விரைவில் ஆரம்பம்
திருக்கோளூர் பெண் பிள்ளை கதைகள் முடித்தபின் ‘அடுத்து என்ன ?’ சிலர் விசாரித்தார்கள். இது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த அதேசமயம் கொஞ்சம் அச்சத்தையும் கொடுத்தது. பெண் பிள்ளை கதைகளுக்கு எந்தத் திட்டமிடலும் செய்யவில்லை. லாக்டவுன் போது ஆரம்பித்துத் தினமும் காலை அன்றைய கதையைப் படித்துவிட்டு கொஞ்சம் காது மூக்கு வைத்து எழுதினேன். காரணம் உடையவர், ஆசாரியன், நம்பெருமாள் அனுக்கிரகம் தான். எழுதும்போது ஏதோ நானும் பெண் பிள்ளையுடன் கூட இருந்தது போன்ற அனுபவம் கிடைத்தது. உங்களுக்கும் இருந்திருக்கலாம்.
பல வருடங்களாக என் ’டிரீம் பாரஜக்ட்’ என்று ஒன்று மனதில் ஓடிக்கொண்டு இருந்தது. அதை ஒவ்வொரு முறை ஆரம்பிக்கும்போது இதை நம்மால் எழுத முடியாது என்று விட்டுவிடுவேன். இப்போது மீண்டும் ஆரம்பிக்கலாம் என்று தோன்றியது. இதற்கும் எந்தத் திட்டமிடலும் இல்லை. பொறுமையாகத் தான் எழுதப் போகிறேன். வாரத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டோ தெரியாது. எவ்வளவு பகுதிகள் வரப் போகிறது என்றும் தெரியாது. முடிக்கும்போது தான் அது தெரியவரும்.
முன்பே கூறியது போல என் வலைப்பதிவில் தான் எழுதப் போகிறேன். முகநூலில் லிங்க் மட்டுமே.
வாசகர்களான நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். குறைகள், தவறு இருந்தால் சுட்டிக் காண்பிக்க வேண்டுகிறேன்.
- சுஜாதா தேசிகன்
Comments
Post a Comment