Skip to main content

Posts

Showing posts from April, 2025

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும்

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு வாசிப்பை அழிக்குமா? வளர்க்குமா? என்ற பட்டிமன்றத் தலைப்பு உரையாடலைப் பார்க்க நேர்ந்தது. 'வாசிப்பு’ என்ற வார்த்தையை முதலில் பார்த்துவிடலாம். வாசிப்பது, படிப்பது என்று இரண்டு வகையானது.  ரயிலில் பாக்கெட் நாவலை வாசித்தேன் என்பதற்கும் ‘பகவத்கீதையை’ படித்தேன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒன்று casual reading இன்னொன்று serious reading. முதல் வகைப் பொழுதுபோக்கிற்காகப் படிப்பது. (இன்றைய பல தமிழ்ப் புத்தகங்கள் இந்த வகையைச் சார்ந்தது) அடுத்து ஆழ்ந்த வாசிப்பு வகையைச் சார்ந்தது. ’கம்பனும் ஆழ்வார்களும்’ (ம.பெ.சீனிவாசன்) போன்ற புத்தகங்கள் இதற்கு உதாரணம். இது போன்ற ஆ.வா புத்தகங்களைப் படிக்கும் போது, அவற்றிலிருந்து அதன் உட்பொருளை நம் அறிவாற்றல் மூலம் அறிவது மற்றுமல்லாது, அறிவைப் பெறுவதற்கான வழியும் கூட. இது மனிதனுக்கே மட்டும் உரித்தான செயல். செயற்கை நுண்ணறிவினால் இதைச் செய்ய முடியாது, அல்லது அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆழ்வார் பாடல்களுக்கு உரைகள் பல இருக்க, பலர் என்னிடம் கேட்கும் கேள்...

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர் ( தமிழில் சுஜாதா தேசிகன்)

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர்  ( தமிழில் சுஜாதா தேசிகன்)  ஸ்ரீமத் ராமாயணம் ஓர் இதிகாசம். இதிகாசம் என்றால் ‘அப்படித்தான் இருந்தது’ என்று பொருள். அதனால் ராமர் இருந்தார் என்று நம்பப்படுகிறது இல்லை. ராமர் இருந்தார்.  ஸ்ரீமத் ராமாயணத்தை ஆழ்வார்களும், ஆசாரியார்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் வாக்குக்கு ஏற்றார் போல், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றுக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருமலைக்குச் சென்றார். குலசேகர ஆழ்வார் மொத்த ராமாயணத்தையும் ’இன்தமிழில்’ சுருக்கமாக அருள, ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்ற அற்புதமான ஒன்றை நமக்குச் சமஸ்கிருதத்தில் அருளினார். கம்ப ராமாயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயம். வடக்கே துளசிதாசர் என்ற மஹான் ’ராமசரிதமானஸ்’ (ராமரின் செயல்களால் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள்) என்று ஸ்ரீராமரின் செயல்களைத் தொகுத்து வழங்கினார். இப்படி ராமாயணத்தைப் பல விதமாக, பல மொழிகளில் நமக்குப் பலர் தந்துள்ளார்கள். எந்த மொழியில் எப்படி இருந்தாலும் அதில் ஸ்ரீராமர் குடிகொண்டிருக்கிறார்.  ஸ்ரீமத் ராமாயணத்துக்கு இன்னொரு...

ஆபாச சகிப்புத்தன்மை

ஆபாச சகிப்புத்தன்மை  முன்பு எப்போதோ படித்த நகைச்சுவை இது.  ஒருவர் கருப்பாக ஏதோ குடித்துக்கொண்டு இருக்க, பையன் ஓடி வந்து, "அப்பா, வீட்டுத் தண்ணீரில் சாக்கடை கலந்துவிட்டது குடிக்காதே! வயிற்றுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது!" என்று பதற, அப்பா கூலாக, “அப்படியா எனக்கு ஒன்றும் தெரியவில்லையே! நல்லா தானே இருக்கு!” என்பார். பையன் முழிக்க, அப்பா, “உங்க அம்மா போட்ட காபி என்று நினைத்தேன்” என்பார்.  இந்த அப்பாவைப் போலத் தான் இன்று தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள். நம் மீது சாக்கடையை வாரி அடித்தாலும் அதைத் துடைத்துக்கொள்ளக் கூட தயங்குகிறோம். சமீபத்தில் தமிழக ‘உயர்’ கல்வித்துரை அமைச்சர் சைவம், வைணவம் குறியீடுகளைப் பாலியல் தொழில் செய்பவர்களுடன் சம்பந்தம் படுத்திப் பேசியுள்ளார்கள். பெரியார் மண், திராவிட மாடல் ஆட்சி என்று கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் புண்ணிய பூமியில் பயிருக்குப் பதில் களைகள்‌ பூத்துக்குலுங்குகிறது. அமைச்சர் பேசியதற்குப் பெண்கள் குறித்து அமைச்சர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது போன்ற பொத்தாம் பொதுவான கண்டனங்களைச் சொல்லி கடந்துச்செல்கிறார்கள். சைவம், வைணவம் குறித்து இப்படிப் பேச...

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா !

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா ! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் குறளை எடுத்துக்காட்டாக நாம் பல காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இப்படியொரு நண்பனைப் பார்ப்பதோ அல்லது இப்படியொரு நண்பனாகவோ இருப்பது அரிது. காரணம் சுயநலம்.    ’தோழன்’ என்ற சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் தான் வருகிறது.  திருமங்கை ஆழ்வார் பாசுரம். பாசுரம் உங்களுக்குத் தெரிந்தது தான்.   ஏழை, ஏதலன் கீழ்மகன் என்னாது   இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து  மாழை மான் மட நோக்கி உன் தோழி   உம்பி எம்பி என்று ஒழிந்திலை  உகந்து  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற    சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட  ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன்    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! குகன் தான் அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியில் பிறந்தவன் என்று தன் தாழ்வுகளைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம் என்னாது இரங்கி ஸ்ரீராமர்  ‘உகந்து தோழன் நீ எனக்...

பிச்சை - S, M, L, XL

பிச்சை - S, M, L, XL  ஸ்மால்  பொதுவாக நாம் காரில் செல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே பிச்சை கேட்பவர்கள் கையை உள்ளே நீட்ட அனுமதிப்பதில்லை. கண்ணாடியைக் கண் சிமிட்டுவது போல இறக்கி இரங்கிப் பிச்சைப் போடுவோம். காசுக்காக அவர்கள் நம் காரை துடைப்பதைக் கூட அருவருப்பு காரணமாக நிராகரிக்கிறோம். .  அதே போல் கோயிலில் பல பிச்சைக் காரர்கள் இருக்கும் போது ஒருவருக்குப் போட்டால் மொத்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்துகொண்டு பிச்சைக் கேட்பார்கள். அதைப் பல முறை நாம் தவிர்க்கவே விரும்புவோம்.  மீடியம்  சமீபத்திய  ஒரு YTபர் வீடியோ பண்டிகை பரிசாகத் துணிமணிகளை இலவசமாகக் கொடுக்க கூட்டம் எனக்கு உனக்கு என்று கையை வாகனத்துக்குள் நீட்டி வாங்குகிறார்கள். பொறுமையாக வாங்குங்கள், கையை உள்ளே நீட்டாதீர்கள் என்று அவர் சொல்ல இலவசத்தை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்ற முனைப்பில் கூட்டம் முண்டியடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் 'அசிங்கமா பண்ணாதீங்க' ' கைய நீட்டாதீங்க’ என அவர் தன் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.   லார்ஜ் இலவச நோட்டீஸ் கொடுத்தாலே கையை நீட்டும் தமிழக மக்கள், ஒவ்வொரு தேர்தல் ...