Skip to main content

Posts

Showing posts with the label பொது

தமில் வாழ்க!

  தமில் வாழ்க! ‘மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்!’ என்ற புதுக்கவிதை வரிகள் ‘சுஜாதா’வால் பிரபலமாகி, பின்னாளில் புத்தகத் தலைப்பாகவே மாறியது. ஆங்கில மொழிக்குக் கிடைக்காத ஒரு பெருமை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது – தமிழ் ஒரு ‘பெண்’. அதனாலோ என்னவோ, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையே இதற்கும் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அவியல் செய்யப் போதுமான தலைப்புகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் கையில் முதலில் எடுப்பது தமிழைத்தான். தமிழுக்கு புடவை கட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ சர்ச்சை, சுடிதார் போட்டு இந்து எதிர்ப்பு அல்லது மும்மொழிக் கொள்கை என எதையாவது உளறிவிட்டு, கடைசியில் ‘தமில் வாழ்க’ என்று முடித்தால் போதும் – திராவிட சித்தாந்தவாதி என்று சுலபமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்! இப்படிப் பல காலமாக அரசியல்வாதிகளின் வெறும் வாய்க்கு அவலாக இருந்துகொண்டிருக்கிறாள். சொல்ல மறந்துவிட்டேனே, அவ்வப்போது திடீரென்று கருப்பு பெயிண்ட் டப்பாவைத் தூக்கிக்கொண்டு தமிழ் அல்லாத எழுத்துக்களை அழிக்கும் 'அரும்பணி' இருக்கவே இருக்கிறது. இவற்றையெல்லாம் செய்து, தமிழகத்தில் தமிழ் வளர்ந்துவிட்டதா? தமிழகத்தில் தமிழ் வளரவே...

தமிழன் என்று சொல்லடா

தமிழன் என்று சொல்லடா ’Her Mother's Killer’ என்ற ஸ்பானிஷ் தொடர் ஒன்றை முன்பு பார்த்திருக்கிறேன். அதில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கேவலமான விஷயங்களைச் செய்வார்கள் என்று காட்டியிருப்பார்கள். அதனால் இன்று தமிழக அரசியலில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. திராவிடக் கட்சிகள் சினிமாவைத் தங்கள் பிரச்சாரக் கருவியாகச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்தது. ‘முன்னேற்றக் கழகம்’ என்ற வார்த்தை கட்சிகளை மட்டும் முன்னேற்றப் பயன்பட்டது. மக்கள் முன்னேறினார்களா ? சமீபத்திய உதாரணம் – அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இதைச் செய்தார்கள், அதைச் செய்தார்கள் என்று விழா எடுத்தார்கள். அதை வியப்புடன் சினிமாப் பிரபலங்கள் பார்த்துக் கைதட்டினார்கள். வெளிநாடுகளில் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பது என்பது கனவு. இங்கே அப்படி இல்லை. இன்றும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலையை ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அங்கே வாக்களிக்கும் போது பார்க்கலாம்.  வாக்களிக்கும் ஒவ்வொருவரும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலை...

1,00,000 டாலர் வீசா - புலம்பெரும் இந்தியர்களின் புலம்பல்

1,00,000 டாலர் வீசா - புலம்பெரும் இந்தியர்களின் புலம்பல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலராக (சுமார் 88 லட்சம் ரூபாய்) உயர்த்தி புதிய மகாளய அமாவாசை அன்று முதல் இது அமலுக்கு வரும் என்ற உத்தரவை வெளியிட்டார். எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை. சமீப காலங்களில் மோடியின் ‘நண்பர்’ டிரம்ப், அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோக் குடிக்க, டாஸ்மாக் போலக் கூடுதலாக 10$ கொடுக்க வேண்டும் என்று சொன்னாலும் நம்பக்கூடிய மனநிலைக்கு வந்துவிட்டேன். பையன் அனுப்பிய ‘சிஸ்கோ’ முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு, மேற்கு மாம்பலத்தில் கோதண்ட ராமன் க்யூவில் என் பையன் ‘சான் ஹோசே’வில் இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அப்பாக்களின் நிலை என்னவாகுமோ என்று தெரியவில்லை.  இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளக் கொடுக்கும் ‘கேரட்’தான் இந்த H1B விசா. இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) மாற்றங்களுக்கு இடையில் இந்த யதார்த்தத்தை இனி எல்லோரும் எதிர்கொள்ள வேண்டும்; வேறு வழியில்லை. H1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் பெற்றோர் ஐசியூவில் இருந்தாலும் (இருக...

