என் பேர் ஆண்டாள்
நான் பொறந்த உடனே என்ன பார்க்க நெறைய பேர் வந்தா. எல்லாரும் என்னை "புஜ்ஜி", "அம்முகுட்டி"ன்னு கொஞ்சிட்டு, என் அப்பாட்ட "கொழந்தக்கு என்ன நட்சத்திரம்"ன்னு கேப்பா. எதுக்குனு தெரியலை. அப்பறம் என்ன பேர்ன்னும் கேப்பா.
"ஆண்டாள்"
"ஆண்டாளா? நல்ல பேர்! ஸ்கூல் பேர் என்ன?"
"ஆண்டாள் தேசிகன்"
"ஜோக் அடிக்காதிங்க மாப்பிளே, நல்ல ஃபேஷனா ஒரு பேர் வையுங்க பிற்காலத்துக்கு உதவும்"
"நிஜமாகவே ஆண்டாள் தான் அவ பேர்."
"அப்புறம் உங்க இஷ்டம்" ன்னு சொல்லிட்டுப் போய்ட்டா.
"What is your name?"
"ஆண்டாள்"
"What?.. உன் பேர் என்ன?"
"ஆண்டாள்"
அதுக்குள்ள என் அம்மா வர..,
"Hey I could'nt understand what she is saying.. what's her name?"
"ஆண்டாள்"ன்னு அம்மா சொல்ல
"What? you should be crazy. Hey come on ya, ஸ்ரீரங்கத்தில கூட இப்பெல்லாம் இந்தப் பேர் வெக்கர்தில்லல"ன்னு அவங்க பங்குக்கு சொல்லிட்டுப் போயிட்டாங்க.
அப்பறம் ஒரு நாள் எனக்கு ஒரே ஜுரம். அப்பா, அம்மா என்னை டாக்டர் கிட்ட அழைச்சிண்டு போனா. அங்கே ரெஜிஸ்டரேஷன் பண்ணும்போது ஒரு நர்ஸ், "குழந்தையோட பேர் என்ன?"ன்னு கேட்டா.
அப்பா, "ஆண்டாள்"ன்னு சென்னா.
"என்ன?"
"ஆண்டாள்"
"Child's Name"
"Andal"
"சார் குழந்தையின் பேர்"
"மேடம், குழந்தையின் பேர்தான் ஆண்டாள்"ன்னு அப்பா கொஞ்சம் கோபமா சொன்னா.
"ஆண்டாள்"
"அட, என் பேரும் ஆண்டாள் தான்"
எங்க எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். இப்போ தான் எங்களுக்கு ஏன் அந்த நர்ஸ் போன பாராவில திரும்பத் திரும்ப என் பேரை ஏன் கேட்டான்னு புரிஞ்சுது.
என் பேர் கேட்டு சந்தோஷப்பட்டு எங்கப்பாவை தட்டிக்கொடுத்தது நானி தாத்தா மட்டும் தான். எனக்கு இப்போ 6 திருப்பாவை தெரியும். அப்பா சொல்லிக் கொடுத்தா. அப்புறம் சொல்ல மறந்துட்டேனே.. அடுத்தவாரம் நான் ஸ்கூல் போகப்போறேன். LKG.
ஸ்கூல்ல என் பேர் ஆண்டாள் தான்!
Old Comments from my previous blog.
It is a nice name - I don't know why poeple don't like it.
By tilotamma, at Mon Jun 21, 04:32:06 AM IST
Dear Desikan,
Andal pe'r yankkum romba romba pidikkum.en ishta daivam AndaL.
Andy,A'ndoonu kooppidamal AndaL nu muzhu pe'r choldradhu dhan azhagu.
AndaL vara porandhanaLil innum enna ezhudhuvannu Avaludan irukken.
with blessings. Murali Mama.
By Anonymous, at Mon Sep 13, 09:06:35 PM IST
Post by prakash
என்னங்க இந்தக் கலக்கு கலக்கறீங்க? ஆண்டாள் தேசிகனுக்கு என் அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Tue, Jun 1 2004 3:31
Post by Mathy Kandasamy
ஆண்டாள் ரொம்ப அருமையான பெயர். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பெண் அவங்க. வாழ்த்துகள் தேசிகன். இன்னும் கொஞ்ச நாளில் பள்ளிக்கூடம் போகப்போற ஆண்டாளுக்கும்!
