Skip to main content

Posts

Showing posts with the label அனுபவம்

ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமியும் நானும்

சென்ற ஞாயிறு ஸ்ரீ உ.வே. அரங்கராஜன் ஸ்வாமியின் 90-ஆம் ஆண்டு விழாவில் அடியேனையும் பேச அழைத்திருந்தார்கள். நேரம் குறைவாக இருந்ததால் ஐந்து நிமிடத்திற்கு வாய்க்கு வந்ததை உளறிவிட்டு வந்தேன். நான் பேச நினைத்து, எழுதி எடுத்துக்கொண்டு சென்ற உரை வடிவம் இது. ./சுஜாதா தேசிகன் ------o0o-o0o-o0o------ ஸ்ரீ அரங்கராஜன் ஸ்வாமியும் நானும் அடியேனுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கும் என் ஆசாரியர், 46-வது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவடிகளை வணங்கி, இந்த ஆன்றோர் சபையில் குழுமியிருக்கும் ஆசாரியர்கள், பெரியோர்களை வணங்கி, என்னையும் புவியில் ஒரு பொருளாக்கி இன்று இங்கு பேச அழைத்ததற்கு நன்றி கூறி, மதுரைப் பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமியுடனான என் அனுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். ஆங்கிலத்தில் ‘Odd man out’ என்பார்கள். இன்று அந்த ‘Odd man’ நான் தான்! என் முகத்தைப் பார்த்தாலே அது உங்களுக்குத் தெரிந்துவிடும். நெற்றியில் இருக்கும் திருமண்ணைச் சொல்லவில்லை—இங்கே இருக்கும் சபையில் எல்லோரும் நூல்களை நன்கு படித்தவர்கள்; நானோ முகநூல் (Facebook) படிக்கும் ஆசாமி! பொதுவாக, கடைசியில் பேச வருபவர்கள், "நான் ...

தேநீர் என்ற சாய்

தேநீர் என்ற சாய் தேநீர் என்றால் ஏதோ தேன் போன்ற இனிய நீர் கிடையாது, தேயிலை+நீர் - தேநீர். ’வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பது தேநீருக்குக் கச்சிதமாகப் பொருந்தும். தமிழக (அல்லது தமிழ்நாட்டு) மக்கள் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்திருந்தாலும் சுவைக்காக டீயைக் குடிக்காமல் காலையில் கக்கா மருந்தாக மட்டும் டீ குடித்துப் பழகி, நல்ல தேநீரை சோழர் காலத்திலிருந்து ருசித்ததே இல்லை நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு வர இருக்கும் செப்பேடுகளில் எழுதியிருப்பதாக சொல்லுகிறார்கள். திருச்சி ’கோர்ட்’ அருகில் ‘மும்தாஜ்’ ஹோட்டலை ஷாஜகான் போல் ஒட்டிக்கொண்டு இருக்கும் டீ ஸ்டாலில், சிறுகாலையிலேயே பளபளப்பான பாய்லரின் பொந்தில் தாத்தாவின் கோவண வடிகட்டியில் டீ தண்ணீரை கிளாஸில் ஒழுகவிட்டு, பேசினிலிருந்து சீனியை அள்ளி இறைத்து, கைக்குழந்தைக்குப் பாலாடையில் பாலை ஊட்டுவது போலக் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி, காது வைத்த டம்ளரில் இரண்டு ஆற்று ஆத்தி அதற்கு மேல் மீண்டும் அதே கோவண எசன்ஸை டாப்பிங்காக தெளித்துக் கொடுப்பார்கள். ஒரு நாள் பாட்டியிடம் டீக்கு பைசா கேட்ட போது "மும்தாஜ்ல முட்டை போண்டா விற்கிறார்க...

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.

