Skip to main content

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குட்டிப் பெண்ணின் குட்டிக் கதைகள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்




1. இந்தப் புத்தகம் எதைப் பற்றியது?
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் போற்றப்படும் ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தை’ அடிப்படையாகக் கொண்டு, குட்டிக் குழந்தைகள் படித்து மகிழும் வகையில் குட்டிக் குட்டிக் கதைகளாக எழுதப்பட்டவை.

2. அது என்ன திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்? எங்களுக்குச் சொல்லக் கூடாதா?
பொதுவாக நீதிக் கதைகள் என்றாலே ‘முயலும்

ஆமையும்’, ‘விறகுவெட்டியும் தேவதையும்’ போன்ற கதைகள்தான் நம் நினைவுக்கு வரும். இவை முற்றுப்புள்ளிகளைத் தாராளமாக உபயோகித்து, ஒரு பக்கத்திற்கு மிகாமல் அழகிய படங்களுடன், எழுத்துக் கூட்டிப் படிக்கும் குழந்தைகளுக்கு வியர்க்காமல் சுலபமாகப் படிக்கும்படி அமைந்தவை. ஆனால், இவை பெரும்பாலும் இறக்குமதிச் சரக்கு.

நம்மூரில் அப்படி ஏதும் இருக்கிறதா?
இருக்கிறது! பலரும் அறியாத 'திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியம்' என்ற ஒரு பொக்கிஷம். ஸ்ரீராமானுஜருக்கும் 'திருக்கோளூர் பெண்பிள்ளை' என்ற ஒரு சிறுமிக்கும் இடையே நடந்த உரையாடலில் 81 அற்புதமான கதைகள் ஒளிந்துள்ளன.

3. எதை அடிப்படையாகக் கொண்ட கதைகள் இவை?
இவை ராமாயணம், மகாபாரதம், புராணங்கள் மற்றும் குருபரம்பரையில் உள்ள முக்கியமான கதைகளை அடிப்படையாகக் கொண்டவை.

4. ஏற்கனவே சில திருக்கோளூர் பெண்பிள்ளை கதைகள் புத்தகங்கள் இருக்கின்றனவே, இதில் என்ன விசேஷம்?
பல புத்தகங்கள் இருக்கின்றன. இக்கதைகளைக் குழந்தைகளுக்குச் சுலபமாகப் புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. இக்கதைகளில் உள்ள கடினமான தத்துவச் சொற்களை அனைவரும் புரியும் எளிய தமிழில் குட்டிக் கதைகளாக எழுதியுள்ளேன்.

5. இந்தப் புத்தகம் எந்த வயதினருக்கானது?
7 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்குப் புரியும் வகையில் மிக எளிய நடையில் இது எழுதப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் குழந்தைகளுக்கு மட்டும் அல்ல, குழந்தை உள்ளம் கொண்ட உங்களுக்கும் தான்! அதனால் நீங்களும் தாராளமாகப் படித்து மகிழலாம். இந்தப் புத்தகத்தை உங்கள் குழந்தைகளுக்குக் ‘பெட்-டைம்’ (Bedtime) கதைகளாகப் படித்துக் காண்பித்து, அது அவர்களுக்குப் புரிந்துவிட்டால் அதுவே இந்நூலுக்குக் கிடைத்த வெற்றி.

6. புத்தகத்தின் மொழி நடை எப்படி இருக்கும்?
ஆங்கிலமோ அல்லது கொச்சைத் தமிழோ கலக்காத எளிய நடையில் எழுதியிருக்கிறேன். கதைகளை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், கதைகளின் மூலம் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்றுத் தரவும் உதவக்கூடிய புத்தகம் இது!

7. படங்கள் உண்டா?
ஓவியர் ரமணனின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள 85-க்கும் மேற்பட்ட ‘பேசும் படங்கள்’ குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்துছেন. ஆங்கிலத்தில் உள்ளது போல, குழந்தைகளுக்குத் தரமான, அழகான புத்தகங்கள் தமிழில் இல்லையே என்ற குறையை இது நீக்குகிறது.

