Skip to main content

Posts

Showing posts from May, 2026

தேநீர் என்ற சாய்

தேநீர் என்ற சாய் தேநீர் என்றால் ஏதோ தேன் போன்ற இனிய நீர் கிடையாது, தேயிலை+நீர் - தேநீர். ’வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்பது தேநீருக்குக் கச்சிதமாகப் பொருந்தும். தமிழக (அல்லது தமிழ்நாட்டு) மக்கள் ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் அறிந்திருந்தாலும் சுவைக்காக டீயைக் குடிக்காமல் காலையில் கக்கா மருந்தாக மட்டும் டீ குடித்துப் பழகி, நல்ல தேநீரை சோழர் காலத்திலிருந்து ருசித்ததே இல்லை நெதர்லாந்தில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு வர இருக்கும் செப்பேடுகளில் எழுதியிருப்பதாக சொல்லுகிறார்கள். திருச்சி ’கோர்ட்’ அருகில் ‘மும்தாஜ்’ ஹோட்டலை ஷாஜகான் போல் ஒட்டிக்கொண்டு இருக்கும் டீ ஸ்டாலில், சிறுகாலையிலேயே பளபளப்பான பாய்லரின் பொந்தில் தாத்தாவின் கோவண வடிகட்டியில் டீ தண்ணீரை கிளாஸில் ஒழுகவிட்டு, பேசினிலிருந்து சீனியை அள்ளி இறைத்து, கைக்குழந்தைக்குப் பாலாடையில் பாலை ஊட்டுவது போலக் கொஞ்சம் கொஞ்சமாக நிரப்பி, காது வைத்த டம்ளரில் இரண்டு ஆற்று ஆத்தி அதற்கு மேல் மீண்டும் அதே கோவண எசன்ஸை டாப்பிங்காக தெளித்துக் கொடுப்பார்கள். ஒரு நாள் பாட்டியிடம் டீக்கு பைசா கேட்ட போது "மும்தாஜ்ல முட்டை போண்டா விற்கிறார்க...

தமில் வாழ்க!

  தமில் வாழ்க! ‘மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்!’ என்ற புதுக்கவிதை வரிகள் ‘சுஜாதா’வால் பிரபலமாகி, பின்னாளில் புத்தகத் தலைப்பாகவே மாறியது. ஆங்கில மொழிக்குக் கிடைக்காத ஒரு பெருமை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது – தமிழ் ஒரு ‘பெண்’. அதனாலோ என்னவோ, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையே இதற்கும் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அவியல் செய்யப் போதுமான தலைப்புகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் கையில் முதலில் எடுப்பது தமிழைத்தான். தமிழுக்கு புடவை கட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ சர்ச்சை, சுடிதார் போட்டு இந்து எதிர்ப்பு அல்லது மும்மொழிக் கொள்கை என எதையாவது உளறிவிட்டு, கடைசியில் ‘தமில் வாழ்க’ என்று முடித்தால் போதும் – திராவிட சித்தாந்தவாதி என்று சுலபமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்! இப்படிப் பல காலமாக அரசியல்வாதிகளின் வெறும் வாய்க்கு அவலாக இருந்துகொண்டிருக்கிறாள். சொல்ல மறந்துவிட்டேனே, அவ்வப்போது திடீரென்று கருப்பு பெயிண்ட் டப்பாவைத் தூக்கிக்கொண்டு தமிழ் அல்லாத எழுத்துக்களை அழிக்கும் 'அரும்பணி' இருக்கவே இருக்கிறது. இவற்றையெல்லாம் செய்து, தமிழகத்தில் தமிழ் வளர்ந்துவிட்டதா? தமிழகத்தில் தமிழ் வளரவே...

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அப்டேட்

  குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அப்டேட் சென்ற மாதம் ‘குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்’ முன்பதிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டேன். தற்சமயம் புத்தகத்தின் கடைசிக்கட்ட பிழைத்திருத்தப் பணிகள் (Proofreading) நடைபெற்று வருகின்றன. சென்ற வாரம் ‘பொருளடக்கம்’ பகுதியைச் சரிபார்த்தபோது: 1.அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே 2.அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே 3.தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே 4.தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே 5.பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே 6.பிணவிருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போலே 7.தாய்க்கோலம் செய்தேனோ அநுசூயைப் போலே 8.தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே -என்று வரிசையாக 81 வாக்கியங்களும் இருந்தன. இவற்றை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் இன்னும் சுவாரசியமாக எப்படி மாற்றலாம் என்று யோசித்தபோது ஒரு புதிய எண்ணம் தோன்றியது (பார்க்க: படம்). இதில் இரண்டு ‘போஸ்ட் இட்’ (Post-it) குறிப்புகள் இருக்கும்படி வடிவமைத்துள்ளேன். மேலே ஒரு சிறிய போஸ்ட் இட், அதற்குப் பின்னால் பெரியதாக மற்றொன்று என இருவேறு வண்ணங்களில் இவை அமையும். மேலே இருப்பது: ‘ஆதாரங்கள்’ (S...