Skip to main content

Posts

Showing posts from February, 2022

கும்மாயம்

 கும்மாயம்   மனித மூளை விசித்திரமானது, அதற்கு விடை தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஏதாவது ஒன்றுக்கு விடை தெரியவில்லை என்றால் ஆழ்மனதில் அந்த விடைக்காகக் காத்துக்கொண்டிருக்கும். எதேர்ச்சையாக விடை கிடைக்கும்போது ஆனந்தப்பட்டு அடுத்த கேள்விக்கான விடையைத் தேடத் தொடங்கும்.    உ.வே.சா அவர்கள் மணிமேகலை என்ற நூலை ஆராய்ந்தபோது அதில் வரும் பல சொற்களுக்கு அவருக்குப் பொருள் கிடைக்கவில்லை. பல புத்தகங்களை ஆராய்ந்தும், பலரிடம் கேட்டும் தெரிந்துகொண்டார். அப்படி ஆராய்ச்சி செய்தபோது மணிமேகலையில் 27வது ‘சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதை’யில்   “பயற்றுத் தன்மை கெடாது கும்மாயம், இயற்றி” (அடி, 175-6)   என்று ஒரு பகுதியில் ‘கும்மாயம்’ என்ற சொல்லின் பொருள் அவருக்குத் தெரியவில்லை. பலரைக் கேட்டுப்பார்த்தும் பயன் இல்லை.    காடும் காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும் என்பது போல, கோயிலும் கோயில் சார்ந்த இடம் கும்பகோணம் என்று சொல்லலாம். பல பிரசித்தி பெற்ற திருகோயில்கள் அங்கே இருக்கின்றன. உ.வே.சா கும்பகோணத்தில் இருந்த சமயம் ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் சந்நிதி பட்டாசாரியர் உ.வே.சா அவர்களின் வீட்டிற்கு ஒரு முறை வந்தபோத

செண்டலங்காரர் தெட்டபழம்

செண்டலங்காரர் தெட்டபழம்   தமிழில் சுமார் நூறு வார்த்தைகளை மட்டுமே நாம் அன்றாடம் பேசவும் எழுதவும் உபயோகிக்கிறோம். ஆழ்வார்கள் உபயோகித்த வார்த்தைகள் பல ஆயிரம் இருக்கும். நம் சொல்லகராதி (vocabulary) மிகக் குறைவு, ஆதலால் நமக்கு எளிய உரைகள் தேவைப்படுகின்றன. கீழே உள்ள பெரியாழ்வார் பாசுரத்தில் எவ்வளவு வார்த்தை உங்களுக்கு தெரியும் என்று பாருங்கள்.   பருப்பதத்துக் கயல் பொறித்த  பாண்டியர் குலபதி போல்  திருப் பொலிந்த சேவடி என்  சென்னியின் மேல் பொறித்தாய்   எளிய விளக்கம்: மேரு மலையில் தனது கயல் (மீன்) சின்னத்தை வெற்றிக்கு அடையாளமாகப் பொறித்த பாண்டியர் குலத்துப் பேரரசனைப் போன்று அழகு பொலிந்த திருவடிகளை என் தலை மீது அடையாளமாக (பெருமாள்) பொறித்தருளினான் என்று ஆழ்வார் கூறுகிறார். இன்னும் கொஞ்சம் ஆழமாக இந்தப் பாசுரத்தை அனுபவிக்க மேலும் சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும்.   பெரியாழ்வார் காலத்தில் மூன்று பாண்டியர்கள் அரசு செய்தார்கள். அவர்கள் முறையே கோச்சடையான், மாறவர்மன், பராந்தகன். பராந்தகன் பரம வைஷ்ணவன். ஆனால் அவன் தந்தை மாறவர்மன் அப்படி அல்ல. பெரியாழ்வார் காலத்தில் சமயவாதம் நிகழ்ந்து மாறவர்மன்

