Skip to main content

Posts

Showing posts from November, 2021

‘சிறுமாமனிசர்’ பாரதி மணி

‘சிறுமாமனிசர்’  பாரதி மணி சுஜாதா மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் “பாரதி மணி எழுதிய  ‘தில்லியில் நிகம்போத் காட்(சுடுகாடு)’  என்ற கட்டுரையைப் படித்தீர்களா தேசிகன்? எப்பவாவதுதான் இதுபோல நல்ல கட்டுரை கிடைக்கும்” என்றார். ‘பாரதி மணி’ என்ற பெயரை முன்பு கேள்விப்பட்டிருந்தாலும் அறிமுகம் அப்போது தான் கிடைத்தது. சுஜாதா மறைந்தபோது, இந்த நிகழ்வை நான் எழுதிய சுஜாதாவின் அஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இந்தப் பகுதி அச்சில் பிரசுரம் ஆகவில்லை. சுஜாதாவிற்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று நாரத கான சபாவில் நடந்தது. அதில் நான் கலந்துகொண்டேன். கூட்டம் முடிந்த பிறகு பார்வையாளர்கள் வரிசையில் ஓர் ஓரத்தில் திரு பாரதி மணியைப் பார்த்தேன். அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு “சுஜாதா உங்கள் கட்டுரையைப் பாராட்டினார்” என்று கூறியவுடன் அவர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார். அந்த நிகழ்வைத் திரு பாரதி மணி, “……..பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த சுஜாதாவுக்குக் காலம் தாழ்த்தாமல், மார்ச் 2-ம் தேதியே ஒரு நினைவஞ்சலியை நாரத கான சபாவில் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது. நெகிழ்வான நிகழ்ச்சி. பாலுமகேந்திரா

ஸ்ரீ வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி

ஸ்ரீ வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி  இன்று மத்தியம் வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி திருநாடு அலங்கரித்தார் என்று கேள்விப்பட்டு மனம் கலங்கியது.  இவர் முதலியாண்டான் வம்சம்.  ஒரு முறை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து முதலியாண்டான் அவதார ஸ்தலமான புருஷமங்கலம் சென்றிருந்தேன். ஸ்ரீ முதலியாண்டான், ஸ்ரீராமானுஜரின் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின் கிபி 1027ல் பூவிருந்தவல்லிக்கும் திருமழிசைக்கு இடையே புருஷமங்கலம், வரதராஜபுரம் என்ற ஊரில் அவதரித்தவர். இன்று இந்த ஊர் பெயர்களைச் சொல்லிக் கேட்டால் யாருக்கும் வழி சொல்ல தெரியாது. தற்போது நாசரத்பேட்டை என்று இந்த ஊர் பெயர் மாறியிருக்கிறது. ஸ்ரீராமானுஜரின் சகோதரியின் மகனான முதலியாண்டான் உடையவரின் சிஷ்யர்கள்(முதலிகள்) அனைவருக்கும் முதல்வர் என்பதால் முதலியாண்டான் என்று பெயர் பெற்றார். எம்பெருமானுடைய திருவடி ஸ்தானமாக இருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால் எம்பெருமானுடைய திருவடியை முதலியாண்டான் என்றே அழைப்பது இன்றும் வழக்கமாக உள்ளது. எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்கே அவருக்கு வரவேற்பு அவ்வளவாக இல்லை. மேல்கோட்டை பக்கம் மிதுலாபுரி  சா

திருப்பாணாழ்வாரும் விளாஞ்சோலைப் பிள்ளையும்

 திருப்பாணாழ்வாரும் விளாஞ்சோலைப் பிள்ளையும்   ஸ்ரீவைஷ்ணவ பெயர்களில் பல தகவல்கள் பொதிந்துள்ளது. அவை பெரும்பாலும் ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களுடன் சம்பந்தம் பெற்றிருக்கும்.  குலசேகர ஆழ்வார் “கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே” என்று ஆசைப்படுகிறார்.  கோனேரி என்பது திருவேங்கடத்தில் உள்ள திருக்குளத்தின்(ஏரி) பெயர். திருக்கோட்டியூர் நம்பிகள் சிஷ்யை ’திருக்கோனேரி தாஸ்யை’ என்ற திருநாமத்துடன் விளங்கினார். இந்த அடியார் ’திருவாய்மொழி வாசகமாலை’ என்ற நூலை நமக்கு கொடுத்துள்ளார்.  “குன்றம் ஏந்தி குளிர் மழை காத்தவன்” என்ற பாசுரம் பலருக்குத் தெரிந்திருக்கும். திவ்ய பிரபந்தத்தில் பல இடங்களில் “குன்றம் ஏந்தி” என்ற சொல் வருகிறது, இது ஆச்சரியம் இல்லை, ஆனால்  “குன்றம் ஏந்தி பாகவதர்” என்று ஒருவரின் பெயர் இருந்திருக்கிறது.  ”குன்றம் ஏந்தி’ என்ற பெயரா ? என்று நமக்கு தோன்றும். உயர்ந்த கட்டிடங்கள் மேல் சாதாரண கம்பிக்கு  ‘இடி தாங்கி’ என்று பெயர் இருக்கும் போது உயர்ந்த பாகவதருக்கு ’குன்றம் ஏந்தி’ என்று இருப்பதில் என்ன வியப்பு ?  பிள்ளைலோகாசாரியாரின் சிஷ்யர் ஒருவரின் பெயர் ’விளாஞ்சோலைப் பிள்ளை’. அவருடைய கதை தான் பார

