Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை

மேட்டழகிய சிங்கர் (சிறுகதை)

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான் - ஆண்டாள், நாச்சியார் திருமொழி ஸ்ரீரங்கவாசிகளுக்கே ‘EVS’ சாலையின் விரிவாக்கம் தெரியாது. நமக்கும் அந்தக் கவலை வேண்டாம். இவிஎஸ் சாலையும் வரதாச்சாரி தெருவும் முட்டிக்கொள்ளும் இடத்தில் ‘பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா’ என்று அந்தக் காலைவேளையிலும் பிடிவாதமாக அலறிக்கொண்டிருக்கும் ஒரு சாதாரண தினத்தில் க்ரோமியத்தில் குளிப்பாட்டிய பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள். இறங்கியது ஜெயபாலனும், கண்ணம்மாவும். தூக்கம் மிச்சம் அவர்களின் கண்களில் தெரிந்தது. இறங்கியவுடன் கண்ணம்மாவிற்கு ஸ்ரீரங்கம் கோபுரமும் ஆவின் பால்வண்டிகளும் மூடப்பட்ட ஜன்னல்களும் வீட்டு வாசலில் தண்ணீர் தெளிப்பவர்களும் கண்ணில் பட்டார்கள். “காபித் தண்ணி கிடைக்குமா?” என்றாள் “கிடைக்கும் பேசாம வா!” “உள்ளே அஞ்சு மாசக் குட்டி இருக்கு” என்ற தன் மேடிட்ட வயிற்றைத் தடவிக்கொண்டாள். ஜெயபாலன் அதைக் கவனிக்காமல் காது குடைந்துவிட்டு, தன் வேட்டியை மேலுயர்த்தி பட்டாப்பட்டியிலிருந்து செல்போனை எடுத்து அழுத்தினான். “காபி கிடைக்குமா கேளுங்க.” “சட்... சும்மா இரு..” என்றபோது மறுமுனை ‘சிறிது நேரம் கழித்து முயற்சிக்கவும்’ என்றபோது...

இலக்கியக் கூட்டத்துக்கு வந்த பூனை !

இலக்கியக் கூட்டத்துக்கு வந்த பூனை ! வாசகசாலை 11வது நிகழ்வில் இன்று நான் கோபிகிருஷ்ணனின் ஒரு ரூபாய்க்கு ஒரு கதை பற்றிப் பேசினேன். மொத்தம் 21 பேர் வந்திருந்தார்கள். அதில் ஒரு பூனையும் அடங்கும். வெகு நாட்கள் கழித்து நண்பர் மணிகண்டனை சந்தித்து பேசியது இனிமை. நான் பேசியதை முன்பே கட்டுரையாக எழுதிக்கொண்டு சென்றுவிட்டேன். அதை கீழே கொடுத்துள்ளேன். விருப்பம் இருப்பவர்கள் படித்துக்கொள்ளலாம். என்னையும் பேச அழைத்த அவர்களுக்கு நன்றி. -சுஜாதா தேசிகன் 9.9.2018 ஒரு ரூபாய்க்கு ஒரு கதை பரிட்சையில் சாய்ஸ் மாதிரி மூன்று கதைகளை கொடுத்து ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்ற போது இந்தக் கதையை எடுத்ததற்கு முதல் காரணம் இது மிகச் சிறிய கதை. சிந்து பைரவியில் சுலக்ஷ்னா ‘கத்திரிக்கா கிலோ என்ன விலை’ என்பது போல் தான் என் சிறுகதை ஞானம். கோபி கிருஷ்ணன். பெருமாள் பெயராக இருக்கிறதே என்பது இன்னொரு காரணம். கதையின் தலைப்பு ‘ஒரு ரூபாய்க்கு ஒரு கதை’ தலைப்பைப் பார்த்த போது கமலஹாசனின் “ஒரு கோடி ரூபாய் கனவு” என்ற காஸ்டிலியான தலைப்பு தான் உடனே ஞாபகத்துக்கு வந்தது. கதையைச் சுருக்கமாக பிறகு சொல...

