Skip to main content

Posts

Showing posts from October, 2023

வைணவத்தின் ‘பிக் டேட்டா' - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன்

வைணவத்தின் ‘பிக் டேட்டா' - பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் அவர்களை இதுவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. கடந்த வருடம் (2021) சந்தி பிரித்த நாலாயிரத் திவ்ய பிரபந்தம் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது சில சந்தேகங்களுக்கு விடை தேடும் பொருட்டு அவரைத் தொலைப்பேசியில் தொந்தரவு செய்தபோதெல்லாம் வெள்ளம் போல வைணவம் சம்பந்தமாக பல விஷயங்களை உற்சாகமாகப் பகிர்ந்துகொண்டார். கடந்த வருடம் தான் அவருடன் பரிச்சயம் என்றாலும் அவர் எழுத்து எனக்குக் கடந்த இருபது வருடங்களாகப் பரிச்சயம்! இருபது வருடத்துக்கு முன் புத்தகக் கண்காட்சி ஒன்றில் புத்தகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த போது 'திவ்வியப்பிரபந்த இலக்கிய வகைகள்' என்ற புத்தகம் கண்ணில் பட்டது. இன்றைய புத்தகங்கள் போல் கவர்ச்சியான அட்டைப்படம் இல்லாத சாதாரண புத்தகம் போல் காட்சி அளித்தது. கையில் எடுத்துச் சில பக்கங்களைப் படிக்க ஆரம்பித்த போது அசாதாரண படைப்பாக, பிரமிப்பை ஏற்படுத்தியது. பிரமிப்புக்கான காரணத்தைக் கூறும் முன் இன்றைய கணினி உலகில் ‘பிக்-டேட்டா' (big data) என்ற சொல்லைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பல்வேறு விஷய

3. திருமலைமால் திருமணியின் திருஅவதாரம்

3. திருமலைமால் திருமணியின் திருஅவதாரம்  ஸ்ரீ விஷ்ணு புராணத்தை அருளிய பராசர பகவான் தம் தாய் வயிற்றில் பன்னிரண்டு மாதங்கள் கர்ப்ப வாசம் செய்தார். இவரை எதிர்த்து வந்த அரக்கர் கூட்டம் விட்ட அஸ்திரங்களைத் தோல்வி  அடையச் செய்து, ‘பராசரர்’ என்று போற்றப்பட்டார். ஸ்ரீராமபிரான் கோசலையின் மணிவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து குணவான் என்ற பெயர் பெற்றார். கண்ணன் தேவகி வயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து பகவத்கீதையை என்ற உயர்ந்த வேதத்தை அருளினார்.  நம் தேசிகனும் இந்த அவதாரப் புருஷர்களைப் போல் தோத்தாரம்மாவின் திருவயிற்றில் பன்னிரண்டு மாதம் கர்ப்பவாசம் செய்து, விபவ வருஷம் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் , சுக்ல தசமி, புதன்கிழமை திருவேங்கசமுடையானுடைய தீர்த்தவாரி தினத்தில், பெருமாள் கோயிலில், திருவேங்கடமுடையானின் திருமணியாழ்வாரே(1) அதி தேஜஸ்வியான குமாரராக அவதரித்தார்.  இதைக் கேள்விப்பட்ட அப்புள்ளார் ஓடோடி வந்து குழந்தையைக் கண் குளிர கடாக்ஷித்து, அங்கே எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே என்று குலசேகர ஆழ்வார் ஏங்கித் தவிக்க, இங்கே திருமலைமால் திருமணியின் அவதாரமாக வந்த அந்

வைஷ்ணவ ஜனதோ கதைகள்

வைஷ்ணவ ஜனதோ கதைகள்  ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும் ‘நரசிம்ம மேத்தா’ வின் ‘வைஷ்ணவ ஜனதோ’ என்று ஸ்ரீ மஹாத்மா காந்திக்குப் பிடித்த பாடலை வானொலியில் கேட்போம்.  ஸ்ரீவைஷ்ணவன் என்பதற்கு அடையாளங்கள் இருக்கிறது. திருமண், துளசி மாலை... இது எல்லாம் புறச் சின்னம்.  வேஷப் பூஷணத்தால் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிவிட முடியாது. ஆத்ம பூஷணமும் தேவைப்படுகிறது.  இந்தப் பாடலில் அந்த ஸ்ரீவைஷ்ண குணங்கள் இருக்கிறது.  சுலபமான தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இந்த இலட்சணங்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒரு சிறு கதையை இன்று வரிசையாக எழுதலாம் என்று இருக்கிறேன்.  பாடலின் தமிழ் வடிவம் (எண்கள்) வரப் போகிற கதைகளை குறிக்கும்.  (1)எவன் ஒருவன் பிறர் துயரங்களை உணர்வானோ, (2)பிறர் கஷ்டங்களைக் களைந்து உதவுவானோ, (3)அகத்தில் அகந்தைக்கு இடம் கொடுக்கமாட்டானோ அவனே உண்மையான ஸ்ரீ வைஷ்ணவன். (4)எவன் உலகத்தின் உயிரினம் அனைத்தையும் வணங்குகிறவன், (5)எவன் பிறரை நிந்திக்க மாட்டானா, (6)எவன் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைச் சலனமின்றி வைத்துக் கொள்பவனோ அவளைப் பெற்ற அன்னை மிகவும் கொடுத்து வைத்தவள் (7)எவன் சமநோக்கு உடையவனே, (8)வேட்கையை விட்டொழித்தவனோ, (9)பிறர்

2. ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கதை - கனவில் தோன்றிய பாலகன்

2. ஸ்ரீ வேதாந்த தேசிகனின் கதை - கனவில் தோன்றிய பாலகன் தொண்டை நாடு கரும்பு விளைச்சலுக்குப் பெயர் போனது. கரும்பு போன்ற சுவைமிக்க பொய்கை ஆழ்வார், ராமானுஜர்,திருக்கச்சி நம்பிகள், எம்பார், அப்புள்ளார் மற்றும் நம் தேசிகனை பெற்றுத் தந்த நாடு.   தொண்டை நாட்டின் தலைநகர் கச்சி நகர் என்ற காஞ்சிபுரம்.  முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்று.  அங்கே  திருத்தண்கா (தண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை) திவ்ய தேசத்தில் தீபப்ரகாசர் சந்நிதி உள்ளது.  அழகிய தமிழில் விளக்கொளிப் பெருமாள் !  விளக்கொளி பெருமாள் சந்நிதி அருகில் உள்ள அக்ரஹாரத்தின் பெயர் ‘தூப்புல்’(1)  இங்கே ஸ்ரீராமானுஜர் நியமித்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளில் ஒருவரான அனந்த ஸோமாஜியார் வாழ்ந்துவந்தார். அவருடைய குமாரர் புண்டரீகாஷதீக்ஷிதர். அவருக்கு குமாரர் அனந்தசூரி ஒரு வேதவிற்பன்னர். பகவத் கைங்கரியபரராய் விளக்கொளி பெருமாளுக்கு கைங்கரியம் செய்துவந்தார்.  விவாகப் பருவத்தை எட்டியதும்,  மிகச் சிறந்த ஸ்ரீ வைஷ்ணவ ஞானியான அப்புள்ளாரின்(2) தங்கையான தோதாரம்பாவை விவாகம் செய்துகொடுக்க வேண்டினார். அப்புள்ளாரும் மனம் உகந்து பேரருளாளன் ஆசீர்வாதத்துடன் தச