Skip to main content

தசாவதாரம் – தி மிஸ்ஸிங் லிங்க்

 உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாடு பலருக்கு தெரிந்திருக்கலாம். லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானிதான் முதன்முதலாக மாற்று சிந்தனையைத் தூண்டினார். ‘‘ஒவ்வொரு வகையான உயிரினமும் திடீர் திடீரென படைக்கப்பட்டன என்பது நம்புகிறமாதிரி இல்லை. அற்ப உயிரியான பாக்டீரியாகூட அப்பா, அம்மா இல்லாமல் பிறக்காது. எல்லா உயிரினங்களின் தலைமுறைகளும் பெருகும் விதம் இதான்! அப்படி பார்க்கப் போனால், மனித இனத்த உருவாக்கிய முதல் அப்பா, அம்மா யார்? ஒவ்வொரு இனத்தின் முதல் தலைமுறை யாராக இருக்கும்? இதை நாம் கண்டறிய வேண்டாமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.இதன்பிறகு பலர் மனதிலும் இதே கேள்வி எழுந்தது....
அடுத்த சில வருஷங்களில் பரிணாமக் கொள்கையை அறிவித்த சார்லஸ் டார்வின், பல்வேறு உயிரினங்களும் தோன்றுவதற்கு ‘இயற்கைத் தேர்வு’தான் ((Natural selection) காரணம் என்றார். அதற்கு அவர் கொடுத்த விளக்கம் எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது!
அது- கடலில் இருக்கும் பாசி, மீன்கள், ஆமைகள், நத்தைகள், காடுகளில் இருக்கும் குரங்கு போன்ற உயிரினங்கள், பறவைகள் என எல்லாமே ஏதோ ஒருவகையில் மனிதர்களுக்கு மூதாதையர்கள் என்றால் எல்லோருக்கும் அதிர்ச்சி வராதா?
அப்படியானால் நாம் அவற்றை என்ன உறவுமுறை சொல்லி அழைப்பது? பாசி... கொள்ளுத் தாத்தா, பூண்டோடு அழிந்துவிட்ட டினோஸர்கள்... எள்ளுத் தாத்தா, குரங்கு... பெரியப்பா, சிம்பன்ஸி வகைகள்... மனிதனின் சித்தப்பா என்றெல்லாம் டார்வின் அடுக்கியபோது பலருக்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், உண்மை அதுதான் என்று காலப் போக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது!
(படம்: பூமியின் உயிர் சுழர்ச்சி)


டார்வினின் தியரி இப்படிப் போகிறது... ‘பூமியின் சூழ்நிலை ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிவிடுகிறது. பூமியில் இருந்த உயிரினங்களும் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறிவந்தன. ஒரு அப்பா, அம்மாவுக்கு பிறக்கும் அடுத்த தலைமுறை உயிரினம் தன அப்பா, அம்மாவின் குணங்கள் கொண்ட நூறு சதவிகித ஜெராக்ஸ் காப்பியாக இல்லாமல், அதன் தாய் & தந்தை சந்தித்த புதிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் விதமாக குணத்திலும் உடல் அமைப்பிலும் மிகமிக நுட்பமான சில மாற்றங் களோடுதான் பிறக்கிறது. கால ஓட்டத்தில் புதிதுபுதிதாக எழும் இயற்கையின் சவால்களைத் தாக்குப் பிடிக்க முடியாத உயிரினங்கள் மடிந்து போகின்றன. அந்த புதிய சவால்களைத் தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் புதிய உயிரினங்கள் உருவாகின்றன. லட்சக்கணக்கான வருஷங்கள்... ஆயிரக்கணக்கான தலைமுறைகள்... ஒவ்வொரு உயிரினமும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில் இருந்தன. ஏதோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு உயிரினத்துக்கு பிறந்த வாரிசு, அதேமாதிரி இல்லாமல் புதிய இனமாக தலை எடுத்தது.
(படம்: முதல் உயிர் நீரிலிருந்து நிலத்திற்கு, நாஸா வெளியிட்ட படம்)பரிணாம வளர்ச்சியும் அப்படித்தான் என்பது டார்வின் கட்சி! காலப்போக்கில், அறிவியல்ரீதியாக இது நிரூபிக்கப்பட்டது. நம் உடலில் இருக்கும் அதே போன்ற மரபணுக்கள்தான் பாக்டீரியா, பாசிகள், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் என எல்லாவற்றின் உடம்பிலும் இருக்கின்றன. ‘அப்படின்னா எல்லாரும் பங்காளிங்கதான். முதன்முதலாக ஆழ்கடலில் எட்டிப்பார்த்த நீலப்பச்சைப் பாசிதான் நமக்கு மூதாதையர். அது அடுத்தடுத்த தலைமுறைகளை உருவாக்கியது. இப்படித்தான் படிப்படியாக உயிர்கள் தோன்றுவது நிகழ்ந்தது’ என்றார் டார்வின். பாசியிலிருந்து பரிணாம வளர்ச்சியில் முன்னேறிய இந்த இனம் தான் இன்று வலைப்பதிவு எழுதிக்கொண்டிருக்கிறது; பின்னூட்டங்களில் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது.(படம்: நீலப்பச்சைப் பாசி)


