Skip to main content

Posts

Showing posts with the label ஆசாரியர்கள்

ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன்

ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன் ஸ்ரீராம ஜன்ம பூமியில் குழந்தையான ’ஸ்ரீராம லல்லா’ எழுந்தருளுவதற்கு பல நூற்றாண்டுகளாக பலர் போராடினர். கடைசியாக அந்த வழக்கு முடிவுக்கு வந்து, பிராணப் பிரதிஷ்டையை டிவியில் தரிசித்த அன்று அதன் முன் விழுந்து சேவித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. எல்லோர் இல்லங்களிலும் ஒரு குழந்தை பிறந்த சந்தோஷத்துடன் இனிப்பு செய்து, வழங்கி இந்த பாரத தேசமே கொண்டாடியது. அயோத்தியில் ஸ்ரீராமரை சேவிப்பதற்கு முன், சென்னைக்கு சென்று காலணி கூட அணியாமல் வாதிட்ட வழக்கறிஞர் ஸ்ரீ பராசரனை சந்தித்து சேவித்தேன். (“நான் என்ன ஜீயரா? இவ்வளவு முறை சேவிக்கிறீர்கள்”). ’போற்றப் பறைதரும் புண்ணியன்’ என்று ஆண்டாள் கொண்டாடும் ஸ்ரீராமபிரானின் ஆலயத்தை இந்தப் புண்ணிய பூமியில் தரிசிக்க முடிந்ததே நம் மேலையார் செய்த புண்ணியத்தின் பயன். சமீபத்தில் ஒரு தலையங்கத்தில், அயோத்தி ராமர் சந்நிதியின் கருவறை முகப்பில், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத 'ஸ்ரீராமர் லிங்க பூஜை செய்தார்' என்ற கதைக்குரிய சிற்பம் தவறாக அமைக்கப்பட்டுள்ளது என்று கண்டித்துள்ளார்கள். 'நாம் வணங்கும் ராமரே, தம் ஆலயத்தில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்...

பொய்யிலாத மணவாள மாமுனி

பொய்யிலாத மணவாள மாமுனி  ’பொய்யிலாத’ என்று பதம் ஏன் வருகிறது என்று பல காலமாக தெரியாது. ஒரு முறை மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே. அரங்கராஜன் ஸ்வாமிகளைக் கேட்டபோது அதை விளக்கினார். அதைக் குறித்து கடைசியில் கூறுகிறேன்.  சில வருடங்களுக்கு வைகாசி விசாகம் அன்று ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். அன்றுதான் நம்மாழ்வார் மற்றும் திருவாய்மொழிப் பிள்ளையின் திருநட்சத்திரம். வீதிப் புறப்பாட்டின்போது மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையை சேவித்துவிட்டு, மாலை மரியாதைகளுடன் சில வாழைப்பழப் பிரசாதங்களுடன் விடைபெற்றுச் சென்றார்.  பிறகு நம்மாழ்வார் சந்நிதிக்குச் சென்றேன். வரிசையில் நின்ற என்னை ஒரு பெரியவர் அழைத்தார். சென்றேன்.  “இந்தப் பிரசாதத்தை கொடுக்க தகுந்தவரை தேடிக்கொண்டிருந்தேன். நீர் வாங்கிக்கொள்ளும். திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளுக்கு அளித்த பிரசாதம்” என்று கையில் வாழைப்பழத்தைக் கொடுத்தார்.  திருவாய்மொழிப் பிள்ளை தான் மணவாள மாமுனிகளின் ஆசாரியர்.  திருவாய்மொழிப் பிள்ளை, சரம தசையில் மிகுந்த கவலையுடன் இருந்தார். அதைக் கண்ட சீடர்கள், 'பரம பக்தராகிய உங்களுக்கு மரண பயம் இருக்காத...

