Skip to main content

ஸ்ரீரங்கம் - 4

 


கி.பி 10-ஆம் நூற்றாண்டு வரையில் இலக்கிய ஆதாரங்கள் மட்டிமே இக்கோயில் இருந்தமைக்குச் சான்று. இதை போன இரண்டு பதிவில் பார்த்தோம். 10-ஆம் நூற்றாண்டில் சோழமன்னர்கள் தலையெடுத்த பின்னர் அளித்த கல்வெட்டுக்கள், ஏறத்தாழ நானூறு(400) இங்கு காணப்படுகின்றன. இவைகளில் மிகப் பழமையானதாகிய கல்வெட்டு முதலாம் பராந்தகனின்(கிபி 907) 17-ஆம் ஆண்டு ஆட்சி காலத்தில் ஆகும். அதில் கோயிலுக்கு ஒரு குத்துவிளக்கிற்கு 30 பொற்காசுகள், கற்பூரத்திற்கு 40 பொற்காசுகள், பருத்தி திரிநூலுக்கு 1 பொற்காசு மற்றும் குத்துவிளக்கு ஸ்டாண்டு ஒன்றையும் வழக்கியதாக கூறப்பட்டுள்ளது!. கொடுத்தவரின் பெயர் சங்கரன் ரனசிங்கன் என்று கல்வெட்டு கூறுகிறது.


[%image(20050802-sri_danvanthri.jpg|600|411|Srirangam Danvantari sannidi)%]

அடுத்த கல்வெட்டு முதலாம் பராந்தகனின் 38ஆவது ஆட்சி காலத்தில். அதில் திருமஞ்சனத்திற்கு 100 களஞ்சு தங்கம் கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது!. கொடுத்தவரின் பெயர் பல்லவராயன் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


அடுத்ததாக இரண்டாம் இராசேந்திரன் மகனாகிய இராசமகேந்திர சோழன்(கிபி 1052-1064) இங்குள்ள முதலாம் பிரகாரத்தின் மதிலை கட்டியதாகக் கூறப்படுகின்றது. அதனால் அது இன்றும் 'இராசமகேந்திரன் வீதி' என வழங்கப்படுகின்றது. இதை பற்றி பிற்பாடு விரிவாக பார்க்கலாம்.


ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி ஆழ்வார்களிக்கும் ஆச்சாரியர்களுக்கும் 200 வருட காலம் இடைவெளி என்று கூறப்படுகிறது.இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் பிரபந்தம் மறைந்து போனது. திருமங்கையாழ்வார்க்கும் (கிபி 8ஆம் நூற்றாண்டு) நாதமுனிக்கும் (கிபி 10-ஆம் நூற்றாண்டு) இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்று சரியான தகவல் இல்லை. அதை ஆராய்வதில் எந்த பயனும் இல்லை.


நாதமுனி திருநாராயணபுரத்தில் (காட்டுமன்னார் கோயில், South Arcot Dist ) பிறந்தவர். "ஆரா அமுதே" [3310] என்ற திருவாய் மொழி பாசுரத்தைக் கேட்டு மறைந்து போன நாலாயிரதிவ்ய பிரபந்ததை தேடி கண்டு பிடித்து முதலாயிரம், இயற்பா... என்று தொகுத்து வழங்கியவர். அவரே அதற்கு ராகம் அமைத்து அபினயத்துடன் நடனமும் ஆடி அதை பிரபலப்படுத்தினார். தன்னுடைய மருமான்கள் கீழயகட்டாழ்வான், மேலையகட்டாழ்வான் ஆகிய இருவரையும் அதே போல் பாடி நடனம் ஆடப் பணித்தார். அரையர் பரம்பரை இவர்களிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இன்றும் வைகுண்ட ஏகாதேசியில் அரையர் சேவையை காணலாம். ஸ்ரீரங்கம் கோயிலில் பிரபந்தம் (சந்தம்) சொல்லும் முறையை வகுத்தார். இந்த வழக்கம் மற்ற ஸ்ரீவைஷ்ணவ கோயிலிலும் பிறகு பின்பற்றபட்டது. இக்காலத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீவைஷ்ணவ தலைமை செயலகமாக திகழ்ந்தது. நாதமுனிக்கு பின் உய்யக்கொண்டார், அவரை தொடர்ந்து மணக்கால் நம்பி, ஆளவந்தார்(இவர் நாதமுனியின் பேரன்) வந்தார்கள்.


