Skip to main content

Posts

Showing posts from October, 2020

பரம காருணிகரான பின்பழகிய பெருமாள் ஜீயர்

பரம காருணிகரான பின்பழகிய பெருமாள் ஜீயர்
இந்தப் படம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் நம்பிள்ளை. அவருடைய திருவடிக்குக் கீழே ஒரு ஜீயர் இருக்கிறார் அவர் யார் என்று தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். ’வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி' என்ற திருவரங்க பாசுரம் மிகப் பிரபலம்.  ஏன் தன் பின் பகுதியை பெருமாள் வடதிசையை நோக்கிக் காண்பிக்கிறார் என்ற கேள்விக்கு நம் பூர்வர்கள் பதில் கூறியிருக்கிறார்கள். 
அழகிய மணவாளன் என்ற திருநாமம் ஆண்டாள் காலத்திலிருந்து  நம்பெருமாளுக்கு உண்டு. ஆனால் அவருடைய ’ முன் அழகை’க் காட்டிலும் பின் அழகு இன்னும் அழகாக இருக்குமாம். அதனால் ‘முன்னிலும் பின்னழகிய பெருமாள’ என்று நம்பெருமாளுக்கு இன்னொரு ஸ்பெஷல் திருநாமமும் உண்டு.வடக்கே இருக்கும் கூட்டத்தை தெற்குப் பக்கம் ஈர்க்க அவர் பின்னழகைக் காட்டினார் என்பார்கள். இந்த ‘பின் அழகு’ என்ற பெயர் கொண்ட ஜீயர் தான் 'பின்பழகிய பெருமாள் ஜீயர்’. திருபுட்குழியில் அவதரித்த இவர் நம்பிள்ளையின் அர்மார்த்தமான சிஷ்யராக இருந்தார்.   பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தார். கூட இருந்தவர்களை அழைத்…

14. இராமானுசன் அடிப் பூமன்னவே - இசைகாரர்

14. இராமானுசன் அடிப் பூமன்னவே - இசைகாரர்  நாதமுனிகளின் மருமக்களான மேலையகத்தாழ்வானையும், கீழையகத்தாவானையும் அன்புடன் நோக்கி “மருமக்களே! அடியேன் திருக்குருகூரில் நடந்த விசேஷ நிகழ்வுகளை இப்போது உங்களுக்குக் கூறுகிறேன்” என்று தான் ஆழ்வார் பாசுரங்களைத் தேடிப் புறப்பட்டதிலிருந்து, பராங்குச தாசரை கண்டு கண்ணிநுண் சிறுத்தாம்பு பன்னிரண்டாயிரம் தடவை உருச்சொன்னதை அடுத்து, சடகோபர் திருவாக்கில் ஆழ்வார்  வைபவங்களுடன் அவர்கள் அருளிய பாசுரங்கள், திருவாய்மொழி முதலியவை கிடைத்த விபரங்கள், ’பொலிக பொலிக’ என்ற பாசுரத்தின் அர்த்த விசேஷங்களைக் கூறி,  கலியின் கொட்டத்தை அடக்க ஓர் ஆசாரியர் அவதரிக்கப் போகிறார் என்று ஆழ்வார் கனவில் காட்சி கொடுத்தது கூறிய விருத்தாந்தங்களை கூறினார். எல்லாவற்றையும் கூறிய நாதமுனிகள் தமக்கு ஆழ்வார் பிரசாதித்த பவிஷ்யதாசாரியர் விக்கிரகம் பற்றியும் அது தன்னிடம் இருப்பதையும்  அவர்களிடம் கூறாமல் ரகசியமாக வைத்துக்கொண்டார்.   மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த மருமக்கள் கண்ணீருடன் “உத்தமோத்தமரே! மகானுபாவனுடைய உங்களின் சம்பந்தம் கிடைக்கச் செய்தற்கரிய பெரும் புண்ணியம் என்ன செய்…

