Skip to main content

Posts

Showing posts from March, 2025

மழையில் அனுமான் சாலீசா

 மழையில் அனுமான் சாலீசா  சிறுவயதில் காலெண்டர் பின்புறம் வெள்ளையாக இருந்தால் உடனே அதில் ஏதாவது வரைய ஆரம்பித்துவிடுவேன். ஏதோ ஒரு மாசக் கடைசியில் காலெண்டர் ஷீட் கிடைக்க அதில் ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் அனுமார் படம் வரைய ஆரம்பித்தேன். ஏ.பி.டி அனுமாரின் விஷேசம் பச்சை கலர். பச்சை தசைகள், பச்சை விரல்கள், பச்சை வால்… ஏன் அனுமாருக்கு உடம்பு முழுவதும் இருக்கும் ரோமங்கள் கூட பச்சைதான். இடுப்பில் இருக்கும் சிறிய பட்டுத் துண்டு மட்டுமே பிங்க் கலர். அந்தப் பச்சை என்னை ஈர்த்தது!  அவர் சஞ்சீவி மலையைத் தூக்குவதைவிட உடம்பு முழுவதும் பச்சையாக வரைவது எனக்கு ஒரு சவாலாக இருந்தது. வரைந்தேன்.  “அனுமார் மாதிரி இருக்கு பெருமாள் சந்நிதியில் வெச்சுடு,” என்று பாட்டி அங்கீகரித்தாள் அனுமார் படத்துக்கு பார்டர் எல்லாம் போட்டுக் கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் சந்நிதியில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலை கோத்துச் சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணெய்யை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆ...

மெட்ராஸ் விஜயம்

மெட்ராஸ் விஜயம்  இரண்டு நாள் சென்னை விஜயம். எல்லா இடங்களிலும் 40₹ குறைந்து காபி இல்லை. கீதம் ஹோட்டலில் 38ரூ ( மினி காபி). காபி நன்றாக இருக்கிறது. கொடுத்தவுடன் சூடாக்க கைக்கு அடக்கமாக ஓர் அடுப்பு எடுத்துக்கொண்டு செல்வது உத்தமம். ஊர் முழுக்க காபி மாமா, மெட்ராஸ் காபி கடைகள் முளைத்திருக்கிறது. அதே போல் ஊர் முழுக்க ‘சாய்’ கடைகள்.  பல நாள் ஆசையான ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் சூரியன் வருவதற்கு முன் நடைப்பயிற்சிக்குச் சென்றேன். கீழே பார்த்த போது மூடி இருந்த திருப்பதி தேவஸ்தானம் தாயார் சன்னதியும் அருகில் திறந்திருந்த  'Tea Nagar Coffee' கடையும் கண்ணில் பட்டது. நடேசன் பூங்காவில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு இருந்த எழுத்தாளர் இரா. முருகனை பார்த்து ஒரு ஹலோ சொன்னேன். குத்து மதிப்பாக என்னை அடையாளம் கண்டுகொண்டார். ராமேஸ்வரம் சாலையில் வண்டி ஓட்டிக்கொண்டு செல்பவர்களைப் பார்க்கும் போது சர்க்கஸ் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கிறது. ஒரு நாள் முதல்வர் மாதிரி ஒரு நாள் முதல்வர் இந்தச் சாலையில் பயணிக்க வேண்டும். ரங்கன் தெரு முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஒரு குப்பை தொட்டிக்கு பதில் இரண்டு வந்திருக்...

நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு

 நாராயணீயம் புத்தக வெளியீட்டு விழா குறிப்பு  இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி அன்று தான் குலசேகர ஆழ்வார் திருநட்சத்திரம். குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ( இன்றைய கேரள தேசம் ) கொல்லிநகர் ( திருவஞ்சிக்களம் ) என்னும் ஊரில் மாசி மாதம் புனர்பூசம்  நட்சத்திரத்தில் அவதரித்தார். இது உங்களுக்குத் தெரிந்த தகவல் தான்.  தாய்மொழியான மலையாளம், தமிழ், வடமொழி என்று மும்மொழிக் கொள்கையை அன்றே கடைப்பிடித்தவர் இந்த ஆழ்வார்.  அதே கேரளத் தேசத்தைச் சேர்ந்த நாராயண பட்டத்திரி அவர்கள் அருளியது தான் நாராயணீயம். சுமார் 18,000 ஸ்லோகங்கள் கொண்ட பாகவதத்தின் சாரமாக,  சுமார் 1000 உயர்ந்த வடமொழி ஸ்லோகங்களாகத் தந்துள்ளார்.  அதை நண்பர் ஸ்ரீநிவாசன் அவர்கள் தமிழ்ப் பாடல் வடிவில் வடித்திருக்கிறார். ஞாயிறு மாலை இந்தியா கெலித்து விடுமா என்ற கெலியிலும் பலர் நாரத கான சபாவில் அதன் புத்தக வெளியீட்டுக்கு வந்திருந்தார்கள்.   வீடியோ காமராவில் பின்னந்தலை தெரியாமல் குனிந்துகொண்டு சென்ற போது, அடியேனை ஸ்ரீநிவாசன் வரவேற்று முன் வரிசையில் அமர வைத்...