நம்பிள்ளை சில குறிப்புகள்

நம்பிள்ளை சில குறிப்புகள் இன்றைக்கு 870 ஆண்டுகளுக்கு முன் காவிரியின் தென்கரையிலுள்ள நம்பூர் என்ற கிராமத்தில் அவதரித்தார்.  இயற்பெயர் ‘வரதராசர்’ . அதனால் ‘நம்பூர் வரதாசர்’ என்று அழைப்பர்.  குருபரம்பரையில் பட்டர் , நஞ்சீயர், நம்பிள்ளை என்ற வரிசை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் பட்டர் பரமபத்தித்த பின்னர் தான் நம்பிள்ளை அவதரித்தார் என்ற எண்ணம் வரும். ஆனால் பட்டர் வாழ்ந்த காலத்திலேயே நம்பிள்ளையும் வாழ்த்திருக்கிறார்.  அப்போது பட்டரிடம் கேட்ட அரும்பொருள்கள் அவர் மனதில் ஆழப் பதிந்து, பட்டரின் அருளுரைகளை செமிக்கும் கிடங்காக அது இருந்தது.  பட்டர் பரம்பதித்த பிறகு நஞ்சீயர் ஆசாரியரானார்.   பட்டர் போலவே நஞ்சீயர் காலஷேபங்களை  நம்பிள்ளை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார். நஞ்சீயர் பட்டரின் ஆணைப்படி திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானத்தை இயற்றியிருந்தார்.  அதை படி எடுக்க விருப்பப்பட்டு நம்பிள்ளையிடம் பட்டோலைப் படுத்த நியமித்தார் (அதை பற்றிய கட்டுரையை தனியே எழுதியிருக்கிறேன்). அதுவே ஈடு.  நம்பிள்ளை என்றவுடன் நமக்குக் கூடவே நினைவுக்கு வருவது  ‘ஈடு’ என்ற வார்த்தை தான். ’ஈடு’ என்ற வ

சிந்தனைக்கு இனியான் ! மனதுக்கு இனியான் !

சிந்தனைக்கு இனியான் ! மனதுக்கு இனியான் !  இன்று கார்த்திகையில் கார்த்திகை. நம் கலியனான திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம். நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் இரணியனுக்குத் திருத்திப்பணி கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் பிராட்டிக்கு வருத்தம். இராமாவதாரத்தில் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார் (இன்று போய் நாளை வா .. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்).  பெருமாளின் பத்து அவதாரங்களையும் இரண்ரே வரியில் திருமங்கை ஆழ்வார் சொல்லும் அழகைப் பாருங்கள். மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் ஆனான் இதில் முன்னும் இராமனாய் - பரசுராமரையும், பின்னும் இராமனாய் - பலராமனையும் குறிக்கிறது. ஆனால் இராமாவதாரத்தை ‘தானாய்’ என்கிறார்.  அவதாரங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று சொரூப அவதாரம் - பகவான் தானே அவதாரம் எடுப்பது. மற்றொன்று ஆவேச அவதாரம். ஒரு ஆத்மாவை தேர்ந்தடுத்து ஒரு பயனுக்காக தன் சக்தியை அதில் வைத்து ஆவேசிப்பது. பரசுராமரும், பலராமரும் ஆவேச அவதாரங்கள். ராமர் சொரூப அவதாரம்.  பத்து அவதாரங்களில் பரசுராமர் ராமரை ஒருவரை ஒருவர் சந்தித்தனர். அதே போல பலரா

திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார்

திருநாராயணபுரத்து ஆய் ஜனந்யாச்சாரியார் படிக்கும்போது ஒரு வார்த்தை புரியவில்லை என்றால் அகராதியை நாடுகிறோம். வாக்கியத்துக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் நூலகத்தை நாடினோம்; இன்று கூகிளைக் கேட்கிறோம். நம் ஆசாரியர்களின் காலத்தில் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு நமக்குத் தேடிக் கொடுத்திருக்கிறார்கள் என்று சற்று யோசிக்க வேண்டும்.  ஆளவந்தாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றப் பிரம்மசூத்திரத்தைத் தேடிக்கொண்டு காஷ்மீர் வரை நடந்து சென்று, ஸ்ரீபாஷ்யம் என்ற உயர்ந்த விஷயத்தை நமக்கு அருளினார் ஸ்ரீராமானுஜர்.  ஆசாரிய ஹ்ருதயம் உபதேசிக்கும்போது ஒரு வாக்கியத்துக்குப் பொருள் விளங்காதிருக்க ”இதற்கு அர்த்தம் அருள்பவர் யாரோ ?” என்று மனம் கலங்கி மணவாள மாமுனிகள் என்ன செய்தார் என்று தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்க நேயர்களை அழைக்கிறேன்.  நம் ஆசாரியர்கள் வாழ்ந்த காலத்தில் ஆழ்வார்கள் அருளிச் செயல், ரகசியக் கிரந்தங்கள் பொன்றவை  ஸ்ரீமந் நாதமுனிகள் காலத்திலிருந்து வாய்மொழியாகவே வந்தது. இதை ’ஓராண் வழி’ என்பர்.  ஸ்ரீராமானுஜர் காலத்தில் அவருடைய நியமனத்தில் முதன்முறையாக எழுத்து வடிவில் திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவ

பிள்ளைக் கதைகள்

பிள்ளைக் கதைகள்  ஸ்ரீ வைஷ்ணவத்தில் மூன்று சொற்களை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம்.  பிரமாணம்,  பிரமேயம்  பிரமாதா.  இந்த மூன்று சொற்களைத் தெரிந்துகொள்ள ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  பிள்ளை + லோகாசார்யார்   என்று இரண்டாக பிரித்து இரண்டு கதையாகச் சொல்லப் போகிறேன்.  பிள்ளை கதை :  சற்றே பின்னோக்கி பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை காலத்துக்கு உங்களை அழைக்கிறேன்.  நஞ்சீயர் பட்டரின் ஆணைப்படி திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானத்தை அருளினார். அதை ’படிக்கும் படியாக’ இன்னொரு படி(copy) ( அப்போது எல்லாம் ஸிராக்ஸ் கிடையாது ! ) எடுத்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார்.  பள்ளியில் அழகாகக் கையெழுத்து உடைய மாணவனைக் கூப்பிட்டு ரிகார்ட் நோட்ஸ் எழுதித் தரச் சொல்லுவது போல  “அழகாகப் பிரதி எழுதித் தருவாருண்டோ ?” என்று சிஷ்யர்களைக் கேட்டார் நஞ்சீயர்.  “இங்கே அடிக்கடி வரும் நம்பூர் வரதருடைய கையெழுத்து அருமையாக இருக்கும்” என்று சிஷ்யர்கள் கூறினார்கள்.  நம்பூர் வரதரின் எழுத்துக்கள் முத்து போன்று இருந்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமாக அவரைத் தேர்ந்தெடுத்து, உபதேசம் செய

25ஆம் பட்டம் திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி

 25ஆம் பட்டம் திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி  'எம்பெருமானார் தரிசனம்’ என்று நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்த தரிசனத்தை உலகெங்கும் பரவிட 74 சிம்மாசனாதிபதிகளை ஏற்படுத்தினார் ஸ்ரீராமானுஜர். அதில் ’திருக்கோவலூர் ஆழ்வான்’ ஸ்வாமிகள் ஒருவர்.  ’சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்’ என்று  பொய்கையாழ்வார் அருளியபடி திருக்கோவலூர் சந்நிதி மற்றும் தர்சன நிர்வாகங்களைச் செய்து, பக்தி சிரத்தையுடன் ஆசாரிய பீடமாக விளங்கினார். திருக்கோவலூர் திருக்கோயிலில் உள்ளக் கல்வெட்டு இக்கோயிலை நிர்வாகம் செய்து வந்த திருக்கோவலூர் ஆழ்வான் திருமாளிகை மடத்தைச் சேர்ந்த அடியார்களுக்கு உணவு அளிக்க ஒரு வேலி நிலம் விலைக்கு வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. பிறகு நடந்த சமய கலவரத்தில் பல மடங்கள் இடிக்கப்பட்டன. அதில் திருக்கோவலூர் மடமும் ஒன்று. அந்தக் காலத்தில் அங்கே வசித்து வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள் என்ற  தகவலும் கல்வெட்டில் இருக்கிறது.  பிறகு திருவரங்கத்தில் பெரும் புகழுடன் விளங்கிய ஸ்ரீ வேதவியாச பட்டரை எழுந்தருளிச் செய்து, சமயவாதிகளை வாதத்தில் வென்று, கோயிலை மீட்டு அவர் நிர்வாகத