Skip to main content

Posts

Showing posts from December, 2006

திருப்பாவை-0 7 – பறவை

[%image(20061222-andal_drawing_6.jpg|142|183|)%] கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ? தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய். இந்தப் பாட்டில் ஆண்டாள் கீசுகீசு ஒலி எழுப்பும் ஆனைச்சாத்தனை குறிப்பிடுகிறார். இந்த பறவைக்கு பேசும் ஆற்றல் இருப்பதாகவும் கூறுகிறார். ( இரண்டு வருடம் முன் திருப்பாவை விளக்கம் எழுதிய போது எல்லா புத்தகத்திலும் ஆனைச்சாத்தன் பற்றி எந்த குறிப்பும் எனக்கு கிடைக்கவில்லை. மிகுந்த தேடலுக்குப் பிறகு அது Seven Sisters என்று அழைக்கப்படும் சாம்பல் நிற பறவை என்று தெரியவந்தது. எங்கள் பள்ளிக் கூடத்தில் இந்த பறவையை நிறைய பார்த்திருக்கிறேன். எதைப் பற்றி எழுத வேண்டும் என்றாலும் அதைப் பற்றி முழுமையாக தெரிந்துக்கொண்டு எழுத வேண்டும் என்பது சுஜாதா எனக்கு கற்றுத் தந்த பாடம் ). இன்று திவ்வியப் பிரபந்தத்தில் வரும் சில பறவைகளைப் பற்றி பார்க்கலாம். முதலில் குலசேகர ஆழ்வார

திருப்பாவை-0 6 – சங்கு

[%image(20061221-andal_drawing_5.jpg|172|225|)%] புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம் உள்ளம்புகுந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய். இந்தப் பாட்டில் உவமைகள் இல்லாததால் ஆண்டாள் சொன்ன வெள்ளை சங்கை பற்றி பார்க்கலாம். சந்திரன் எப்படி குளிர்ச்சிக்கு உவமையாகக் கூறுவது மரபோ அதே போல் சங்கை வெண்மை நிறத்துக்குக் கூறுவது மரபு. "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்று கூறுவர்.பெருமாள் கையில் அலங்கரிக்கும் சங்கு வீரத்தின் வெற்றிக்கு அறிகுறியாக ஒலிக்கப்படும். இந்த சங்கு பற்றி ஆழ்வார்கள் பல பாசுரங்களில் பாடியுள்ளனர். இன்றைய திருப்பாவையில் ஆண்டாள் "பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாகக் கொண்ட விஷ்ணுவின் கோயிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா? " என்று பெண்களை எழுப்புகிறார். திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்ததில்     அங்கமாறும் வேதநான்கு    

திருப்பாவை-0 5 – பஞ்சு

[%image(20061220-andal_drawing_4.jpg|123|182|Andal5)%] மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். தூசு என்றால் பஞ்சு என்று பொருள். இந்தப் பாட்டில் ஆண்டாள் நமக்கு ஒரு ரகசியத்தை சொல்லுகிறார்.நாம் மனசு சுத்தமாய், கண்ணனை வணங்கினால்,  நாம் அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்திருந்தாலும் அதை தீயில் இட்ட பஞ்சு போல் போக்கிக் கொள்ள முடியும் என்கிறார். பெரியாழ்வார் பஞ்சை கண்ணனின் திருவடிகளுக்கு உவமை கூறுகிறார். கஞ்சன்தன்னால்புணர்க்கப்பட்ட கள்ளச்சகடுகலக்கழிய பஞ்சியன்னமெல்லடியால் பாய்ந்தபோதுநொந்திடுமென்று அஞ்சினேன்காண்அமரர்கோவே. ஆயர்கூட்டத்தளவன்றாலோ கஞ்சனைஉன்வஞ்சனையால் வலைப்படுத்தாய். முலையுணாயே. (பெரியார்வார் திருமொழி, 131, 4 ) கம்சனால் உன்னைக் கொல்ல அனுப்பிய சகடாசுரன் கண்ணனை அழிக்க வந்தபோது, கண்ணன் தன் பஞ்சுபோன்ற திருவடிகளால் உதைத்தப் போது, உன் திருவடிகள

திருப்பாவை-0 4 – மழை, மின்னல், இடி

[%image(20061219-andal_drawing_3.jpg|125|175|Andal - 3)%] ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி, ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி , வலம்புரிபோல் நின்றதிர்ந்து, தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் மழைக்கென்றே ஒரு தனி பாடலை ஆண்டாள் தந்துள்ளார். மழை எப்படி பெய்கிறது என்று இயற்கையான விளக்கத்தையும் அதை திருமாலின் கரிய உடல், சங்கு, சக்கரம் இவைகளோடு ஒப்பிடவும் செய்கிறார். இன்று இடி, மின்னல் கூடிய மழையை அனுபவிக்கலாம். மழை குலசேகர ஆழ்வார் மழையைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம். ஏர்மலர்ப் பூங்குழ லாயர்மாதர் எனைப்பல் ருள்ளவிவ் வூரில்,உன்றன் மார்வு தழுவுதற் காசையின்மை அறிந்தறிந் தேயுன்றன் பொய்யைக்கேட்டு கூர்மழை போல்பனிக் கூதலெய்திக் கூசி நடுங்கி யமுனையாற்றில் வார்மணற் குன்றில் புலரநின்றேன் வாசுதே வாஉன் வரவுபார்த்தே (பெருமாள் திருமொழி, 698, 6.1 ) வாசுதேவா மணம் மிகுந்த பூக்களைச் சூடிய இடைப் பெண்கள் பலர் வாழும் இந்த ஊரில், நா

