Skip to main content

Posts

Showing posts with the label திருப்பாவை-2022

கோதை கீதை - 2

கோதை கீதை - 2 திருப்பாவை - 2 வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு* செய்யும் கிரிசைகள் கேளீரோ!* பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி பாடி,* நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி** மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்* செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்* ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் கை காட்டி* உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய் கீதையில் 4.15 ஸ்லோகம் இது ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி: குரு கர்மைவ தஸ்மாத் த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் || கீதையின் இந்த ஸ்லோகத்தின் பொருள் : முற்காலத்தில் மோக்ஷத்தில் நாட்டம் உடையவர்களும் கர்மயோகத்தின் தத்துவம் அறிந்து கர்மம் செய்திருக்கிறார்கள். ஆகவே நீயும் முன்னோர்களால் தொன்றுதொட்டு செய்யப்பட்டு வருகின்ற கர்மங்களையே செய்வாயாக. அதாவது அர்ஜுனனிடம் கண்ணன் “நீயோ முமுக்ஷு, ஆகையால் எவ்வாறு பிற முமுக்ஷுக்கள் உலக நன்மைக்காகக் கர்மம் செய்தார்களோ அவ்வாறே நீயும் உலக நன்மைக்காகக் கர்மத்தைச் செய்வாயாக” என்று சொல்லுகிறார். (முமுக்ஷுக்கள் = மோக்ஷத்தில் நாட்டம் கொண்டவர்கள் ) வேதத்தின் நமக்கு விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை...

கோதை கீதை - 1

கோதை கீதை - 1   திருப்பாவை - 1 மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன் ஏர் ஆர்ந்த கண்ணி யசோதை இளஞ் சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான்! பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் எல்லா திருப்பாவை புத்தகங்களிலும், உபன்யாசங்களிலும் ’மாதங்களில் நான் மார்கழி மதமாக இருக்கிறேன்’ என்று கண்ணன் கீதையில் சொன்ன ‘மாஸாநாம் மார்க்க சீர்ஷோ ஹம்’ என்ற கீதையின் ( 10.35 ) வரியை மேற்கோள் காட்டி ஆரம்பிப்பது மரபு. நாமும் அப்படியே ஆரம்பித்து ‘நன்னாள்’ என்ற அடுத்த வார்த்தைக்குத் தாவிடலாம். மார்கழி மாதம், முழு நிலவுடன் கூடிய பௌர்ணமி! நோன்பைத் தொடங்க ஒரு சுபமுகூர்த்தம் வாய்த்தது என்கிறாள் ஆண்டாள். ஆண்டாள் பஞ்சாகம் பார்த்து ஆரம்பிக்கவில்லை, இது தற்செயல். சுபமுகூர்த்தம் என்ற கரடுமுரடான சொல்லுக்கு அழகிய தமிழ் சொல் ’நன்னாள்’. சுபமுகூர்த்தம் என்பது மாதம், பக்ஷம், காலம் என்று பஞ்சாங்கத்தை வாத்தியார் ஸ்வாமி அலசக் கொடுக்க வேண்டும். ஆண...

கோதை கீதை - அவதாரிகை

 கோதை கீதை - அவதாரிகை திருமழிசைப்பிரான் பாசுரம் இது சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன் ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் அன்று ஓதிய வாக்கு அதனைக் கல்லார் உலகத்தில் ஏதிலர் ஆம் மெய்ஞ் ஞானம் இல் அன்று தேர்த்தட்டில் கண்ணன் ஓதிய கீதையை( சரம ஸ்லோகம்) அறியாதவர்கள் உலகத்தில் எதற்கும் தகுதியில்லாதவர்கள் என்கிறார் வேதப்பிரான் பட்டர் திருப்பாவை குறித்து இப்படிச் சொல்லுகிறார். பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதமனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ் ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு. வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழ் திருப்பாவை முப்பதும் தெரியவில்லை என்றால் உங்களை இந்த பூமி சுமப்பதே வீண் என்கிறார். ஆக, கீதை, திருப்பாவை இரண்டும் தெரியவில்லை என்றால் நீங்கள் வேஸ்ட் என்று சொல்லி விட்டார்கள் கீதையையும் திருப்பாவையையும் சேர்த்து ’கோதை கீதை’ என்ற தலைப்பில் எழுதலாம் என்று ஆரம்பித்திருக்கிறேன். ’ஸர்வோபநிஷதோ காவோ’ என்று ஆரம்பிக்கும் கீதையின் தியான ஸ்லோகத்தின் பொருள் - உபநிஷதங்கள் என்னும் பசுக்களிலிருந்து கோபாலன் என்ற பால்காரன் அர்ஜுனன் என்ற கன்றுக்கு கறந்த பாலாகிய க...