வாட் அன் ஐடியா சர்ஜி!

வாட் அன் ஐடியா சர்ஜி! பஹல்காம் தாக்குதலின் கொடூரம் விஷயம் - ஆண்களையும் பெண்களையும், இந்துக்களையும் முஸ்லிம்களையும், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் பிரித்துப் பொறுக்கி திடீர் என்று அடித்தது தான். கூடவே “உங்க மோடியிடம் போய் சொல்லு” என்று செய்தி அனுப்பினார்கள்.  இறந்த கணவர் அடிப்பட்டுக் கிடக்க, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்த அந்தத் தேன்நிலவு ஜோடியின் படம் எல்லோரையும் உலுக்கியது.  இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று பாரத மக்கள் எல்லோரும் மோதி மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். பீஹார்  அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் டிரம்ப் போன்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக ஆங்கிலத்தில் சூளுரைத்தார். நம் எல்லோர் மனதிலும் அடிப்பார் என்று தெரியும் ஆனால் எப்போது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உறுத்திக்கொண்டு இருந்தது.  பொறுக்கி அடித்த அந்தப் பொறுக்கிகளுக்கு மோதி என்ன மாதிரி அதிர்ச்சி கொடுக்கப் போகிறார் என்பதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். முதலில் நதி நீர் கிடையாது என்றார். உடனே எல...

விகடன் கேலிச்சித்திரம் - கொந்தளிக்கத் தேவை இல்லை.

விகடன் கேலிச்சித்திரம் - கொந்தளிக்கத் தேவை இல்லை.  விகடன் கார்டூனுக்கு கொந்தளிக்கத் தேவை இல்லை. ஆபாசமாக பல அட்டைப்படங்கள் போட்ட போது  ( பிறகு குட்டியாக மன்னிப்பு கேட்டார்கள்)  கொந்தளிக்காதவர்கள் இதற்கு ஏன் கொந்தளித்தார்கள் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. இருந்தாலும் ஏன் கொந்தளித்தார்கள் என்று யோசிக்கிறேன்.  முதன் முதலில் வெளிநாட்டுக்குச் செல்பவர்கள் கலாச்சார அதிர்ச்சியை (cultural shock ) அனுபவிப்பார்கள். எனக்கும் அந்த உணர்ச்சி ரீதியான அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதைக் காட்டிலும் வேறு பல அதிர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கிறது. நான் பல வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறேன். தில்லும் முல்லு படத்தில் தே.சீனிவாசன் ஒரு நேர்முகத் தேர்வுக்கு வரும் இளைஞன் சட்டையில் பூனை படம் இருக்க, “இது என்ன?” என்று கேட்பார். “பூனை” என்று பதில் சொல்ல,  ”அதில் என்ன பெருமை? ” என்பார்.  அது போலத் தான் என் வெளிநாட்டுப் பயணங்களும். அதில் எந்தப் பெருமையும் இல்லை, ஆனால் பல அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன்.   ஒரு முறை ஃபிரான்ஸ் செல்லும் போது ஃபிளைட்டில் எவ்வளவு கேட்டும் கடைசி வரை...

கழுதை வழி

கழுதை வழி பத்து நாளைக்கு முன் ‘இந்தியர்கள் விலங்கிட்டு’ இந்திய நாட்டுக்குத் திருப்பி அனுப்பியதைக் கண்டு பலரும் ராகுல் காந்தி போலக் கொத்துப் போனார்கள். சட்டவிரோதமாகச் சென்றதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தப்பு தான், ஆனால் அவர்களை நடத்தியவிதம்? தோழர்கள் மனிதம் செத்துவிட்டது என்றார்கள்.  இந்தியாவிற்குத் திரும்பி அனுப்பினார்கள் என்று எழுதினார்கள். யாரும் தாய்நாட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் என்று எழுதவில்லை. டிரம்ப் இவர்களைக் குற்றவாளிகள், வேற்றுக்கிரகவாசிகள் என்று மீண்டும் மீண்டும் திட்டிக்கொண்டு இருந்த போது அதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனாலேயே பலர் டிரம்ப் வரக் கூடாது என்று வேண்டிக்கொண்டார்கள்.  பிரதமர் மோடியின் ஸ்வச்ச பாரத் - தூய்மை இந்தியா திட்டத்துக்கு நாமும் ஏதாவது செய்வோம் என்று முன்பு நான் வசித்த தாம்பரம் வீட்டுக்கு முன் இருந்த குப்பை எல்லாம் அகற்றி இங்கே குப்பை போடாதீர்கள் என்று போர்ட் வைத்து சின்ன செடி ( நாளை மரமாக வளரும் என்று நம்பி ) வைத்தேன். சில நாளில் திடீர் என்று மரம் உசந்து வளர்ந்துவிட்டதோ என்று பார்த்தால் நான் வைத்த செடிக்குப் பக்கம் ஒரு பாஜக ...

தமிழ் தொடரடைவு

  தமிழ் தொடரடைவு இன்றைய செயற்கை நுண்ணறிவின் இயந்திர கற்றல் மற்றும் ஆழமான கற்றல் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி பயிற்சியளிக்கப்பட்ட வழிமுறைகளைக் கொண்டு மொழியியலுக்கு ஏற்ற மாடல் கொண்டு முழு திவ்யப் பிரபந்தத்தையும் அதன் உரைகளையும் கொண்டு வந்துவிட்டால், பல விஷயங்கள் நமக்குச் சாத்தியமாக்கும். உதாரணத்துக்கு ஆழ்வார்கள் எவ்வளவு முறை ‘அடியார்’ என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்கள். எந்த ஆழ்வார் அதிகம் உபயோகித்துள்ளார் போன்ற கேள்விகளைக் கேட்கலாம். ஆழ்வார் பாடல்களைக் கொண்டு நரசிம்ம அவதாரம் குறித்து பத்து நிமிட உபன்யாசம் செய் என்றால் உடனே செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று ஸ்ரீ.உ.வே வெங்கடேஷ் ஸ்வாமி போல உபன்யாசம் செய் என்றால் தோணி சிக்ஸ் அடித்த மாதிரி நரசிம்மர் அடித்தார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படக் கூடாது! திவ்யப் பிரபந்தத்துக்கு ‘Concordance’ முதலில் தேவைப்படும். [Concordance - ’an alphabetical list of the words (especially the important ones) present in a text, usually with citations of the passages in which they are found’] தமிழில் தொடரடைவுகள். உதா...

விஜய் அரசியல் பிரவேசம்

விஜய் அரசியல் பிரவேசம் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற குங்குமப் பொட்டு வைத்த மூன்று பக்க அறிக்கையில் பலர் ‘க்’ ‘ப்’ ‘த்’ என்று மெய்யெழுத்து ஆணியைப் பிடுங்கிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துச் சொல்லி சில விஷயங்களைப் பார்க்கலாம். குமுதத்தில் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற ரீதியில் வந்த சினிமா விமர்சனம் நினைவுக்கு வருகிறது. அதிலிருந்து விஜய் எட்டியிருக்கும் உயரம் மிக அதிகம். சமீபத்தில் நல்ல பாரு நான் தான் கழுகு என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார். பருந்து காக்கை ஆகாது என்ற பழமொழியை மாற்றினார். பல காலம் hibernation இருந்துவிட்டு, படம் வெளியாகும் தறுவாயில் கலக்‌ஷன் அரசியல் பேசாமல், விஜய் களத்தில் செய்துகொண்டு இருந்த செயல்களில் 100% அரசியல் இருந்தது. அவர் அரசியலில் காலடி வைக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். ஆனால் தன் மார்க்கெட் உயரத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் இனி முழு நேர அரசியல் என்று வந்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. சரியான முடிவோ இல்லையே ஆனால் நிச்சயம் துணிச்சலான முடிவு. கறுப்பு, கருப்பு எது சரியான சொல் என்ற...

பத்ரி சில எண்ணங்கள்

 பத்ரி சில எண்ணங்கள் பத்ரியை எனக்கு ராயர் காபி, தமிழ்.டாட்.காம் என்று அவர் பதிப்பகம் ஆரம்பிக்கும் முன்பே தெரியும். நல்ல நண்பர். பதிப்பகத்தில் எழுத்தாளருக்கு ராயல்டி இவ்வளவு தானா ? என்று ஆச்சரியப்பட்டு கிழக்கு பதிப்பகத்தை ஒரு கார்பரேட் நிறுவனம் போல ஆரம்பித்தார். தமிழ் கூறும் நூல்லுலகம் ஒரு புரட்சியைக் கண்டது. பதிப்பக துறையில் ப.தி.கொ. போட்ட பலருக்கு இது ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது. தன் பதிப்பக துறை வேறு, தன் சிந்தனை சித்தாந்தம் வேறு என்ற கொள்கையை உடையவர். சூப்பர் மார்கெட் போல எல்லா சரக்கும் கிடைக்கும். புற்றீசல் போல வலைப்பதிவில் எழுதிக்கொண்டு இருந்தவர்கள் கிழக்குப் பக்கம் சென்று ‘எழுத்தாளர்’ என்று ’டாட்டூ’ குத்திக்கொண்டு வந்தார்கள். ஒரு முறை என் நண்பருக்கு வேலை வேண்டும் என்று அவரிடம் கேட்ட போது ‘அதற்கு என்ன’ செய்துவிடலாம் என்றார். அவருடன் பல முறை உரையாடியிருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லிவிடுவார். ஏதாவது சந்தேகம் இருந்தால் அவருடன் பேசினால் தீர்வு கிடைக்கும். ஒரு முறை இவரைப் பற்றி பேச்சு வந்த போது சுஜாதா சொன்ன ஒரே வரியை நான் இன்னும் மறக்கவில்லை. (நல்ல விதமாகத் தான் சொன்னார், ஆனால் அத...

2021 திரும்பி பார்க்கிறேன் !

2021 திரும்பி பார்க்கிறேன் ! 2021 மற்ற வருடங்கள்போல இப்ப தான் ஆரம்பித்தது அதற்குள் முடிந்துவிட்டது.  சில நினைவுகள்.  உருப்படியான விஷயம் : பதம் பிரித்த பிரபந்தம் புத்தகம் வெளியிட்டது .  மணக்கால் நம்பி திருநட்சத்திரம் அன்று அறிவிப்பு செய்து, பங்குனி உத்திரம் அன்று அச்சுக்குச் சென்று, உடையவர் திருநட்சத்திரம் அன்று வெளியிடப்பட்டது. 1300 புத்தகம் முழுவதும் தீர்ந்து, கொரோனா இரண்டாம் அலையின்போது அனுப்பப்பட்டப் புத்தகம் மொத்தம் 1008(!). பெற்றுக்கொண்டவர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். அடுத்த வருடம்(2022) அதன் இரண்டாம் பதிப்பு கொண்டு வரப் பெருமாள் அருள் புரிய வேண்டும். வேலைகள் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறது.  எழுத்துப் படிப்பு :  கல்கி கடைசிப் பக்கம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பல கடைசிப் பக்கம் இரவு 12 மணிக்கு டெட்லைனுக்குள் கடைசியாக அனுப்புகிறேன்.  தினம் ஒரு பாசுரம் எழுதத் தொடங்கி, கூட்ஸ் வண்டிபோல நடுநடுவே நிறுத்திவிட்டுத் தொடர்கிறேன்.  எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படிக்க வில்லை. ஏ.கே.செட்டியார் முழுத் தொகுப்பு, கல்க...

இரண்டாம் அலை - சில கேள்விகள், சில பதில்கள்.

 இரண்டாம் அலை - சில கேள்விகள், சில பதில்கள்.  ஏப்ரல் முதல் வாரம் திருச்சிக்குச் சென்றிருந்தேன். நாகரமே முகக்கவசம் இல்லாமல்  “என்ன கொரோனாவா அப்படினா என்ன ?” என்று சுற்றிக்கொண்டு இருந்தது. முகக்கவசம் அணிந்தவர்கள் வெளியூர் தேசாந்திரிகள் என்று சுலபமான அடையாளம் எங்கள் மீது விழுந்தது.  திருவரங்கம் கோயிலுக்குள் முகக்கவசம் அணிந்துகொண்டு வரும் பக்தர்கள் உள்ளே சென்ற பிறகு அதை இடுப்பில் சுருக்குப்பை போலச் சொருகிக் கொள்கிறார்கள்.   தற்போது கோவிட் இரண்டாம் அலையில் சொந்தங்கள், நண்பர்கள் எனத் தினமும் யாராவது அதில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதைப் பார்க்கும் போது பயமும் சோகமும் ஒன்றாக சேர்கிறது. விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தினாலும் அதை மக்கள் சரியாக கடைப்பிடிப்பதில்லை  முழு ஊரடங்குக்கு முதல் நாள் திருச்சி மலைக்கோட்டை கீழே உள்ள கூட்டத்தின் படத்தைப் பார்க்கும் போது மே மாதமே தீபாவளி  போல இருக்கிறது! உச்சிப்பிள்ளையார் தான் காப்பாற்ற வேண்டும். விழிப்புணர்வு கேள்வி பதிலாக  தருகிறேன். படித்துவிட்டு மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.  இது என்ன இரண்டாம் அலை ?  போன வர...

ஆசார டயட்

ஆசாரமாக இருந்தாலே பல வியாதிகள் நம்மை அண்டாது. ஆசாரம் இருப்பது ஏதோ ஐயர், ஐயங்கார் சமாச்சாரம் என்று ஒதுக்கிவிடுகிறோம். கல்கி கட்டுரையைப் படித்துவிட்டு பலர் ”என்ன டயட் சார்?”  என்று கேட்கிறார்கள். டயட் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முடிந்தவரை ஆசாரமாக இருப்பதும். ஆசாரமாக இருந்தால் உடல், மனம் அழுக்காகாமல் இருக்கும். ஏகாதசி அன்று முக்கியமான கோயிலின் முக்கியமான அர்ச்சகர் வெஜிடபுள் பிரியாணி பச்சை வெங்காய பச்சடியுடன்சாப்பிடுவதை பார்த்தேன். அதே போல யாத்திரையில் குடுமி வைத்த வைதீகர் முட்டை ஆம்லட் போடும் கடையில் காலில் செருப்புடன் டீ போட்டுக்கொண்டு இருந்தவருடன் டீ வாங்கிக் குடித்தார்,  தன் மடியான வெள்ளி டம்பிளரில் !

பீபீ

மற்ற சேனல்களை காட்டிலும் தூர்தர்ஷன் பொதிகையில் சில சமயம் நல்ல நிகழ்ச்சிகள் வருவதுண்டு. இன்று விசாகா ஹரி குருவாயூரப்பன் பற்றி மார்கழி மஹா உற்சவத்தில் உருகிக்கொண்டு இருந்த போது நடுவில் ஒரு விளம்பரம் இடைவேளையின் போது பொதிகைக்கு தாவினேன். வீண் போகவில்லை.  நாதஸ்வரத்தில் சொருகப்பட்டிருக்கும் தக்கைக்கு பெயர் ”பீபீ” என்று இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டு இருந்தேன். அதன் பெயர் சீவாளி. அதை எப்படி செய்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது.  திருவாரூர் பக்கம் வாய்க்காலை கடந்து அங்கே விளைந்திருக்கும் நாணல் செடிகளில் கிட்டதட்ட மெலிதான பிரம்பு மாதிரி செடிகளை எடுத்து வந்து அதை ஒரு மாதம் வெயிலில் காய வைத்து பிறகு வீட்டு பரணில் ஒரு வருடம் போட்டு வைக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு பிறகு அதை எடுத்து வேண்டாத பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் ஊற போட்டு பிறகு சின்ன கரும்பு பிழியும் மிஷின் போன்ற இயந்திரத்தில் பட்டை அடித்து ( நசுக்கி) அவற்றை இருக்கமாக கட்டாக சணல் நூலில் கட்டி, பெரிய அண்டாவில் நெல்லை புழுங்க போட்டு அதில் இந்த கட்டுகளையும் சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். பிறகு அதை எடுத்து பிரித்த...

நீருக்குள் மூழ்கிடும் தாமரை

சிவசமுத்திரம் பெங்களூரிலிருந்து 130 கீமீ தூரத்தில் மாண்டையா மாவட்டதில் இருக்கிறது. கூகிளில் தேடியபோது இரண்டு வழிகள் இருப்பது தெரிந்தது. ஒன்று கனகபுரா மார்கமாகச் செல்லும் வழி. இன்னொன்று மைசூர் நெடுஞ்சாலையில் செல்லும் வழி. சோமநாத்பூர் சென்ற போது கனகபுரா மார்க்கம் ஒரு மார்க்கமாக இருந்ததால், மைசூர் வழியையே தேர்ந்தெடுத்து, வழக்கம்போல காமத் லோகருச்சி ஹோட்டலில் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு சென்றடைந்த போது மதியம் மணி பன்னிரண்டு. சிவசமுத்திரம் பற்றி நிறைய தகவல்கள் கூகிளில் கிடைக்கிறது. அதனால் அதைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. அருவியைப் பார்க்கப் போனபோது கையில் தின்பண்டங்கள் இல்லாத டம்மியாக இருந்தது அங்கிருந்த குரங்குகளுக்கு ஏமாற்றம். அருவியில் தண்ணீர் கம்மியாக வந்துகொண்டிருந்தது எங்களுக்கு ஏமாற்றம். திரும்பிப் போகும்போது மாடு ஒன்று மூச்சா போய்க்கொண்டு இருந்தது. "சிவசமுத்திரத்தைவிட மாடு மூச்சா அதிகமா இருக்கு," என்று குடும்பத்தினர் கமெண்ட்.

எலுமிச்சைச் சாறு கசக்கும்!

'கோர்ட் பிள்ளையார்' என்று அழைக்கப்படும் திருச்சி கோர்ட் பஸ்டாப்பில் இருக்கும் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் போது அங்கே ஒரு வித வாசனை வரும். சுற்றி முற்றும் பார்த்தால் சைடில் கழுத்தளவு காந்தித் தாத்தா நேற்று தான் சுதந்திரம் வாங்கியது போல சிரித்துக்கொண்டு இருப்பார். சரி அங்கிருந்து தான் வாசனை வருகிறது என்று பக்கம் போனால் அந்த வித்தியாசமான மரத்தைப் பார்க்கலாம். மரத்தைச் சுற்றி இருபது அடிக்கு வாசனையாக இருக்கும். என்ன மாதிரி வாசனை என்று விவரிக்க முடியாது. மரத்தின் அடிப்பாகம் முழுவதும் மத்தாப்பு கொள்ளுத்திய பின் வளைந்த கம்பிகள் போல இருக்கும் காம்புகளில் கொத்து கொத்தாக பூக்கள் பூத்திருக்கும். மேலே பார்த்தால் பச்சை இலைகளுக்கு இடையில் அதே மத்தாப்பு கம்பி - நாகலிங்கப்பூ. பூவைப் பாதி பிரித்து பார்த்தால் சின்ன லிங்கம் மாதிரியும் அதற்கு மேலே நாகம் மாதிரியும் இருப்பதே இந்தப் பூவின் பெயர்க் காரணம். ரொம்ப பிரித்தால் நாகம் கையோடு வந்துவிடும். ஆங்கிலத்தில் இந்த மரத்தின் பெயர் கேனன் பால் (Cannon Ball). மரத்தின் காய்கள் உருண்டையாக பீரங்கிக் குண்டுகள் போல இருப்பதால் இந்த பெயர். இந்த குண்டு பழ...

நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்

நான் திருவல்லிக்கேணியில் இருந்த போது, “எல்லா பஸ்ஸும் பூந்தமல்லிக்கு போறது; அங்கதான் திருக்கச்சி நம்பிகள் பிறந்த இடம், ஒரு தரம் சேவிச்சுட்டு வந்துடு” என்று அப்பா சொல்லி பல வருஷங்கள் ஆகிவிட்டன. இந்தப் புத்தாண்டுக்கு அடுத்த நாள்தான் போகமுடிந்தது. யார் இந்தத் திருக்கச்சி நம்பி? ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரையில் நாதமுனிகளுக்கு (1) தனி இடமுண்டு. அவருடைய பேரன் ஆளவந்தார். ஆளவந்தாரின் ஒரு சீடர்தான் நம் திருக்கச்சி நம்பிகள். கிபி 1009 ஆண்டு தோன்றிய திருக்கச்சி நம்பிகள் 55 ஆண்டுகள் வாழ்ந்ததாக குருபரம்பரையில் குறிப்புகள் இருக்கின்றன. அதாவது 2009ஆம் ஆண்டு 1000 வருடம் ஆகிவிட்டது. இராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்போது அவரின் பன்முக ஆளுமை (MULTI FACETED PERSONALITY) வெளிப்படும். நிர்வாகத் திறமை, தயாளு குணம், கருணை, பக்தி… என்று பல ஆசிரியர்களின் குணங்களை அவர் ஒருங்கே பெற்றிருந்தார் என்பதற்கு பல சான்றுகளை நாம் பார்க்கலாம். அவருடைய கருணை குணத்திற்கு திருக்கச்சி நம்பிகள் தான் அவருக்கு முன்மாதிரி(role model) என்றும் சொல்லலாம். பல சமயங்களில் இராமானுஜருக்கு குருவாக மட்டும் இல்லாமல் ஒரு நல்ல நம்பி...

சென்னையில் அட(டை) மழை!

போன வாரம் சென்னைக்கு சென்ற போது “இந்த மழையில் எதுக்கு வந்தீங்க?” என்று அதிர்ச்சியாக கேட்டார்கள். சென்னை சென்ட்ரல் காலை ஏழு மணிக்கு இருட்டிக்கொண்டு மாலை ஏழு மணி போல இருந்தது. அந்த மழையிலும் பிளாட்பாரத்தில் இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார்கள். வழக்கம் போல் சரவண பவனில் காப்பிக்கு க்யூ. மழை எதிர்த்த வீட்டு ஜிம்மி போல் குலைத்துக்கொண்டு இருந்தது. “மழையை பார்த்தீங்கல்ல 180க்கு வருதுனா வாங்க” என்ற ஆட்டோவிடம் பேரம் பேசாமல் ஏறி சில தூரம் சென்றவுடன் தான் தெரிந்தது வெளியே 30 செ.மீட்டர் மழை என்றால் ஆட்டோவுக்குள் 60 செ.மீட்டர் என்று. புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்த பிறகு பழகும் புது பெண்ணை போல எனக்கு மழையுடன் பழக அரை மணி நேரம் ஆனது. முழுக்க நனைந்த பிறகு வீடு வந்து சேர்ந்த பின், கொஞ்ச நேரம் ஜன்னல் வழியே மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருதேன். பிறகு பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து பர்முடா மாதிரி ஆக்கிக்கொண்டு வெளியே கிளம்பினேன். தி.நகர் மேம்பாலத்துக்கு கீழே பலாப்பழம், வேகவைத்த வேர்கடலை, கர்சீப் எல்லாம் பாலித்தின் உதவியுடன் வியாபாரம் செய்துக்கொண்டிருந்தார்கள். இருபது அடிக்கு ஒரு க...

ஆட்டோவில் போன அசோகமித்திரன்

ஆட்டோவில் போன அசோகமித்திரன் சுஜாதாவின் புத்தகங்களை விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருந்த காலத்தில் என் கல்லூரி நண்பன் மார்டின், “‘ராஜாஜி சினிமாவுக்குப் போனார்’ என்ற அசோகமித்திரன் கட்டுரையை படிச்சு பாருங்க தேசிகன், நகைச்சுவையா இருக்கும்,” என்றார். ‘எந்தப் புத்தகத்தில் அந்தக் கட்டுரை இருக்கிறது என்ற கேள்விக்கு மார்டினால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. “கலைஞன் பதிப்பகத்தில் எதோ ஒரு கட்டுரை தொகுப்பு” என்று மட்டும் க்ளூ கொடுத்தார்.  அந்தக் கட்டுரையை எப்படியாவது தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். கல்லூரிப் படிப்பு முடித்துவிட்டு சென்னை வந்த சமயம் அந்தக் கட்டுரையைத் தேட ஆரம்பித்தேன். (அந்தக் காலத்தில் கூகிள் கிடையாது ). கலைஞன் பதிப்பகத்தில் அந்தப் புத்தகத்தைத் தேடி அலைந்து, கடைசியில் கண்ணதாசன் பதிப்பகத்தின் வாசலில் கண்ணதாசன் குடும்பத்தார் செய்யும் செட்டியார் ஸ்பெஷல் உணவு வகைகளை சாப்பிட்டுவிட்டு வந்தேன். சில வருடங்களுக்கு முன்பு கிழக்கு பதிப்பகம் ‘அசோகமித்திரன் கட்டுரைகள்’ முழுத் தொகுதியை கொண்டுவந்த போது அந்தக் கட்டுரைக்காகவே புத்தகத்தை வாங்கி முதலில் அந்தக் கட்டுரையைத் தேட...