Skip to main content

Posts

Showing posts from March, 2016

ஆசாரியர்கள் வருகை

ஆழ்வார்கள் விஜயம் பற்றி முன்பு எழுதியிருந்தேன். நினைவிருக்கலாம். ஆழ்வார்களை ஸ்தபதியிடம் பெற்றுக்கொண்ட பின் ”எனக்கு நம்பெருமாள், தாயார் ஆசாரியர்கள் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும்” என்றேன் “உடம்பு ஒத்துழைத்தால் நிச்சயம் செய்து தருகிறேன்” என்றார். சில மாதங்கள் கழித்து ஒரு முறை ஸ்தபதியிடம் இதைப்பற்றிப் பேசலாம் என்று போன் செய்த போது எனக்கும் ஸ்தபதிக்கும் பாலமாக இருந்த திரு தேனுகா ஸ்ரீநிவாசன் காலமானார் என்பதை தெரிந்துகொண்டேன். அப்போது ஸ்தபதியிடம் அதைப் பற்றி பேசவில்லை.. பிறகு பெருமாள், ஆசாரியர்கள் பற்றிய  நினைவு வந்துவிட்டுப் போகும். ஸ்தபதியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். மாதங்கள் ஓடின போன வருஷ ஆரம்பத்தில் திருச்சிக்கு சென்ற போது உறையூர் நாச்சியாரைச் சேவித்துவிட்டு வரும் போது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அகஸ்மாத்தாக  நம்பெருமாள் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு நாள் நம்பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அந்தப் படத்தில் நான்கு திருக்கைகள். ஸ்தபதியிடம் பெருமாள் மூர்த்தியை