பெங்களூரில் வருடா வருடம் ’சித்திர சந்தே’ என்று அழைக்கப்படும் ஓவியக் கண்காட்சி கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் வருடா வருடம் நடத்திவருகிறது. குமர க்ருபா சாலையை முழுவதும் கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்கிறார்கள். சாலை இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருக்க மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் வந்து ரசிக்கிறார்கள். காண கண் கோடி வேண்டும் என்று சொல்லுவது இந்த கண்காட்சிக்கு பொருந்தும். மூன்று மணி நேரம் சாப்பாட்டை மறந்து பல சித்திரங்களை பார்த்துக்கொண்டு, கூடவே பொரி கடலை, குச்சி ஐஸ் சாப்பிட்டது இனிய அனுபவம்.
சின்ன வயது முதல்
ஓவியத்தில் ஆர்வம் கொண்ட எனக்கு இந்த கண்காட்சியை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை, ஆனால் ஒவ்வொரு வருடமும் கண்காட்சி முடிந்த பிறகு மறுநாள் நாளிதழில் வரும் செய்தியை பார்க்கும் போது ‘அடடே’ மிஸ் செய்துவிட்டோம் என்று வருந்துவேன். இந்த வருடம் நினைவு வைத்துக்கொண்டு சென்று வந்தேன். .. எவ்வளவு வண்ணங்கள்...எவ்வளவு எண்ணங்கள் !
அருமையாக இருந்த ஓவியங்கள் சிலவற்றை கவர்ந்துவிடலாம் என்ற ஆசையுடன் விலையை கேட்டேன்
”ஏழாயிரம்” என்றார்
“பக்கத்தில் இருக்கும் படம் ?”
”எண்பதாயிரம்”
”அருமையா இருக்கு” என்று கை குலுக்கிவிட்டு சென்ற போது அவருடைய முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடிந்தது.
சென்னையிலிரிந்து பல ஓவியர்களை பார்க்க முடிந்தது. கும்பகோணம், சேலத்திலிருந்து கூட வந்துள்ளார்கள்.
பல ஓவியங்கள் ஆயில் பெயிண்டிங் என்று நினைத்தேன் ஆனால் கேட்ட போது அவை அக்கரலிக் என்றார்கள். அதில் வரைந்து பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
இந்த வருட சித்திர சந்தையில் எடுத்த புகைப்படங்கள் சிலவற்றை இங்கே தந்திருக்கிறேன்.
|
ஓவியர்களும் படங்களும் |
|
வண்ணங்கள் எண்ணங்கள் |
|
கப்பல் கூட்டம் |
|
கிராமம் |
|
கிருஷ்ணா ! |
|
தொங்கும் ஓவியங்கள் |
|
விலங்குகள் |
|
மகளிர் மட்டும் |
|
உழைக்கும் மக்கள் |
|
யானை |
|
ரயில் |
|
யானையும் மக்களும் |
|
மாடுங்கள் |
|
எப்போதோ பார்த்த காட்சிகள் |
|
கோயில்கள் |
|
இயற்கை |
|
சேரி |
எல்லா படங்களும் கவர்ந்தது என்னை கவர்ந்த மூன்று படங்களை தனியாக இங்கே தந்துள்ளேன்.
சந்தையில் பல ஓவியங்களை பார்த்து மயக்கம் வருகிறதோ இல்லையோ, விண்ட்சர் ஓட்டலுக்கு எதிரே ஒரு மூத்திர சந்தை தாண்டும் போது மயக்கம் வருவது நிச்சயம்.
படங்கள்: சுஜாதா தேசிகன் (c) அதை வரைந்த ஓவியர்கள்.
அருமையான ஓவியங்கள். எல்லா வருடமும் அங்கே இருக்கும் ஓவியங்களின் படங்களை சக பதிவர் ராமலக்ஷ்மி அவர்களின் பதிவுகளில் பார்க்கும்போதெல்லாம் ஒரு பரவசம் உண்டாகும். இவ்வருடம் நீங்கள் முந்திக்கொண்டு விட்டீர்கள்....
ReplyDeleteநல்ல ஓவியங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
தத்ரூபமாக உள்ளன... பகிர்வுக்கு நன்றி..
ReplyDelete