ஆளவந்தாரை தொடர்ந்து உடையவர் எனப் போற்றப்படும் ஸ்ரீராமாநூசர்(கிபி 1071-1137) தோன்றினார். ஸ்ரீபெரும்புதூரில் பிறந்து 120 வருட காலம் வாழ்ந்தவர். நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் மூலம் ஸ்ரீவைஷ்ணவத்தை மக்களுக்கு எடுத்துச் சென்றார். ஸ்ரீரங்கம் கோயிலின் நிர்வாகத்தை ஒழுங்கு செய்து நல்ல முறையில் நிர்வாக நடைமுறைகளை வகுத்தார். இன்னும் கோயில் நடைமுறைகள் அவர் வகுத்தபடி நடந்து கொண்டு இருக்கிறது. அவர் சீர்செய்த நிர்வாகத்தை பற்றி கோயிலொழுகு விரிவாக கூறுகிறது அவற்றுள் சிலவற்றை இங்கே தந்துள்ளேன்.


* கோயிலின் கணக்கு வழக்குகளை பார்க்க தம்முடைய சீடர் அகாலங்க நாட்டாழ்வானை நியமித்தார்.


* ரொம்ப காலம் பழுதற்று கிடந்த தன்வந்திரி(பெருமாளுக்கு மருத்துவராக விளங்குபவர்!) சந்நதியை புதுப்பித்து (பார்க்க படம்) அதற்கு அவர் சீடரான கருடவாகன பட்டரை நியமித்தார். தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்).


* திருமங்கையாழ்வார் காலத்திற்கு முன்பிலிருந்து இக்கோயிலில் ஐந்துவகையான அலுவற்பதவிகள் மட்டுமே இருந்தன. இராமாநுசர் அவற்றைப் பத்தாக உயர்த்தினார். அவர்களின் வேலைகள் கோயிலொழுகில் விரிவாகக் கூறப்படுகின்றது. இது 'உடையவர் திட்டம்' என்று அழைக்கப்படுகிறது.


* திருமங்கை ஆழ்வார் காலத்தில், வைகுண்ட ஏகாதேசி உற்சவத்திற்கு, நம்மாழ்வார் திரு உருவ சிலை ஆழ்வார்திருநகரியிலிருந்து எடுத்துவரப்படுவது வழக்கம். ஸ்ரீரங்கத்தின் வெள்ளம் அடிக்கடி வருவதால் அந்த சிலைக்கு எதாவது ஆபத்து நேராமல் தடுக்க ராமாநுசர் ஸ்ரீரங்கத்திலேயே நம்மாழ்வார் சிலை ஒன்றை செய்து அந்த வழக்கத்தை மாற்றியமைத்தார்.


* ஸ்ரீரங்கத்தில் ஆழ்வார்கள், ஆண்டாள், நாதமுனி திரு உருவ சிலைகளை அமைத்தார். அவர்களின் திருநட்சத்திரத்தில் உற்சவம் செய்ய ஏற்பாடு செய்தார்.



Old Comments from my previous blog.


Post by sriram

Hi desikan, Your drawings are amazing.Your articles have great historical details of Srirangam.Keep up the good work.I used to read your web page also.Great work.Get to see rare works of Sujatha's. I have read a story that is exactly similar to your 'moonjuru' story.

Thu, Aug 26 2004 8:58


Post by srishiv

really good work desi...greetings... srishiv

Mon, Jul 5 2004 10:25


Post by Eelanathan

இந்த ஓவியங்கள் உங்களுடையவையெனச் சொல்லியிருந்த ஞாபகம். பதிவுகளைப் போலவே அவையும் அருமையாக இருக்கின்றன பாராட்டுக்கள்

Mon, Jul 5 2004 10:25


By Desikan, at Tue Nov 02, 07:37:28 PM IST  


"தன்வந்தரி பெருமாளுக்கு இரவு நைவேதியத்திற்கு பாலும், கஷாயமும் தர ஏற்பாடு செய்தார். ( இன்றும் தன்வந்தரி சந்நதி பட்டரை 'கருடவாகன பட்டர்' என்று தான் அழைக்கிறார்கள்)."


Last time when I visted Srirangam, I went through the "தன்வந்திரி சந்நதியை ." Mr. 'கருடவாகன பட்டர்' of this day was calling the visitors (actually shouting) to have a darshan.


He must have spent all his youth learning all the vedic and vaishnavait scriptures chanting in his full voice for the presence of the divinities.


In his கோயிலொழுகு Ramanujar could have added some text to offer some "பாலும், கஷாயமும்" to this 'கருடவாகன பட்டர்' .


By Muse, at Thu Apr 28, 03:45:25 PM IST  


 

Comments