ஒரு கிரைம் கதை

ஒரு கிரைம் கதை (சிறுகதை) | சுஜாதா தேசிகன் SarvayoniShu Kaunteya MurrtayaH SaMbhavanti YaaH  | Taasaam Brahma Mahat YoniH Aham BeejapradaH Pitaa   || Whatever forms (of beings) are produced in any wombs, O Arjuna, the Prakriti ( i.e. the matterat large) is their great womb (mother) and I am the sowing father (to all beings) Shrimad Bhagawad Gita  Chapter 14 Shloka 4 அன்று சீக்கிரம் விழிப்பு வந்திருக்காவிட்டால் அந்த அபூர்வ வழக்கில் ஈடுபட்டிருக்க மாட்டேன். வழக்கு என்றவுடன் நான் ஏதோ வக்கீலோ போலீஸோ அல்லது குற்றவாளியோ என்று நினைக்க வேண்டாம். சென்னையில் சாதாரண கம்ப்யூட்டர் இன்ஜினியர். மென்பொருளாளர்களைப் பற்றிய பிம்பம் ஒன்று ஏற்கெனவே பல எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டிருப்பதால் என்னை நானே விவரித்து நேர விரயம் செய்ய விரும்பவில்லை. வழக்கமாக ஏழரை மணிக்கு விழிப்பு வரும். முதல்நாள் நிறைய நேரம் தொலைக்காட்சியில் விவாதத்தைப் பார்த்ததால் சரியான தூக்கம் இல்லை. சீக்கிரம் முழிப்பு வந்து, பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன் பக்கம் பைக்கை நிறுத்திவிட்டு, பிளாட்பாரத்தில் மயில...

மன்னிக்கும் ஆவி

பட்டப்பகலில் ரகு ரம்யாவை கொலை செய்ததை யாரும் பார்க்கவில்லை. ரம்யா ரகுவின் மனைவி. ரகு விபத்து என்று சொன்னதை எல்லோரும் நம்பினார்கள். பிச்சாவரத்துக்கு சுற்றுலா சென்ற ரகுவும் ரம்யாவும் தனியாக படகு சவாரி... மன்னிக்கவும், கூட மோமோ என்ற நாயுடன் சென்ற போது அந்த சம்பவம் நடந்தது. மனைவி தண்ணீரில் மூழ்கிவிட்டாள் காணவில்லை என்று ரகு சத்தம் போட்ட போது தான் சற்று தொலைவில் இருந்தவர்கள் கவனித்தார்கள். உடனே சில படகுகளில் நீச்சல் தெரிந்தவர்கள் ரகு சொன்ன இடத்தில் குதித்தார்கள் ஆனால் ரம்யாவை கானவில்லை.

அப்பாவும் ராஜாஜியும்

எனக்கு சுஜாதா மாதிரி என் அப்பாவிற்கு ராஜாஜி. ராஜாஜியை நேரில் சந்தித்ததில்லை ஆனால் அவர் மீது ஒரு அசுரத்தனமான பக்தி இருந்தது. சம்பளம் வந்தவுடன், அந்த காலத்திலேயே ராஜாஜியின் 'சுதந்திரா கட்சி'க்கு ’ஐந்து ரூபாய் மணி ஆர்டர்’செய்த ரசீதுகள் நிறையப் பார்த்திருக்கிறேன். இதைத் தவிர ராஜாஜி எழுதிய வள்ளுவர் வாசகம், ஆத்ம சிந்தனை போன்ற பலப் புத்தகங்கள் அவரிடம் இருந்தது. ராஜாஜி பற்றி பெரிய தீபாவளி சைஸ் புத்தகம் ஒன்று பார்த்திருக்கிறேன் ( இது இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம்). அவர் மேடைப் பேச்சை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒரு டைரியில் குறிப்புக்களுடன் எழுதிவைத்திருந்தார். நடுநடுவே அவருக்குப் பிடித்ததை அடிக்கோடுகளுடன்,  இதைத் தவிர ராஜாஜிக்கு அவர் நிறையக் கடிதங்கள் எழுதியிருந்தார். அவர் ராஜாஜிக்கு எழுதியவை பெரும்பாலும் ஸ்ரீவைஷ்ணவம் சம்மந்தப்பட்டவை - ஆழ்வார், திவ்யபிரபந்தம், வேதாந்த தேசிகன் நூல்கள். பலவற்றுக்கு ராஜாஜி பதிலும் போட்டிருந்தார்!. ஒரு கடிதத்துக்கு மட்டும் ராஜாஜி கொஞ்சம் கோபமாக என் அப்பாவிற்கு எழுதிய ஒரு பக்க கடிதம் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்தக் கடிதத்தின் சாரம் இது தான் “ந...