இடைகழி மெய் விளக்கு

இடைகழி மெய் விளக்கு பல விஷயங்கள் சொல்லும்போது  ‘கடைசியில் என்னதான் சொல்லவர  ?’ என்ற கேட்போம்.   முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்களின் திருவந்தாதிகள் முதல்/இரண்டாம்/மூன்றாம் திருவந்தாதி என்ற வரிசையில் வருகிறது.  ஆழ்வார் பாசுரங்களைப் படித்தால் ஆழ்வார்கள் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வது போல இருக்கும். அவற்றை redundant/repetative போன்று நமக்குத் தோன்றும். ஆழ்வார்கள் ஆழங்காற்பட்டு நமக்குச் சொன்ன உண்மைப் பொருள் என்று நாம் உணர வேண்டும். ஆழ்வார்களின் அருளிச்செயல்களில் முதலாழ்வார்கள் பிரபந்தங்கள் (இயற்பா) கிட்டதட்ட கடைசியில் தான் வருகிறது.  ஸ்வாமி தேசிகனின் ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் கடைசியில் (ஆச்சார்ய க்ருத்ய அதிகாரம்) நமக்கு இந்தப் பாசுரத்தைத் தமிழில் அருளியிருக்கிறார் ( ஞான தமிழ் புரிந்த நான் என்று சொல்லும் ஆழ்வார்களுக்குத் தமிழில் தானே எழுத வேண்டும் ? ) பாட்டுக்கு உரிய பழையவர் மூவரைப் பண்டு ஒரு கால்
மாட்டுக்கு அருள் தரு மாயன் மலிந்து வருத்துதலால்
நாட்டுக்கு இருள் செக நான்மறை யந்தாதி நடை விளங்க
வீட்டுக்கு இடை கழிக்கே வெளி காட்டும் அம்மெய் விளக்கே
மருளற்ற தேசிகர் வான் …

மெய் கறுத்த கருத்து

மெய் கறுத்த கருத்து 

ஆண்டாள் வருண தேவனைப் பார்த்து மழை வேண்டும் என்று கேட்கும் பாசுரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 'ஆழி மழைக் கண்ணா’ என்று ஆரம்பித்து, ’ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து’ என்று கூறுகிறாள்.  ஊழி முதல்வன் போல் கறுத்து என்று சொன்னாலே போதுமே எதற்கு ’மெய்’ என்ற extra fitting ? ஆழ்வார் பாடல்களில் எங்கு எல்லாம் கருமை நிறம் வருகிறதோ அங்கே எல்லாம் அவனுடைய கருணையை ஆழ்வார்கள் கூற தவறுவதில்லை. எம்பெருமானுடைய நிறத்தை மேகங்கள் கொள்ளலாமே தவிர அவனுடைய கருணையைக் கொள்ள முடியாது. அதனால் ஆண்டாள் ’மெய்’ கறுத்து என்று கூறுகிறாள். ( மெய்யாலும் கறுக்க வேண்டும் என்கிறாள்)கருமேகங்கள் மழைக்குப் பிறகு வெளுத்துவிடும், ஆனால் கண்ணனின் திருவுள்ளம் நமக்கு அநுக்ரஹம் செய்ய வேண்டும் என்று எப்போதும் கறுத்து இருக்குமாம். அந்த வாத்ஸல்யம் வேண்டும் என்று உணர்த்தத் தான் ஆண்டாள் ‘மெய்’ கறுத்து என்று அழுத்தி தன் கருத்தைக் கூறுகிறாள். நாச்சியார் திருமொழியில் ஒரு பாசுரத்தைப் பார்க்கலாம். பொருத்தம் உடைய நம்பியைப்
புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற
அக் கரு மா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா …

விஷ்வக்சேனர்

விஷ்வக்சேனர் பல வருடங்கள் முன் ‘விஷ்வக்சேனர்’ என்ற பெயர் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. சென்னையில் ”Vishwak” என்று கம்பெனி கண்ணாடி பலகை கண்ணில் பட்டது.  வித்தியாசமான பெயராக இருந்தது. ஆனால் அர்த்தம் தெரியவில்லை. சில வருஷம் கழித்து அதன் உரிமையாளர் ஒரு ஸ்ரீவைஷ்ணவர் என்று தெரிந்துகொண்டேன். ஆனால்  இந்தப் பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்ற குழப்பம் இருந்துகொண்டே இருந்தது. ஒரு முறை கோயிலில் சந்நிதிகளை சேவிக்கும் போது, விஷ்வக்சேனர்  பற்றி தெரிந்துக்கொண்டேன். ’விஷ்வக்’  என்று முன்பு பார்த்த பெயருக்கும் இதற்கும் நிச்சயம் சம்பந்தம் உண்டு தெரிந்துகொண்டேன். விஷ்வக்சேனர் வாழி திருநாமம் இப்படி இருக்கிறது. ஓங்கு துலாப் பூராடத்துதித்த செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கிதமுரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்துமூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்குபுகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியேமேலே உள்ள வரிகளுக்கு என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள மேலும் படிக்கலாம். விஷ்…

மாமுனிகள் என்ற மழைச்சாமி !

