Skip to main content

Posts

Showing posts with the label ஸ்ரீவைஷ்ணவம்

புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு

கற்போரைக் கைப்பிடித்துச் செல்லும் புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு (1) ஒரு சிறுவனின் கதை: நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒரு சிறுவன், தன் வீட்டுத் தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டான். அப்பா எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்குத்தான் விற்றிருந்தான் என்றாலும், சொல்லாமல் செய்ததால் கோபமடைந்த தந்தை அவனை அடித்து விரட்டினார். வெள்ளாற்றின் மறுகரையில் இருந்த கீரப்பாளையம் கிராமத்திற்கு ஓடிப்போன அந்தச் சிறுவன், அங்கே வசித்த தன் பெரியப்பா வீட்டுக்கு சென்று தஞ்சம் புகுந்தான். பெரியப்பா சிறந்த வைணவ அறிஞர். ஸ்ரீமத் அழகிய மணவாள ராமானுஜ ஏகாங்கி சுவாமிகள் என்பது அவர் திருநாமம். அங்கேயே தங்கி, தன் பெரியப்பாவிடமே தமிழ் இலக்கியத்தையும் வைணவத்தையும் கற்கத் தொடங்கினான். பெற்றோர் எவ்வளவோ அழைத்தும் அந்தச் சிறுவன் மீண்டும் வீட்டிற்குச் செல்லவில்லை. (2) என் சொந்தக் கதை: முப்பது வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில், எழுத்தாளர் சுஜாதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை ஆழ்வார் பாடல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் திரு. புருஷோத்தம நாய...

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் பற்றிய குட்டிக் கதை

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் பற்றிய குட்டிக் கதை பல வருடங்களுக்கு முன் ஒருவர், "குழந்தைகளுக்குக் கதை எழுதித் தர முடியுமா?" என்று கேட்டார். "அதற்கென்ன, செய்துவிடலாம்" என்று ஒரு கதை எழுத ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது, குழந்தைகளுக்கு எழுதுவது கஷ்டம் இல்லை; ரொம்ப கஷ்டம் என்று! சுஜாதா தன் கடைசிக் காலத்தில் மிகவும் விரும்பி எழுதியவை - தினம் ஒரு பாசுரம் மற்றும் நீதிக் கதைகள். அவர் நீதிக் கதைகள் எழுதும்போது நான் உடனிருந்து கவனித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் உள்ள ‘ஈசாப் கதைகள்’ புத்தகத்தில் ஏதோ ஒரு கதையை (Random) முதலில் படித்துவிட்டுப் புத்தகத்தை மூடிவிடுவார். பின் தமிழில் அதைத் தன் நடையில் எழுதுவார். பிறகு படித்துப் பார்த்துத் திருத்துவார், மீண்டும் திருத்துவார். இப்படி நான்கு ஐந்து முறை செப்பனிடுவார். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், குழந்தைகளுக்குக் கதை எழுதுவது அத்தனை சுலபமில்லை. என் கதைக்கு வருகிறேன். சுலபமாகப் புரியும் வண்ணம் ஒரு கதை எழுதினேன். அது அக்ரூரருடைய கதை. "நன்றாக இருக்கிறது, இதுபோல் வேறு சில கதைகளையும் எழுத ஆரம்பியுங்கள்" என்றார் அவர். மந்...

புள்ளின்வாய் கீண்டானை - கோர்ட் வரை சென்ற பாசுரம்

புள்ளின்வாய் கீண்டானை - கோர்ட் வரை சென்ற பாசுரம் 12வது பாசுரத்தில் ராமனை 'மனதுக்கினியான்' என்று ஆண்டாள் குறிப்பிட்டது, அவளுடைய கோஷ்டியில் ஒரு சலசலப்பை உண்டாக்கியது. இதனால் ஆண்டாளின் கோஷ்டி, கண்ணன் கோஷ்டி மற்றும் ராமர் கோஷ்டி என்று இரண்டாகப் பிரிந்தது. கோஷ்டி என்றாலே சண்டை இருக்கத்தானே செய்யும்? ஸ்ரீவில்லிபுத்தூரும் அதற்கு விதிவிலக்கல்ல. இரண்டு கோஷ்டியினரும் 'ராமன் வாழ்க', 'கண்ணன் வாழ்க' என்று முழக்கமிட, அங்கே ஒரு சிறிய 'பங்காளிச் சண்டை' ஆரம்பமானது. தோழியரை எழுப்ப எந்தக் கோஷ்டி முதலில் செல்ல வேண்டும் என்பதே அந்தச் சண்டை. விடியற்காலையில் எந்த நீதிபதியும் எழுந்திருக்காத அந்த காலத்தில், இரு கோஷ்டியினரும் பெரியாழ்வாரிடம் சென்று முறையிடலாம் என்று ஒருமனதாக முடிவு செய்து அவரிடம் சென்றார்கள். புஷ்பங்களைத் தொடுத்துக்கொண்டிருந்த பெரியாழ்வார், 'கேஸ்' ஓலைச்சுவடிகளைப் பார்த்தார். இதை 'அவுட் ஆப் தி கோர்ட் செட்டில்மெண்ட்' செய்யலாம் என்ற யோசனையில், "சிறுமியர்களே! தொண்டரடிப்பொடி ஆழ்வார் 'அயோத்தி எம்மரசே' என்று பெரிய பெருமாளை ராமராகப் பாடுகிறா...

ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன்

ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன் ஸ்ரீராம ஜன்ம பூமியில் குழந்தையான ’ஸ்ரீராம லல்லா’ எழுந்தருளுவதற்கு பல நூற்றாண்டுகளாக பலர் போராடினர். கடைசியாக அந்த வழக்கு முடிவுக்கு வந்து, பிராணப் பிரதிஷ்டையை டிவியில் தரிசித்த அன்று அதன் முன் விழுந்து சேவித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. எல்லோர் இல்லங்களிலும் ஒரு குழந்தை பிறந்த சந்தோஷத்துடன் இனிப்பு செய்து, வழங்கி இந்த பாரத தேசமே கொண்டாடியது. அயோத்தியில் ஸ்ரீராமரை சேவிப்பதற்கு முன், சென்னைக்கு சென்று காலணி கூட அணியாமல் வாதிட்ட வழக்கறிஞர் ஸ்ரீ பராசரனை சந்தித்து சேவித்தேன். (“நான் என்ன ஜீயரா? இவ்வளவு முறை சேவிக்கிறீர்கள்”). ’போற்றப் பறைதரும் புண்ணியன்’ என்று ஆண்டாள் கொண்டாடும் ஸ்ரீராமபிரானின் ஆலயத்தை இந்தப் புண்ணிய பூமியில் தரிசிக்க முடிந்ததே நம் மேலையார் செய்த புண்ணியத்தின் பயன். சமீபத்தில் ஒரு தலையங்கத்தில், அயோத்தி ராமர் சந்நிதியின் கருவறை முகப்பில், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத 'ஸ்ரீராமர் லிங்க பூஜை செய்தார்' என்ற கதைக்குரிய சிற்பம் தவறாக அமைக்கப்பட்டுள்ளது என்று கண்டித்துள்ளார்கள். 'நாம் வணங்கும் ராமரே, தம் ஆலயத்தில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்...

பொய்யிலாத மணவாள மாமுனி

பொய்யிலாத மணவாள மாமுனி  ’பொய்யிலாத’ என்று பதம் ஏன் வருகிறது என்று பல காலமாக தெரியாது. ஒரு முறை மதுரைப் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே. அரங்கராஜன் ஸ்வாமிகளைக் கேட்டபோது அதை விளக்கினார். அதைக் குறித்து கடைசியில் கூறுகிறேன்.  சில வருடங்களுக்கு வைகாசி விசாகம் அன்று ஆழ்வார் திருநகரியில் இருந்தேன். அன்றுதான் நம்மாழ்வார் மற்றும் திருவாய்மொழிப் பிள்ளையின் திருநட்சத்திரம். வீதிப் புறப்பாட்டின்போது மணவாள மாமுனிகள் திருவாய்மொழிப் பிள்ளையை சேவித்துவிட்டு, மாலை மரியாதைகளுடன் சில வாழைப்பழப் பிரசாதங்களுடன் விடைபெற்றுச் சென்றார்.  பிறகு நம்மாழ்வார் சந்நிதிக்குச் சென்றேன். வரிசையில் நின்ற என்னை ஒரு பெரியவர் அழைத்தார். சென்றேன்.  “இந்தப் பிரசாதத்தை கொடுக்க தகுந்தவரை தேடிக்கொண்டிருந்தேன். நீர் வாங்கிக்கொள்ளும். திருவாய்மொழிப் பிள்ளை மாமுனிகளுக்கு அளித்த பிரசாதம்” என்று கையில் வாழைப்பழத்தைக் கொடுத்தார்.  திருவாய்மொழிப் பிள்ளை தான் மணவாள மாமுனிகளின் ஆசாரியர்.  திருவாய்மொழிப் பிள்ளை, சரம தசையில் மிகுந்த கவலையுடன் இருந்தார். அதைக் கண்ட சீடர்கள், 'பரம பக்தராகிய உங்களுக்கு மரண பயம் இருக்காத...