(4) நம்பெருமாளும் நம்மிராமானுசனும்

 (4) நம்பெருமாளும் நம்மிராமானுசனும்  ஆலவந்தார் தன் வாழ்நாள் குறுகியுள்ளது என்பதை உணர்ந்து, இளையாழ்வாரை காஞ்சியிலிருந்து அழைத்து வாரும் என்று பெரியநம்பியை நியமித்தார். நம்பியும் காஞ்சிக்கு உடனே புறப்பட்டு,  ராமானுஜர் வரும் வழியில் ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினத்தை இளையாழ்வார் காதில் விழுமாறு ஓதினார். அதில் பொதிந்துள்ள ஆழமான அர்த்த விஷேசங்களை அறிந்த ராமானுஜர் “இவை யார் அருளியது? அவரை நான் காண முடியுமா ?” என்று கேட்க, நம்பியும் “ஆளவந்தார் அருளியது, அவரை காண இப்போதே கிளம்பலாம் என்று அவரை அழைத்துக்கொண்டு திருவரங்கம் புறப்பட்டனர்.  ஆனால் பெரிய பெருமாளின் திட்டம் வேறாக இருந்தது. அந்தத் திட்டத்தை சற்று பார்க்கலாம்.  பெரிய நம்பியும், இளையாழ்வாரும் திருவரங்கம் நுழைய, ஆளவந்தார் பரம பதித்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து மனம் வருந்தினர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று இருவரும் புலம்பினர். அச்சமயம் இளையாழ்வார் ஆளவந்தாருடைய விரல்கள் மூன்று மடங்கியிருப்பதைக் கண்டு, அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று சபதம் செய்ய, மடங்கிய கைவிரல்கள் நிமிர்ந்தன. தன்னால் ஆ...

(3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல்

 (3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல் இன்று நினைத்தால் காலை புறப்பட்டு திருமலைக்குச் சென்று பெருமாளைச் சேவித்துவிட்டு மாலை வீடு திரும்பிவிடலாம்.  ஸ்ரீராமானுஜர் தன் வாழ்ந்த 120 வருடங்களில் திருமலைக்கு மொத்தம் மூன்று முறை தான் சென்றிருக்கிறார்!  ஸ்ரீராமானுஜரின்  திருமலை யாத்திரையால் தான் இன்று நாம் கோவிந்தா கோஷத்துடன் திருவேங்கடவனை க்யூவில் சேவிக்க முடிகிறது!  உடையவரின் முதல் யாத்திரையிலிருந்து தொடங்கலாம்.  ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் உடையவர் திருவாய்மொழி காலட்சேபம் சாதித்துக்கொண்டு இருக்கிறார். “சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்ற பாசுர வரிகளைப் படிக்கும் போது, அவர் கண்களில் நீர் வழிகிறது. சீடர்களுக்குப் புரியவில்லை. அதில் ஒருவர் “ஏன் கண்களில் கண்ணீர் ?” என்று கேட்க அதற்கு உடையவர் “வேங்கடத்து எழில்கொள் சோதி” என்று ஆழ்வார் பாடிய இந்தத் திவ்வியதேசத்தில் நித்தியப் புஷ்பக் கைங்கரியம் செய்ய இப்போது யாரும் இல்லையே! என்று வருத்தமாக இருக்கிறது.. உங்களில் யாரேனுமுண்டோ ?” என்று கேட்க அங்கே ஓர் அமைதி நிலவியது. அனந்தாழ்வான் எழுந்து ”அடியேனுக்கு நியமித்தருள வேண்டும்" என்றா...

(2) தேவராஜனும், யதிராஜனும்

(2) தேவராஜனும், யதிராஜனும்  இளையாழ்வாரின் 16-ஆவது வயதிலேயே தன் தந்தை பரமபதமடைய, அவர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தன் தாயார் மனைவியுடன் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் தேவப்பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அருகில் குடிபுகுந்தார். அக்காலத்தில் திருபுட்குழியில் பிரபலமான அத்வைதச் சன்னியான யாதவபிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார்.  இக்காலத்தில் இளையாழ்வார் திருக்கச்சி நம்பி என்ற பாகவதரின் நட்பு கிடைத்தது. நம்பி ஆளவந்தாரின் சிஷ்யர். அவர் பேரருளாளனிடம் பிரேமை கொண்டு ஆலவட்டக் கைங்கரியம் செய்துகொண்டு பெருமாளிடம் அந்தரங்கமாகத் தினமும் பேசிக்கொண்டு இருந்தார். இவரிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாக இளையாழ்வாருக்கும் தேவப் பெருமாளிடம் அன்பும் பக்தியும் வளர்ந்தது.  இளையாழ்வார் யாதவ பிரகாசரிடம் வேதாந்தப் பாடம் கற்கும் போது வைணவக் கொள்கைக்கு ஏற்காமல் சில வாக்கியங்களால் பிணக்கு ஏற்பட்டு, யாதவப்பிரகாசர் இளையாழ்வாரை கங்கையில் மூழ்கடிக்கச் சூழ்ச்சி செய்ய, அதிலிருந்து இரவோடு இரவாகத் தப்பிக்க, தேவப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் வேடுவனாகவும், வேடுவச்சியாகவும் வந்த காப்பாற்றினார்கள். தாயாராக ...

