Skip to main content

டெல்லி கணேஷ்

 டெல்லி கணேஷ்



முன்பு கல்கி கடைசிப்பக்கத்தில் ‘பாயசம்’ பற்றி எழுதியது.


.....77 வயதான டெல்லி கணேஷ் ’சாமநாது’ கதாபாத்திரத்துக்கு அளவு எடுத்துத்
தைத்த சட்டை போலக் கச்சிதமாக பொருந்துகிறார். ஜீனிலேயே நடிப்பு கலந்திருக்கிறது. இயக்குநர் சொல்லுவதை உள்வாங்கி சற்றும்
மிகைப்படுத்தாமல் மனித உணர்ச்சியின் பல குவியல்களை நமக்குத் திரையில் உடல் மொழியுடன் கூடிய நடிப்பில் வழங்குவதால் இந்தப் படம்
தனித்து நிற்கிறது. அவர் தோன்றும் காட்சிகளில் நம் பார்வை வேறு எங்கும் செல்லாமல் கடிவாளம் போட்ட குதிரை மாதிரி அவரிடமே நிற்கிறது. முதல் காட்சியில் ‘பிள்ளையாரப்பா’ என்று மாடுலேஷனில் பேசுவதும்,
கல்யாண வீட்டுக்குச் செல்லும் போது போகிற போக்கில் துண்டை சும்மா உதறிவிட்டு அக்குள் அடியில் தட்டிவிட்டுப் போட்டுக்கொள்ளுவது, அவர் அண்ணன் மகன் அவருக்குக் கோட் போட்டுவிட்டு காலில் விழும் போது ‘நல்லா இரு நல்லா இரு’ என்று ‘நல்ல்ல்லா இரு’ என்று அவரை தட்டிக்கொடுப்பதில் அவர் காண்பிக்கும் வெறுப்பு எனப் பல இடங்களை வியக்காமல் இருக்க முடியவில்லை.....


சில வருடங்களுக்கு முன் ”சார் நீங்க தேசிகனா?” என்று எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது.
“ஆமாம்” என்றேன்.
நீங்க சுஜாதா பற்றி எழுதியதை படித்தேன் என்று நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அந்த சாமநாதுவா இது என்று வியந்தேன். ஏன் என்றால் அந்த வயசிலும் அவருடைய பேச்சில் அந்த ஒரு வெகுளித்தனம் இருந்தது.
அது நாள் வரை வெகுளித்தனம் குழந்தைகளுக்கு மட்டுமே என்று சொந்தம் என்று நினைத்திருந்தேன்.

அஞ்சலிகள்.

- சுஜாதா தேசிகன்
10.11.2024

Comments