Skip to main content

ஆபாச சகிப்புத்தன்மை

ஆபாச சகிப்புத்தன்மை 



முன்பு எப்போதோ படித்த நகைச்சுவை இது. 

ஒருவர் கருப்பாக ஏதோ குடித்துக்கொண்டு இருக்க, பையன் ஓடி வந்து, "அப்பா, வீட்டுத் தண்ணீரில் சாக்கடை கலந்துவிட்டது குடிக்காதே! வயிற்றுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது!" என்று பதற, அப்பா கூலாக, “அப்படியா எனக்கு ஒன்றும் தெரியவில்லையே! நல்லா தானே இருக்கு!” என்பார். பையன் முழிக்க, அப்பா, “உங்க அம்மா போட்ட காபி என்று நினைத்தேன்” என்பார். 

இந்த அப்பாவைப் போலத் தான் இன்று தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள். நம் மீது சாக்கடையை வாரி அடித்தாலும் அதைத் துடைத்துக்கொள்ளக் கூட தயங்குகிறோம். சமீபத்தில் தமிழக ‘உயர்’ கல்வித்துரை அமைச்சர் சைவம், வைணவம் குறியீடுகளைப் பாலியல் தொழில் செய்பவர்களுடன் சம்பந்தம் படுத்திப் பேசியுள்ளார்கள். பெரியார் மண், திராவிட மாடல் ஆட்சி என்று கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் புண்ணிய பூமியில் பயிருக்குப் பதில் களைகள்‌ பூத்துக்குலுங்குகிறது. அமைச்சர் பேசியதற்குப் பெண்கள் குறித்து அமைச்சர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது போன்ற பொத்தாம் பொதுவான கண்டனங்களைச் சொல்லி கடந்துச்செல்கிறார்கள். சைவம், வைணவம் குறித்து இப்படிப் பேசலாமா என்று யாரும் வாய் திறக்கவில்லை. காரணம் ?
வடிவேலு ஜோக் தான் ஞாபகம் வருகிறது. 
”ஏழு பேர், அவங்களால எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடிச்சாங்க. அடிச்சுட்டு ஒரு ஆட்டோவில ஏத்திவிட்டாங்க. சரி வீட்டுக்கு தானோ என்று நம்பி ஏறினா அது ஒரு மூத்திர சந்துக்கு போச்சு அங்கே பதினொரு பேர் மூணு மணி நேரம் மூச்சு திணறத் திணற அடிச்சானுங்க. சரி அடித்துவிட்டு போங்கடா என்று விட்டுவிட்டேன். 
“ஏன் நீங்க திரும்ப அடிக்கல ?”
“இல்லை”
“ஏன்?”
”அடிக்கும் போது அதுல ஒருத்தன் சொல்றான் ”டேய் இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் ரொம்ப நல்லவனு ஒரு வார்த்தை சொல்லிட்டாமா” 
எவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறான் என்பது போலத் தான் இன்று இந்துக்களின் நிலையும். 

இதே வேறு மதம், வேறு ஜாதி என்ற ஜல்லிக்குள் நான் போக விரும்பவில்லை. அதைக் குறித்து எனக்குப் பேசவும் விருப்பமில்லை. ஆனால் அமைச்சர் அப்படிக் கூறியது நம் தாயை இழிவு படுத்தியதற்குச் சமம். எதற்கு ஏன் கண்டனம் இல்லை என்றால்,  இந்துக்களான நம்முடைய பலவீனம் தான். நம் நண்பர்கள் யார் என்று நாம் அறிந்துகொள்வதில்லை. இதைப் பற்றி எழுதினால், “சார் மேலே ’கல்வித்துறை’ ” என்று எழுத வேண்டும் என்று  மறுமொழி வரும். மற்றொன்று சகிப்புத்தன்மை.  ஸ்ரீராமரையே இழிவு படுத்திய போது சும்மா தானே இருந்தோம். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக இந்து என்ற அடையாளத்தை இழந்துவிட்டோம். 

கோவிட் இல்லை என்றாலும், இனி ஆபாசத் துர்நாற்றம் பிடித்த தமிழகத்தில் எல்லோரும் முகக்கவசம் அணிந்துகொள்வது உத்தமம். இல்லை இவர்களுக்கு எதிராக ஒட்டுப் போட வேண்டும். முடிவு உங்கள் கைகளில் 

-சுஜாதா தேசிகன்
13.4.2025

Comments

  1. உண்மையில் நாம் நமது எல்லாவற்றையும் இழந்து விட்டோம். திருவரங்கன் உலாவிக் வரும் முன்னோர்களின் வழித் தோன்றல் நாமா என்ற சந்தேகம் வருகிறது. பயம் பயம் பயம் இது தான் இன்றைய இந்துவின் அடையாளம்

    ReplyDelete

Post a Comment