கல்கியில் 1994-95 என்று நினைக்கிறேன், "கிரிமினல்கள் ஜாக்கிரதை" என்ற தொடர் வந்து கொண்டிருந்தது. நான் கல்கியில் விரும்பி படித்த தொடர்களில் இதுவும் ஒன்று. கிட்டத்தட்ட ஒரு கிரைம் கதை போல் வாரவாரம் சஸ்பென்ஸ் வைத்து எழுதப்பட்டது. இதில் வந்த நபர்கள் நமக்கு மிகவும் பரிட்சயமானவர்கள் அதனால் சுவாரசியம் மேலும் கூடுகிறது. குற்றவாளிகளை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடிக்க காவல்துறை பெரிதும் நம்புவது, தடய அறிவியல் துறை என்னும் Forensic science பிரிவைத்தான். சிறியதொரு தலைமுடி, ஒரு சொட்டு ரத்தம், ரேகை, உடைந்த பல் என்று கிடைக்கும் அற்பமான ஆதாரங்களை வைத்துக்கொண்டு, அறிவியல்பூர்வமான ஆய்வுகளை மேற்கொண்டு குற்றவாளிகளைத் துல்லியமாக அடையாளம் காட்டும் இந்திய தடய அறிவியல் நிபுணர்களுள் டாக்டர் .பி. சந்திரசேகரன் மிக முக்கியமானவர். கல்கி வார இதழில் தொடராக வெளியான அவரது இந்த அனுபவக் குறிப்புகள் தற்போது நூல் வடிவில் வந்திருக்கிறது. இதில் தான் காஞ்புரத்தில் முதல் முதலில் சந்தித்த வடகம் பானையில் கானாமல் போன பணம் முதல் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட மொட்டை முருகன் வரை எழுதியிருக்கிறார். புத்தக