Skip to main content

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அப்டேட்

 குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அப்டேட்



சென்ற மாதம் ‘குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள்’ முன்பதிவு குறித்த அறிவிப்பை வெளியிட்டேன். தற்சமயம் புத்தகத்தின் கடைசிக்கட்ட பிழைத்திருத்தப் பணிகள் (Proofreading) நடைபெற்று வருகின்றன.

சென்ற வாரம் ‘பொருளடக்கம்’ பகுதியைச் சரிபார்த்தபோது:

1.அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே
2.அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே
3.தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே
4.தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5.பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6.பிணவிருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7.தாய்க்கோலம் செய்தேனோ அநுசூயைப் போலே
8.தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே

-என்று வரிசையாக 81 வாக்கியங்களும் இருந்தன.

இவற்றை குழந்தைகளுக்குப் புரியும் வகையில் இன்னும் சுவாரசியமாக எப்படி மாற்றலாம் என்று யோசித்தபோது ஒரு புதிய எண்ணம் தோன்றியது (பார்க்க: படம்).

இதில் இரண்டு ‘போஸ்ட் இட்’ (Post-it) குறிப்புகள் இருக்கும்படி வடிவமைத்துள்ளேன். மேலே ஒரு சிறிய போஸ்ட் இட், அதற்குப் பின்னால் பெரியதாக மற்றொன்று என இருவேறு வண்ணங்களில் இவை அமையும்.

மேலே இருப்பது: ‘ஆதாரங்கள்’ (Sources).

உதாரணத்திற்கு: ஊதா(purple)- புராணம்; பச்சை - மகாபாரதம்; சிவப்பு - ராமாயணம்….

கீழே இருப்பது: ‘அடையாளங்கள்’ (Identities).
இங்கே பக்தர்கள், அரசர்கள், ரிஷிகள், அவதாரங்கள், ஆழ்வார், ஆசாரியர்... என அந்தந்தக் கதாபாத்திரங்களை வண்ணங்கள் கொண்டு அடையாளப்படுத்தியிருக்கிறேன்.

இதை உபயோகித்து குழந்தைகள் - தங்கள் விருப்பம் போல படிக்கலாம் அதே சமயம் இதை உபயோகித்து ‘போர்ட் கேம்’ மாதிரி விளையாடலாம்.

தற்சமயம் இந்தப் பக்கங்களை உருவாக்கும் பணியில் இருக்கிறேன். புத்தகத்தை வரும் ஜூன் மாதம் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்.

வழக்கம் போல, ‘ராமானுஜ தேசிக முனிகள் டிரஸ்ட்’ மூலம் இந்தப் புத்தகத்தை அதன் அடக்க விலைக்கே வழங்குகிறோம்.

தற்போதைய உலகளாவிய சூழல் காரணமாகப் காகிதத் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற பல சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. எனவே, குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பிரதிகளை அச்சிட உள்ளோம். இதுவரை முன்பதிவு செய்யாதவர்கள், புத்தகத்தைப் பெற உடனே முன்பதிவு செய்துவிடுங்கள்.

-சுஜாதா தேசிகன்
14.5.2026

Comments