பகுதி - 8 - திறவுகோல்

8. திறவுகோல் [சென்ற வாரம் கடைசிப் பகுதி - பராங்குசதாஸர் உள்ளம் உகந்து கண்ணி நுண் சிறுத்தாம்பை உபதேசிக்க ஆயத்தமானார். நாதமுனிகள் தலை தாழ்த்தி தியானித்து, வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் வண்குருகூர் ஏறெங்கள் வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை ஆள்வார் அவரே அரண்[1] என்று மதுரகவிகளை சிந்தனையில் வணங்கி விநயமுடன் உபதேசத்தைக் கேட்கச் சித்தமானார்.] “நாதமுனிகளே! ‘வேறொன்றும் நான் அறியேன்’ என்று நீங்கள் கூறியது, மதுரகவிகளை மேலும் நினைவுபடுத்துகிறது! மதுரகவிகள் தம் குருவான குருகூர் சடகோபனுக்கு முன்னரே சூரியோதயத்தை அறிவிக்கும் அருணோதயம் போலத் தோன்றியவர். தம் குருவிடமிருந்து பெற்ற ஞானத்தை மக்களிடம் நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற பரமகாருணிகரான மதுரகவிகள், தம்மை அதில் முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். குருவைத் தவிர தான் வேறு தெய்வமும் வேண்டேன் என்ற மனநிலையுடன், இரவும் பகலும் அவரது திருத்தொண்டிலேயே ஈடுபட்டுத் தன் வாழ்நாளைக் கழித்தவர்,” என்று கூறிய பராங்குச தாஸர், “எங்கள் பரம்பரையில் மதுரகவிகள் குறித்து ஒரு சம்பவத்தை நினைவுகூறுவார்கள்” என்றார். நாதமுனிகள் ஆவலுடன் காத்துக்கொண்டிரு...

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌…

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌… ஸ்ரீராமரைக்‌ குறித்து சிலர் பேசிய காணொளிகளைப்‌ பார்க்க‌ நேர்ந்தது. ஒன்று நான்‌ பெரும்‌ மதிப்பு வைத்திருக்கும்‌ திரு. தமிழருவி மணியன்‌ அவர்களின்‌ பேச்சு. அவர்‌ ஓர்‌ ஆத்திகர்‌. பொது வாழ்வில்‌ காமராஜர்‌ போல்‌ எளிமையையும்‌, நேர்மையையும்‌ கடைப்பிடிப்பவர்‌.  ஸ்ரீராமர்‌ சீதையைத்‌ தேடிக்கொண்டு செல்லும்‌ போது சுக்ரீவனைச்‌ சந்தித்து உதவி கேட்கிறார்‌. சுக்ரீவனைச்‌ சந்திக்கும்‌ இடத்தை வால்மீகி எப்படி அமைத்திருக்கிறார்‌? கம்பன் எப்படி கூறியிருக்கிறார் என்பதை விவரிக்கிறார். அவர்‌ கூறியதைச்‌ சுருக்கமாக‌ இங்கே தருகிறேன்‌. ராமனும்‌ லக்ஷ்மணனும்‌ சுக்ரீவனைத்‌ தேடிக்கொண்டு செல்கையில்‌, அனுமனைச்‌ சந்திக்கிறார்கள்‌. அனுமனைச்‌ சந்தித்த‌ போது லக்ஷ்மணன்‌ நடந்த‌ கதையை எல்லாம்‌ சொல்கிறான்‌. இதைக்‌ கேட்ட‌ அனுமன்‌ ராம லக்ஷ்மணர்களைத்‌ தன்‌ முதுகில் ஏற்றிக்கொண்டு சுக்ரீவன்‌ இருக்கும்‌ இடத்தை அடைகிறார்‌. இதே காட்சியைக் கம்பன் இதை மாற்றி அமைத்திருக்கிறார்‌. அனுமனுடன் சந்திப்பு நிகழ்ந்த‌ பின்‌, "நீ போய்‌ சுக்ரீவனை அழைத்துக்‌ கொண்டு வா" என்று கூற‌, அனுமன்‌ ஓடிச்‌ சென்று சுக்ரீவனை அழை...