மாமுனிகள் என்ற மழைச்சாமி !  ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் கடைக்குட்டியாக விளங்குபவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் (காலம் 1370 - 1443 முதல் ).  ஐப்பசி மூலத்தில் ஆழ்வார் திருநகரியில் திருநாவீறுடையபிரான் தாசருக்கு திருக்குமாரராய் அவதரித்தவர் ஸ்ரீ மணவாள மாமுனிகள். இயற்பெயர் ஸ்ரீ அழகிய மணவாளன் ( அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்)சிக்கில் என்ற ஊரில் அவருடைய தாய் மாமாவுடைய இல்லத்தில் வேத பாடங்கள் படித்து வந்த அதே காலத்தில் ஆழ்வார் திருநகரியில் ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை எம்பெருமானார் தரிசனம் என்ற ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை பிரகாசிக்க செய்ய ஒருவரைத் தேடிக்கொண்டு இருந்தார். சிக்கிலில் படித்துக்கொண்டு இருந்த ஸ்ரீ அழகிய மணவாளன் திருவாய்மொழிப் பிள்ளையின் ஞானத்தை அறிந்து சிக்கிலிலிருந்து கிளம்பி தன் பிறந்த இடமான ஆழ்வார் திருநகரிக்கு புறப்பட்டு அங்கே திருவாய்மொழிப் பிள்ளையின் திருவடிகளைப் பற்றினார். அவருடைய வாழ்கை வரலாற்றில் பல சுவாரசியமான சம்பவங்கள் இருக்கிறது. அதிலிருந்து சிலவற்றை இங்கே தருகிறேன். முதலில் எப்படிச் சந்நியாசம் மேற்கொண்டார் என்று பார்த்துவிடலாம்.மணவாள மாமுனிகளின் குடும்பம் பெரியது, அடிக்கடி…

13. இராமானுசன் அடிப் பூமன்னவே - துதிக்கப்பெறுகை

13. இராமானுசன் அடிப் பூமன்னவே - துதிக்கப்பெறுகை சடகோபன் திருவடிகளை விட்டுப் பிரியாமல் திருக்குருகூரில் நிரந்தர நித்திய வாசம் செய்துகொண்டு இருந்தார் நாதமுனிகள் என்று நேயர்களுக்குச் சிறிது நினைவுபடுத்திவிட்டு கதையில் மேலும் பயணிக்கலாம். சூரியன் மறைந்து எல்லாத் திக்கிலும் இருள் சூழ்ந்த ஓர் இரவு நாதமுனிகளுக்குக் கனவு ஒன்று வந்தது. முன் அத்தியாயங்களில் சந்தித்து பிறகு நாம் மறந்தே போன நமக்கும் மிகவும் பரிச்சயமான வீராணாராயண பெருமாள் தான் அவர்!“நாதமுனிகளே! இவ்வளவு காலம் எம்மை பிரிந்து வாழ்வது உமக்குத் தகுமோ ? இந்தத் தமிழ் பிரபந்தங்கள் அனைத்தும் உம் இசையில் கேட்க விருப்பம் விரைவில் வீரநாராயணபுரம்  வந்து சேரும்!” என்றார். “அடியேனை ஆட்கொண்ட ஒப்பற்ற வீரநாராயணபுரத்து எம்பெருமானே!”  என்று நாதமுனிகள் கண்விழித்துப் பார்த்த போது எங்கும் நிசப்தமாக மெல்லிய காற்று வீசிக்கொண்டு இருந்த அந்த வேளையில் சந்திரன் மேகக் கடலில் மறைந்து, சூரியன் மெதுவே தலைகாட்ட,  அந்தக் காலை நாதமுனிகள் ஆழ்வாரையும், பொலிந்து நின்ற பிரானையும் வணங்கி நின்றார். கோயில் அர்ச்சகர் “நாதமுனிகளே நீர் மன்னார் சொல்படி வீரநாராயணபுரத்துக்கு செல…

