனிகளைக் காணவில்லை ஆனால் மினியேச்சர் சைசில் பார்த்தசாரதி பெருமாள் இருந்தார் !