Skip to main content

திரு பாவை துதி -20

திரு பாவை துதி -20



கோதா ஸ்துதி - 20 - அரங்கனுக்கு கோதையின் புஷ்டியான மாலை


தந்யே ஸமஸ்த ஜகதாம் பிதுருத்தமாங்கே

         த்வந்மௌளிமால்ய பரஸம்பரணேன பூய:|

இந்தீவரஸ்ரஜமிவாதததி த்வதீயாந்யா

         கேகராணி பஹுமாந விலோகிதாநி ||       .20.


எளிய தமிழ் விளக்கம்

ஹே கோதா!

நீ முடிசூடிய பருமனான மாலைச்சுமையை

நன்கு தரிப்பதால்

மேலும் மேலும் பேறு பெற்று 

உலகுக்கெல்லாம் தந்தையான ரங்கனின் 

திருமுடியில் உன்னுடைய வெகுமானம் போன்ற 

அரைக்கண் பார்வைகள் 

கருநெய்தல் பூமாலை போல அவனை அலங்கரிக்கிறது!


சற்றே பெரிய விளக்கம் 

கோதையின் சூடிக்கொத்த மாலையில் பூமாலையில் பலச் சுமைகள் - வாசனை சுமை, காதல் சுமையுடன், திருப்பாவை என்ற பாமாலை, அவள் கடைக் கண் பார்வை கருநெய்தல் பூமாலை போலல சேர்ந்து புஷ்டியாக இன்பச்சுமையாக / சுவையாக பெருமாள் சுமக்கிறார். 


அலங்காரச் சாஸ்திரத்தில் ‘ரூபகாதிசயோக்தி’ என்ற அலங்காரம் இந்தக் கருநெய்தல் பூக்களின் உவமையை - “இரண்டு கருநெய்தல் பூக்களிலிருந்து கூர்மையான அம்புகள் புறம்படுகிறபடி பாராய்” என்கிறது.


நம்மாழ்வாருடைய நாயகியாகப் பாடிய பாசுரம் ஒன்றை அனுபவிக்கலாம். 


“இவள் இராப்பகல் வாய்வெரீ இ தன

குவளை ஒண் கண்ண நீர் கொண்டாள்”


இந்தப் பெண் இரவும் பகலும் வாய்பிதற்றி தன்னுடைய நெய்தல் மலர் போன்ற அழகிய கண்களில் நீரை உடையவள் ஆனாள் என்கிறது இந்தப் பாசுரம். 


இங்கே கோதை முடிசூடிக் கொடுத்த வெகுமானம் மற்றும் அவள் கடைக்கண் பார்வையை தரித்த பிறகு பெருமாளின் பார்வை  ‘கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூபோலே, செங்கண் சிறு சிறிதே அங்கண் இரண்டும் கொண்டு நோக்க, நீக்கிய இடமெல்லாம் நெய்தல் மலர் போன்ற  கோதையின் கடைக்கண் பார்வை மாலையாய் அலங்கரிக்கிறது. இந்த மாலையைச் சாற்றிக்கொண்டு பெருமாள் நம்மை அன்புடன் நோக்கினால் நம் மேல் சாபம் இழிந்து போகும்


- சுஜாதா தேசிகன்

5.1.2024

முப்பத்து மூவர்… 


Comments