Skip to main content

ஆஸ்ட்ரிக்ஸ்

Image hosted by Photobucket.comதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் பிளாகில் அந்த கமெண்டை பார்த்தான். கிளிக் செய்து அவன் அதை படிக்க ஆரம்பித்தான். அதனுள் இருந்த அனாமதேய வேதாளத்தின் கமெண்ட் சிரித்துக்கொண்டே "பிளாக் எழுதும் உன்னுடைய லட்சியத்தை பாராட்டிகிறேன்!, அதற்கு நீ எடுத்துக்கொள்ளும் முயற்சிகளை மெச்சுகிறேன். ஆனால் உன்னுடைய கடும் முயற்சிகளால் உனக்கு இதுவரை எதாவது பலன் கிடைத்துள்ளதா என்று யோசித்துப்பார். நீ வீணாக ஏன் இவ்வாறு சிரமப்படுகிறாய்? மிஞ்சி போனால் வாத்தியார் சொல்லும் 15 நிமிடப் புகழ் அல்லது தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரத்துக்கு ஏன் எவ்வளவு கஷ்டப்படுகிறாய். தமிழ் வலைப்பதிவுக்கு என்று ஒரு அகராதி இருக்கிறது அதிலிருந்து கொஞ்சம் வேளியே வந்து இதுவரை யாரும் எழுதாத தலைப்புக்களை எழுத முடியுமா ? கண்டிப்பாக - சுஜாதா, சுனாமி, சாமி, மாமி, பெரியார், பெரியவாள், இலக்கியம்... போன்ற வார்த்தைகள் வர கூடாது. இதை தவிர உன்னால் வேறு ஏதாவது எழுத முடியுமா ?" என்றது.


முயற்சி செய்து பார்க்கிறேன் என்று கூறிய விக்கிரமாதித்தன் முதல் தலைப்பாக அஸ்ட்ரிக்ஸ் பற்றி எழுத ஆரம்பித்தான்.
ஆஸ்ட்ரிக்ஸ் ( Asterix )


Image hosted by Photobucket.comஆஸ்ட்ரிக்ஸை நான் எட்டாவதில் முதன்முதலில் படித்தேன். பக்கத்து வீட்டு நண்பன் அதை வைத்து படித்துக்கொண்டிருப்பான். முதல் வாசிப்பில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தொடர்ந்து வாசித்ததில் பிடித்து போய்விட்டது. அன்று முதல் இன்று வரை எல்லா ஆஸ்டரிக்ஸ் புத்தகத்தையும் படித்து முடித்துவிட்டேன்.


அஸ்டரிக்ஸை உருவாக்கியவர்கள் இருவர் - எழுத்தாளர் René Goscinny (1926-1977) மற்றும் ஓவியர் Albert Uderzo (1927). அவர்களை பற்றி ஒரு சின்ன முன்னுரை...


 Image hosted by Photobucket.comRené Goscinny (1926-1977). காஸினி பாரிஸில் பிறந்தவர். 17 வயதில் அவர் தந்தை இறந்து போனதால் வேலை தேட வேண்டிய சூழ்நிலை. ஒரு உதவி கணக்கெழுதுபவராக பணியில் சேர்ந்தார். 1945 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த்தார். அதன்பிறகு ஒரு ஆர்ட் ஸ்டுடியோவில் வேலைக்குச் சென்றார். அங்கு ஓவியர்கள் Harvey Kurtzman, Will Elder & John Severin சந்தித்தார் ( இவர்கள் தான் பிற்பாடு MAD பத்திரிக்கை ஆரம்பித்தவர்கள் ). பிறகு பெல்ஜியம் ஓவியர்கள் JiJளூ and Morris சந்தித்தார் ( Morris பிற்பாடு Lucky Luke காமிக்ஸ் ஆரம்பித்தவர்). மோரிஸ் காஸினியை தன் காமிக்ஸ¤க்கு கதை வசனம் எழுதும் வேலையில் சேர்ந்தார். ஆனால் ஓவியம் வரையவும் அவருக்கு விருப்பமிருந்தது. Dick Dicks என்ற கதாபாத்திரத்தை வடிவமைத்தார். ஓவியத்தைவிட அவர் ந்கைச்சுவையாக வசனம் எழுதுவதில் சிறந்து விளங்கினார். பிறகு 1951ல் ஐரோப்பா திரும்பினார். World Pressல் ஆல்பர்ட் உடர்ஸொவை முதன்முதலில் சந்தித்தார். 1959ல் காஸினி, உடர்ஸொ மற்றும் ஜீன் மைக்கில் சார்லியர் Pilote என்ற புதிய காமிக்ஸை நிறுவினர். அது மிகுந்த வெற்றியாக அவர்களுக்கு அமைந்தது. காஸினி தான் கடைசிகாலம் வரை தலைமை ஆசிரியாராக இருந்தார். பல நல்ல நகைச்சுவை கதைகளை தந்தார்.


Image hosted by Photobucket.comAlbert Uderzo (1927). ஓவியர் ஆல்பர்ட் உடர்ஸொ 1927 ஆம் ஆண்டு பிரான்ஸில் Fismes என்ற இடத்தில் பிறந்தவர். பிறக்கும் போது அவருக்கு இரண்டு கைகளிலும் ஆறு விரல்கள் இருந்தது. பதின்நான்கு ஆண்டுகள் கழித்து, அவருடைய ஓவியம் பிரசுரம் ஆனது. அப்போது அவருக்கு இரண்டு கைகளிலும் 5 விரல்கள்தான் இருந்தது. அவரை Edmond Calvo என்ற பிரசித்தி பெற்ற ஓவியர் ஊக்கம் அளித்தார். 1945ல் உடர்ஸொ ஒரு அசிஸ்டண்ட் என்ஜினியராக பணிபுரிந்தார். பிறகு அனிமேஷன் தொழிலில் ஈடுப்பாடார். அது அவருக்கு அவ்வளவு திருப்த்தி தருவதாக இல்லை. தன் 19 வயசில் பத்திரிக்கைக்கு தொழிலுக்கு வந்தார். 1950ல் Jean-Michel Charlier & Renளூ Goscinnyயை சந்த்தித்தார். 1959ல் ஆஸ்ட்ரிக்ஸ் வெளிவந்தது.


29 அக்டடீபர் 1959 ஆம் ஆண்டு Pilote என்ற புத்தகத்தில் தொடராக வந்த கதையை 1961 ஆம் ஆண்டு புத்தகமாக வந்தது. இப்புத்தகம் 6000 பிரதிகள் அச்சிடப்பட்டது. 1965ஆம் ஆண்டு "Asterix and Cleopatra" என்ற புத்தகம் பெரும் சாதனை படைத்தது. இப்புத்தகம் 1967 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 1,000,000 பிரதிகளை தாண்டியது. Goscinny வசனம் எழுத uderzo அதற்கு படம் வரைந்தார். 1977 ஆம் ஆண்டு காஸினி காலமான பின் உடர்ஸொ இரண்டயும் தொடர்ந்தார்.


 Image hosted by Photobucket.comஆஸ்ட்ரிக்ஸ் வாழ்வது கிமு 50. ஒரு சிறிய கிராமம். தற்போதய பிரட்டனி. இக்கிராமத்தில் வசிப்பவர்கள் ஒருவிதமான பானத்தை (கரைசலை) குடித்து சூப்பர் மேன் போல் சண்டை போடுவார்கள். ரோமாபுரி படைகளை அடித்து விரட்டுவார்கள்.


ஜூலியஸ் சீஸர் இந்த கிராமத்தை மட்டும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இதில் வரும் எல்லா கதைகளுமே எப்படி இவர்கள் ஜூலியஸ் சீஸரின் படைகளை எள்ளிநகையாடுகிறார்கள் என்ற அடிப்படை கருவை கொண்டவை. அதில் அலுக்காமல் இருப்பது அதில் உள்ள கதை அமைப்பு.


இதில் ஆஸ்டரிக்ஸ் தான் எப்போதும் கதாநாயகன். கொஞ்சம் குள்ளமானவன் ஆனால் தந்திரமிக்கவன். இவனுக்கு ஒப்ளிக்ஸ் என்ற குண்டு நண்பன், அவனுடைய நாய் டாக்மேட்டிக்ஸ் அபஸ்சுரத்தில் பாடும் பாணன் கோக்கோ·போனிக்ஸ். இவர்களுடைய குரு காட்ட·பிக்ஸ் இப்படி பல பாத்திரங்கள் உண்டு.


ஒரு மொழியிலிருந்து இன்னோரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது அதில் உள்ள சிலேடையை கொண்டுவருவது மிகவும் கஷ்டமான காரியம். ஆஸ்ட்ரிக்ஸை ஃபிரெஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்தில் Anthea Bell மற்றும் Derek Hockridge மிகவும் அற்புதமாக மொழிபெயர்துள்ளார்கள். சிலசமயம் மூலத்தைவிட அழகாக!. உதாரணத்திற்கு ஃபிரென்ச்சில் Ordralfabétix (அழுகின மீன் விற்பவர்) என்பது ஆங்கிலத்தில் "Unhygie-nix" என்று சுவையாக மொழிபெயர்த்துள்ளார். அதேபோல் "Panoramix" (ஒருவித பானத்தை தாயாரிப்பவர்) என்பது ஆங்கிலத்தில் "Getafix" (Get-a-fix). "Assurancetourix" என்ற பாடகன் "Cacofonix" ஆகிறான். இன்னும் புத்திசாலியான மொழியாக்கம் "Idéfix" (அதாவது Fixed Idea - கொள்கை பிடிவாதம்? ) என்பதை Dogmatix ( Dogma - Fixed Idea) என்று மொழிபெயர்த்து அந்த நாய் கதாப்பாத்திரத்திரத்துக்கு Dog என்ற பொருள் வரும்படி அழகாக மொழிபெயர்துள்ளார்கள்.


இப்புத்தகத்தின் வெற்றி இது பல வயதினருக்கும் ஏற்றதாக எழுதப்பட்டுள்ளதுதான். நான் சிறு வயதில் படித்ததில் இது ஒரு folk tale போல் இருந்தது. காலேஜில் படிக்கும் போது அதில் உள்ள பல நகைச்சுவை புரிந்தது. தற்போது படிக்கும் போது அதில் உள்ள சிலேடை(pun) உத்திகள், கிண்டல், அல்யூஷன்(indirect meaning) போன்றவை புரிகிறது. போன மாதம் படிக்கும் போது அதில் பல பிரபலானவர்களின் கேலிசித்திரங்கள் என்னை வியப்படைய செய்தன.


Image hosted by Photobucket.com
பிற்பாடு வந்த புத்தகங்களில் பல 20ஆம் நூற்றாண்டுகளில் உள்ளவர்களின் கேலிசித்திரங்கள் பல வந்துள்ளது. Asterix and the Black Gold என்ற புத்தகத்தில் ரோமாபுரி உளவாளியாக ஒருவர் ஜேம்ஸ் பாண்ட் (Sean Connery-James Bond) போல் தோற்றம்
அளிப்பார்.


 


Image hosted by Photobucket.comObelix and Co என்ற புத்தகத்தில் சிப்பாய்கள் Stan Laurel and Oliver Hardy போல்
இருப்பார்கள்.


 


Image hosted by Photobucket.comAsterix in Britain என்ற புத்தகத்தில் நான்கு பேர் Beatles இசைகுழுவில் இருப்பவர்கள் போல் இருப்பார்கள். ஏன் அஸ்ட்ரிக்ஸை வடிவமைத்த இதை வடிவமைத்த காஸினி மற்றும் உடர்ஸொவும் சில இடங்களில் வருகிறார்கள்.


இந்த புத்தகம் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கபட்டுள்ளது. பெங்காலி, ஹிந்தியில் மொழிபெயர்க்க பட்டுள்ளது. தமிழில் ? கிடையாது என்று நினைக்கிறேன்.
தமிழில் யாராவது ஆஸ்ட்ரிக்ஸை கொண்டுவருவார்களா ? என்றது வேதாளம். விக்கிரமாதித்தன் பதில் சொல்லமுடியாமல் முழித்தான்.


[Special thanks to Hans Selles & Hendrik Jan Hoogeboom of http://www.asterix-obelix.nl/ for providing me information and encouraging me to write this article in tamil]
[All images are © R.Goscinny & A.Uderzo]Old Comments from my previous Blog


இந்த வார நட்சத்திரம் நீங்களா? வாங்க, வாங்க! காமிக்ஸ்ல ஆரம்பிச்சு, எதுல முடியற மாதிரி உத்தேசம். வாழ்த்துக்கள்!


By Narain, at Mon Apr 04, 11:16:58 AM IST  


Dear Desikan,


Congrats for getting selected as the STAR of this week, though you are already a SUPERSTAR ;-)


//அதிலிருந்து கொஞ்சம் வேளியே வந்து இதுவரை யாரும் எழுதாத தலைப்புக்களை எழுத முடியுமா ? கண்டிப்பாக - சுஜாதா,
சுனாமி, சாமி, மாமி, பெரியார், பெரியவாள், இலக்கியம்... போன்ற வார்த்தைகள் வர கூடாது. இதை தவிர உன்னால் வேறு ஏதாவது எழுத முடியுமா ?" //


சம்ம நக்கல்யா உமக்கு :-) உங்க வழிகாட்டுதலில் நான் வேண்டுமானால், மேற்கூறிய வார்த்தைகள் வராத ஒரு பதிவு எழுத முயற்சிக்கிறேன்!!! நல்ல பதிவு! இந்த லீவில் என் பெண்ணுக்கு Asterix புத்தகங்களை அறிமுகப்படுத்துகிறேன். நான் என்
கம்பெனியில் சமீபத்தில் செய்த ப்ராஜெக்டுக்கு நான் வைத்த பெயர் ASTERIX! அந்த பெயர் வைத்ததாலோ என்னவோ, ப்ராஜெக்ட் கொஞ்சம் காமெடியாகவே நடந்து, ஒரு வழியாக முடிவடைந்தது :-)


மீண்டும் வாழ்த்துக்கள்!


என்றெ஧றும் அன்புடன்
பாலா


By Anonymous, at Mon Apr 04, 12:21:38 PM IST  


தேசிகன்!


உங்கள் யுக்தி அபாரம். இந்தக் கட்டுரைக்கு மட்டுமா, அல்லது வேதாளம் தொடருமா? 'வாத்தியார்' என்று நீங்க குறிப்பிட்டபடி, அவர் பாணியில் ஆளை மாற்றிவிடுவீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள்


- சந்திரன்


By நாலாவது கண், at Mon Apr 04, 02:59:34 PM IST  


ஆஸ்டரிக்ஸ் மிக நுட்பமாக அமைக்கப்பட்ட ஒரு சித்திரக் கதையாக எனக்கு ஆரம்பம் முதலே தோன்றியது, இன்றைக்கும் கூட முன்னால் கவனிக்காமல் விட்ட எத்தனையோ அம்சங்களை அதில் கண்டுணர முடிகிறது. Inspiringly brilliant.


By மீனாக்ஸ், at Mon Apr 04, 03:41:01 PM IST  


ஆஸ்ட்ரிக்ஸ் கதைகளில் உள்ள கூர்மையான அரசியல் நையாண்டியைத் தமிழில் கொண்டுவருவது என்பது பெரிய சவால்.நையாண்டி பெயர்களிலேயே துவங்கிவிடுவதைப் பார்க்கலாம். DOGMA அதாவதது தத்துவம் டாக்மேட்டிகஸ் ஆகிவிடுகிறது. இரைச்சல்/ கூச்சல் அதாவது Cacophony காக்கபோனிக்ஸ் என்ற பாடகன் ஆகிவிடுகிறது. இப்படிப் பல. அதில் சொல்லப்படும் Magic Potion எனப்படும் அமுதத்தை தமிழ் அமுது என்று வேண்டுமானால் சித்தரிக்கலாம்.


ராஜராஜனை (சோழன்தான்) மையமாக வைத்து இது போல ஒரு படக்கதை செய்யமுடியுமானல் எவ்வளவு நன்றாக இருக்கும்!
மாலன்


By maalan, at Mon Apr 04, 05:34:02 PM IST  


தமிழா!ஏ தமிழா!
ஏணிப்படிகள்
புவியை
ஈர்க்கின்றன


படித்ததில்லை
இது

ரை
ஆங்கில காமிக்ஸ்


படிமங்கள்
என்னை சுவாசிக்கின்றன
இறப்பை வாசிக்கின்றன


இந்த வாரம்
வலை
நட்சத்திரமாக
வந்து
உள்
ளத
ற்கு
மிக்க மகிழ்ச்சி


திரும்பிப்பார்க்கின்றன
நானும்
கவிதையும்


-க்ருபா


பி.கு.: வேதாளம் பின்னூட்டத்துல கவிதை போடக்கூடாதுன்னு கண்டீஷன் போடலயே! அதான் "புதுக்கவிதை"ல வரவேற்பு உரை. இடையிடையில் வரும் இடைச்செருகல்கள் கவிதை டெம்ப்ளேட்டில் அப்படியே இருந்தவை)


By சு. க்ருபா ஷங்கர், at Mon Apr 04, 09:26:53 PM IST  


சென்ற புத்தகக் கண்காட்சியில் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. இணையத்துல ஏதாவது ஒரு புண்ணியவான் கூடவா போட்டு வைக்கலை?


By சு. க்ருபா ஷங்கர், at Tue Apr 05, 12:16:23 AM IST  


அன்பு நண்பர் தேசிகன் அவர்களுக்கு,


வணக்கமும் வாழ்த்துக்களும்... ஆஸ்ட்ரிக்ஸ் புத்தகம் நானும் இன்னும் படிக்கவில்லை. ஆங்கில மின் புத்தகம் எங்கள் முத்தமிழ்மன்ற படிப்பகம் யாகூ குழுவில் ஏற்றி இருக்கிறேன்.


தமிழில் இருக்கிறதா எனத் தெரியவில்லை. எனக்குக் கிடைத்தால் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.


By Moorthi, at Tue Apr 05, 08:42:19 AM IST  


நரேன்,பாலா,சந்திரன்,க்ருபா, மூர்த்தி
வாழ்த்துக்களுக்கு நன்றி.


மாலன்,
உங்கள் வருகைக்கு நன்றி. நான் மொழியாக்கம் பற்றி எழுத உத்தேசித்திருந்தேன். எப்படியோ விட்டுப்போனது.
அது பின்வருமாறு..
ஒரு மொழியிலிருந்து இன்னோரு மொழிக்கு மொழியாக்கம் செய்யும் போது அதில் உள்ள சிலேடையை கொண்டுவருவது மிகவும் கஷ்டமான காரியம். ஆஸ்ட்ரிக்ஸை ஃபிரெஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்தில் Anthea Bell மற்றும் Derek Hockridge மிகவும் அற்புதமாக மொழிபெயர்துள்ளார்கள். சிலசமயம் மூலத்தைவிட அழகாக!. உதாரணத்திற்கு ஃபிரென்ச்சில் Ordralfabétix (அழுகின மீன் விற்பவர்) என்பது ஆங்கிலத்தில் "Unhygie-nix" என்று சுவையாக மொழிபெயர்த்துள்ளார். அதேபோல் "Panoramix" (ஒருவித பானத்தை தாயாரிப்பவர்) என்பது ஆங்கிலத்தில் "Getafix" (Get-a-fix). "Assurancetourix" என்ற பாடகன் "Cacofonix" ஆகிறான். இன்னும் புத்திசாலியான மொழியாக்கம் "Idéfix" (அதாவது Fixed Idea - கொள்கை பிடிவாதம்? ) என்பதை Dogmatix ( Dogma - Fixed Idea) என்று மொழிபெயர்த்து அந்த நாய் கதாப்பாத்திரத்திரத்துக்கு Dog என்ற பொருள் வரும்படி அழகாக மொழிபெயர்துள்ளார்கள்.


Magic Portion என்பதை தமிழ் அமுது என்று கூறலாம் நிச்சியம் திருமாவளவன்/ராமதாஸ் சந்தோஷப்படுவார்கள்.


தற்போது ராஜராஜ சோழனை பற்றி தகவல் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். அதை Will Cuppy சாயலில் எழுத உத்தேசம். எனக்கு உள்ள ஒரே பயம் அதை தமிழர்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்களா என்பதுதான். பார்ப்போம்.


By Desikan, at Tue Apr 05, 09:18:23 AM IST  


Enjoyed this post not just because i love asterix but because it was nice to have someone blogging 'out of the blog'


By Lazy Geek, at Tue Apr 05, 11:50:33 AM IST  


Hello Desikan,
Nice you wrote an article in Tamil, we shall put it on our newspage. I appreciate the effort you put in finding more information about Asterix in Tamil. If your article leads to publishing an album , please let me know.
As you can see on our site I do have a Sinhalese version but the quality of the print is really bad.
Greetings again from cold and rainy Netherlands (12 degrees celsius :-(
Hans Selles


By Hans Selles, at Tue Apr 05, 12:37:40 PM IST  


Dear Hans Selles,


Thanks for including a link to my blog on your news section. Hope we soon get a tamil version of Asterix.


http://www.asterix-obelix.nl/news.htm


- desikan


By Desikan, at Thu Apr 07, 11:09:23 AM IST  


ஆஸ்டெரிக்ஸ் கதை ரோமாபுரிக்காரர்களுக்கு எதிராக எழுதப்பட்டது போன்றத் தோற்றம் இருந்தாலும் அது அமெரிக்கருக்கெதிராகப் பிரெஞ்சுக்காரர்கள் நிலை என்று ஓரிடத்தில் படித்தேன். வைடல் ஸ்டேடிஸ்டிக்ஸுக்கும் இன்னொரு ரோமாபுரி சார்புத் தலைவனுக்கும் இடையில் நடக்கும் சண்டை ஒரு புத்தகத்தில் விவரிக்கப் பட்டது. எதிரித் தலைவன் இருக்கையின் பின்பக்கம் ஒரு பேனர் காண்பிக்கப் பட்டிருக்கும். அதில் Rome sweet Rome என்றுக் குறிப்பிடப்பட்டிருக்கும். நான் கூறுவது பிரெஞ்சு வெர்ஷனில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்


By dondu(#4800161), at Thu Apr 07, 12:58:03 PM IST  


 

Comments