Skip to main content

Posts

Showing posts from June, 2004

SRI NATHAMUNI, and the path of two fold scripture

Today's posting is a special one. The article reproduced (English edition of Narasimha Priya, July 2004 ) here is about Sri Nathamuni , written by Writer Sujatha and Co-authored by his brother T.S. Sundararajan . Incidently today (30th June 2004) is Nathamuni's birth asterism !. SRI NATHAMUNI, and the path of twofold scripture S.Rangarajan (Sujatha) and T.S. Sundararajan [%image(20050803-nathamuni_moolavar.jpg|292|394|Nathamuni)%]  Today in all vaishnava temples, in many hindu households and even in mylapore music concerts the hymns of the ‘ nalayira divyaprabhandam’ are recited. Whether their meanings are understood or not it is an amazing fact that the same verses were recited in perhaps the same style 1200 years ago. The words have been preserved and have come to us unsullied, unaltered and with a little guidance can be easily comprehended. One man was responsible for this amazing act of preservation Nathamunigal the anthologist of ‘azhvar Pasurangal.’ He did what ‘Nambiya

ஸ்ரீரங்கம் - 4

  கி.பி 10-ஆம் நூற்றாண்டு வரையில் இலக்கிய ஆதாரங்கள் மட்டிமே இக்கோயில் இருந்தமைக்குச் சான்று. இதை போன இரண்டு பதிவில் பார்த்தோம். 10-ஆம் நூற்றாண்டில் சோழமன்னர்கள் தலையெடுத்த பின்னர் அளித்த கல்வெட்டுக்கள், ஏறத்தாழ நானூறு(400) இங்கு காணப்படுகின்றன. இவைகளில் மிகப் பழமையானதாகிய கல்வெட்டு முதலாம் பராந்தகனின்(கிபி 907) 17-ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் ஆகும். அதில் கோயிலுக்கு ஒரு குத்துவிளக்கிற்கு 30 பொற்காசுகள், கற்பூரத்திற்கு 40 பொற்காசுகள், பருத்தி திரிநூலுக்கு 1 பொற்காசு மற்றும் குத்துவிளக்கு ஸ்டாண்டு ஒன்றையும் வழக்கியதாக கூறப்பட்டுள்ளது!. கொடுத்தவரின் பெயர் சங்கரன் ரனசிங்கன் என்று கல்வெட்டு கூறுகிறது. [%image(20050802-sri_danvanthri.jpg|600|411|Srirangam Danvantari sannidi)%] அடுத்த கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 38ஆவது ஆட்சி காலத்தில். அதில் திருமஞ்சனத்திற்கு 100 களஞ்சு தங்கம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது!. கொடுத்தவரின் பெயர் பல்லவராயன் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக இரண்டாம் இராசேந்திரன் மகனாகிய இராசமகேந்திர சோழன்(கிபி 1052-1064) இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் மதிலை கட்டியதாகக் கூறப்பட

ஸ்ரீரங்கம் - 3

போன பதிவில் சங்க காலத்தில் ஸ்ரீரங்கம் பற்றி சில குறிப்புகளைப் பார்த்தோம். இந்தப் பதிவில் சில வரலாற்றுச் செய்திகளைப் பார்த்துவிட்டு பிற்பாடு வந்த ஆழ்வார்கள் ஸ்ரீரங்கத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். வரலாற்றைப் பார்த்தால் சோழ அரசர்களின் ஆதிக்கம் கி.பி.4 அல்லது 5-ஆம் நூற்றாண்டு வரை தான் நிலைத்தது. பிறகு சேர, சோழ, பாண்டியர்கள் கலப்பிரர்கள் என்ற பழங்குடி இனத்தவரால் வீழ்த்தப்பட்டனர். 6-ஆம் நூற்றாண்டு வரை சேர, சோழ, பாண்டியர்களுக்கு இது இருண்ட காலமாகவே இருந்தது. அதன் பின் 6-ஆம் நூற்றாண்டில் தெற்கே பாண்டியர்களும், வடக்கே பல்லவர்களும் ஆட்சியை நிலை நாட்டினார்கள். கி.பி.575-ல் பல்லவ அரசன் சிம்மவர்மன் காஞ்சியை ஆண்டான். இக்காலத்தில் சோழர்கள் பல்லவ அரசர்களின் கீழ் ஆட்சி புரிந்தார்கள். பல்லவர்கள், சாலுக்கியர்கள் மற்றும் பாண்டியர்களுடன் முடிவு பெறாத சண்டையினால் வலு இழந்தனர். இதனால் சோழர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். அரசியல் மாற்றங்கள், குழப்பங்கள் நிறைந்த இக்காலத்தில் தான் இந்துமதம் தென் இந்தியாவில் வலுப் பெற்று வளர்ச்சி அடைந்தது!. அப்பர், சுந்தரர், சம்பந்தர் சைவ சமயத்தை அரச