சாஸ்திரி பவன்

கடைசியில் சொத்தையாக ஒன்று அகப்பட்டு நமக்கு திருப்பம் கொடுக்கும் வேர்கடலை பொட்டலம் மாதிரி தான் நான் சொல்லப்போகும் இந்த கதையும். பெல்கிஜியம் நாட்டில் என் பாஸ்போர்ட் தொலைஞ்சு போனதைப் பற்றி சொல்லியிருக்கிறேனா ? ஐயோ தொலைஞ்சு போச்சா? என்று நீங்கள் கேட்கும் முன்... தொலைஞ்சுப் போகலை திருடுபோனது. எப்படி என்று சொல்லுவதற்கு முன் என்னைப் பற்றியும் என் குடுமியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். என் பெயர் ஸ்ரீநிவாஸராகவன். ஸ்ரீரங்கம். தாயார் சன்னதிக்குள் சட்டென்று உள்ளே நுழையக்கூடிய வடக்கு உத்திர வீதியில் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் மடத்துக்கு நான்கு வீடு தள்ளி எங்க வீடு. மஞ்சள் திருமண் குடுமியுடன் ஸ்ரீரங்கம் தெருவில் கிரிக்கெட் விளையாடி ஈ.ஆர்.ஐ.ஸ்கூலில் படிக்கும் வரை என்னை யாரும் கேலி செய்யல, ஆனா காலேஜ் படிக்கும் போது பின்னாடியிலிருந்து கேலி பேசுவா. முன் நெற்றியில் மழித்துக்கொண்டு இருப்பதால் “கரைய மண்டை” என்பார்கள். விளையாட்டு மைதானம் பக்கம் போனா பின் பக்கம் சுருட்டி வைத்த என் குடுமியை பார்த்து “தலையில பந்து” என்று யாராவது சத்தம் போடுவார்கள்.

ஐஸ்பாக்ஸ் - சிறுகதை

சென்னை தி.நகரில் இருந்து தேனாம்பேட்டை போகும் சாலையின் குறுக்கே இருக்கும் அந்த சின்ன சந்தின் பெயர், 'மாடல் ஹவுஸ் ரோடு லேன்.' தென்னந் துடைப்பத்தை திருப்பிப் பிடித்த மாதிரி பலவண்ண கட்சிக்கொடிகள் பறந்து கொண்டிருக்கும் அந்தச் சந்துக்கு எதிர்புறம் ஒரு ஜெராக்ஸ் கடை சந்து ஆரம்பத்தில், ஆலிவ் பச்சை நிறத்தில் கவிழ்ந்துகிடக்கும் குப்பைத்தொட்டியைக் கடந்து உள்ளே நுழைந்தால், மொத்தம் ஒன்பது வீடுகள். அதில் மூன்றாவது வீட்டில், ஐஸ்பாக்ஸ் ஆனந்தன் என்கிற ஆனந்தன் வசிக்கிறார் என்பதைத் தவிர இந்த சந்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சின்னத்திரைநிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் போன்றவர்களை ஷாப்பிங் மால், கடைத்தெரு, தியேட்டர் போன்ற இடங்களில் பார்க்கும்போது, இவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே...' என்று நமக்குத் தோன்றும் அல்லவா? ஆனந்தனும் அந்த வகை.

’ஜல்லி’ கட்டுக்கதை

"ராம் நிச்சயம் நீ போய் தான் ஆக வேண்டுமா ?” என்றாள் சிந்து ”நிச்சயமாக. ராசியுடன்... இதில் என்ன சந்தேகம்.. ?” “ராசியுமா ?” “ஆமாம்.!“ “அது குழந்தை.. இந்த மாசிக்கு தான் பதினைந்து வயசு முடிகிறது... அதை எதற்கு ?” “தமிழருடைய வீர விளையாட்டை அது எப்போழுது தெரிந்துகொள்ளும் ?.. “ “இதில் என்ன வீரம் இருக்கிறது...? இந்த நூற்றாண்டில் பலருக்கு தமிழே தெரிவதில்லை” ராம் கைகடிகாரத்தை பார்த்த போது ரத்த அழுத்தம் 140 என்று காட்டியது. “நான் போகப் போகிறேன்! இதற்கு மேல் இந்த டாப்பிக் வேண்டாம்!” என்றான் தீர்மானமாக

மயில் குயில் ஆச்சுதடி!