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா !

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா ! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் குறளை எடுத்துக்காட்டாக நாம் பல காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இப்படியொரு நண்பனைப் பார்ப்பதோ அல்லது இப்படியொரு நண்பனாகவோ இருப்பது அரிது. காரணம் சுயநலம்.    ’தோழன்’ என்ற சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் தான் வருகிறது.  திருமங்கை ஆழ்வார் பாசுரம். பாசுரம் உங்களுக்குத் தெரிந்தது தான்.   ஏழை, ஏதலன் கீழ்மகன் என்னாது   இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து  மாழை மான் மட நோக்கி உன் தோழி   உம்பி எம்பி என்று ஒழிந்திலை  உகந்து  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற    சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட  ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன்    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! குகன் தான் அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியில் பிறந்தவன் என்று தன் தாழ்வுகளைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம் என்னாது இரங்கி ஸ்ரீராமர்  ‘உகந்து தோழன் நீ எனக்...

பெரிய நம்பியின் திருவாக்கு

  பெரிய நம்பியின் திருவாக்கு ஆசாரியன் திருவாக்கிற்கு என்றும் ஓர் ஏற்றம் உண்டு. 1000 வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு வார்த்தை ஒருவரின் வாழ்க்கையே மாற்றிவிடும். ஏன் என்றால் அந்த வார்த்தை சத்தியம். இந்த உண்மைச் சம்பவத்தைப் படித்துப் பாருங்கள். மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு தீவிர தி.க தொண்டர். மதுரை வாசி. ’தந்தை பெரியார்’ மதுரை வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார். 1962 ஆம் வருஷம் ஒரு மார்கழி மாதம் மதுரை கள்ளழகர் கோயிலில் திருப்பாவை உபன்யாசம் நடந்துகொண்டு இருக்க அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் ( ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள்). உபன்யாசகர் பெரிய நம்பிகள் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். “தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள். இந்தச் செயலைப் பல ஸ்ரீ வைஷ்ணவர்களை முகம் சுளிக்கச் செய்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் போய் முறையிட ஸ்ரீராமானுஜரும் தன் ஆசாரியனிடம் “இது தகுமோ?” என்று கேட்க அதற்கு நம்பிகள் “பறவையான ஜடாயுவுக்கு ராமர் இற...

சிங்கமாய தேவ தேவன்

 சிங்கமாய தேவ தேவன் நரசிம்ம அவதாரம் என்பது நரசிம்ம பிரபாவமா ? அல்லது பிரகலாதன் சரித்திரமா ? என்ற கேள்விக்கு என்றுமே பதில் கிடையாது. நரசிம்மரிடம் கேட்டால் “ என் பக்தனுக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன். அதனால் இது என் பக்தனான பிரகலாதனின் கதை ” என்பார். பிரகலாதனோ ” தனக்காக இரணியன் சொல்லும் தூணிலிருந்து உடனே வந்தாக வேண்டுமே என்று சர்வ வல்லமை மிக்க எம்பெருமானே ஒரு நொடி கலங்கினார். தன் பக்தனுக்கு அருள் மழையால் மூழ்கடித்து  அவன் குண நலன் எவ்வளவு மகத்தானது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது அதனால் இது நரசிங்கனின் பிரபாவம் ” என்பான். இவர்களுடைய பிரபாவத்தை பேச ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் முடியாத விஷயத்தை ஸ்ரீ நரசிம்மர் அருள் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை ஸ்ரீராமானுஜர் காட்டிக் கொடுத்தார். சுமார் ஆயிரம் வருடம் பின்னோக்கி செல்ல வாசகர்களை அழைக்கிறேன். ஸ்ரீ வைஷ்ணவச் சம்பிரதாயம் எங்கும் பரவி வளர வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் ‘ அறியக் கற்று வல்லார் வைட்ணவர் களைக் கொண்டு 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார். இந்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுக்கும் அவர்களுடைய நித்திய ஆராதனைக்...