Skip to main content

Posts

Showing posts from May, 2016

அப்பாவும் ராஜாஜியும்

எனக்கு சுஜாதா மாதிரி என் அப்பாவிற்கு ராஜாஜி. ராஜாஜியை நேரில் சந்தித்ததில்லை ஆனால் அவர் மீது ஒரு அசுரத்தனமான பக்தி இருந்தது. சம்பளம் வந்தவுடன், அந்த காலத்திலேயே ராஜாஜியின் 'சுதந்திரா கட்சி'க்கு ’ஐந்து ரூபாய் மணி ஆர்டர்’செய்த ரசீதுகள் நிறையப் பார்த்திருக்கிறேன். இதைத் தவிர ராஜாஜி எழுதிய வள்ளுவர் வாசகம், ஆத்ம சிந்தனை போன்ற பலப் புத்தகங்கள் அவரிடம் இருந்தது. ராஜாஜி பற்றி பெரிய தீபாவளி சைஸ் புத்தகம் ஒன்று பார்த்திருக்கிறேன் ( இது இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம்). அவர் மேடைப் பேச்சை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒரு டைரியில் குறிப்புக்களுடன் எழுதிவைத்திருந்தார். நடுநடுவே அவருக்குப் பிடித்ததை அடிக்கோடுகளுடன்,  இதைத் தவிர ராஜாஜிக்கு அவர் நிறையக் கடிதங்கள் எழுதியிருந்தார். அவர் ராஜாஜிக்கு எழுதியவை பெரும்பாலும் ஸ்ரீவைஷ்ணவம் சம்மந்தப்பட்டவை - ஆழ்வார், திவ்யபிரபந்தம், வேதாந்த தேசிகன் நூல்கள். பலவற்றுக்கு ராஜாஜி பதிலும் போட்டிருந்தார்!. ஒரு கடிதத்துக்கு மட்டும் ராஜாஜி கொஞ்சம் கோபமாக என் அப்பாவிற்கு எழுதிய ஒரு பக்க கடிதம் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்தக் கடிதத்தின் சாரம் இது தான் “ந

வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா

சுஜாதவின் பிறந்த நாளாக நேற்று வழக்கம் போல சில சுஜாதா எழுத்துக்களை இணையத்திலும், புத்தகத்திலும் படித்து இன்புற்றேன். ’கடவுள்களின் பள்ளத்தாக்கு’ என்று அடியேன் தொகுத்த புத்தகத்திலிரிந்து ஒரு கட்டிரை ( ஆனந்த விகடன் 1999ல் எழுதியது) கீழே. இந்த கட்டுரை வந்த சமயம் இணையம் அவ்வளவு முன்னேற்றம் அடையவில்லை. ஆனால் பல வெளிநாட்டுக்கு சென்ற இளைஞர்கள் சுஜாதாவை பல குழுமத்தில் காய்ச்சி எடுத்தனர். அதில் என் நண்பர்களும் அடக்கம். அவரிடம் மெகக்கட்டு இதை பற்றி சொன்னேன். கேட்டுக்கொண்டார். திரும்ப என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். “நீ ஏன் போகவில்லை ?” “போகணும் என்று தோன்றவில்லை.. ஆனால் என்னுடன் காலேஜில் படித்தவர்கள் எல்லாம் போய்விட்டார்கள்” “சரி... நீயும் போகலாமே... “ கொஞ்சம் தயங்கி தயங்கி அந்த உண்மையை சொன்னேன் “சார் நீங்க இங்கே இருக்கும் போது உங்களை விட்டுவிட்டு போக மனசு வரவில்லை...” என்றேன். ஒரு சின்ன புன்னகை. இன்னும் என் மனசில் இருக்கிறது. போயிருந்தால் சுஜாதா உட்பட பல விஷயங்களா இழந்திருப்பேன். இனி கட்டுரை.. வெளிநாட்டு மோகம் கொண்ட இளைஞர்களுக்கு - சுஜாதா முதலில்,மோகம் என்ற வார்த்தைக்கு அர

ஸ்ரீரங்க விஜயம்

மூன்று நாள் விஜயமாக திருச்சி, ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சென்னை திருச்சி நெடுஞ்சாலைகளில் 20கிமீட்டருக்கு இருபக்கத்திலும் அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் முளைத்து, ’சக்கரையுடன் இறக்கப்பட்ட டிகாஷனின் உதவியுடன் அசட்டு தித்திப்பு காபியுடன் திருச்சி வந்து சேர்ந்த போது சித்திரை வெயிலிலும் சத்திரம் பஸ் ஸ்டாண்டில் கூட்டமும் பரோட்டாவும் குறையவில்லை. கரூர் பைபாஸ் சாலை, பெங்களூர் 80 அடிச் சாலை மாதிரி இரண்டு பக்கமும்  பிராண்டட் கடைகளும், ஹோட்டல்கலும் வந்துவிட்டது. பேருந்துகள் ராட்சச சத்தத்துடன் இடைவெளி விட்டு ராகமாக ஹாரன் அடித்துக்கொண்டு பறந்து செல்கிறது. ஜங்ஷன் பஸ்டாண்டில் சங்கீதா ஹோட்டலில் எப்போதும் போல கூட்டம் அலைமோதுகிறது. நகர் வலம் வந்த போது, பல இடங்களில் நுங்கு கிடைக்கிறது. முன்பு எல்லாம் பனை ஓலையில் கட்டித்தருவார்கள், தற்போது எல்லாம் கேரி பேக் மயம் தான். அன்று ஆசாரியர்கள் நடமாடிய ஸ்ரீரங்கம் வீதிகளில் இன்று‘கழகங்களின் தேர்தல் பிரச்சார வண்டிகள் ஹரி’ படத்தில் வேகமாக ஓடும் ரவுடிகளின் டாட்டா சுமோ பறக்கும் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. தாயார் சந்நிதி நுழைவாயில் இருக்கும் திராவிட கழகம் கட்சி க