சரி சார் சரி, அந்த ஒற்றை நீலப்பச்சைப் பாசியிலிருந்துதான் சகல உயிரினங்களும் தோன்றியதாக வைத்துக் கொள்வோம். அந்த முதல் பாசி எங்கிருந்து வந்தது ?. உயிர்கள் எதுவுமே இல்லாத சூழலில் அதன் வருகை எப்படி நிகழ்ந்தது ? அது எப்படி பெருகியது ? அதிலிருந்து விலங்கினங்கள் எப்படி தோன்றியிருக்கும்?’ என அடுக்கடுக்கான கேள்விகள். எழுந்தது .பல நிபுணர்கள் ஒவ்வொரு தியரியாக சொன்னார்கள் ஆனால், கடைசியில் ஓபாரின் என்ற ரஷ்ய விஞ்ஞானி சொன்னதான் உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. ‘வானத்திலிருந்து வந்த மின்னல், கடலுக்கடியில் சில ரசாயன மாற்றங்களைச் செய்தது. அதன் விளைவாக உயிர்களின் அடிப்படைப் பொருட்களான மூலக்கூறுகள் கிளம்பின. அதிலிருந்துதான் உயிர் தோன்றியது’’ என்றார் அவர்.


பிற்பாடு சிகாகோவைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்டான்லி மில்லர், 1953ஆம் ஆண்டு இந்த தத்துவம் உண்மை என்று நிரூபித்தும் காட்டினார். மூடிய ஒரு குடுவயில் ஆதிக்காலத்தில் கடல் இருந்த சூழ்நிலையை உருவாக்கி, மின்சாரத்தின் மூலம் செயற்கை மின்னல அந்த குடுவைக்குள் ஏற்படுத்தினார். அதன் விளைவாக செயற்கைக் கடலின் அடியில் உயிர் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. கவனிக்கவும்! சூழ்நிலைதான் ஏற்பட்டது! புதிய உயிரே தோன்றிவிடவில்லை. அது மனிதனால் ஆகக்கூடிய காரியமும் இல்லை!.


உலகத்தில் உயிரினங்கள் தோன்றிய மொத்த வரலாற்றையும் சுருக்கி ஒரு வருஷம் என்கிற கற்பனை காலண்டருக்குள் அடைத்தால், பாசி தோன்றியது ஜனவரி முதல் தேதி... மனிதன் தோன்றியது டிசம்பர் முப்பத்தோறாம் தேதி! அதாவது அவன்தான் கடைசிக் குழந்தை | இப்போதுள்ள உயிர்களிலேயே பரிபூரணமான குழந்தை!


உயிரியல் கொள்கையாக விளங்கும் டார்வின் கோட்பாட்டுக்கும் திருமாலின் பத்து அவதாரங்களுக்கும் சம்பந்தம் இருக்கு என்றால் சிரிப்பீர்கள். எளிமையாக சொல்ல முடிகிறதா என்று பார்க்கிறேன்.முதலில் ஒரு செல்லிலிருந்து கடலில் தோன்றிய முதல் உயிரினம் மீன் என்றால் இது மச்சாவதாரம். பிறகு நீரிலும் நிலத்திலும் வாழும் ஆமை, தவளை போன்றவை தோன்றியது - இது கூர்மாவதாரம். அதன் பின் நிலத்தில் மட்டும் வாழும் உயிரனமாக (பன்றி) வராகவதாரம். பின் நான்காவதாக மனிதனுமின்றி, மிருகமுமின்றி நரசிங்காவதாரம். ஐந்தாவதாக ஒரு குள்ளமனிதனாக வாமனாவதாரம். ( இதற்கு பிறகு வருவோம்). ஆறாவதாக, மனிதன் கொஞ்சம் விலங்குகளின் தன்மையுடன் கூடிய பரசுராமாவதாரம். ஏழாவதாக முழுமனிதனாக இராமாவதாரம். எட்டாவதாக குறும்பு செய்யும் மனிதனாக கிருஷ்ணாவதாரம். ஒன்பதாவது விவசாயம் பார்க்கும் மனிதனாக பலராமவதாரம்.