தினமும் கொஞ்சம் தேசிகன் - 13

தினமும் கொஞ்சம் தேசிகன் - 13 

’என்னங்கடா இப்படியெல்லாம் பீதியை கிளப்புறீங்க’ என்ற சொல்லைக் கேட்டிருக்கிறோம். பீதி என்றால் பயம், ’அ பீதி’ என்றால் பயம் அற்ற என்று பொருள். ஸ்வாமி தேசிகன் ’அ பீதி ஸ்தவம்’ என்று அருளியிருக்கிறார். எப்போது ஏன் எழுதினார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் இருந்தாலும் சில வரிகளில் அதைக் கூறிவிட்டு மேலும் தொடர்கிறேன். திருவரங்கத்தில் நம் தேசிகன் நெடுங்காலம் எழுந்தருளியிருந்த சமயத்தில் முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்து கோயிலுக்கு நாசம் விளைவித்தார்கள். நம்பெருமாளைப் பிள்ளை லோகாச்சாரியார் காப்பாற்ற, ஸ்வாமி தேசிகன் பெரிய பெருமாளுக்கு முன் சுவர் ஏழுப்பி, சுதர்சன பட்டர் இரண்டு புதல்வர்களையும்  ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் தேசிகன் காத்துக் கொடுத்தார். திருவரங்கத்திலிருந்து புறப்பட்ட ஸ்வாமி தேசிகன், திருநாராயணபுரத்தில் இருந்த போது அங்கே சத்யா காலத்தில் வாசம் செய்த போது, நம்பெருமாளைப் பிரிந்து திருவுள்ளம் மிகப் புண்பட்டு அவர் அபீதிஸ்தவம் என்ற உயர்ந்த 29 ஸ்லோகங்களை அருளினார்.திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்து நீங்கி, அச்சம் நீங்கி, நம்பெருமாளுக்கு மீண்டும…

12. இராமானுசன் அடிப் பூமன்னவே - விளைநிலம்

12. இராமானுசன் அடிப்  பூமன்னவே -  விளைநிலம்  சென்ற அத்தியாயத்தில் நம்மாழ்வார் முன் நாதமுனிகள் ’பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’  என்ற வரிகளை அழுத்திப் பாடி, வருங்கால ஆசாரியனின் உருவத்தை  சர்வ அவய பூர்ணமாக அடியேனுக்குக் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்த சம்பவம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்குப் பிறகு குருகூர் சடகோபன் சிந்தனையில் ஆழ்ந்தார். நம்மாழ்வார் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்,  நாதமுனிகளைப் பார்த்து “ உமக்கு இன்று இரவு சொப்பனத்தில் நாமே அதைப் பாவனையாக காட்டியருளுகிறேன்” என்றார். அன்று இரவு நாதமுனிகளின் கனவில் ஆழ்வாரே தோன்றி “நாதமுனிகளே!  நம் குலத்தில்(1) அவதரித்து,   இப்பூவுலகம் முழுக்க வாழ்ச்சி அடையப் போகும் அவதாரத்தைக் காணுங்கள்! நாமே வருங்கால அசாரியனை உமக்குக் காட்டியருளுகிறேன்!” என்று நம்மாழ்வாரே வருங்கால ஆசாரியனாக நாதமுனிகளுக்குக் காட்சியளித்தார். பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் மீது, பால சூரியனின் ஒளிபட்டவுடன் எப்படி பிரகாசிக்குமோ அது போல அந்த ஒப்பற்ற திருமேனி ஒளிர்ந்தது. அந்த வடிவழகு காட்சியைக் கண்ட நாதமுனிகள் உடல் ஆனந்தத்…

கல்கியில் கடைசிப் பக்கம்

வரும் வாரத்திலிருந்து கல்கியில் ‘கடைசிப் பக்கம்’ எழுதப் போகிறேன். இதற்கான அறிவிப்பு இந்த வாரக் கல்கியில் வந்திருக்கிறது. 
(7) தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல!

(7) தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல!
மீண்டும் ராமாயண கதை. என்று அந்தச் சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள்.ராமருக்கு முடிசூட்டு விழா, ஆனால் கைகேயி, கூனியின் சூழ்ச்சியால் ராமர் காட்டுக்குச் சென்றுவிட்டார். ராமர் சித்திரகூடத்திலிருந்தபோது, பரதன் ராமரைத் தேடிக்கொண்டு வந்து “ராமா !மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும்” என்று கேட்க, அதற்கு ராமர் தந்தை சொல்லைத் தட்ட மாட்டேன், பதினான்கு வருடம் காட்டிலிருந்துவிட்டுத் தான் வருவேன் என்றார். பரதன் எவ்வளவு சொல்லியும் ராமர் மறுத்துவிட, பரதன் உங்கள் பாதுகையாவது கொடுங்கள்.  உங்கள் சார்பாக அந்தப் பாதுகை நாட்டைக் காத்து ஆளட்டும் என்று தலைமேல் சுமந்து அயோத்திக்கு திரும்பினார்.பரதன் சென்றபிறகு ராமருக்குப் பரதன் நினைவு அடிக்கடி வந்தது. வேறு இடத்துக்குச் செல்லலாம் என்று புறப்பட்டார். போகும் வழியில் ஒரு ஆசிரமம் இருந்தது. அது அத்திரி முனிவரும் அவருடைய மனைவி  அனசூயை வசித்த ஆசிரமம்.ராமர், சீதையைப் பார்த்தவுடன் முனிவரும், அனசூயையும் மிகவும் மகிழ்ந்தார்கள். முனிவர் அனசூயையைச் சீதைக்கு அறிமுகம் செய்து வைத்து “அனசூயை தர்மத்தில் மிகச் சிறந்தவள். முன்பு ஒரு முறை பஞ்சம் வ…