8. எங்கள் குழந்தைகள் எல்லாம் ’ஜென்-சி’ வகை! இந்தப் புத்தகத்தைக் கொடுத்தால் ஓடிவிட மாட்டார்களா?
கவலைப்படாதீர்கள்! இன்றைய ‘ஜென்-சி’ (Gen-Z) தலைமுறைக்கு ஏற்றவாறு, கதையின் உணர்வுகளை எளிதில் கடத்துவதற்காக ஆங்காங்கே 'எமோஜி'கள் (Emojis) பயன்படுத்தப்பட்டுள்ளன. (உதாரணமாக: சோகம் 😣 அல்லது மகிழ்ச்சி 😊).

9. வேறு என்ன சிறப்புகள் இருக்கின்றன?
சிறுவர்கள் வாசிக்கும்போது சலிப்படையாமல் இருக்கவும், ஒரு சிறந்த விஷுவல் அனுபவத்தைக் கொடுக்கவும், கதைகளின் வரிகளும் வெவ்வேறு வண்ணத்தில் வடிவமைக்கப்படுள்ளது. இதைத் தவிர, புத்தகத்தின் ஆரம்பத்தில் வண்ணமயமான ‘போஸ்ட்-இட்’ (Post-it) குறிப்புகள் இருக்கிறது. இவை கதையின் 'ஆதாரத்தையும்', கதாபாத்திரத்தின் 'அடையாளத்தையும்' காட்டும். இதை வைத்து நீங்கள் உங்கள் கற்பனைக்கு ஏற்ப விளையாடவும் செய்யலாம்!

10. புத்தகத்தின் தரம் மற்றும் வடிவமைப்பு எப்படி இருக்கும்?

பக்கங்கள்: 350 பக்கங்கள் கொண்ட முழு வண்ணமயமான புத்தகம் (அதில் 85 முழுப் பக்க வண்ண ஓவியங்கள்). தரம்: உயர்தர 80 GSM பேப்பர், Crown ¼ அளவு.

11. இந்தப் புத்தகத்தை வாங்குவதால் என்ன பலன் கிடைக்கும்?
இன்றைய ‘ஏ.ஐ’ (AI) மற்றும் ரோபோடிக்ஸ் உலகில், அறிவு அசுர வேகத்தில் வளர்ந்தாலும் அன்பும் பண்பும் தொலைந்து வருகின்றன. ஒழுக்கமில்லாத அறிவு ஆபத்தானது! குழந்தைகளின் மனமெனும் விளைநிலத்தை இப்போதே பக்குவப்படுத்தி அதில் அன்பையும், பண்பையும் போதிக்கும் நம் சனாதன தர்மத்தின் விதைகளைத் தூவினால், வருங்காலத்தில் அதன் விளைச்சல் அனைவருக்கும் நன்மையளிக்கக் கூடியதாகவே இருக்கும்.

12. புத்தகத்தின் விலை மற்றும் வெளியீடு எப்போது?
முன்பதிவு விலை: ₹ 600/- (350 பக்கங்கள் கொண்ட முழு வண்ண நூல் - இம்மாத இறுதி வரை மட்டும்). ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை சார்பாக இந்தப் புத்தகம் அடக்க விலைக்கே வழங்கப்படுகிறது. முன்பு கூறியது போல் குறைந்த அளவே அச்சிடப்பட உள்ளதால், விரைவாக முன்பதிவு செய்துகொள்ளவும்.

13. புத்தகத்தை முன்பதிவு செய்வது எப்படி?
முன்பதிவு விவரங்கள் - மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.

14. நான் ஏற்கனவே முன்பதிவு செய்துவிட்டேன், எனக்கு எப்போது கிடைக்கும்?
ஜூன் 25 - பெரியாழ்வார் திருநட்சத்திரம் அன்று புத்தகம் வெளியிடப்பட்டு, அதற்குப் பின் முன்பதிவு செய்த வரிசைப்படி அனைவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

-சுஜாதா தேசிகன்
6.6.2026

Comments