டார்வினுக்கு இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆரம்பத்தில் உயிரனங்கள் தண்ணீரில் தோன்றியது. பிறகு அதே உயிரினம் தண்ணீரிலும் நிலத்திலும் வாழும் தகுதி பெற்றது. அதன் பிறகு நிலத்தில் வாழும் விலங்குகள். அடுத்து படிப்படியாக அந்த விலங்குகள் வளர்ச்சி பெற்று குரங்காகி அதிலிருந்து மனிதன் தோன்றினான். மீனில் ஆரம்பித்து 5-வது அவதாரமாக வருவது வாமன அவதாரம். நான்கு அவதாரங்களை அடுத்து விடுபட்ட இந்த குள்ளமான வாமன அவதாரம்தான் - ''மிஸ்ஸிங் லிங்க்'' என்பது உயிரின வளர்ச்சிப் படிகளில் அடிக்கடி உபயோகிக்கப்படும் ஒரு சொல். குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்று விஞ்ஞானம் ஒப்புக் கொண்டாலும் குரங்குக்கும் மனிதனுக்கும் இடையில் ஏதோ ஒன்று இருக்கிறது. அந்த மிஸ்ஸிங் லிங்க் எதுவென்று விஞ்ஞானிகள் அவ்வப்போது தலையை பிய்த்துக் கொள்கிறார்கள். ஆனால் குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உருவ ஒற்றுமையைப் பார்த்தால் விடுப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.சமீபத்தில் அதுவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றால் நம்புவீர்களா ? ஆம் கடந்த அக்டோபர் மாதம் விஞ்ஞானிகள் குள்ள மனிதனின் எலும்புக்கூடுகளை இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த மனிதனின் உயரம் மூன்று வயது குழந்தையின் உயரம். இவர்கள் மண்டை ஓடுகள் ஒரு சாத்துக்குடி அளவே இருப்பதாக படங்கள் காட்டுகிறது. இந்த மனிதன் 18,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள் கண்டுபிடிக்கபட்ட இடத்தில் கல்லினாலான ஆயுதங்கள், மற்றும் மிருகங்களின் எலும்புகூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இந்த மனிதனுக்கு Hobbit என்று பெயர் வைத்துள்ளார்கள். (Lord of the Rings என்ற படத்தில் வரும் குள்ள மனிதனின் பெயர் )


மிஸ்ஸிங் லிங்க் கிடைத்துவிட்டதா ? கடவுளுக்குத்தான் வெளிச்சம்.
படங்கள் உதவி: NASA
References :
அச்ச ரேகை, தீர்வு ரேகை - டாக்டர் எம்.பி.இராமன், ஜூனியர் விகடன்
இலக்கியத்தியல் அறிவியல் - சிங்கை கிருஷ்ணன்
http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=/c/a/2004/10/28/DWARF.TMP
http://news.nationalgeographic.com/news/2004/10/1027_041027_homo_floresiensis.htmlOld Comments from my previous Blog


மிகவும் அருமையான பதிவு.


By Kannan, at Wed Apr 13, 10:33:11 AM IST  


நல்ல பதிவு, அப்படியே புஷ்பக விமானத்தை முன் வைத்தும் ஏதாவது சொல்லலாமே! அணுவுள் உறையும் சக்தியின் நடனத்தையும், குவாண்டம் மெகானிக்ஸ் பற்றியும் எழுதுங்கள். பயனுள்ளதாய் இருக்கும்.


By ROSAVASANTH, at Wed Apr 13, 10:53:46 AM IST  


நன்றாக எழுதியிருக்கிறீர்கள். இந்த மிஸ்ஸிங் லிங்கின் பகுதியாக விளங்கும் குள்ள மனிதர்கள் பற்றிய ஆராய்ச்சிகள் உலகமெங்கும் நடந்து வருகின்றன. ஆப்ரிக்க காடுகளில், இதுப் போன்ற தொன்ம பழங்குடிகள் இன்னமும் வாழ்ந்து வருவதாக, எப்போதோ நேஷனல் ஜிகிராபிக் சேனலில் பார்த்த ஞாபகம். இதைத் தாண்டி, சில நாட்களுக்கும் முன் நான் படித்த NGC தளத்தின் ஒரு செய்தி, இந்த மொத்த விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று தோன்றுகிறது.


ஜப்பானிய உயிரியல் விஞ்ஞானிகள், ஒரு மெமொத்தின் செல்லினை (ஃபொசலைய்ல்) எடுத்து, ஆராய்ச்சி நிலையத்தில் இப்போதிருக்கும் ஒரு யானையை கொண்டு, மீட்சி செய்ய முயற்சிக்கிறார்கள். ஜுராசிக் பார்க் மாதிரி தெரிந்தாலும் அதுதான் உண்மை பார்க்க


இதைத்தவிர ஏற்கனவே கைமரா பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன். ஒரு எட்டு அதையும் படித்தீர்களேயானால், மிஸ்ஸிங் லிங்க் தெரியுமென்று தோன்றுகிறது


By Narain, at Wed Apr 13, 11:43:03 AM IST  


rosa vasanth, you have forgotten to post the smiley there.i understand your sarcastic comment but desikan and others may not- ravi srinivas


By Anonymous, at Wed Apr 13, 12:14:37 PM IST  


//i understand your sarcastic comment but desikan and others may not- ravi srinivas //
This is a classic case of bloated ego and arrogance that makes Ravi think that other bloggers may not be intelligent enough to understand Rosavasanth's intended sarcasm. Even condemnation will not make such creatures learn and develop. It is simple enough to understand without the smiley.


By SM, at Wed Apr 13, 04:04:35 PM IST  


கடவுள் இல்லை என்று சொல்லும் பரிணாம கொள்கையை வைத்து, உங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்த முயன்றுள்ளீர்கள். எல்லாம் தானா தோன்றியபிறகு அங்கு கடவுளுக்கு என்னையா வேலை? அவதாரத்துக்கும் பரிணாமத்துக்கும் உள்ள வித்தியாசம் கூடவா தெரியவில்லை.


டார்வின் உயிருடன் இல்லையென்பதுதான் உங்களுக்கு சந்தோசம். எப்படிவேண்டுமானாலும் அந்த கொள்கைக்கு விளக்கம் கொடுக்கலாம் அல்லவா. இதுதான்யா அறிவியலாருக்கும் உங்களைப்போன்ற கதாசிரியருக்கும் உள்ள வித்தியாசம்.


By T.N.Neelan, at Wed Apr 13, 05:03:00 PM IST  


Desikan


Sivapuranathil varum pullaagi poodai, puzhuvai.... padikkumbodhum PerumaLin avadhaarangalai patri padikkumbdhum Darwin's theory gnanbagathirkku vandhadhundu.


Am I also right in saying that the Church leaders don't accept Darwin's theory?


By Uma, at Wed Apr 13, 05:15:08 PM IST  


//தி மிஸ்ஸிங் லிங்க்// என்ன "ஐப்பர் லின்க்" டோண்டுக்கு போட்டியா


By ரவியா, at Wed Apr 13, 07:25:51 PM IST  


science fiction நாவல்கள் வந்து பின்னர் அதை நிஜமாக்கும் science வருகிறது அல்லவா?
அது போலதான் இதுவும்.
அதற்காக science fiction நாவல்கள் எல்லாம் science ஆகாது.
Fictionஐ ஓரளவு இரசிக்கலாம். ஆனால் science உடன் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.
அந்த தெளிவு இருந்தால் சரி.


By Anonymous, at Wed Apr 13, 07:25:56 PM IST  


ஒரு வேளை கல்கி அவதாரம் என்பது அந்த காலத்து Alien நாவலாக இருக்குமோ?


By Anonymous, at Wed Apr 13, 07:28:52 PM IST  


//Fictionஐ ஓரளவு இரசிக்கலாம். ஆனால் science உடன் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது.
அந்த தெளிவு இருந்தால் சரி. //


தேசி,யார் இந்த அறிவாளி ? உலகம் உருண்டையாமே ?


By ரவியா, at Wed Apr 13, 07:30:39 PM IST  


அப்போ டார்வின் தியரிப்படி ஒரு நாள் மனிதன் ¸ø¸¢Â¡¸ மாறிடுவான்னு சொல்றீங்க. :)
என்னமோ போங்க.


By Anonymous, at Wed Apr 13, 10:58:05 PM IST  


அப்போ டார்வின் தியரிப்படி ஒரு நாள் மனிதன் கல்கியாக மாறிடுவான்னு சொல்றீங்க. :)
என்னமோ போங்க.


By Anonymous, at Wed Apr 13, 10:58:34 PM IST  


pulavargale... avaiyil sacharavu irukkalam... sandai irrukka koodathu... santhamaga uraiyadungal.


there are few discussions in the blog that surprises me. few people have said that you may give some statement but that has to be scientifically proved.


the definition of science is critical here. if you take the explanation of new facts in ayurveda, homeopathy, or astrology or any science in india they are explained by some theory which can be understood and appreciated by people in those areas. if you ask them to prove their facts and relate it to the so called science which was discovered by americans and europeans in the late 16th century it is tough. our sciences are existing for many many centuries even before those people defined science.


visit http://www-gap.dcs.st-and.ac.uk/~history/Projects/Pearce/Chapters/Ch1.html. the link explain few mathematical concepts of india in terms of current mathematics definition. according to this link may mathematics which european define they INVENTED in 16th century were existing and applied in Asian countries very many years.


By kicha, at Thu Apr 14, 01:38:55 PM IST  


mr.kicha
what this has to do with the blog post.perhaps you are too confused to understand what science is.


By Anonymous, at Thu Apr 14, 03:14:41 PM IST  


நல்ல பதிவு தேசிகன்.
நானும் அந்த தசவதார லிங்க் பற்றி யோசித்திருக்கிறேன். ஆனால் வேதாந்தம் டார்வின் தியரியை மறுக்கிறது.


மீனுக்கும் மனிதனுக்கும் மரபணு தொடர்பு இருக்கிறதா? இல்லை என்றே நினைக்கிறேன்.


பரிணாம வளர்ச்சியில் கடைசி பாதி (குரங்கு -மனிதன்) உண்மையாக இருக்கலாம், அதற்கு மேல் மற்றவையெல்லாம் கற்பனை என நினைக்கிறேன்.


By ஜீவா(Jeeva) (#7113738), at Fri Apr 15, 09:08:46 AM IST  


This post has been removed by the author.


By ROSAVASANTH, at Fri Apr 15, 12:28:13 PM IST  


கிச்சா, சுட்டிக்கு நன்றி. முதல் மூன்று அத்தியாயங்களை படித்தேன். படித்தவரை தேசிகன் அளித்த லிங்கைவிட சற்று கறாரான தளத்தில் கட்டுரை செல்கிறது. (ஜெயலலிதாவைவிட கலைஞர் குறைவாகத்தான் ஊழல் செய்தார் என்பதுபோல்.) இது ஒரு ஆராய்ச்சி கட்டுரையாக (அது குறித்த விவரங்களை அறிய முயலவில்லை) ஜல்லியடிக்க பட்டிருப்பது சுவாரசியமாய் இருக்கிறது. இது போல் இன்னும் முக்கிய ஜல்லிகளை படித்திருக்கிறேன். உதாரணமாய் இந்தியாவிலிருந்து 'கணித்' என்ற பெயரில் ஒரு கணித இதழை பார்க்க நேர்ந்தது, இன்றய குவாண்டம் மெகானிக்ஸிற்கு தேவையான கணித சமாச்சாரங்கள் வேதங்களில் இருப்பதாக கட்டுரை செல்கிறது. கட்டுரையை ஆழமாய் படித்தால் மீண்டும் தேசிகனின் பதிவின் தரத்திலேயே அதுவும் இருக்கிறது. இப்படித்தான் சமஸ்கிருதம் செயற்க்கை அறிவிற்கான மொழி என்று சொல்லி ஒரு கட்டுரை artificial intelligence குறித்த ஒரு இதழிலேயே ஜல்லியடிக்கப் பட்டிருக்கிறது. கூர்ந்து படித்தால் இதே போன்ற புளுகு. இது குறித்து நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதனால் உங்களுக்கு பிடித்த அறிவியல் கணித சமாச்சாரம் ஏதாவது சொல்லுங்கள். நம் தமிழர் மரபை போற்றும் வகையில் சங்க இலக்கியத்தில் அதை கண்டுபிடிப்போம். என்ன தேடுகிறோம் என்று தெளிவாய் இருந்தால் கண்டுபிடிப்பது கடினமே அல்ல. கோக் பெப்ஸி கூட அகப்படும். உண்மையிலேயே இது குறித்து (ஜல்லி அடிக்காமல்) தீவிரமாய் பேச விரும்பினால் தெரிவிக்கவும். பிறகு முயற்சிக்கிறேன்!


By ROSAVASANTH, at Fri Apr 15, 05:26:01 PM IST  


இன்னும் ஒரு மிஸ்ஸிங்லிங்கும் கண்டுபிடிசாசு....கடைசி அவதாரமான கல்கி யாருனும் தெரிஞ்சுபோச்சு...
இங்கே போய் பாருங்க......


http://nihalvu.blogspot.com/2005/04/4.html


இதன் மூலமா இந்து முஸ்லிம் ஒற்றுமை வந்தா சந்தோஷம்தானே.......


By ஸ்ரீதர் சிவராமன், at Fri Apr 15, 05:44:14 PM IST  


அப்ப முகமது உலகை அழிக்க அவதாரம் எடுத்தாரா? இது என்ன வஞ்சப் புகழ்ச்சி!


By ROSAVASANTH, at Fri Apr 15, 05:55:13 PM IST  


பைபிலில் வரும் armagaddon கூட கல்கி வரவு தானுங்க.


By Anonymous, at Fri Apr 15, 07:27:46 PM IST  


"டார்வினுக்கு இந்து மதத்தில் உள்ள 10 அவதாரங்களைத் தெரிய வாய்ப்பு இல்லை. "


http://www.aboutdarwin.com/literature/Pre_Dar.html


இதையும் கொஞ்சம் பாருங்க.
Around 520 BC - Anaximander
The Greek philosopher, Anaximander of Miletus, wrote a text called "On Nature" in which he introduced
an idea of evolution, stating that life started as slime in the oceans and eventually moved to drier places.
He also brought up the idea that species evolved over time.


By Anonymous, at Fri Apr 15, 07:54:46 PM IST  


i) Vishnu Purana. This is one of the most important of all the Puranas. This contains the five technical divisions of the Puranas. This is divided into six adisas. This deals with the events of Varahakalpa and contains twenty-three thousand slokas. The theme is the ten incarnations of MahaVishnu. Vishnu Purana is the most ancient of all the Puranas and has got the name Puranaratna (gem of Puranas).


The method of narration is in the form of teaching his disciple Maitreya by sage Parasara. Since there is a reference in it to the Maurya dynasty it is to be surmised that this was composed in the first or second century A.D.


By Anonymous, at Fri Apr 15, 08:00:52 PM IST  


புத்தர் கூட விஷ்னு அவதாரமாமே...
[இப்படி சொல்லி தானே புத்தவிகாரை ஆக்ரமிச்சீங்க]
யாரைத்தான்யா விட்டுவைப்பீங்க..
மத்தவங்க அவதாரம்லாம் இருக்கட்டும்.
'வெட்கம் கெட்ட' அவதாரம்னா அது இப்படியெல்லாம் புழுகும் நீங்கதான்யா!


By Anonymous, at Fri Apr 15, 10:39:31 PM IST  


நல்லா உத்து படிங்கய்யா. கிரேக்கத்துல கிருஸ்து பிறப்பதற்கு 400 வருடங்கள் முன்னாடி ஒருத்தர்
உருவாக்கின் தியரியை 500-600 வருசம் கழிச்சு விஷ்ணுபுராணத்தில போட்டுருக்காங்க.


டார்வின் விஷ்னுபுராணத்த படிச்சாரோ இல்லையோ கிரேக்க தத்துவங்கள படிச்சிருக்கலாம்.


அறிவியல் தெரிஞ்சவங்க என்ன செய்வாங்க? தியரியை நிரூபிக்க ஆதாரத்த தேடுவாங்க.
நம்ம ஊர்ல என்ன செஞ்சாங்க?
அதையே கடவுளாக்கி ஆதார்மில்லாமலே உண்மையாக்கிட்டாங்க. அங்கதான் கொஞ்சமா இடிக்குது.


By Anonymous, at Fri Apr 15, 11:29:45 PM IST  


"அதையே கடவுளாக்கி ஆதார்மில்லாமலே உண்மையாக்கிட்டாங்க. "


அது மட்டுமா செய்தார்கள். அந்த அவதாரங்களுக்கு கோபிகாச்த்ரீகளும் கொடுத்து அவர்களுடன்
ஆட்டம் போட வைத்து, இன்னும் அறிவியல் எப்படி எப்படியோ போகுதுங்க.


By Anonymous, at Fri Apr 15, 11:44:14 PM IST  


I have also come acroos these concepts in Vishnu purana.There are very detailed accounts of how the univese was formed ( it says first it was in the form of a bubble which is similar to the big bang theory). A careful and deep study will reveal that these are not "kattukathai" . Unfortunately people pick up stories randomly and start commenting on them.These stories are just to simplify the truth.


Unfortunately, we dwell on these stories too much and never tried to figure out the truth.


May be it is out of the topic, but has anyone come across the concepts of chakras(energy centers) in the body and how each of them corresponds to the endocrine glands (adrenal, pieneal etc)?


REference to these are found in all puranas and patanjali's yoga sutra. A very accurate knowledge of the human body and body-mind connection was derived much before modern science discovered them. This is espeacially one area where similarity between science and our scriptures is seen clearly.


By Anonymous, at Sat Apr 16, 02:20:48 AM IST  


கீழ்கண்ட பி.பி.சி. செய்தியை படியுங்கள்.


http://www.bbc.co.uk/tamil/highlights/story/2005/02/050222_science.shtml
//சூடுபிடிக்கும் செவ்வாய் விவாதம்


பிரபஞ்சத்தை விடுத்து நம்முடைய சூரிய மண்டலத்துக்கு வந்தால் அங்கும் செவ்வாய்க்கிரகம் ஒரு பெரும் புதிராகத்தான் தெரிகிறது.


குறிப்பாக அங்கு உயிரினங்கள் ஒருகாலத்தில் இருந்திருக்குமா என்ற கேள்விக்குப் பதில் இன்னும் கிட்டிய பாடில்லை. அண்மையில் செவ்வாய்க்கிரகம் வரை சென்றிருக்கும் ஐரோப்பிய விண்கலம் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை ஆராய சென்ற வாரம் கூட, விஞ்ஞானிகள் கூடினார்கள்.


இவர்களில் ஒருவர் இத்தாலிய விஞ்ஞானி விட்டோரியோ போர்மிசானோ. செவ்வாய்க்கிரகத்தில் மீதேன் வாயு அதிகமாக முன்பு இருந்து அது பார்மால்டிஹைட் வாயுவாக மாறியிருக்கலாம் என்பது இவர் கருத்து.


இதை அடுத்து, செவ்வாய்க்கிரகம் பற்றிய விவாதம் சூடுபிடித்திருக்கின்றது.


அந்தப்புதிர் விடுபடும்போதுதான் பூமியில் உயிரினங்கள் தோன்றியது எப்படி என்ற புதிரும் விடுபடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.//


இதுவரை புதிராக உள்ள விஷயத்தைதான் நிரூபிக்கப்பட்டது என்று எழுதுகிறார்.


அப்படியே இந்துமதத்தில் அறிவியலுக்கு ஒற்றுப்போகிற விஷயங்கள் ஒன்று இரண்டு இருக்கலாம். குருவி உட்கார பன்னம்பழம் விழுந்த கதைதான். ஆனால் கதைகளும் கப்சாக்களும் ஆயிரக்கணக்கில் இருக்கிறது என்பதை மறுக்கவேண்டாம்.


By T.N.Neelan, at Sat Apr 16, 02:25:11 PM IST  


see my response in
http://ravisrinivas.blogspot.com/2005/04/blog-post_111373480404206669.html


By ravi srinivas, at Sun Apr 17, 04:19:24 PM IST  


//அது மீன் இனத்தின் தோற்றத்தினையோ அல்லது ஆமை இனத்தின் தோற்றத்தினையோ நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டதல்ல. அவதாரம் என்பது எம் பெருமானின் லீலை , அவதாரம் பல வழிகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்தக்கூடும் என்பதற்கு ஒரு உதாரணம்.//
கவனிக்கப்படவேண்டியது. தேசிகனின் பதிவு மட்டையடியாய் கூட இல்லை. பொறுமையோடு எழுதியதற்கு நன்றி.


இதே போன்று ஓரிரு வருடங்களுக்கு முன் வெங்கட் எழுதியிருந்தார், தேசிகனின் கருத்து போன்றே எழுதியிருந்தாலும், சந்தேகத்திற்குரிய கோ-இன்ஸிடன்ஸ் என்ற அளவில்தான் எழுதியிருந்தார்.
"இணைப்பு-முயற்சியில் " அவர் இறங்கியதாக எனக்கு நினைவில்லை[தவறாய் இருக்கலாம்.]. 'அவதாரம்' என்று அவர் ப்ளக்கில் தேடினால் கிடைக்கலாம்.


இவர்களைப்பற்றி[[வெஙட்டைக் குறிக்கவில்லை] "என்னத்த சொல்ல ", என்றுதான் அலுத்துக்கொள்ளவேண்டியுள்ளது.
பதிவுக்கு நன்றி. உயிர்மையில் எழுதியது இணையத்தில் இருந்தால் வாசித்து என் கருத்தை சொல்வேன். மெனெக்கெட வேண்டியதில்லை.