ஓலைப் பத்திரக் கதைகள்

ஓலைப் பத்திரக் கதைகள் சமீபத்தில் திரு உ.வே.சாவின் கட்டுரை தொகுப்பு ஒன்றை படித்தேன். பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வு சம்பவங்களின் தொகுப்பாக, 18-19ம் நூற்றாண்டு வாழ் தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவண படுத்துகிறது என்று சொல்லலாம்.   மருத பாண்டியர்கள் வீரத்துக்கு மட்டும் அல்லாமல், பக்தியும், புலவர்களையும், தம் மக்களையும் காப்பாற்றும் குணம் படைத்தவர்கள். அதில் மருத  பாண்டியரைப் பற்றிய ஒரு கர்ண பரம்பரையாக சொல்லப்பட்ட கதை ஒன்றை படித்தேன்.  முள்ளால் எழுதிய ஓலை ! மருத பாண்டியர் தம் இறுதிக் காலத்தில் தங்களைவிட வலியவரான சிலருடைய பகைமைக்கு இலக்கானார்.  பல தந்திரங்கள் செய்து பகைவர்களின் கைகளில் அகப்படமால் தப்பித்தார். ஒரு சமயம் திருக்கோட்டியூர் பெருமாள் கோயிலுக்கு எதிரிலுள்ள மண்டபமொன்றில் தங்கி இருந்தார்.  வலக்கையில் ஒரு கொப்புளம் உண்டாகி அவரை வருத்தியது. பகைவர்கள் ஊர் எல்லைக்குள் வந்துவிட்டார்கள் என்ற செய்தி ஒரு அந்தரங்க வேலையாள் வந்து சொன்ன போது வீரத்தால் அவருடைய இரத்தம் கொதித்தது. ஓர் ஆடையை உடனே கிழித்து அவர் கைக் கொப்புளத்தை இறுகக் கட்டிக்கொண்டு குதிரையில் புறப்பட்டார்.

பயாஸ்கோப்பில் ‘பதேர் பாஞ்சாலி’ !

பயாஸ்கோப்பில்  ‘பதேர் பாஞ்சாலி’ ! இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன் என் சிறுவயது சினிமா ஆர்வம் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பள்ளிக்கூட வாசலில் ‘பயாஸ்கோப்’பில் படம் பார்க்கும்போது,  ‘அது எப்படி வேலை செய்கிறது’ என்று ஆர்வமாகப் பார்த்திருக்கிறேன். வேலைக்குச் சென்றவுடன் முதல் சம்பளத்தில் பயாஸ்கோப் ஒன்றை வீட்டுக்கு வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஒரு பொருட்காட்சியில் ’வீட்டிலே சினிமா’ என்று ஒரு சின்ன புரெஜக்டர் வாங்கி கதவு எல்லாம் அடைத்து, தாத்தாவின் 9×5 வேட்டியைத் தொங்கவிட்டு,  100 வாட் பல்ப் சூடாகி நெருப்பு வரும் வரை படம் ஓட்டியிருக்கிறேன். எட்டாவது படிக்கும்போது, பள்ளி மைதானத்தில் ‘உத்தம புத்திரன்’ ஏற்பாடு செய்திருந்தார்கள். படத்தை ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிவாஜி ஜன்னல் வழியாக ஒரு செடியின் கொடியைப் பிடித்துத் தாவிப் போனபோது, படச்சுருள் எரிந்து சிவாஜிக்கு என்ன ஆயிற்று என்று தெரியாமலேயே கல்லூரிப் படிப்பை முடித்தபிறகு உத்தம புத்திரன் சிடி வாங்கி, ’குதித்த சிவாஜி என்ன செய்தார்’ என்று தெரிந்துகொண்டேன். சமீபத்தில் வந்த ’மாநாடு’ படத்தைக் கூட வீட்டில் இருக்கும் புரெ

ஆண்டார் பல்லக்கு முன்னே; அழகர் பல்லக்கு பின்னே !

ஆண்டார் பல்லக்கு முன்னே; அழகர் பல்லக்கு பின்னே ! இந்த பதிவை படிக்கும் முன் கையில் ஒரு பேப்பர், பென்சில் இருந்தால் உசிதம்.  “A chain reaction is a sequence of reactions where a reactive product or by-product causes additional reactions to take place. In a chain reaction, positive feedback leads to a self-amplifying chain of events.”  என்கிறது wikipedia   இந்த பதிவும் கிட்டதட்ட அதே மாதிரி தான்.  படிக்க ஆரம்பிக்கும் போது  பல பெயர்கள் வரும்.கையில் நீங்கள் வைத்துக்கொண்டு இருக்கும் பேப்பர் பென்சிலை கொண்டு பெயர்கள் வரும் போது அதை  எழுதிக்கொண்டு வாருங்கள் பிறகு ஒவ்வொருவருக்கும் உள்ள தொடர்பை கோடுகள் போட்டு குறித்து வைத்துக்கொண்டு மீண்டும் படித்து பாருங்கள்.  நோட் பேட், எக்ஸெல் எல்லாம் நேர விரயம்...  2016ல் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை சேவிக்க ரூ250/= க்யூவே பெரிதாக இருக்க, ’அப்பால’ இருக்கும் இன்னொரு ரங்கநாதப் பெருமாளாகிய அப்பக்குடத்தானை செவிக்க வண்டியைத் திருப்பினேன். தன் வலது கையில் அப்பக்குடத்தை வைத்திருக்கும் இந்தப் பெருமாளுக்கும் எனக்கும் ரகசிய சம்பந்தம் ஒன்று உண்டு. சொல்கிறேன்.  விவரம் தெரியா

