Skip to main content

Posts

Showing posts from January, 2024

நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள்

நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள் இன்று ஸ்ரீ கூரத்தாழ்வான் திருநட்சத்திரம். ஆழ்வானைப் பற்றி சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன். கூரத்தாழ்வானே நம் முன்மாதிரி ஸ்ரீ வைஷ்ணவத்தில் யாரை ’ரோல் மாடலாக’ கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு கூரத்தாழ்வான் என்று பதில் சொல்லலாம். பெரியாழ்வார் திருமொழியில் வரும் 'பலசுருதி' (பலன்) சொல்லும் பாசுரம் இது ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் மாயன் மணிவண்ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே. இந்தப் பாசுரங்களைச் சொன்னால் மாயனான மணிவண்ணன் திருவடிகளை வணங்க வல்லப் பிள்ளையை மகனாகப் பெறுவார்கள் என்கிறார். இந்த மாதிரி ஒரு மகனைத் தான் பெற்றார் ஆழ்வானுடைய தந்தையார். ஏன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். ஆழ்வானின் சிறுவயதில் அவருடைய தாயார் பரமபதம் அடைந்தாள். ஆழ்வானைப் பார்த்துக்கொள்ள அவருடைய தந்தை மறுமணம் செய்து கொள்ள எண்ணினார். ஏறக்குறைய அது நடக்கும் சமயம், ஆழ்வானைப் பார்த்தார் அவருடைய தந்தை. எல்லா ஸ்ரீ

ஸ்ரீ தியாகராஜர் சில குறிப்புகள்

 ஸ்ரீ தியாகராஜர் சில குறிப்புகள் சில வருடங்கள் முன் தியாகராஜரும் ஸ்ரீரங்கமும் பற்றி  படித்த போது சில குறிப்புகளை எழுதினேன்.  ஸ்ரீதியாகராஜருடைய ஜாதகத்திலிருந்து அவருடைய பிறந்த நாளை நிர்ணயிக்க முடிகிறது.  தாய்க்கு நன்கு பாட தெரியும். புரந்தரதாஸரின் பாட்டுக்கள் பலவற்றை அவர் கற்று வைத்திருந்தார். மகாராஜாவுக்கு தியாகராஜர் ஸ்லோகம் வாசிக்க இவருடைய தந்தை பொருளை விளக்குவார். இதனால் ஸ்ரீராமாயணம் இவர் மனதில் நன்கு பதிந்துவிட்டது.  தியாகராஜரின் பல வாழ்க்கை குறிப்புகள் அவர் பாடலின் மூலமே நமக்குக் கிடைக்கிறது. எளிய வாழ்க்கை, உயர்ந்த நோக்கு ( simple living, high thinking ) அதனால் பக்தியும், தொண்டும் அவருக்கு வந்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.   தியாகராஜர் பக்தி என்பது விவரிக்க முடியாதது. பக்திக்கு முன் ecstasy என்ற வார்த்தையை போட்டுக்கொள்ள வேண்டும்.  உஞ்சவ்ருத்தியின் மூலமாக உப்பு முதல் கற்பூரம் வரை அவர் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் சேகரித்ததாக மாளவஸ்ரீ ராகத்தில் ‘என்னாள்ளு திரிகேதி’ என்ற கீர்த்தனையில் அவரே கூறுகிறார்.  இவருக்கு 18வது வயதின் போது, காஞ்சிபுரத்திலிருந்து ஹரிதாஸ் என்ற ஒருவர் இவ

Oh! coronated king of Ayodya !

Oh! coronated king of Ayodya ! I find myself grappling with the challenge of deciding where to begin. The surge of emotions, unchecked since the consecration of "Ram Lalla" in the new temple, has left me in a contemplative state. To embark on this journey, I'll start by recounting my initial visit to Ayodhya. On October 10th, 2017, as I travelled by bus, a loud announcement stirred me awake, declaring, "Ayodhya has come." The distant sounds of Ram bhajans and the sight of a few monkeys in the dim light accompanied my awakening. As I fully emerged, the enchanting view of the sun-kissed River Sarayu awaited me. The name Ayodhya, translating to "beauty that cannot be described," was aptly defined by Sri Vedantha Desikan in his ‘Garuda Panchasat’, likening the sight of Periya Thiruvadi's (Garudan) thiruvadi to a beauty that can never be won. Previously, the term "Ram Janma bhoomi" associated with Ayodhya instilled a small nervousn

அயோத்தி எம் அரசே!

அயோத்தி எம் அரசே! இக்கட்டுரையை எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அயோத்தியில் ஸ்ரீராமர் பிரதிஷ்டையான அத்தருணம் என் மனதின் எண்ண ஓட்டங்களை விவரிக்க இயலவில்லை. முதல் முறை அயோத்திக்குச் சென்ற அனுபவத்திலிருந்து ஆரம்பிக்கிறேன். 2017ல் அக்டோபர் 10 இரவு பேருந்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது “அயோத்தி வந்தாச்சு!” என்று எழுப்பப்பட்டேன். முழித்த போது எங்கோ ராம பஜனை கேட்டது. மங்கலான வெளிச்சத்தில் சில குரங்குகள் தென்பட்டன. காலை சூரியோதயத்தில் சரயூவில் மூழ்கி அயோத்தியை ரசிக்க ஆரம்பித்தேன். அயோத்யா என்றால் சொல்ல முடியாத அழகு என்று பொருள். ஸ்ரீ வேதாந்த தேசிகன் தனது கருட பஞ்சாசத்தில் பெரிய திருவடியின் பார்வையை ‘அயோத்யா’ என்கிறார். அதாவது ஜெயிக்க முடியாத அழகு வாய்ந்ததாம் அவர் திருவடி. முன்பு அயோத்யா என்றால் ‘ராமஜன்ம பூமி’ என்ற பெயர் நினைவுக்கு வந்து உள்ளூரக் கொஞ்சம் பதற்றம் நம்மைப் பற்றிக்கொள்வதை மறுக்க முடியாது. காரணம் நாம் படிக்கும் வரலாறு வடி கட்டியது. ஏதோ ஆங்கிலேயரும், முகம்மதியர்களும் நமக்கு நல்லது செய்தார்கள் போன்ற தோற்றத்துடன் எழுதப்பட்டுள்ளது. ஹிந்துக் கோயில்களின் மீதும், நம் தேசத்