Skip to main content

Posts

Showing posts from July, 2023

பத்ரி சில எண்ணங்கள்

 பத்ரி சில எண்ணங்கள் பத்ரியை எனக்கு ராயர் காபி, தமிழ்.டாட்.காம் என்று அவர் பதிப்பகம் ஆரம்பிக்கும் முன்பே தெரியும். நல்ல நண்பர். பதிப்பகத்தில் எழுத்தாளருக்கு ராயல்டி இவ்வளவு தானா ? என்று ஆச்சரியப்பட்டு கிழக்கு பதிப்பகத்தை ஒரு கார்பரேட் நிறுவனம் போல ஆரம்பித்தார். தமிழ் கூறும் நூல்லுலகம் ஒரு புரட்சியைக் கண்டது. பதிப்பக துறையில் ப.தி.கொ. போட்ட பலருக்கு இது ஒரு நடுக்கத்தைக் கொடுத்தது. தன் பதிப்பக துறை வேறு, தன் சிந்தனை சித்தாந்தம் வேறு என்ற கொள்கையை உடையவர். சூப்பர் மார்கெட் போல எல்லா சரக்கும் கிடைக்கும். புற்றீசல் போல வலைப்பதிவில் எழுதிக்கொண்டு இருந்தவர்கள் கிழக்குப் பக்கம் சென்று ‘எழுத்தாளர்’ என்று ’டாட்டூ’ குத்திக்கொண்டு வந்தார்கள். ஒரு முறை என் நண்பருக்கு வேலை வேண்டும் என்று அவரிடம் கேட்ட போது ‘அதற்கு என்ன’ செய்துவிடலாம் என்றார். அவருடன் பல முறை உரையாடியிருக்கிறேன். மனதில் பட்டதைச் சொல்லிவிடுவார். ஏதாவது சந்தேகம் இருந்தால் அவருடன் பேசினால் தீர்வு கிடைக்கும். ஒரு முறை இவரைப் பற்றி பேச்சு வந்த போது சுஜாதா சொன்ன ஒரே வரியை நான் இன்னும் மறக்கவில்லை. (நல்ல விதமாகத் தான் சொன்னார், ஆனால் அதை பொ