உடையாத முந்திரியை எக்ஸ்போர்ட் செய்வதுமாதிரி, அனுபமா கல்யாணத்திற்குப் பின் அமெரிக்காவிற்கு எக்ஸ்போர்ட் செய்யப்பட்டாள். போன சித்திரை மாதம் இருபதாவது திருமண தினத்தை பிட்ஸ்பர்க் பாலாஜி கோயில் புளியோதரையுடன் கொண்டாடினார்கள். நடிகர்கள் நாட்டை விட்டுப் போவதால் பிரபலம் ஆவது மாதிரி அனுபமாவும் பிரபலம் ஆனாள். “அமெரிக்கா போகிறாயாமே ?.. எங்களை எல்லாம் மறந்துடாதே!” என்ற விசாரிப்புகளுக்கு இடையில் அப்பா “பாட்டை மட்டும் விட்டுவிடாதே..” என்று நாரத கான சபா பக்கம் இருக்கும் மியூசிக்கல் கடையில் கை நிறைய எம்.எஸ்.ஸும், லால்குடியையும் வாங்கித் தந்தார். அம்மா தேங்காய் எண்ணையில் வறுத்த நேந்திரங்கா சிப்ஸ்(மாப்பிள்ளைக்குப் பிடிக்குமாம்), பருப்பு பொடி, குழம்பு பொடி, சுமித் மிக்ஸி என்று அடுக்க ஆரம்பித்தாள். அனுவின் அப்பா மஹாதேவன் ஐ.ஓ.சியில் அந்தக் காலத்து என்ஜினியர்; தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். வேலையில் இருக்கும்போதே ஒன்றரை கிரவுண்டில் மேலும் கீழுமாக இரண்டு மாடி கட்டிக்கொண்டு கோட்டூர்புரத்தில் 'கோட்டூர் கார்டன்ஸ்' காலனியில் பின்பக்கம் வாழையும், வாசலில் மாமரம், மாடியில் அனுபமாவிற்கு சங்கீத டியூச...

நகர்வலம்! - சிறுகதை சுஜாதா

( இந்த கதையை மீண்டும் இன்று ஒரு முறை படித்தேன் ). அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக ஏற்பட்ட பெரிய படகு அது. அதன் மேல்தளத்தில் மிகவும் இயல்பான நிலையில் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் சூரிய வெளிச்சத்தில் படுத்துக்கொண்டும் ஒரு கனவுச் சதுரம் போலிருந்த சிறிய நீச்சல்குளத்தில்(வெந்நீர்) சோம்பேறித் தனமாக நீந்திக்கொண்டும் இருந்த சந்தோஷ மனிதர்களில் ஆத்மா நித்யாவுக்காகக் காத்திருந்தான். தன் கையில் இருந்த புத்தகத்தில் கவனம் இல்லாமல்... எதிரே நீந்திக்கொண்டு இருந்த நித்யாவின் அவ்வப்போது தெரிந்த உடல் வடிவ அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தான். படகு அத்தனை வேகத்தில் செல்வது தெரியவே இல்லை. அதன் வயிற் றில் இருந்த சிறிய அணு மின்சார நிலையத்தின் சக்தியில் அது கடல் பரப்பின்மேல் ஒரு காற்று மெத்தையில் மிதந்து சென்றது. ஆத்மாவுக்கு அந்தப் பிரயாணம் அவன் வாழ்வின் ஆதர்சங்களில் ஒன்று... இன்னும் பதினைந்து நிமிடங்களில் படகு சென்னையை அடையப்போகிறது. சென்னை! அவன் முன்னோர்களின் ஊர்! அவன் தாத்தாவுக்குத் தாத்தாவு...

ஆகவே... ஒரு கதை பிறக்கிறது!

