திருப்பதிக்கே லட்டு பிரசாதம் என்பது தமிழ்ச் சொல் கிடையாது. அதைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படத் தேவை இல்லை. ஆகமத்தில் என்ன சொல்லியிருக்கிறது, என்ன என்ன பிரசாதங்களை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் என்ற டிக்னிக்கல் விஷயங்களுக்குள் எல்லாம் போகாமல் குழந்தை ஆண்டாள் சொல்லுவதைப் பார்க்கலாம் ”தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” வேண்டும் என்கிறாள். அதாவது அன்புடன் பூவையோ, தீர்த்ததையோ எதையோ அவனுக்குப் படைக்கும் போது நமக்கும் பெருமாளுக்கும் ஒரு அழகான பரஸ்பர உறவு ஏற்படுகிறது. அவன் தொட்டுச் சாப்பிட வேண்டாம், பார்த்தாலே அதில் அவனுடைய அருள் பொதிந்துவிடுகிறது. அந்த அருள் பெற்ற வஸ்துவை நாம் ”கூடி இருந்து” எல்லோருக்கும் பகிர்ந்தளித்து அனுபவிக்க வேண்டும். பிரசாதம் அவன் அருளின் உறுதியான வெளிப்பாடாகும் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கை. மிக உயர்ந்த விஷயங்களை எல்லாம் அறிந்திருந்த நம் ஆசாரியர்கள் இதை எல்லாம் தங்கள் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கு அவர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சில உதாரணங்களை மட்டும் இங்கே தர