புத்தகக் கண்காட்சி குறிப்புகள் 2026.  கடந்த 25 வருடங்களுக்கு மேலாக நான் சென்னை பு.காட்சிக்குச் செல்கிறேன். தொடர்ச்சியாகப் பல விஷயங்கள் மாறிவிட்டன. மேலட்டை மாறி, அரங்குகள் கூடி, எழுத்தாளர்கள் அதிகரித்து.. வாசகர்கள்?  “எப்படிப்பா இவ்வளவு பெரிய புக் படிக்க உனக்கு டைம் இருக்கு?”  கடந்த ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு உள்ளே நுழைந்த போதே கூட்டம் வேகமாக உள்ளே சென்று கொண்டு இருந்தது. நானும் வேகமாக உள்ளே சென்றேன்.  நுழைவாயிலில், ’வெரேலி ஆர்ட்’ படங்களுடன் ஜூட் பைகள் கீழே பரப்பி கூவிக் கூவி விற்க ஆரம்பிக்க, அருகில் ‘சார் இலவசப் பைபிள்’ வாங்கிக்கோங்க என்று கூடாரத்தில் கூவிக்கொண்டு இருந்தார்கள். அனுமதிச் சீட்டு இல்லை. உள்ளே நுழைந்த போது, ’சார் அந்த கேட் வழியா போங்க’ என்றார்கள். முதல் வரிசையில் நுழைந்த ஏழாவது நிமிடம் ஒரு 6-7வது படிக்கும் சிறுவன் தன் அப்பாவின் கையைப் பிடித்து இழுத்து… கண்ணீருடன் கண்ணில் பட்டான். அப்பாவிடம் புத்தகம் வாங்கித்தர அடம் பிடிக்கிறான் என்று நினைத்து அவன் அருகில் சென்றேன். “அப்பா இப்பவே வீட்டுக்கு போகலாம். போர் அடிக்குது” “இப்பத்தானேடா உள்ளே நுழைந்திருக்கிறோம்...

புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ்

 புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ் புதிய தலைமுறை என்ற சேனல் அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது செய்தி. இதில என்ன சார் ஆச்சரியம், இதே போல் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது என்று பரவலாக பேசப்படுகிறது. ஏன் இப்படி நடந்தது என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், எந்த பிரதான ஊடகமும் இதை தைரியமாக சொல்லப் போவதில்லை. சொன்னால் அவர்கள் சேனல் எங்கோ தொலைந்துவிடும்.  தமிழக மொத்த மீடியாவும் இன்று ஜெயா / சன் டிவி என்ற குழுமங்களுக்குள் ஏதோ ஒன்றில் அடங்கிவிடும். அதனால் புதிய தலைமுறை குறித்து எனக்கு வருத்தம் இல்லை. சும்மா வேடிக்கை பார்க்கலாம். இந்தப் பதிவு இன்றைய இந்தியப் புதிய தலைமுறை குறித்து.   ‘அரசு’ கேபிள் நிறுவனம், பெயருக்கு ஏற்றார் போல அரசு நடத்துகிறது. அதனால் மீடியாவின் சிகை அவர்கள் கையில். முடக்கவோ, தொலைந்து போக செய்யவோ முடியும். இதே போல தான் ஆண்டராய்ட், ஆப்பிள், கூகுள், ஜீ.மேயில், வாட்ஸ்-ஆப் போன்ற இன்ன பிற வஸ்துக்களும். கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் எல்லாம் வெளிநாட்டு அரசு கேபிள் நிறுவனம் போன்றவை. நாளை காலை, கூகுள், ஜீமெயில் இல்லை என்றால் உங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள்...

நேற்றைய கட்டுரை இன்றைய விளக்கம்

 நேற்றைய கட்டுரை இன்றைய விளக்கம் நேற்று எழுதிய ‘1,00,000 டாலர் வீசா - புலம்பெயரும் இந்தியர்களின் புலம்பல்’ என்ற கட்டுரை பலரை பாதித்துள்ளது. கமெண்ட்ஸ் பல வந்திருந்தன. எழுதிய முக்கியமான விஷயத்தை சிலர் மட்டுமே புரிந்துகொண்டிருக்கிறார்கள். ‘சமீபத்திய செய்திகளை படிக்க மாட்டீர்களா?’ வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துள்ளார்கள் என்று வெள்ளை மாளிகை அறிக்கைக்கு வியாக்கியானம் அருளியுள்ளார்கள். அவர்களுக்கு வெள்ளை மாளிகை சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். டிரம்ப் வரி விதிப்பையோ, இந்த விசா குறித்த குழப்பமான அறிவிப்பு பற்றியோ என் கருத்து ஒன்றுமில்லை. அவர்கள் நாடு, அவர்கள் பாடு. அவர் எத்தனை கண்டிஷன் போட்டாலும் எனக்குக் கவலை இல்லை. ஆனால் இந்தியா இவற்றை அனுகிய விதம், நாம் இந்தியர்களாகப் பெருமைப்பட வேண்டும். இது மற்ற நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. உங்களுக்கு அமெரிக்கா சென்றவர்களைப் பார்த்துப் பொறாமை, வக்கிரம், காழ்ப்புணர்ச்சி; இங்கே இடஒதிக்கீடு, ஊழல், அரசியல் அதனால் அங்கே போகிறோம் இதில் என்ன தப்பு என்று கோபமாக பலர் கேட்டுள்ளார்கள். ’இந்தியா பொருளாதாரம் ஒரு செத்த பொருளாதாரம் (Dead Economy)’ ...

