சென்னையில் பண்பலை வரிசையில் பாப்புலர், பிந்து அப்பளம் எல்லாம் நமத்துப் போகும் அளவுக்கு தீவாவளி சமயம் மழை அடித்தது. தீவாவளி முடிந்து பெங்களூரிலிருந்து சென்னை திரும்பிய போது செண்டரல் ஸ்டேஷனில் ஓர் இடத்தில் நீர்வீழ்ச்சி போல ஜலம் கொட்டிக்கொண்டிருந்தது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் நியூஸ்பேப்பரை கீழே விரித்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்கள். வெளியே ”ஆட்டோ வேண்டுமா?” என்று கேட்ட அந்த குங்குமப் பொட்டுக்காரரிடம் “தி.நகர்” என்று சொன்னவுடன் பதில் பேசாமல், எனக்கு பின் வந்தவரிடம் ஆட்டோ வேணுமா? என்று கேட்கப் போய்விட்டார். அடுத்து வந்தவர் ”800 ஆகும் சார் தி.நகர் முழுக்க ஒரே தண்ணி" என்றார் சென்னையில் இந்த சாதாரண மழைக்கே ராஜ்பவன் செல்லும் சாலை ’ஐ’ படத்தில் விக்ரம் மூஞ்சி போல ஆகிவிட்டது. மற்ற இடங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை தி.நகர் நாயர் சாலையில் சைகிள் ஓட்டிக்கொண்டு போன போது, போலீஸ் என்னை தடுத்தார்கள். பயத்தில் வேர்த்துவிட்டது என்ன விஷயம் என்று கேட்டதற்கு அங்கே 8x8 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்ட இடத்தை காண்பித்தார். நல்ல வேளை யாருக்கும் ஒன்ற