பாகவத திருப்பாவை - 25 ( ஒளித்து )

 பாகவத திருப்பாவை - 25 ( ஒளித்து ) ஒருத்தி மகனாய்ப் பிறந்து * ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத் *  தரிக்கிலான்ஆகித் தான் தீங்கு நினைந்த *  கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் **  நெருப்பென்ன நின்ற நெடுமாலே! * உன்னை அருத்தித்து வந்தோம்; பறை தருதியாகில் * திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி *  வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்  தேவகிக்கு மகனாகப் பிறந்து அதே இரவில்  யசோதைக்கு மகனாக ஒளித்து வளர்ந்துவர, அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த  கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்! எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து  வந்தோம்; விரும்பியதைத் தருவாயானால்  லட்சுமி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும்  உன் வீரத்தையும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்வோம்.  இந்தப் பாசுரத்தில் ஒளிந்து என்று கூறாமல், ஒளித்து என்று ஆண்டாள் கூறுகிறாள். ஒளிந்து என்றால் கம்சனுக்குப் பயந்து ஒளிந்துகொண்டு என்ற பொருளில் வரும். பெருமாளுக்குப் பயம் ஏது ?  இதை ஆண்டாள் பாகவதத்தில் எங்கே எடுத்திருப்பாள் என்று தேடியபோது, கண்ணனையும் பலராமனையும் கம்சன் அழைக்க அங்கே சென்று மல்லர்களை வீழ்த்த அ

மனிதன் உருவாக்கிய புத்திசாலி

 மனிதன் உருவாக்கிய புத்திசாலி வருடத்தின் ஆரம்பத்தில் தொடங்கி, பொங்கல் வரை தமிழகத்தில் ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ நடைபெறும். ‘சென்னை புத்தகக் கண்காட்சி’ என்று பொதுவாகத் தொலைக்காட்சி செய்தித்தாள் போன்ற ஊடகங்கள் அழைத்தாலும் , அதன் ’official’ பெயரில் ‘கண்’ என்ற வார்த்தை இருக்காது – சென்னை புத்தகக் காட்சிதான்! யார் கண் பட்டதோ இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளார்கள். ( தற்போது இந்த மாதம் 16 தொடங்கி மார்ச் 3 வரை நடக்க உள்ளது) பல வருடங்களாக தொடர்ந்து ’புக் ஃபேர்க்கு’ சென்றுக்கொண்டிருக்கிறேன். (தமிழ் கூறும் நல்லுலகம் Book Fair என்று தான் அழைப்பார்கள்). பல மாற்றங்களைப் பார்த்திருக்கிறேன். புத்தகக் கடைகளுக்கு நடுவில் சாமியார் மடங்களும்,  புத்தகத்துடன் நேந்திரம் சிப்ஸ், ஜூஸ் என்று சாம்பிளை வாயில் திணிக்க,  புனைவுகள் சுருங்கி அபுனைவுகள்  (non-fiction) காற்றடித்த பலூன் போலப் பெரிதாகியதைப் பார்க்க முடிந்தது.  சரியாக சொல்ல வேண்டும் என்றால் இவை வணிகப்புனைவுகள். இலக்கியப் புனைவுகள் மிக மிகக் குறைவாகவே வருகிறது. ஏன் என்ற காரணத்தைச் சொன்னால் எழுத்தாளர்கள் கோவித்துக்கொள்வார்கள்