வந்தே குரு பரம்பராம்

வந்தே குரு பரம்பராம் கூரத்தாழ்வான் அருளிய தனியன் இது.  லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம் அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் இந்தத் தனியன் வட மொழியிலிருந்தாலும், அர்த்தம் சலபமாகப் புரியும்.   திருமகள், திருமால் முதற்கொண்டு நாதமுனிகள், ஆளவந்தார் இடைக்கொண்டு வழிவழி வந்த குருக்கள் இன்றளவும் அத்தனை ஆசார்யர்களையும் வணங்குகிறேன் கூரத்தாழ்வான் வாழ்ந்த காலத்தில் ஸ்ரீ ராமானுஜருடன் குருபரம்பரை முடிவடைந்தாலும், தொலை நோக்குடன் மிக அருமையாகச் செதுக்கப்பட்ட தனியன் இது. எவ்வளவு நூற்றாண்டுகள் கழித்து வரப் போகும் எல்லா ஆசாரியர்களையும் இதில் அடக்கிவிடலாம்.  அஹோபில மடத்தின் ஜீயர்களை பெருமாளே காட்டிக்கொடுக்கிறான் என்பதற்கு மடத்தின் குருபரம்பரையைப் படித்தாலே புரிந்துவிடும். அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் சமாஸ்ரயணமும் பரண்யாசமும் செய்து வைத்து ராமானுஜ சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.  ஸ்ரீ வைஷ்ணவர்கள் ஆசாரியனை முன்னிட்டு தான் திருமகளுடன் கூடிய பெருமாளை அணுகுவார்கள். அது தான் முறை. ஆசாரியன் என்பவர் நம் குரு, அந்த ஆசாரியனை நமக்குக் காட்டுபவர்களும்...

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம்

மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர் - வாசிப்பு அனுபவம் சென்ற வருடம் ராமாயணத்தை தமிழில் மொழிபெயர்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கவலைப் படாதீர்கள். இந்தக் கட்டுரை அதைப் பற்றியது இல்லை. மொழிபெயர்த்த சமயம்  ‘பிபேக் டெப்ராய்’ (Bibek Debroy) என்ற பெயர் அடிபட்டது. (விவேக் டெப்ராய் என்றும் பாடம்). அவரைக் குறித்துத் தேடிய போது, கிட்டத்தட்ட எல்லா இதிகாசப் புராணங்களையும் சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துள்ளார். இவரை வியந்துகொண்டு இருந்த சமயத்திலேயே இந்தப் பூவுலகை விட்டு(நவம்பர் 2024) சென்றுவிட்டார். இவர் எழுதிய புத்தகங்களை வரிசையாகப் பார்த்த போது  ’Manmatha nath dutt - translator extraordinaire ’ ( மன்மதா நாத் தத்: அசாதாரண மொழிபெயர்ப்பாளர்) என்ற புத்தகம் என் கவனத்தை ஈர்த்தது. கீழடியில் தோண்டி எடுத்த அழுக்கு புத்தகம் ஒன்றை அமேசான் அனுப்பியது. திருப்பி அனுப்பினேன். மேலும் ஆழமாகத் தோண்டி எடுத்த வேறொரு புத்தகத்தை அனுப்பினார்கள். திருப்பி அனுப்பும் விளையாட்டை நிறுத்துவிட்டு, புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன்.  இந்தப் புத்தகம் சீரியஸ் ரீடிங் வகையைச் சார்ந்தது. நி...

குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர்

குல்லக் ஓர் இயல்பான குடும்பத் தொடர் பொதுவாக வெப் சீரீஸ் வகையராக்களில் அளவுக்கு அதிகமான வன்முறை, கெட்ட வார்த்தை, கெட்ட காட்சிகள் மலிந்து கிடக்கும். சமீபத்தில் ’சோனி லிவ்’ல் குல்லக் ( உண்டியல் ) என்ற தொடரைப் பார்க்க நேரிட்டது. இதற்கு முன் இப்படி ஒரு நல்ல தொடரைப் பார்த்த நினைவில்லை. கதை என்று எதுவும் இல்லை. அது தான் இதன் USP. வெற்றி. ஓர் உண்டியலில் எப்படி சிறுகச் சிறுக சேமிப்போமோ அது போல அன்றாடம் நடக்கும் சிறு சந்தோஷமோ, பிரச்சனையோ, வருத்தமோ அதைச் சேமிக்கிறது இந்தத் தொடர். ஒரு சராசரி இந்திய மத்தியமர் குடும்பத்தின் அன்றாட வாழ்வை மிக யதார்த்தமாகவும், மனதை நக்காமல் ஜெஸ்ட் தொட்டு விட்டுப் போகும் காட்சிகளைக் கொண்ட தொடர். ஓர் அப்பா, அம்மா, அண்ணன் தம்பி என்று நான்கு கதாபாத்திரங்களைக் கொண்ட மிஷ்ரா குடும்பத்தில் நாமும் இணைந்துவிடுகிறோம். இந்தக் குடும்பத்தில் நிகழும் உரையாடல்கள், சண்டைகள், கேலிகள் என அனைத்தும் நம் வீடுகளில் நடப்பதைப் போலவே இருப்பதால், ஒரு புன்னகையுடன் கூடிய நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது ஹிந்தியில் வந்திருந்தாலும், தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். டப்பிங் என்று தெரியாத வண்ணம் மிக ...

பேயாழ்வார் பிறந்த இடம்

பேயாழ்வார் பிறந்த இடம் திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று - பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி என் மகன் ஐந்தாவது படிக்கும் போது அவனுக்கு ஆழ்வார் கதைகளைச் சொல்லி வைத்தேன். ஒரு நாள் அவன் புத்தகப் பையைப் பார்த்த போது அதில் ஏகப்பட்ட காகிதங்களில் ’ஆழ்வார் கதைகள்’ என்ற தலைப்பில் முதலாழ்வார்கள் கதை காமிஸ்க் வடிவில் வரைந்திருந்தது கண்ணில் பட்டது. ( ஒரு பக்கத்தைத் தந்துள்ளேன்). சமீபத்தில் தோளுக்கு மேல் வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில் அவனுடன் ஒரு விடியற்காலை சென்னையைச் சுற்றி நடந்த போது, முன்பு அவன் வரைந்த காமிக்ஸ் வரைபடத்தைப் பற்றி பேச்சு வந்தது. என் கைப்பேசியில் அவன் வரைந்த அப்படத்தைக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு அவன் கேட்ட கேள்வி “பேயாழ்வார் மைலாப்பூரில் தான் பிறந்தாரா?. பிறந்த இடம் இன்னும் இருக்கிறதா?’ ‘இருக்கிறது’ என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன். ‘இப்போது போய் பார்க்கலாமா?’ உடனே ஓர் ஆட்டோவை பிடித்து மைலாப்பூர் சென்றோம். பேயாழ்வார் திருமஞ்சனக் கட்டியத்தின் போத...

அவுட்லைன்

அவுட்லைன்  ஒரு வண்ண ஓவியம் தீட்டும் போது அதற்கு அவுட்லைன் மிக முக்கியம். அது சரியாக வந்தால் தான் அதற்கு மேல் வாட்டர், ஆயில், ஏன் பென்சில் என்று எதைக் கொண்டு வண்ணம் தீட்டினாலும் அது அழகாக அமையும். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவுட்லைன் சரியில்லை என்றால் எந்த மாதிரி உயர்ந்த வண்ணத்தைக் கொண்டு தீட்டினாலும் அது எடுபடாது. ’எல்லாம் நல்லா இருக்கு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ என்ற விமர்சனத்தை நான் எதிர்கொண்டுள்ளேன். பள்ளியில் படிக்கும் போது ஓர் ஓவியரைச் சந்தித்து, என்னிடம் உள்ள விலை உயர்ந்த வாட்டர் கலர் வண்ணங்களைக் காண்பித்து, இது எல்லாம் என்னிடம் இருக்கிறது, எனக்கு வாட்டர் கலர் அடிக்கச் சொல்லிக் கொடுங்கள் என்றேன். அவர் குழந்தைகள் வைத்திருக்கும் பல்லாங்குழி போன்ற பத்து ரூபாய் சமாசாரத்தை வாங்கி வரச் சொன்னார். அதை வைத்துக் கொண்டு ஒரு மிக அருமையான ரோஜா பூ படத்தை வரைந்து முடித்தார். அவர் என்னிடம் சொன்னது, விலை உயர்ந்த கலர் முக்கியம் இல்லை, படத்தின் அவுட்லைன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது தான். நான் வரைந்த சில படங்களை அவரிடம் காண்பித்த போது மூக்குக்குக் கீழே ஒரு கோடோ...

வாட் அன் ஐடியா சர்ஜி!

