Skip to main content

Posts

Showing posts from June, 2026

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் 1. இந்தப் புத்தகம் எதைப் பற்றியது? ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப்படும் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தை’ அடிப்படையாகக் கொண்டு, குட்டிக் குழந்தைகள் படித்து மகிழும் வகையில் குட்டிக் குட்டிக் கதைகளாக எழுதப்பட்டவை. 2. அது என்ன திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்? எங்களுக்குச் சொல்லக் கூடாதா? பொதுவாக நீதிக் கதைகள் என்றாலே ‘முயலும் ஆமையும்’, ‘விறகுவெட்டியும் தேவதையும்’ போன்ற கதைகள்தான் நம் நினைவுக்கு வரும். இவை முற்றுப்புள்ளிகளைத் தாராளமாக உபயோகித்து, ஒரு பக்கத்திற்கு மிகாமல் அழகிய படங்களுடன், எழுத்துக் கூட்டிப் படிக்கும் குழந்தைகளுக்கு வியர்க்காமல் சுலபமாகப் படிக்கும்படி அமைந்தவை. ஆனால், இவை பெரும்பாலும் இறக்குமதிச் சரக்கு. நம்மூரில் அப்படி ஏதும் இருக்கிறதா? இருக்கிறது! பலரும் அறியாத 'திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்' என்ற ஒரு பொக்கிஷம். ஸ்ரீராமானுஜருக்கும் 'திருக்கோளூர் பெண்பிள்ளை' என்ற ஒரு சிறுமிக்கும் இடையே நடந்த உரையாடலில் 81 அற்புதமான கதைகள் ஒளிந்துள்ளன. 3. எதை அடிப்படையாகக் கொண்ட கதைகள் இவை? இவை ரா...