ஜான்ஸ்போர்ட்டும் ஜோல்னா பையும்

 ஜான்ஸ்போர்ட்டும் ஜோல்னா பையும் நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்  விதவிதமாக ”ஸ்கூல் பேக்” எடுத்துக்கொண்டு வருவார்கள். கரூர் கைத்தறி படுக்கை விரிப்பில் செய்த ஜோல்னா பை ; காக்கி வண்ணம், கேன்வாஸ் துணியில் இரண்டு தோள்பட்டையுடன் பின்புறத்தில் ’டக்பேக்’ மில்டரி பைகள்( உபத்திரவம் இல்லாமல் உச்சா போவதற்குச்  சௌகரியம்).  சேட்டுக் கடையில் பணம் வைக்கும் அலுமினியத்தில் பெட்டி; வயரில் பின்னிய கூடை கூட எடுத்துவருவார்கள். கல்லூரி படிக்கும்போது புத்தகங்களைக் கையில் எடுத்துக்கொண்டு செல்வது மீசை வைத்த ஆண் மகனுக்குக் கவுரவம். சந்தேகமாக இருந்தால் இப்போதே  சின்னி ஜெயந்த் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் பாருங்கள். இன்று எல்லாம் மாறிவிட்டது. எல்லோர் முதுகிலும்  ’பாக்பேக்’ ( backpack) ஏறிக்கொண்டு விட்டது. பாக்பேக் இந்தியாவிற்கு 90களின் இறுதியில் வந்தது. வந்த சமயம் எனக்கு அதன் மீது காதல் ஏற்பட்டது. முன்பு கடைசிப் பக்கத்தில் ஏற்பட்ட சட்டை காதல் பற்றி எழுதியிருந்தேன் அல்லவா? அதே போல் தான் இதுவும். கொஞ்சம் காஸ்ட்லியான அவசரக் காதல். சொல்லுகிறேன். அலுவலகத்தில் சக ஊழியர் அமெரிக்காவிலிருந்து திரும்பினார். எல்லோர

பாகவத திருப்பாவை - 24 ( போற்றி )

பாகவத திருப்பாவை - 24 ( போற்றி ) அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடிபோற்றி! *  சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி! * பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி! *  கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி! ** குன்று குடையாய் எடுத்தாய்! குணம் போற்றி! * வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி! * என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் * இன்று யாம் வந்தோம் இரங்கு ஏலோர் எம்பாவாய் மஹாபலி காலத்தில் இவ்வுலகங்களை அளந்த உன் திருவடிகளைப் போற்றுகிறோம்! தென் இலங்கை சென்று இராவணனை அழித்தாய்! உன் திருத்தோள் வலிமையைப் போற்றுகிறோம்! சகடாசுரனைக் கட்டுக்குலைய உதைத்தாய்! உன் புகழைப் போற்றுகிறோம்! கன்று வடிவில் வந்த வத்ஸாசுரனை எறிக்கருவியாகக் கொன்றாய் ! உன் திருவடிகளைப் போற்றுகிறோம்! கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, கோகுலத்தைக் காத்தவனே, உன் குணத்தைப் போற்றுகிறோம்! பகைவர்களை அழிக்கும் உன் கையில் உள்ள வேலைப் போற்றுகிறோம்! இவ்வாறு எப்பொழுதும் உன் வீரத்தைப் பாடி, எங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இங்கு வந்துள்ளோம். நீ எங்களுக்கு அருள் செய்ய வேண்டும். சென்ற பாசுரத்தில் ஆண்டாளும் அ

ஸ்ரீ சொட்டை நம்பி S/O ஸ்ரீ ஆளவந்தார்

 ஸ்ரீ சொட்டை நம்பி S/O ஸ்ரீ ஆளவந்தார்  ஸ்ரீ ஆளவந்தாருக்கு நான்கு குமாரர்கள். திருவரங்கப் பெருமாள் அரையர்,தெய்வத்துக்கரசு நம்பி, பிள்ளையாரசு நம்பி, சொட்டை நம்பி.  நாதமுனிகளின் வம்சத்துப் பெயரான ‘சொட்டை’ குலமே இவருடைய திருநாமம். குருகைகாவலப்பனை ஆளவந்தார் சந்திக்கும்போது அவர் யோக நிலையில் இருந்தார். அப்போது கண் விழித்துச் சொட்டை குலத்திலிருந்து யாரேனும் இருக்கிறீர்களா என்று கேட்டார் என்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  பெருமாள் சம்பந்தப்பட்டப் பொருட்களுக்குப் பல பெயர்கள் உண்டு கிட்டத்தட்ட கோட்-வேர்ட் மாதிரி. உதாரணமாக, பெருமாளுக்கு அலங்காரம் செய்யும்போது இரண்டு துணிகளை ஒன்றாக ஊசி நூலைக்கொண்டு சேர்த்துத் தைக்கும்போது அர்ச்சக ஸ்வாமிகள் ‘ஊசியைக் கொண்டு வாரும்’ என்று சொல்லாமல். ‘ஆண்டாளைக் கொண்டு வாரும்’ என்று தான் சொல்லுவார்கள்.  ஸ்ரீரங்கத்தில்  இதே போல் சொட்டை என்ற வார்த்தைக்கும் மிகுந்த ஏற்றத்துடன் ஓர் அர்த்தம் இருக்கிறது. நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு கண்டருளும்போது அவருடைய திருவடிகளை இணைக்கும் கம்பிகளுக்குச் சொட்டை என்று பெயர். இருபுறமும் அதைக் கயிறு ( பாசம் என்று கூறுவார்கள் ) கொண்