Wed, Jun 2 2004 8:29
Post by Jsri
படங்கள் எல்லாம் அள்ளுது தேசிகன். நானி தெரியும்; தாத்தா தெரியும்; அது யார் நானி தாத்தா? சாரை அப்படிக் கூப்பிடறாளா? ஆமாம்னா சொல்லுங்க அவர்கிட்ட ஒரு என்கௌண்டர் வேலை இருக்கு எனக்கு. ஆண்டாள்னு பேர்வெக்கறதப் பத்தி அவரோட கதைல வேற ஒபீனியன் எழுதியிருந்தார்.
Wed, Jun 2 2004 10:30
Post by srishiv
Really its a nice autobiography of andal, romba arumaiyana flow sir, keep it up, i hope those drawings in the article were drawn by her itself? if so , ipave trainingaa?? :) nallathu sir, avaloda virupam arinthu thiramai arinthu antha thuraiyil avalai periya aal aakuveenganu nambaren...avalukku ennudaya vaazhthukkal... anbudan, srishiv frm IITG Assam.
Wed, Jun 2 2004 12:29
Post by Pradeep
while reading 1st sentence, i thought u r talking about urself, then after reading further i thought u r telling a story, further it again became ur life..wonderful narration! enakku konjam solli tharrathu?
Wed, Jun 2 2004 6:31
Post by செல்வா
திரு.தேசிகன் நீங்கள் ஆங்கிலோ இந்தியப்பள்ளியில் படித்ததாக எழுதியுள்ளீர்கள். காம்பியன் மேல்நிலைப்பள்ளியிலா? அப்படி என்றால் எந்த வருடம். நான் 76 முதல் 87 வரை காம்பியன் மாணவன். இல்ல நீங்க வெஸ்ட்ரி மாணவரா?
Thu, Jun 3 2004 2:30
Post by Vassan
தமிழகத்திலிருக்கும் உறவினன்களின் புது குழந்தைகளின் பெயர்கள் வாயில் ஒருவழியாக நுழைந்தாலும்,மனசில் நிற்கவே மாட்டேன் என்கிறது. ஆண்டாள்,ஆகா! அழகான வைணவ தமிழ்ப் பெயர். நாசுக்கு தமிழ்ப்பெயர்கள் புறப்பட ஆரம்பித்த ஆரம்ப 80களில்,ஊரில் ஒரு வைணவர், தனது பையனுக்கு வைத்த பெயர் அக்காரக்கனி.
Thu, Jun 3 2004 2:30
Post by ravi srinivas
andal is a common name in southern districts among iyengars.in srivilliputtur i think evey other iyengar girl will have andal or kothai or natchiyar or a similar name as the real name or name by which she is called.it is so common there. it may not be all that common in sri rangam or is it a question of 'generation gap' in names too. nice write up with pics. my grandma's (dad's mom)name was andal and i know that many of her grand daughters were given that name, in part or in full.
Thu, Jun 3 2004 4:32
Post by Desikan
Dear Selva, I am also from Campion ( 76-87 !). What is your email id ? best regards - desikan
Thu, Jun 3 2004 11:37
Post by செல்வா
Dear Desikan u can reach me at.. ctsmani(at)hotmail.com Thanks Selva.
Fri, Jun 4 2004 1:38
Post by Meenaks
அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள்.
Fri, Jun 4 2004 4:34
Post by Muthu
ஆண்டாள் .. மிக அழகான பெயர் .. வில்லிப்புத்தூருக்கு அருகேதான் எனது ஊர் என்பதால் எனக்கு இந்தப் பெயர் ரொம்பபே பிடிக்கும் :)
Sat, Jun 5 2004 5:32
Post by ஈழநாதன்
அன்பின் தேசிகன் இன்றுதான் உங்கள் வலைப்பதிவைப் படித்தேன்.முதலில் கவர்ந்ததென்னவோ உங்கள் படங்கள் என்றாலும் அதிகமாகக் கவர்ந்தது உங்கள் மகளின் மழலை.வாழ்த்துக்கள் இருவருக்கும்.பேச்சுக்குப் பேச்சு மட்டும் தமிழ் என்று முழங்குபவர் மத்தியில் மகளுக்கு தமிழ்ப் பெயர் சூட்டி மகிழும் உங்கள் பற்று வாழ்க
Sat, Jun 5 2004 2:31
Post by vanthiyathevan
அருமையான பதிவு. எனது அன்பவங்களை எப்படி சுவாராசியமாகச் சொல்வது என யோசிக்கின்றேன்.
