Skip to main content

Posts

Showing posts from December, 2009

கல்யாணி

மேலே நீங்க பார்ப்பது நேற்று வந்த தி.ஹிந்து இரண்டாம் பக்கம். மேலிருந்து கீழே இரண்டாவது காலத்தில் பாருங்க. “02.30pm: Mr…… - Violin, All are welcome” அப்படீன்னு இருக்கா? அந்த Mr….. நான் தான்.. இந்த மத்யானக் கச்சேரிக்குத் தான் அமெரிக்காவிலேருந்து வந்தேன். உடனே என்னை ஏதோ சஞ்சய் சுப்பிரமணியன் மாதிரியோ, டி.எம்.கிருஷ்ணா மாதிரியோ நினைக்காதீங்க. அந்த அளவுக்கு ஞானமும் கிடையாது அதிர்ஷ்டமும் கிடையாது. டிசம்பர் மாசம் ஆச்சுன்னா கச்சேரி பண்ண சபால ஸ்லாட்டும், கேண்டீன்ல மெதுவடை கிடைக்கறதும் அவ்வளவு கஷ்டம். அந்தக் கஷ்டம் எனக்கு மட்டுந்தான் தெரியும். எல்லா இடத்திலேயும், சிபாரிசு, போட்டி, பொறாமை… என்ன செய்ய? போன சீசனுக்கே வாசிச்சிருக்கணும் கடைசி நிமிஷத்துல இல்லைனுட்டா. சரி அது எல்லாம் பழைய கதை. சீசன் டிக்கெட்டோட வைரத்தோடு மாமிகளும், டி-ஷர்ட் மாமாக்களும் முன்வரிசைல உட்கார்ந்துண்டு, தனி ஆவர்த்தனை ஆரம்பிச்சதும் வெளியே வந்து, “சார் அறுசுவை நடராஜன் அடை அவியல் பிரமாதம்” என்று சொல்லும் சீசன்ல எனக்கு இந்தத் தடவை மத்தியானம் இரண்டரை மணி ஸ்லாட் கிடைச்சிருக்கு. என்.ஆர்.ஐ கோட்டான்னு பேர். எல்லாம் சிபாரிசுதான். “இரண்டரை

ராக்கெட் வண்டுகள்

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி! காமம் செப்பாது, கண்டது மொழிமோ: பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல், செறி எயிற்று, அரிவை கூந்தலின் நறியவும் உளவோ, நீ அறியும் பூவே?” (குறுந்தொகை -2) இந்தப் பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியாது; திருவிளையாடல் படத்தில் சிவாஜி ஏற்ற இறக்கத்துடன் நக்கீரனுக்குப் பாடிக் காண்பிப்பார். ஏதோ ஒரு தமிழ் பரிட்சையில் மனப்பாடம் செய்து, அப்படியே எழுதியதால் சுளையாக 10 மார்க் கிடைத்தது. சங்கத் தமிழ் பாடலையும், சிவாஜியின் நடிப்பையும் பற்றி நான் எதுவும் சொல்லப்போவதில்லை. அவை எல்லாம் உங்களுக்குத் தெரிந்ததுதான். சிவாஜிக்கும் வண்டுக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பந்தம் என்று நினைக்கிறேன். கர்ணன் படத்தில் வரும் வண்டு, கர்ணனாக நடிக்கும் சிவாஜி தொடையில் துளை போடும். ரத்தம், வலி எல்லாம் வரும்; தூங்கிகொண்டிருக்கும் குருவை எழுப்ப கூடாது என்பதற்காகப் பொறுத்துக்கொள்வார். இந்தக் காட்சியில் சிவாஜி வழக்கம்போல் பயங்கரமாக நடித்திருப்பார். வண்டு அந்த நடிப்பைப் பார்த்திருந்தால், துளை போடுவதை நிறுத்தியிருக்கும். வண்டு தொடையைத் துளைபோடுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை, பெரிய மரத் தூணையே துளை போட