பகுதி 5 - மதுரகவி

5. மதுரகவி மதுரைச் சங்கத்திற்கு முற்பட்ட காலத்திலேயே, சங்க இலக்கியங்கள் தோன்றுவதற்கு முன்னே, வடவேங்கடம் முதல் தென்குமரிவரை பரந்து விரிந்த தமிழ் தேசத்தில், தென்திசையான பாண்டி நாட்டில், அகத்திய குறுமுனிவர் தம்முடைய சீடர்களுடன் ஒரு சங்கம் அமைத்துத் தமிழ்ப் பயிரைப் பொதிய மலையிலே[1]  வளர்த்தார். அதனால் இம்மலை அகத்தியமலை என்றும் பெயர் பெற்றது. ஆனால் இம்மலைக்குச் செல்வது ஆபத்து என்று ஒரு கதை உண்டு[2].. சீதையைத் தேடப் புறப்படும் வானர வீரர்களை நோக்கிச் சுக்ரீவன் வழி விவரிக்கையில், “அகத்திய மலையில் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது” என்கிறான். தமிழ் முனிவரும், தமிழ் சங்கமும் இருக்கும் இடத்தில் என்ன ஆபத்து நிகழப்போகிறது என்று அனைவரும் யோசிக்க, சுக்ரீவன் சொல்கிறான், “பொதிய மலையைத் தூரத்திலிருந்து கண்டதும், ‘என்ன அழகான மலை! அங்கே அகத்திய குறுமுனிவரை வணங்கிவிட்டுச் செல்லலாம்’ என்று தோன்றும். அதுவே ஆபத்து! அங்கே எப்போதும் தமிழ்ப் பாடல், தமிழிசை, தமிழ்க் கூத்து என முக்கனிகள் போல மூவகைத் தமிழ் விருந்து நிகழ்ந்துகொண்டே இருக்கும். அத்தகைய விருந்தை விட்டுப் போக யாருக்குத்தான் மனம் வரும்? அங்கே சென்றால...

பகுதி 4 - தமிழ்க்கோயில்

4. தமிழ்க்கோயில் திருவரங்கத்திலிருந்து குடந்தையை நோக்கிக் காவேரி ஓடும் வழியே புறப்பட்டார் நாதமுனிகள். குழந்தையுடன் துணைக்கு வரும் தாய் போல காவிரி காட்சி அளித்தது. ஆற்றின் வேகம் அதிகமாக இருந்த இடங்களில், நீரின் சலசலப்பு நாதமுனிகளைச் 'சீக்கிரம், சீக்கிரம்' என்று கூறுவது போல இருந்தது. ஒருபுறம் காவிரியும், மறுபுறம் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் காண்பவர் மனதை ஈர்க்கும் விதமாக இருந்தன. பசும் பயிர் வயல்களும், கரும்பு, வாழைத் தோட்டங்களும், தென்னை மரங்களும் மாறி மாறி வந்தன. நடுவே வாய்க்கால்களும், ஓடைகளும், அதைச் சுற்றிப் பல வண்ணப் பூக்களும் மனதைக் கொள்ளையடித்தன. குளங்களில் செந்தாமரையும், அல்லிப்பூவும் மலர்ந்திருந்தன. அவற்றின் இலைகள் தண்ணீரைக் கவசம் போல மூடியிருந்தன. வயல்களில் கூட்டம் கூட்டமாக நீண்ட கழுத்தையுடைய வெண்ணிறக் கொக்குகள் பறந்துகொண்டிருந்தன. குளங்களில் செங்கால் நாரைகள் முனிவர்களைப் போல் தியானத்தில் இருந்தன. மரப் பொந்துகளில் கிளிகள் எட்டிப்பார்த்தன. ஆண் தூக்கணாங்குருவிகள் அழகாக நெய்த கூட்டைப் பெண் குருவிகள் நோட்டமிட, ஆண் குருவியோ தான் கட்டிய கூடு பெண் குருவியைக் கவரவேண்டுமே ...

பகுதி 3 - லோகசாரங்க மாமுனிவர்

3.லோகசாரங்க மாமுனிவர் நாதமுனிகளும் யாத்திரிகர்களும் கோயிலை வலமாகச் சுற்றிவந்து வாசலை அடைந்தபோது, அங்கே இரு பக்த சிரேஷ்டர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அழகில் மயங்கி, இவர்கள் அஸ்வினி குமாரர்களோ என்று பாகவதர்கள் உற்றுப் பார்த்தனர். அவர்களின் முகச்சாயல் நாதமுனிகளின் வம்சத்தவர் என்பதை உணர்த்தியது. அவ்விருவரும் நாதமுனிகளையும், யாத்திரிகர்களையும் வணங்கினர். ’இவர்கள் யாராக இருக்கும்?’ என்று பாகவதர்கள் கேட்க நினைக்கும் முன்னரே, நாதமுனிகள், “இவர்கள் இருவரும் என் மருமக்கள், வரதாசாரியார் மற்றும் கிருஷ்ணமாசாரியார். எனக்குத் தெரிந்த வேதமும் இசையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார். “ஆஹா! தாங்களிடம் உபதேசம் பெறுவதற்கு இவர்கள் பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். இவர்கள், [1]காளம், வலம்புரி என முழங்குவார்கள்[2] என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை!” என்றார் ஒரு பாகவதர். “உங்கள் நல்வாக்கு அப்படியே பலிக்கட்டும்!” என்றார் நாதமுனிகள். அந்த வைணவர் எதை நினைத்துச் சொன்னாரோ நாம் அறியோம். ஆனால், இவர்களே பிற்காலத்தில் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் எனப் போற்றப்பட்டு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை இசை வடிவி...