வாட் அன் ஐடியா சர்ஜி! பஹல்காம் தாக்குதலின் கொடூரம் விஷயம் - ஆண்களையும் பெண்களையும், இந்துக்களையும் முஸ்லிம்களையும், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் பிரித்துப் பொறுக்கி திடீர் என்று அடித்தது தான். கூடவே “உங்க மோடியிடம் போய் சொல்லு” என்று செய்தி அனுப்பினார்கள்.  இறந்த கணவர் அடிப்பட்டுக் கிடக்க, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்த அந்தத் தேன்நிலவு ஜோடியின் படம் எல்லோரையும் உலுக்கியது.  இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று பாரத மக்கள் எல்லோரும் மோதி மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். பீஹார்  அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் டிரம்ப் போன்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக ஆங்கிலத்தில் சூளுரைத்தார். நம் எல்லோர் மனதிலும் அடிப்பார் என்று தெரியும் ஆனால் எப்போது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உறுத்திக்கொண்டு இருந்தது.  பொறுக்கி அடித்த அந்தப் பொறுக்கிகளுக்கு மோதி என்ன மாதிரி அதிர்ச்சி கொடுக்கப் போகிறார் என்பதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். முதலில் நதி நீர் கிடையாது என்றார். உடனே எல...

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர் ( தமிழில் சுஜாதா தேசிகன்)

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர்  ( தமிழில் சுஜாதா தேசிகன்)  ஸ்ரீமத் ராமாயணம் ஓர் இதிகாசம். இதிகாசம் என்றால் ‘அப்படித்தான் இருந்தது’ என்று பொருள். அதனால் ராமர் இருந்தார் என்று நம்பப்படுகிறது இல்லை. ராமர் இருந்தார்.  ஸ்ரீமத் ராமாயணத்தை ஆழ்வார்களும், ஆசாரியார்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் வாக்குக்கு ஏற்றார் போல், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றுக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருமலைக்குச் சென்றார். குலசேகர ஆழ்வார் மொத்த ராமாயணத்தையும் ’இன்தமிழில்’ சுருக்கமாக அருள, ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்ற அற்புதமான ஒன்றை நமக்குச் சமஸ்கிருதத்தில் அருளினார். கம்ப ராமாயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயம். வடக்கே துளசிதாசர் என்ற மஹான் ’ராமசரிதமானஸ்’ (ராமரின் செயல்களால் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள்) என்று ஸ்ரீராமரின் செயல்களைத் தொகுத்து வழங்கினார். இப்படி ராமாயணத்தைப் பல விதமாக, பல மொழிகளில் நமக்குப் பலர் தந்துள்ளார்கள். எந்த மொழியில் எப்படி இருந்தாலும் அதில் ஸ்ரீராமர் குடிகொண்டிருக்கிறார்.  ஸ்ரீமத் ராமாயணத்துக்கு இன்னொரு...

ஆபாச சகிப்புத்தன்மை

ஆபாச சகிப்புத்தன்மை  முன்பு எப்போதோ படித்த நகைச்சுவை இது.  ஒருவர் கருப்பாக ஏதோ குடித்துக்கொண்டு இருக்க, பையன் ஓடி வந்து, "அப்பா, வீட்டுத் தண்ணீரில் சாக்கடை கலந்துவிட்டது குடிக்காதே! வயிற்றுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது!" என்று பதற, அப்பா கூலாக, “அப்படியா எனக்கு ஒன்றும் தெரியவில்லையே! நல்லா தானே இருக்கு!” என்பார். பையன் முழிக்க, அப்பா, “உங்க அம்மா போட்ட காபி என்று நினைத்தேன்” என்பார்.  இந்த அப்பாவைப் போலத் தான் இன்று தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள். நம் மீது சாக்கடையை வாரி அடித்தாலும் அதைத் துடைத்துக்கொள்ளக் கூட தயங்குகிறோம். சமீபத்தில் தமிழக ‘உயர்’ கல்வித்துரை அமைச்சர் சைவம், வைணவம் குறியீடுகளைப் பாலியல் தொழில் செய்பவர்களுடன் சம்பந்தம் படுத்திப் பேசியுள்ளார்கள். பெரியார் மண், திராவிட மாடல் ஆட்சி என்று கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் புண்ணிய பூமியில் பயிருக்குப் பதில் களைகள்‌ பூத்துக்குலுங்குகிறது. அமைச்சர் பேசியதற்குப் பெண்கள் குறித்து அமைச்சர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது போன்ற பொத்தாம் பொதுவான கண்டனங்களைச் சொல்லி கடந்துச்செல்கிறார்கள். சைவம், வைணவம் குறித்து இப்படிப் பேச...