திருப்பாவை-0 3 – வண்டு

[%image(20061218-andal_drawing_2.jpg|150|220|Andal-2)%] ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம் பாவைக்குச் சாற்றிநீர் ஆடினால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து ஓங்கு பெருஞ்செந்நெ லூடு கயல் உகளப்பூங்குவளைப் பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப, தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய். இரண்டாம் பாடல் போல் இந்த பாட்டிலும் உவமை இல்லை. நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் வண்டுகள் ரீங்காரமிடும் பாசுரங்கள் அதிகம். இந்தப் பதிவில் ஆழ்வார்கள் பார்த்த வண்டுகள் சிலவற்றைப் பார்க்கலாம். வண்டிற்கு பிரமரம், தும்பி என்னும் பெயர்களும் உண்டு. "ஓங்கி உலகளந்த உத்தமன்" என்ற திருப்பாவையில் ஆண்டாள் அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும் என்கிறாள். அதே வண்டை நாச்சியார் திருமொழியில் பாருங்கள்.     வெளிய சங்கொன் றுடையானைப்     பீதக வாடை யுடையானை,     அளிநன் குடைய திருமாலை     ஆழி யானைக் கண்டீரே?-     களிவண் டெங்கும் கலந்தாற்போல்     கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்,     மிளிர நின்று விளையாட    

திருப்பாவை-0 2 - நெய்

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள் பையத் துயின்ற பரமன் அடிபாடி, நெய் யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் இந்தப் பாட்டில் உவமை எதையும் சொல்லவில்லை. ஆனால் நெய்யைப் பற்றி பேசியுள்ளார். இந்த பதிவில் நெய்யைப் பற்றி சொல்லலாம் என்று எண்ணம். ( திவ்யப் பிரபந்தத்தில் நெய் பற்றிய குறிப்புகள் ஏராளமாக உள்ளன அவைகளில் சிலவற்றை உங்களுக்கு இங்கே தந்துள்ளேன் ) பாலில் இருந்து தயிரும், தயிரைக் கடையும் போது வெண்ணையும் கிடைக்கிறது. வெண்ணையை உருக்கினால் நெய் ஆகிறது. இது ஆழ்வார்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பதில் வியப்பில்லை. ஆனால் அதை நம்மாழ்வார் எவ்வாறு தன் பாடலில் அழகாக உபயோகித்துள்ளார் என்று பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது! பிறந்த மாயா. பாரதம் பொருத மாயா. நீயின்னே, சிறந்த கால்தீ நீர்வான்மண் பிறவு மாய பெருமானே, கறந்த பாலுள் நெய்யேபோல் இவற்று ளெங்கும் கண்டுகொள், இறந்து நின்ற பெருமாயா. உன

திருப்பாவை-0 1 – நிலவு

[%image(20061216-andal_drawing_1.jpg|147|225|Andal - 1)%] மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன், ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம், கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான் நாரா யணனே, நமக்கே பறைதருவான், பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய். சூரியனைக் காட்டிலும் கவிஞர்களைப் பெரிதும் கவர்வது சந்திரனே! . அதற்கு காரணம் அது தரும் குளிர்ச்சியே.  நிலவு, மதி, திங்கள், அம்புலி, திசிலன், தண்ணவன் என்று பல பெயர்களில் சந்திரன் கவிதைகளில் உலா வரும். ஆழ்வார் பாசுரங்களில் நிலவு பற்றிய உவமைகள் பல உள்ளன. குழந்தைகள் பாட்டு, குறுந்தொகை, திருக்குறள், திரைப்படம் என்று நிலவை என்று நிலவை அனுபவிக்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். நிறைநேர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்நீர பேதையார் நட்பு ( குறள் 782 ) அறிவுடையார் நட்பு பிறைமதிபோல் வளரும்; அறிவிலார் நட்பு தேய்பிறையாகத் தேய்ந்து போகும் என்று திருவள்ளுவர் சொல்லும் உவமையை என்னவென்று சொல்வது! இனி ஆண்டாள் பாசுரத்துக்குள் செல்லலாம். "மு

இந்த மார்கழி..

