திருவாலி திருநகரி, திருமங்கை ஆழ்வார் பற்றி எழுதிய கட்டுரையில் “ஆழ்வார் பாசுரம் ஒன்று கூட இல்லையே?” என்று வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். கலியன் பாசுரம் ஏதாவது கிடைக்கிறதா என்று தேடும் போது சிறிய திருமடல், பெரிய திருமடல் இரண்டுக்கும் தனியன் எழுதியது ‘பிள்ளை திரு நறையூர் அரையர்” என்று கண்ணில் பட்டது. போதுவாக தனியனைச் சேவிப்போம் ஆனால் அது எழுதியது யார் என்று நாம் கவனிக்க மாட்டோம். திருவாலியில் இருக்கும் திருமங்கை மன்னன் அர்ச்சா ரூபம் நிஜம் என்று எழுதியிருந்தது நினைவிருக்கலாம். அர்ச்சை என்றால் என்ன சார் எங்களுக்குப் புரியும் படி எழுதவும் என்று ஒருவர் சொல்லியிருந்தார் அவருக்காக இந்தச் சின்ன விளக்கம் எம்பெருமான் திருக்கோயில்களில் இருக்கும் நிலை அர்ச்சை. ஆழ்வார்கள் பக்தியுடன் சேவித்ததால் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாசுரம் பாட முடிந்தது. நாம் பார்க்கும் போது அது ‘சிலை’ என்று நினைப்பதால் பூர்ணமாக பக்தி செய்ய முடிவதில்லை. அர்ச்சா மூர்த்தி தான் தனக்குப் பிரியமானது என்கிறார் ஆளவந்தார்(சதுஸ்லோகீ) . ரஹஸ்யத்ரயஸாரத்தில் வேதாந்த தேசிகன் திருமங்கை ஆழ்வார் தம்மை பெருமாளின் விஷயத்தில் தேஹாத்