By karthikramas, at Sun Apr 17, 10:38:42 PM IST  


"கப்சாவதாரம்" - த ரப்பர் லிங்க்


By Anonymous, at Mon Apr 18, 07:20:01 PM IST  


Dear desikan: Superb article.It may have raised a lot of dust but then that is the way "Truth" or rather the "ultimate Truth" can be found out.It is true from the limited perspective of "science" as we know and call it,the unicellular 'protozozoan' multiplied itself but what about the plants?What about the transformations in Inanimate objects?
I differ on one thing though.
The final word has not yet been said by anybody.Man is not the final and perfect end product.
Only"Time" can give the answers.
The exixtance of a "Primordial" force has never been proved wrong.
All the best


By kichami, at Tue Apr 19, 07:46:20 PM IST  


அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!...


By Sriks, at Tue Apr 26, 08:29:10 PM IST  


மிக நல்ல பதிவு தேசிகன். சுவாரஷ்யமாகவும் எழுதியிருக்கின்றீர்கள். அதுசரி இறக்கும் போது உயிர் அல்லது ஆவி என்று ஒன்ற உடம்பிலிருந்து கிளம்பி அலையுமே அது எப்படி உருவானது?


By கறுப்பி, at Tue Apr 26, 09:04:36 PM IST  


பரிணாமக்கோட்பாட்டில் எனக்கு எழுந்த ஒரு கேள்வியை எனது பிளாக்கில் எழுப்பியுள்ளேன். பதில் வேண்டுகிறேன். எனது உரல்:
dharumi.blogspot.com
நன்றி...


By Dharumi, at Thu Apr 28, 10:51:45 PM IST  


This post has been removed by the author.


By Dharumi, at Thu Apr 28, 10:51:47 PM IST  


Great post desikan.
The darwin theory is always a touchy topic.The christians fight over it too?.In US there is a fish symbol which can be seen on many cars.I used to wonder what it was.I got an answer when i asked on eof my american friend.There are 2 types of fish symbols the plain one and one which has legs.belonging to people who beleive in christ as the creator and the other beleiving in darwin theory.


check out this link.
http://www.asa3.org/ASA/topics/Youth%20Page/FishWars1.html


I never knew about the view of the dasavatharam.It is intresting, even if we take that hinduisn acquired it from greek.It is amazing that how hinduism can convert these great concepts into beautiful stories and give a face to it.


By senthil, at Tue May 03, 03:15:38 AM IST  


ஏன் பரிமாணக்கொள்கை பற்றி நீங்கள் எழுதியதைவிடவும், 'அவதார' விஷயம் இவ்வளவு 'இடத்தை' எடுத்துக்கொண்டது?
நீங்கள் எவ்வளவு சீரியசாக அவதாரக்கதையை எடுத்துக்கொண்டீர்களோ, எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப்பொறுத்தவரை மதங்கள் எல்லாமே மனிதனின் மிகச்சிறந்த படைப்புகள். அந்த படைப்புகளில், புனையப்பட்ட செய்திகளில் இது போன்ற பழங்கற்பனைகள் எப்படி இன்றைய விஞ்ஞானக்கண்டுபிடிப்புகளுக்கு ஒட்டி புனையப்பட்டுள்ளன என்று ஆச்சரியப்படலாம்; அதிசயப்படலாம். நம் முன்னோர்களின் Sci-Fi மூளையை வியக்கலாம்.அவ்வளவே.


By Dharumi, at Tue May 03, 11:59:06 PM IST  


ஏன் பரிமாணக்கொள்கை பற்றி நீங்கள் எழுதியதைவிடவும், 'அவதார' விஷயம் இவ்வளவு 'இடத்தை' எடுத்துக்கொண்டது?
நீங்கள் எவ்வளவு சீரியசாக அவதாரக்கதையை எடுத்துக்கொண்டீர்களோ, எனக்குத் தெரியாது. ஆனால் என்னைப்பொறுத்தவரை மதங்கள் எல்லாமே மனிதனின் மிகச்சிறந்த படைப்புகள். அந்த படைப்புகளில், புனையப்பட்ட செய்திகளில் இது போன்ற பழங்கற்பனைகள் எப்படி இன்றைய விஞ்ஞானக்கண்டுபிடிப்புகளுக்கு ஒட்டி புனையப்பட்டுள்ளன என்று ஆச்சரியப்படலாம்; அதிசயப்படலாம். நம் முன்னோர்களின் Sci-Fi மூளையை வியக்கலாம்.அவ்வளவே.


By Dharumi, at Tue May 03, 11:59:08 PM IST  


 

Comments