[%image(20061215-thirupavai_1.jpg|284|203|thirupavai)%] இரண்டு வருடங்கள் முன்(2004) மார்கழி மாதம் ஒவ்வொரு நாளும் திருப்பாவைக்கு (தமிழிலும், ஆங்கிலத்திலும் ) ஒரு படத்துடன் எளிய விளக்கமும் தந்தது நினைவிருக்கலாம். இந்த வருடம் திருப்பாவையில் வரும் உவமைகளை எழுதலாம் என்று இருக்கிறேன். அப்படியே மற்ற ஆழ்வார்களையும் கொஞ்சம் தொட்டுப் பார்க்க ஆசை. ( தினமும் எழுத முடியுமா என்று தெரியவில்லை, அதனால் மார்கழி முடிந்தும் இந்தப் பதிவுகள் தொடரும். ) கவிதைகள் சிறக்கப் பெரிதும் உதவுவது உவமை. "டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா!"  போன்ற வரிகள் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருப்பதால் உவமை என்ன என்று உங்களுக்கு விளக்கப் போவதில்ல. உவமைகள் பதினாறு வகைப்படும் - கட்டுரையில் ஆங்காங்கே குறிப்பிடுகிறேன். உவமையின் மூலமாக ஒரு கருத்தை எளிதில் விளக்க முடியும்; பசுமரத்தாணி போல மக்கள் மனதில் பதியவைக்க முடியும் என்பதை ஆழ்வார்கள் நன்கறிவார்கள். உவமை நயத்தோடு பல கருத்துகளை பாசுரங்களின் வாயிலாக விளக்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, குலசேகராழ்வார் கூறும் உவமையைப் பார்க்கலாம். "வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன

திருமங்கையாழ்வார்

கார்த்திகையில் கார்த்திகை நாள் அன்று இந்தப் பதிவை எழுத ஆரம்பித்து இன்று தான் முடிக்க முடிந்தது. எவ்வளவு படித்தாலும் திகட்டாத தமிழை திருமங்கையாழ்வார் பாசுரங்களில் பார்க்கலாம். இந்தப் பதிவில் திருமங்கையாழ்வரைப் பற்றி நான் எடுத்துவைத்துள்ள சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்; கடைசியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருமங்கையாழ்வார் அழகைப் பார்த்துப் பாடிய வடிவழகு சூர்ணிகையும் இடம் பெற்றிருக்கிறது. மற்ற ஆழ்வார்கள் பற்றியும் எழுதலாம் என்று எண்ணமிருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். ஆழ்வார்கள் பன்னிருவருள் கடைக்குட்டி ஆழ்வார் திருமங்கை மன்னன். "பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை அய்யன் அருள்மாறன் சேரலர்கோன் - துய்யபட்ட நாதனன்பர் தூள்தூளி நற்பாணன் நற்கலியன் ஈதிவர்தோற் றத்தடைவாம் இங்கு" என்கிறது உபதேச ரத்தின மாலை(4). இவருக்கு பல்வேறு பெயர்கள் இருக்கிறது - ஆலிநாடான், அருள்மாரி, அரட்ட முக்கி, அடையார்சீயம், கொங்கு மலர்க் குழலியர்வேல், மங்கை வேந்தன், பரகாலன், கலியன், கலிகன்றி, குறையலூர் வாழ் வேந்தன், இருந்தமிழ் நூற்புலவன். இவரை பற்றிய குருபரம்பரை கதை சற்று

तमिल

நான் ஒன்றாம் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்பிற்குப் போகும் போது தான், அந்தச் சரித்திர முக்கியத்துவம் நிறைந்த சம்பவம் நிகழ்ந்தது. அப்போது கோடை விடுமுறையில் ஹைதராபாத்தில் இருந்தோம். எனக்குப் பள்ளிக்கூடம் சீக்கிரமே திறப்பதால் முன்னதாகவே நான் என் அப்பாவுடன் திருச்சிக்கு அழுதுக்கொண்டே வந்தேன். (என் அம்மா மருத்துவமனையில் இருந்ததால் உடன் வரமுடியாத சூழ்நிலை). புத்தகம் வாங்கும் போது இரண்டாம் மொழியாக என்ன வேண்டும் என்று ஓர் ஆப்ஷன் இருந்தது. என் அப்பா மத்திய அரசில் வேலை செய்ததால் விண்ணப்பப் படிவத்தில் ஹிந்தி என்பதை டிக் செய்தார். (அடிக்கடி மாற்றல் ஆவதால் சுலபமாக இருக்கும் என்பதால்). இரண்டு மாதம் கழித்து, என் அம்மா திரும்பி வந்த போது எப்படிப் படிக்கிறேன், என்னென்ன புத்தகம் என்று பார்த்தார். அப்போது அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது... "எங்கே உன் தமிழ் புத்தகம்?" என்றார். நான் (வழக்கம்போல்) திரு திரு என்று முழித்தேன். சாயந்திரம் என் அப்பா வந்தவுடன், "ஏன் தமிழ் பாடமாக எடுக்கவில்லை? நாளைக்கு பிள்ளை எப்படி ஆனந்த விகடன், குமுதம் எல்லாம் படிப்பான் என்று கோபப்பட்டார்.