இந்தக் கதை உங்களைக் கவருமா என்று தெரியாது. ஆனால் ஒரு உத்திரவாதம் தருகிறேன். பெயர்கள்கூட மாற்றாத, எந்தக் கலப்படமும் இல்லாத என் சொந்த அனுபவம். ஐ.டி கம்பெனியில் இருபது வருஷம் குப்பை கொட்டியபின் எல்லோருக்கும் வரும் அந்த அலுப்பு, எனக்கு வந்த சமயம் பிள்ளை பிடிக்கும் கும்பல் மாதிரி என்னை ஒரு கன்சல்டன்சி பிடித்து அமெரிக்க கம்பெனிக்கு வைஸ் ப்ரெசிடண்டாக செக்கின் செய்தது. அதற்கு நடத்தப்பட்ட இன்டர்வியூவில் அந்தக் கேள்வியை என்னால் மறக்க முடியாது. “பல பெரிய டீமை உருவாக்கியுள்ளீர்கள்...மறக்க முடியாத அனுபவம்?” எனக்கு உடனே ராமகிருஷ்ணாதான் நினைவுக்கு வந்தான். “நெவர் ஜட்ஜ் எ புக் பை இட்ஸ் கவர் என்பதற்கு எடுத்துக்காட்டு ராமகிருஷ்ணா” என்று என் அனுபவத்தைச் சொல்ல ஆரம்பித்தேன். புதிதாக ஒரு டீமை சில வருடங்களுக்கு முன் தேர்வு செய்துகொண்டிருந்த சமயம் “ஐ வாஸ் அண்டர் லாட் ஆப் பிரஷர்”. ஒரு ‘வாக் இன் இன்டர்வியூ’க்கு வந்திருந்தான். தொள தொள பேன்ட், சட்டையில் ஆங்காங்கே உப்புப் பூத்திருந்தது. பழைய செருப்பு, கையில் லேடிஸ் குடை. தமிழ்நாட்டின் தலை சிறந்த பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவன...

ரத்த நிலா உருவான கதை

உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் ஐந்து அன்று எல்லா நாளிதழிலும் விளம்பரம், கட்டுரை வந்து அடுத்த நாள் பாக்கெட் பால் வாங்கும் போது அதைப் பற்றி முழுவதும் மறந்துவிடுகிறோம். ஜூன் ஐந்து முதல் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது இல்லை என்று முடிவு செய்து, முதலில் டப்பர் வேர் டிபன் பாக்ஸை மாற்றினேன். ஜீன்ஸ் போட்ட பெண் தலையில் பூ வைத்துக்கொண்டது போல என்னை பார்த்தார்கள். “உங்க டயட்டைல் துவும் சேர்ந்ததா ?”  போன்ற கேள்விகளை கடந்து தினமும் பள்ளிக்கரனை வழியாக அலுவலகம் செல்லும் போது அந்த குப்பை மேடுகளில் தான் எவ்வளவு  பிளாஸ்டிக் ! ரங்கநாதன் தெருவில் இரவு 12 மணிக்கு சென்றால் அங்கே கிடக்கும் பிளாஸ்டிக் குப்பையை பார்க்க மலைப்பாக இருக்கும். ஃபேஸ்புக்கில் வரும் செல்ஃபி படங்களை உற்றுப்பார்த்தால் எங்காவது ஒரு பிளாஸ்டிக் இருக்கிறது. நம் தாத்தா பாட்டிகள் பலர் 80 வயசுக்கு மேல் திடமாக வாழ்ந்ததற்கு, தற்போது அதிகமாக கேன்சர் வருவதற்கும் இந்த பிளாஸ்டிக்கும் ஒரு காரணமாக இருக்கலாம். பிளாஸ்டிக் இல்லாமல் வாழ முடியுமா என்று ஒரு நாள் முயன்று பார்த்தேன். கஷ்டம் தான். இரண்டு நிமிஷம் பட்டியலிட்டேன். பால் பாக்கெட...

ரத்த நிலா

உலகெங்கும் அந்த செய்தி பல மொழிகளில் பரவியிருந்தது. மின்சாரம் இல்லாத கிராமம், பிரதமர் செல்லாத நாடு என்று எங்கும் இதே பேச்சு. நடிகைகள் அடிக்கடி குந்தலை வருடுவது போல பலர் மொபைலை வருடி அந்த செய்தியை வாட்ஸ் ஆப் போன்றவற்றில் அனுப்பினார்கள். முகநூலில் திகட்ட திகட்ட மீம்ஸ் ஜோக் போட்டு உலகத்தில் ஜீவிப்பதை இளைஞர்கள் உறுதிசெய்தார்கள். டிவியில் விவாதித்தார்கள். புகை பிடித்தல் உடல் நலத்திற்கு கேடுக்கு முன் “வதந்திகளை நம்பாதீர்கள்” திரையரங்குகளில் முந்திக்கொண்டது. எதற்காக ஃப்ரொஃபைல் படம் மாற்றுகிறோம் என்று  யோசிக்காமல் எல்லோரும் மாற்றினர். ஸ்ரீரங்கம், திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலம் அல்லாமல் அப்பக்குடத்தான், அன்பிலிலும் கூட்டம் வழிந்தது. வேளாங்கனி, நாகூர் தர்கா என்று எதையும் விட்டு வைக்கவில்லை. யார் முதலில் இந்த செய்தியை பரப்பினார்கள் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது....