Skip to main content

Posts

Showing posts from 2024

சிங்கமாய தேவ தேவன்

 சிங்கமாய தேவ தேவன் நரசிம்ம அவதாரம் என்பது நரசிம்ம பிரபாவமா ? அல்லது பிரகலாதன் சரித்திரமா ? என்ற கேள்விக்கு என்றுமே பதில் கிடையாது. நரசிம்மரிடம் கேட்டால் “ என் பக்தனுக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன். அதனால் இது என் பக்தனான பிரகலாதனின் கதை ” என்பார். பிரகலாதனோ ” தனக்காக இரணியன் சொல்லும் தூணிலிருந்து உடனே வந்தாக வேண்டுமே என்று சர்வ வல்லமை மிக்க எம்பெருமானே ஒரு நொடி கலங்கினார். தன் பக்தனுக்கு அருள் மழையால் மூழ்கடித்து  அவன் குண நலன் எவ்வளவு மகத்தானது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது அதனால் இது நரசிங்கனின் பிரபாவம் ” என்பான். இவர்களுடைய பிரபாவத்தை பேச ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் முடியாத விஷயத்தை ஸ்ரீ நரசிம்மர் அருள் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை ஸ்ரீராமானுஜர் காட்டிக் கொடுத்தார். சுமார் ஆயிரம் வருடம் பின்னோக்கி செல்ல வாசகர்களை அழைக்கிறேன். ஸ்ரீ வைஷ்ணவச் சம்பிரதாயம் எங்கும் பரவி வளர வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் ‘ அறியக் கற்று வல்லார் வைட்ணவர் களைக் கொண்டு 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார். இந்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுக்கும் அவர்களுடைய நித்திய ஆராதனைக்கு ஸ்ரீலட

ராமனைக் கற்போம்

ராமனைக் கற்போம் நேற்று ஒருவர் என்னிடம் நான் பணிபுரியும் இடத்தில் பொறாமை குடிகொண்டுள்ளது இவர்களை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை உங்களிடம் ஏதாவது தீர்வு இருக்கிறதா என்று கேட்டார். எனக்குள் பொறாமை இருக்க நான் எப்படித் தீர்வு கொடுக்க முடியும் என்று நினைத்தவாறே ’இராமபிரானை கற்போம்’ என்ற புத்தகத்தை அன்று இரவு திறந்தேன். அதில் ஸ்ரீமத் ஆண்டவன் பொறாமை குறித்து விவரித்திருந்தார்( நிஜமாகவே!). ”கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?” என்ற ஆழ்வார் திருவாக்கு உங்களுக்குத் தெரிந்திருக்கும். இங்கே ஆழ்வார் ”கற்பவர்கள் ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ? என்கிறார். இதில் இரண்டு வார்த்தைகளை ஒளிந்துகொண்டு இருக்கிறது. அதைச் சேர்க்க வேண்டும். முதலில் பிரான் - ’பிரான்’ என்றால் ’பெருங்கருணை’ என்று ஒரு பொருள். இப்போது ”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?” அடுத்த வார்த்தை ’குணக்கடலான’ என்பது. இது ஸ்ரீராமர் என்ற வார்த்தையிலேயே ஒளிந்துகொண்டிருக்கிறது. அதையும் சேர்த்தால் ‘”கற்பவர்கள் பெருங்கருணை கொண்ட குணக்கடலான ஸ்ரீராமனை தவிர வேறு யாரையாவது கற்பரோ ?” உங்களுக்கு எல்ல

திருப்பதிக்கே லட்டு

திருப்பதிக்கே லட்டு பிரசாதம் என்பது தமிழ்ச் சொல் கிடையாது. அதைப் பற்றி நாம் அதிகம் கவலைப் படத் தேவை இல்லை. ஆகமத்தில் என்ன சொல்லியிருக்கிறது, என்ன என்ன பிரசாதங்களை பெருமாளுக்கு சமர்ப்பிக்கலாம் என்ற டிக்னிக்கல் விஷயங்களுக்குள் எல்லாம் போகாமல் குழந்தை ஆண்டாள் சொல்லுவதைப் பார்க்கலாம் ”தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” வேண்டும் என்கிறாள். அதாவது அன்புடன் பூவையோ, தீர்த்ததையோ எதையோ அவனுக்குப் படைக்கும் போது நமக்கும் பெருமாளுக்கும் ஒரு அழகான பரஸ்பர உறவு ஏற்படுகிறது. அவன் தொட்டுச் சாப்பிட வேண்டாம், பார்த்தாலே அதில் அவனுடைய அருள் பொதிந்துவிடுகிறது. அந்த அருள் பெற்ற வஸ்துவை நாம் ”கூடி இருந்து” எல்லோருக்கும் பகிர்ந்தளித்து அனுபவிக்க வேண்டும். பிரசாதம் அவன் அருளின் உறுதியான வெளிப்பாடாகும் என்பது ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படைக் கொள்கை. மிக உயர்ந்த விஷயங்களை எல்லாம் அறிந்திருந்த நம் ஆசாரியர்கள் இதை எல்லாம் தங்கள் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடித்தார்கள் என்பதற்கு அவர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சில உதாரணங்களை மட்டும் இங்கே தர

ஸ்ரீவைஷ்ணவ ’போட்டோ பாம்’

ஸ்ரீவைஷ்ணவ ’போட்டோ பாம்’ ஒரு மாதம் முன் வழக்கமாக வீட்டுக்கு வரும் ஆங்கிலத் தினசரி முன் பக்கம் முழுக்க கைப்பேசி விளம்பரம் ஒன்று ஆக்கிரமித்தது. இதை வாங்கினால் நீங்கள் எடுக்கும் படத்தில் தேவை இல்லாதவற்றைச் சுவடு தெரியாமல் அழித்துவிடும் ‘AI eraser’ வசதிகொண்டது என்று அருகிலேயே ஓர் உதாரணமாகத் தொப்பி அணிந்த பெண்ணை சுற்றித் திரிந்தவர்கள் ஒரு படமாக, அருகிலேயே தயவு தாட்சணியம் காட்டாமல் சுற்றியவர்களைக் கடாசிய இன்னொரு படமும் ஆறு வித்தியாசம் போல அருகருகே தந்திருந்தார்கள்.   நமக்கு தேவை இல்லாதவற்றை வட்டமிட்டால், இந்த  இந்த AI அழிப்பான் பொருட்களையோ அல்லது மனிதர்களையோ புத்திசாலித்தனமாக அடையாளம் கண்டு அவற்றை அகற்றி, அகற்றிய இடத்தில் இயற்கையாகத் தோற்றமளிக்கும் வண்ணங்கள் பொருட்கள் கொண்டு அதை நிரப்பிவிடும்.  ஆங்கிலத்தில் ‘போட்டோ பாம்’ என்ற ஒரு பிரயோகம் உண்டு. உதாரணத்துக்குக் குடும்பத்துடன் ஒரு செல்ஃபியை சொடுக்கும் சமயம் நடுவில் சம்பந்தமே இல்லாமல் மஞ்சள் பையுடன் ஓர் ஆசாமி நாம் எடுக்கும் படத்தில் புகுந்துவிட்டால் ? ’அட சே’ என்று என்று அலுத்துக்கொள்வது தான் ’ஃபோட்டோ பாம்’. பேஜர் பாம் போல இது அவ்வளவு கொடூரம்

காற்றினிலே வரும் கீதம்

  காற்றினிலே வரும் கீதம் ’காற்றினிலே வரும் கீதம்’, இசையரசியின் வாழ்க்கைப் பயணம் என்ற புத்தகம் சில வாரங்களுக்கு முன் கைக்குக் கிடைத்தது. ஆசிரியர் ரமணன். அவ்வப்போது அதைப் படித்து வந்தேன். பொதுவாகப் புத்தகத்தின் முன்னுரை, நூலாசிரியரின் ஒருப்பக்கவுரை படித்துவிட்டுப் படிப்பேன் ஆனால் இந்தப் புத்தகத்தைக் கடைசி அத்தியாயத்திலிருந்து தொடங்கினேன். பல வருடங்கள் முன் கௌரி ராம்நாராயண் எழுதிய ‘MS and Radha: Saga of Steadfast Devotion’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்த காரணமாக இருக்கலாம். சுஜாதா ஒரு முறை சுயசரிதம் எழுதுவதில் சில ஆபத்து இருக்கிறது. உண்மையை எழுத வேண்டிவரும். கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டியிருக்கும் என்றார். நான் அவரை தொடர்ந்து நச்சரித்த போது, சரி என்று ஒப்புக்கொண்டார். அப்போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இந்தச் சுயசரிதத்தை நீ எழுதுவது போல எழுதாதே, தன்னிலையில் ( first person ) நான் எழுதுவதைப் போலவே என் ஸ்டைலில் எழுது என்றார். இதற்காக அவருடன் நான் பல சந்திப்புகளை நிகழ்த்தினேன். எல்லாவற்றையும் ஒலிப்பதிவு செய்தேன். ஆனால் நடுவில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு,