Skip to main content

வைஷ்ணவ ஜனதோ கதைகள்

வைஷ்ணவ ஜனதோ கதைகள் 



ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும் ‘நரசிம்ம மேத்தா’ வின் ‘வைஷ்ணவ ஜனதோ’ என்று ஸ்ரீ மஹாத்மா காந்திக்குப் பிடித்த பாடலை வானொலியில் கேட்போம். 

ஸ்ரீவைஷ்ணவன் என்பதற்கு அடையாளங்கள் இருக்கிறது. திருமண், துளசி மாலை... இது எல்லாம் புறச் சின்னம்.  வேஷப் பூஷணத்தால் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிவிட முடியாது. ஆத்ம பூஷணமும் தேவைப்படுகிறது. 

இந்தப் பாடலில் அந்த ஸ்ரீவைஷ்ண குணங்கள் இருக்கிறது.  சுலபமான தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இந்த இலட்சணங்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒரு சிறு கதையை இன்று வரிசையாக எழுதலாம் என்று இருக்கிறேன். 

பாடலின் தமிழ் வடிவம் (எண்கள்) வரப் போகிற கதைகளை குறிக்கும். 

(1)எவன் ஒருவன் பிறர் துயரங்களை உணர்வானோ,

(2)பிறர் கஷ்டங்களைக் களைந்து உதவுவானோ,

(3)அகத்தில் அகந்தைக்கு இடம் கொடுக்கமாட்டானோ

அவனே உண்மையான ஸ்ரீ வைஷ்ணவன்.

(4)எவன் உலகத்தின் உயிரினம் அனைத்தையும் வணங்குகிறவன்,

(5)எவன் பிறரை நிந்திக்க மாட்டானா,

(6)எவன் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைச் சலனமின்றி வைத்துக் கொள்பவனோ

அவளைப் பெற்ற அன்னை மிகவும் கொடுத்து வைத்தவள்

(7)எவன் சமநோக்கு உடையவனே,

(8)வேட்கையை விட்டொழித்தவனோ,

(9)பிறர் மாதர்களைத் தாயாக வணங்குபவன்,

(10)எவன் பொய்யே பேசமாட்டான்

(11)பிறர் பொருளைக் கையில் தீண்டவும் மாட்டானோ

அவனே உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்

(12)எவனை மோகமும், மாயையும் அணுகாவோ,

(13) எவன் மனதிலே திட வைராக்கியம் குடி கொண்டிருக்கும்,

(14) இவன் வாயில் ராம நாமத்தையே ஓயாது ஓதிக் கொண்டிருக்கும்,

அவனுடைய உடல் எல்லாப் புனிதத் தீர்த்தங்களுக்கும்

உறைவிடம் ஆகும்

(15) எவன் பேராசையும், கபடமும் இல்லாதவனோ

(16) எவன் காமத்தையும், கோபத்தையும் விட்டொழித்தவனோ

அவன் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்

அவனைத் தரிசிப்பவர்கள் தலைமுறை

தலைமுறைக்கும் கடைத்தேறியவர்கள் ஆவார்கள்!

- சுஜாதா தேசிகன்

தேசத்தந்தை மகாத்மா காந்தியின்பிறந்த தினம்

Comments