Skip to main content

அப்பாவும் ராஜாஜியும்

எனக்கு சுஜாதா மாதிரி என் அப்பாவிற்கு ராஜாஜி. ராஜாஜியை நேரில் சந்தித்ததில்லை ஆனால் அவர் மீது ஒரு அசுரத்தனமான பக்தி இருந்தது.

சம்பளம் வந்தவுடன், அந்த காலத்திலேயே ராஜாஜியின் 'சுதந்திரா கட்சி'க்கு ’ஐந்து ரூபாய் மணி ஆர்டர்’செய்த ரசீதுகள் நிறையப் பார்த்திருக்கிறேன். இதைத் தவிர ராஜாஜி எழுதிய வள்ளுவர் வாசகம், ஆத்ம சிந்தனை போன்ற பலப் புத்தகங்கள் அவரிடம் இருந்தது. ராஜாஜி பற்றி பெரிய தீபாவளி சைஸ் புத்தகம் ஒன்று பார்த்திருக்கிறேன் ( இது இப்போது இல்லை என்பது வருத்தமான விஷயம்).

அவர் மேடைப் பேச்சை எல்லாம் ஒன்றுவிடாமல் ஒரு டைரியில் குறிப்புக்களுடன் எழுதிவைத்திருந்தார். நடுநடுவே அவருக்குப் பிடித்ததை அடிக்கோடுகளுடன்,  இதைத் தவிர ராஜாஜிக்கு அவர் நிறையக் கடிதங்கள் எழுதியிருந்தார். அவர் ராஜாஜிக்கு எழுதியவை பெரும்பாலும் ஸ்ரீவைஷ்ணவம் சம்மந்தப்பட்டவை - ஆழ்வார், திவ்யபிரபந்தம், வேதாந்த தேசிகன் நூல்கள். பலவற்றுக்கு ராஜாஜி பதிலும் போட்டிருந்தார்!.

ஒரு கடிதத்துக்கு மட்டும் ராஜாஜி கொஞ்சம் கோபமாக என் அப்பாவிற்கு எழுதிய ஒரு பக்க கடிதம் இன்னும் நினைவில் இருக்கிறது. அந்தக் கடிதத்தின் சாரம் இது தான் “நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி. ஆனால் நீங்கள் இது மாதிரி செய்திருக்க கூடாது....”என்று என்று ஏகப்பட்ட அறிவுரைகளுடன் கைப்பட எழுதிய பெரிய கடிதம்.

என் அப்பாவிடம் இதைப் பற்றி கேட்டதற்கு, பூனாவில் அவர் தங்கியிருந்த வீட்டுப் பக்கத்தில் இருக்கும் பூங்காவோவை ராஜாஜியின் பெயருக்கு மாற்றச் சொல்லி அந்த ஊர் மேயருக்கு கடிதம் அனுப்ப அவரும் மேல் இடத்தில் அதற்கு அனுமதி வாங்கி அந்தப் பூங்காவிற்கு ‘ராஜாஜி பூங்கா’ என்று நாமகரணம் செய்யப்பட்டது.

ராஜாஜி என் அப்பாவிற்கு எழுதிய கடிதங்களை வைத்து எழுதிய கதை இது http://sujathadesikan.blogspot.in/2004/11/blog-post_16.html

Comments

  1. திரு ராஜாஜி அவர்கள் தமிழக மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட (துஷ் பிரயோகம்) மிக சரியான மனிதர்.

    ReplyDelete
  2. எனக்கு ராஜாஜியையும் பிடிக்கும்.
    உங்கள் அப்பாவைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டு
    அவரையும் மிகப் பிடிக்கும். இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்திருக்கலாம்.

    ReplyDelete

Post a Comment