மற்ற சேனல்களை காட்டிலும் தூர்தர்ஷன் பொதிகையில் சில சமயம் நல்ல நிகழ்ச்சிகள் வருவதுண்டு. இன்று விசாகா ஹரி குருவாயூரப்பன் பற்றி மார்கழி மஹா உற்சவத்தில் உருகிக்கொண்டு இருந்த போது நடுவில் ஒரு விளம்பரம் இடைவேளையின் போது பொதிகைக்கு தாவினேன். வீண் போகவில்லை.
நாதஸ்வரத்தில் சொருகப்பட்டிருக்கும் தக்கைக்கு பெயர் ”பீபீ” என்று இவ்வளவு நாளாக நினைத்துக்கொண்டு இருந்தேன். அதன் பெயர் சீவாளி. அதை எப்படி செய்கிறார்கள் என்று நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது.
திருவாரூர் பக்கம் வாய்க்காலை கடந்து அங்கே விளைந்திருக்கும் நாணல் செடிகளில் கிட்டதட்ட மெலிதான பிரம்பு மாதிரி செடிகளை எடுத்து வந்து அதை ஒரு மாதம் வெயிலில் காய வைத்து பிறகு வீட்டு பரணில் ஒரு வருடம் போட்டு வைக்கிறார்கள். ஒரு வருடத்துக்கு பிறகு அதை எடுத்து வேண்டாத பகுதிகளை நீக்கிவிட்டு தண்ணீரில் ஊற போட்டு பிறகு சின்ன கரும்பு பிழியும் மிஷின் போன்ற இயந்திரத்தில் பட்டை அடித்து ( நசுக்கி) அவற்றை இருக்கமாக கட்டாக சணல் நூலில் கட்டி, பெரிய அண்டாவில் நெல்லை புழுங்க போட்டு அதில் இந்த கட்டுகளையும் சேர்த்து கொதிக்க வைக்கிறார்கள். பிறகு அதை எடுத்து பிரித்து சோற்று கஞ்சியில் சில நாள் ஊற போட்டு ஓரத்தை ஒழுங்காக வெட்டி அதை ஒரு கயிற்றில் நுழைத்து பக்குவமாக ஒரு கம்பியினால் திரட்டுகிறார்கள். ஒரு சீவாளி திரட்ட ஐந்து நிமிஷம் ஆகிறது.
இந்த மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கும் போது, நமது நாட்டிலேயே டிஸ்கவரி சேனலுக்கு பல விஷயங்கள் இருக்கு என்று தெரிகிறது. அடுத்த முறை நாதஸ்வரத்தில் வரும் இசையும் நாதஸ்வரத்தையும் ரசிக்கலாம். நிகழ்ச்சியை வழங்கிய CP விஜயலக்ஷ்மிக்கு நன்றிகள்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு குருவாயூரப்பனுக்கு நன்றி சொல்லலாம் என்றால் அங்கே மீண்டும் விளம்பரம்.

சுவையான தகவல்... எவ்வளவு மெனக்கெடல்....
ReplyDeleteஇனி நிச்சயம் நாதஸ்வர இசை எங்கு கேட்டாலும் ரசிக்கலாம்...
ஒரு சீவாளி செய்ய எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கிறது....
ReplyDeleteசாதாரணம் ஏதோ நாயனம் வாசிக்கிறார் எனச் சொல்லிவிட்டு கடந்து போவது நிச்சயம் மாறும்.....
பகிர்வுக்கு நன்றி.
அருமையான தகவல்!
ReplyDeleteThanks for sharing
ReplyDelete