Sun, Jun 6 2004 6:37
Post by Thangamani
arumaiyaana peyar, nalla pathivu....
Sun, Jun 6 2004 5:44
Thread: 108659070677662200. Post by ஈழநாதன்
Post by venkatraman
hi desikan, 'Andal saritham'-besh, besh; romba nalla iruku! i liked the way you have included the pictures venkatraman Australia
Tue, Jun 8 2004 2:25
Thread: 108659070677662200. Post by srishiv
enna athikama padalgal ezhuthi irukeenga desikan? its ok...purinjuakaren kastappattu ;)...konjam kalokiyalavum ezhuthalaame ennai pondra ilakkiyam theriyathavargalukkagavum?? :) yosippeergal ena ennugindren... anbudan... srishiv...
Tue, Jun 8 2004 9:26
Post by Janani
Desikan, It was a delight to read your "en per aanadaal" !!! Flow of thoughts romba nalla irundhadhu. Especially when you end it she is goin in to goto school and her name is goin to be the same. Its very nice - Both the name and the article. Regards, Janani.
Sun, Jun 13 2004 10:25
Post by meena
குட்டி ஆண்டாளுக்கு என் வாழ்த்துகள் நீண்ட வருடங்களுக்கு முன் என் உறவுக்காரப் பெண்ணின் பெயர் ஆண்டாள் அதன் பிறகு இப்பொழுதுதான் இப்பெயரில் இன்னொரு குட்டிப் பெண்!!
Wed, Jun 30 2004 5:27
By Desikan, at Tue Nov 02, 07:07:41 PM IST
என் பெண் பெயர் கோதை. ஏனெனில் அவள் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தாள். ஆனால் கூப்பிடுவது பிரியா. என் மனைவியின் தெரிவு அதுதான். உங்கள் பெண் இந்த அழகியத் தமிழ்ப் பெயரில் கலக்க என் ஆசிகள்.
By dondu(#4800161), at Sun Nov 14, 10:05:00 PM IST
அருமையான தொடர், தொடர்ந்து செய்யாவிடினும் அவ்வப்போது ஆண்டாளின் கைவண்ணத்தை இங்கே காட்டுங்கள். ஆண்டாளுக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.
By அன்பு, at Wed Apr 13, 11:37:53 AM IST
என் அறிவுக் கண்ணைத் திறந்தீர்கள் தேசிகன். எனக்கு பார்த்த பெண்ணின் பெயர் விசாலாட்சி. என்ன இந்த காலத்துல இப்படி பேர் வெச்சிருக்காங்க என செல்லமாக அவரிடம் நான் கடிந்து கொள்ள வேணும்னா "விசாலி"ன்னு கூப்பிடுங்க.. கண்ணதாசனே தன் பொன்னுக்கு அப்படித்தானே பேர் வெச்சார்னு முறைக்க...
எனக்கு என்னவோ வெளங்குனாமாதிரி இருந்துச்சு. பெயரில் என்ன இருக்கு...? மனசுதாங்க முக்கியம்.
By Moorthi, at Thu Apr 14, 09:18:11 AM IST
ரொம்ப அருமையா எழுதிருக்கீங்க தேசிகன்.. இது உங்க குழந்தையின் நடையா?
குழந்தை மாதிரியான உங்க நடையா? 'ஆண்டாள்' பெயர் வைப்பது பற்றி யாராவது
கிண்டல் செய்தால் என்னிடம் அனுப்புங்கள். ஒரு கை பார்த்து விடுகிறேன்.
பனசை நடராஜன்
By Anonymous, at Fri Apr 15, 08:13:06 AM IST
di kodutha nachyar-lovley name and lovely pasurams.I'm so gla dI got ur link from lazygeek heard u r sujatha's biographer .I love his works.can u give soem links where ican read them.
By Anjali, at Tue Jun 14, 09:51:36 PM IST
Anjali,
Comments
Post a Comment