அனுபவத்தின் அனுபவம்

என்னுடைய ஓர் அனுபவத்தை எழுதினேன். கட்டுரையா, சிறுகதையா என்று தெரியவில்லை. சனிக்கிழமை திரு சுஜாதாவை 'அம்பலம் சாட்டில்' பார்த்த போது நான் எழுதியதை கொடுத்து "சார் உங்களுக்கு எப்போ டைம் இருக்கோ படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்" என்றேன். நான் எழுதியதை உடனே படித்தார் ( பாவம் அவர் :-), சில இடங்களை திரும்பவும் எழுதுமாறு சொல்லியிருக்கிறார். அதை திரும்ப எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதிய பின் இங்கு போடலாம் என்று இருக்கிறேன். இந்த அனுபவத்தையே ஒரு அனுபவமாக பின் எழுதலாம் என்று தோன்றுகிறது!. Old Comments from my previous blog. Thalaiva unga Photovai ameeraga aanduviza malarla paarhthEn :-) By Maravandu - Ganesh, at Thu Jun 17, 04:58:13 PM IST   Post by prakash கதையை எப்ப போடப்போறீங்க? Mon, Jun 14 2004 5:26 Post by Eelanathan கதையை விரைவில் எதிர்பார்க்கிறேன். குட்டுப்பட்டாலும் மோதிரக்கையால் தான் குட்டுப்பட்டிருக்கிறீர்கள் Tue, Jun 15 2004 10:25 Post by Ramnath eppadi? Sat, Jun 19 2004 6:26

ஸ்ரீரங்கம் - 2

இந்தியாவில் எப்போதுமே வரலாற்று ஆராய்ச்சிகளில் குறிப்பாக கால வரன்முறைகளைப் பொருத்த வரையில் எதையும் தெளிவாக வரையறுத்துச் சரியாக கூறுதல் என்பது இயலாததாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம் வரலாற்றுச் செய்திகளும் சம்பிரதாயக் கருத்துகளும் ஒன்றோடொன்று மிக நெருக்கமாகப் பிணைத்துவைக்கப் பட்டுள்ளன. ஸ்ரீரங்கம் கோயில் தோற்றம் பற்றிய செய்திகள் புராண இதிகாச முறையில் சொல்லப்படுகின்றன. முதன்முதலில் ஏற்பட்ட இதன் கட்டிட வடிவம் சோழ மன்னர்களால் கட்டப் பட்டதாகக் கருதப்படுகின்றது. (இந்தப் பதிவின் கடைசியில் இதைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்) இதற்கு வரலாற்றுச் சான்றுகள் ஏதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அதற்கு பின் வரும் காலங்களிலும் ( 10ஆம் நூற்றாண்டு வரை) இத்தகைய தெளிவற்ற நிலையே காணப்படுகின்றது. கிபி 10-ஆம் நூற்றாண்டு வரையில் இலக்கிய ஆதாரங்கள் மட்டுமே இக்கோயில் இருந்தமைக்குச் சான்றாக உள்ளது. ஸ்ரீரங்கத்தைப் பற்றிய குறிப்பு சங்க இலக்கியமான அகநானூறிலும் (அகம்-137),சிலப்பதிகாரத்திலும், முதலாழ்வார்கள் பாடல்களிலும் உள்ளது. [அகநானூறு கிபி 3-4ஆம் நூற்றாண்டாகக் கருதப்படுகிறது. சிலப்பதிகாரம் கிபி 2-ஆம் நூற்றாண்டின் பிற

என் பேர் ஆண்டாள்

 என் பேர் ஆண்டாள் செப்டம்பர் 29 எனக்கு ஹாப்பி பர்த்டே. நான் 2000-பார்ன். இன்னும் எனக்கு நாலு வயசு ஆகலை. சிக்கரமே எனக்கு பேச்சு வந்துடுத்து. சாக்லேட் ரொம்ப பிடிக்கும். அம்மாவுக்கு பிடிக்காது. எங்கயாவது எனக்கு தெரியாம ஒளிச்சு வெச்சிடுவா. அப்பறம் POGO பார்ப்பேன். என் பேர் ஆண்டாள். என்னை கேட்காமலே அப்பா எனக்கு இந்தப் பேர் வெச்சுட்டா. நான் பொறந்த உடனே என்ன பார்க்க நெறைய பேர் வந்தா. எல்லாரும் என்னை "புஜ்ஜி", "அம்முகுட்டி"ன்னு கொஞ்சிட்டு, என் அப்பாட்ட "கொழந்தக்கு என்ன நட்சத்திரம்"ன்னு கேப்பா. எதுக்குனு தெரியலை. அப்பறம் என்ன பேர்ன்னும் கேப்பா. இப்டிதான் அப்பாகிட்ட எங்காத்து மாமா, "மாப்பிளே குழந்தைக்கு என்ன பேர் வைக்க போகிறேள்"ன்னு கேட்டா  "ஆண்டாள்" "ஆண்டாளா? நல்ல பேர்! ஸ்கூல் பேர் என்ன?" "ஆண்டாள் தேசிகன்" "ஜோக் அடிக்காதிங்க மாப்பிளே, நல்ல ஃபேஷனா ஒரு பேர் வையுங்க பிற்காலத்துக்கு உதவும்" "நிஜமாகவே ஆண்டாள் தான் அவ பேர்." "அப்புறம் உங்க இஷ்டம்" ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா. அப்பறம் என் அம்மாவோட ஃபிரண்