பிச்சை - S, M, L, XL
ஸ்மால்
பொதுவாக நாம் காரில் செல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே பிச்சை கேட்பவர்கள் கையை உள்ளே நீட்ட அனுமதிப்பதில்லை. கண்ணாடியைக் கண் சிமிட்டுவது போல இறக்கி இரங்கிப் பிச்சைப் போடுவோம். காசுக்காக அவர்கள் நம் காரை துடைப்பதைக் கூட அருவருப்பு காரணமாக நிராகரிக்கிறோம். .
அதே போல் கோயிலில் பல பிச்சைக் காரர்கள் இருக்கும் போது ஒருவருக்குப் போட்டால் மொத்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்துகொண்டு பிச்சைக் கேட்பார்கள். அதைப் பல முறை நாம் தவிர்க்கவே விரும்புவோம்.
மீடியம்
சமீபத்திய ஒரு YTபர் வீடியோ பண்டிகை பரிசாகத் துணிமணிகளை இலவசமாகக் கொடுக்க கூட்டம் எனக்கு உனக்கு என்று கையை வாகனத்துக்குள் நீட்டி வாங்குகிறார்கள். பொறுமையாக வாங்குங்கள், கையை உள்ளே நீட்டாதீர்கள் என்று அவர் சொல்ல இலவசத்தை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்ற முனைப்பில் கூட்டம் முண்டியடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் 'அசிங்கமா பண்ணாதீங்க' ' கைய நீட்டாதீங்க’ என அவர் தன் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.
லார்ஜ்
இலவச நோட்டீஸ் கொடுத்தாலே கையை நீட்டும் தமிழக மக்கள், ஒவ்வொரு தேர்தல் போதும், ஆயிரம் இரண்டாயிரம் என்று பிச்சைக் காசாக வாங்குகிறோம். இலவச டிவி, பேருந்து சீட்டு, பொங்கல் பரிசு இந்த யூடியூப் காரன் போல பண்டிகைப் பரிசாகக் கொடுப்பதை வாங்கி வாங்கிக்கொண்டு ‘ஓஷி’ என்று திட்டும் வாங்குகிறோம்.
எக்ஸ்டரா லார்ஜ்
பச்சையாகச் சொல்ல வேண்டும் என்றால், 2026 தேர்தல் போது வாங்கப் போகும் பிச்சை.
-சுஜாதா தேசிகன்
இன்று ஏப்ரல் ஒன்று, இன்று ஒரு நாளாவது நாம் ஏமாறாமல் இருக்கலாம்!
Comments
Post a Comment