(6) பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போல !

(6) பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போல ! 
பெண் பிள்ளை கதை சொல்ல ஆரம்பித்தாள்.  கண்டாகர்ணன் ஒரு பிசாசு. அந்தப் பிசாசு பிணத்தைத் தான் சாப்பிடும்.  சிறந்த சிவபக்தியுடையது ஆனால் அதற்கு நாராயணனைப் பிடிக்காது. அதனால் போகும் இடம் எல்லாம் காதில் மணியைக் கட்டிக்கொண்டு போகும்.”மணிக்கும் நாராயணனுக்கு என்ன சம்பந்தம் குழந்தாய் ?” என்று ராமானுஜர் கேட்க அதற்கு அந்தச் சுட்டிப் பெண் ”சொல்கிறேன் சாமி” என்று தொடர்ந்தாள்.கண்டா என்றால் மணி என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். மணிகட்டிய காதை உடைய பிசாசு.அதனால் அதற்குப் பெயர் கண்டாகர்ணன். நடக்கும்போது காதில் தொங்கவிட்ட மணி ‘டங் டங்’ என்று சத்தம் போடும். அப்போது யாராவது நாராயணா என்று சொன்னால் அதன் காதில் அது விழாது அல்லவா ?.பல காலம் பிசாசாக இருந்து அதற்கு அலுத்துவிட்டது. ஒரு நாள் சிவபெருமானிடம் “ஐயனே எனக்கு இந்தப் பிசாசு வாழ்க்கை போதும், எனக்கு வைகுண்டம் போக வேண்டும்”  என்று கேட்டது. அதற்குச்  சிவன் “பிசாசே, உன்னை வைகுண்டம் அனுப்பும் சக்தி என்னிடம் இல்லை. நாராயணன் ஒருவனுக்குத் தான் அந்தச் சக்தி உண்டு, அவரே அதைக் கொடுக்க முடியும்” என்று சொல்ல அத…

(5) பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!

(5) பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!

”பிள்ளாய்!, இந்தக் கதையில் கண்ணனா ? ராமரா  ?” என்றார் ராமானுஜர் “சாமி, இது தொண்டைமான் சக்கரவர்த்தியின் கதை” ”அப்படி என்றால் அது திருமலை சம்பந்தப்பட்ட கதை!” என்று ராமானுஜர் சிஷ்யர்களைப் பார்த்தார். சிஷ்யர்கள் புன்னகையுடன் கதையைக் கேட்க ஆரம்பித்தார்கள். குட்டிப் பெண் கதையைத் தொடர்ந்தாள்.தொண்டைமான் சக்கரவர்த்தி  திருமலை ஏழுமலையானின் தீவிர பக்தன். கோபுரம், மதில், மண்டபங்கள் எல்லாம் கட்டினான். அவற்றைத் தங்கமும், ரத்தினங்களும் கொண்டு அழகு படுத்தினான்.  பெருமாள் மீது மிகுந்த அன்பு கொண்ட தொண்டைமானுக்குப் பெருமாள் நண்பனாகிவிட்டார்.  தினமும் பெருமாள் அவருடன் நேரில் பேசுவார்.அடிக்கடி பெருமாளைப் பார்ப்பதற்கு அரண்மனையிலிருந்து கோயிலுக்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்தான்.  அதன் வழியே தினமும் பெருமாளுடன்  பேசிவிட்டு வருவான். .அப்படிப் பேசும் போது பெருமாள் இவருக்குப் பல நல்ல உபதேசங்கள் செய்வார்.ஒரு முறை இந்த தொண்டைமானின் ராஜ்யத்தின் மீது எதிரி நாட்டு அரசன் படையெடுத்தான்.  அப்போது தொண்டைமானுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சுரங்கப் பாதை வழியாகப் பெருமாளிடம் செ…