Skip to main content

Posts

Showing posts from March, 2006

கல்கி – அசோகமித்திரன்

இந்த வாரம் நான் படித்த இரண்டு பகுதிகளை கொடுக்கலாம் என்று இருக்கிறேன். முதலில் கல்கி எழுதியது ( - ‘படித்தேன்... ரசித்தேன்...’ நூலிலிருந்து... வானதி பதிப்பகம் ) ஒருவன் நம்பத்தகாத நிகழ்ச்சி எதையேனும் கூறினால், ‘‘என்னப்பா கதை சொல்லுகிறாயே?’’ என்கிறோம். ‘‘இதென்ன கதையா இருக்கிறதே’’, ‘‘என்னடா, கதை அளக்கிறாய்?’’ என்றெல்லாம் அடிக்கடி காதில் விழக் கேட்டிருக்கிறோம். இவற்றிலிருந்து, கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகளடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது. அதே சமயத்தில், கதைகளைப் பற்றி விமர்சனம் எழுதும் பொல்லாத மனிதர்கள் இருக்கிறார்களே, அவர்கள் கதையில் வரும் ஒவ்வொரு சம்பவமும் வாழ்க்கையில் நடைபெறக் கூடியதாக இருக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறார்கள். ‘‘அது அப்படி நடந்திருக்க முடியாது.’’ ‘‘இது இவ்வாறு ஒரு நாளும் நடந்திராது.’’ ‘‘இந்தச் சம்பவம் இயற்கையோடு பொருந்தியதில்லை.’’ ‘‘அந்த நிகழ்ச்சி நம்பக் கூடியதன்று’’ என்றெல்லாம் எடுத்துக்காட்டி, ‘‘ஆகையால் கதை சுத்த அபத்தம்! தள்ளு குப்பையில்!’’ என்று ஒரே போடாய்ப் போட்டு விடுகிறார்கள். விமர்சகர்கள் இப்படிச் சொல்கிறார்களே என்பதற

வேட்டையாடு விளையாடு விழா பற்றி சுஜாதா

[%image(20060314-veetai.jpg|175|175|Kamal's New Movie )%] எனது நண்பர் மாணிக்கம் நாராயணின் அழைப்பில் அவர் எடுத்து முடித்த 'வேட்டையாடு விளையாடு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு குளிக்க அழைத்துச் செல்லப்படும் நாய்க்குட்டிபோலச் சென்றேன். காரணம் இம்மாதிரி விழாக்களில் படுத்துவார்கள். பத்துமணி என்று சொல்லி பதினொன்றரைக்கு முதல் நாற்காலிகளை மேடை மேல் வைத்து 'செக் செக் மைக் டெஸ்டிங்!' செய்வார்கள். விஐபிக்கள் செல்போனில் 'வந்துகொண்டே இருக்கிறேன்' என்று பாத்ரூமிலிருந்து சொல்லிக் கொண்டிருப்பார்கள். விழா நாயகர்கள் வரும்வரை எங்கள் போன்ற பாமரர்களுக்கு கமல் படங்களின் பழைய பாடல்களையும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் சமீபத்திய பாடல்களையும் சின்மயி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, கார்த்திக், சரண், உண்ணி மேனன், ஸ்ரீனிவாஸ் போன்றவர்கள் ஸ்ருதி விலகுவது பற்றி கவலைப்படாமல் பாடிக்காட்ட கமல் ரசிகர்கள் மாடியில் பால்கனியில் அவ்வப்போது 'ஆழ்வார்பேட்டை ஐயப்பா! 'மன்னார்குடி மாமன்னா' என்று ஆரவாரமிட்டுக் கொண்டிருக்க, எல்லோரும் யாருக்காகவோ எதற்காகவோ காத்திருந்தோம். மேடையில் மேலும்