Skip to main content

Posts

Showing posts from May, 2024

தமிழ் தொடரடைவு

  தமிழ் தொடரடைவு இன்றைய செயற்கை நுண்ணறிவின் இயந்திர கற்றல் மற்றும் ஆழமான கற்றல் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி பயிற்சியளிக்கப்பட்ட வழிமுறைகளைக் கொண்டு மொழியியலுக்கு ஏற்ற மாடல் கொண்டு முழு திவ்யப் பிரபந்தத்தையும் அதன் உரைகளையும் கொண்டு வந்துவிட்டால், பல விஷயங்கள் நமக்குச் சாத்தியமாக்கும். உதாரணத்துக்கு ஆழ்வார்கள் எவ்வளவு முறை ‘அடியார்’ என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்கள். எந்த ஆழ்வார் அதிகம் உபயோகித்துள்ளார் போன்ற கேள்விகளைக் கேட்கலாம். ஆழ்வார் பாடல்களைக் கொண்டு நரசிம்ம அவதாரம் குறித்து பத்து நிமிட உபன்யாசம் செய் என்றால் உடனே செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று ஸ்ரீ.உ.வே வெங்கடேஷ் ஸ்வாமி போல உபன்யாசம் செய் என்றால் தோணி சிக்ஸ் அடித்த மாதிரி நரசிம்மர் அடித்தார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படக் கூடாது! திவ்யப் பிரபந்தத்துக்கு ‘Concordance’ முதலில் தேவைப்படும். [Concordance - ’an alphabetical list of the words (especially the important ones) present in a text, usually with citations of the passages in which they are found’] தமிழில் தொடரடைவுகள். உதாரணமா

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்!

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்! கோவிட் வருவதற்கு ஒரு வாரம் முன்  அமெரிக்கா சுற்றுலா விசா வாங்கச் சென்றிருந்தேன். பராக்குப் பார்க்கும் போது ஒன்றைக் கவனித்தேன். எல்லோரும் ஒழுங்கான  உடை, திருத்தப்பட்ட  முகமண்டையுடன், நாற்றம் அடிக்காத ஷூ-சாக்ஸ் கையில் ஒரு ஃபைல் என்று ஒழுங்காக வந்திருந்தார்கள். பெரும்பாலோர் முகத்தில் கனவுகளுடன் பதற்றமாகக் காணப்பட்டார்கள் ( விசா ரிஜக்ட் ஆகிவிடுமோ ?). டோக்கன் நம்பர் கூப்பிட்ட சமயம் சிலர் கை கூப்பி வேண்டிக்கொண்டு சென்றார்கள். அமெரிக்காவிற்குள் போவதற்குத் தடையாக நம்மை அறியாமல் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்று பயந்துகொண்டு, கேட்ட வேள்விகளுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற துடிப்பில் பதில் கூறினார்கள். இவர்களுடைய அடுத்த இலக்கு பச்சை அட்டை வாங்கி அந்தச் சொர்க்கப் பூமியில் நிரந்தரமாக வாசம் செய்வது தான். அமெரிக்காவுக்குப் போவதற்கே இந்த மாதிரி தயார் செய்துகொண்டால், பரமபதம் செல்ல எப்படி எல்லாம் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் ?  ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கரின் அமுத மொழி ஒன்றில் நம்மைத் தனியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ‘இந்த மானிடப் பிறவி அடைந்திருப்பதற்கு

திருவாய்மொழி ஆழ்வார்கள் வாசக மாலை.

திருவாய்மொழி ஆழ்வார்கள் வாசக மாலை. அமுதனிடம் நம்மாழ்வாரை வரையச் சொன்னேன்.இதுவரை நாம் பார்த்த ஆழ்வார்களின் படம் மாதிரி இல்லாமல் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றேன். நம்மாழ்வாரில் எல்லா ஆழ்வார்களும் அடக்கம் என்று சொன்னேன். ஒவ்வொரு ஆழ்வாரும் என்ன அம்சம் அல்லது அடையாளம் என்று தெரிந்துகொண்டு பன்னிரண்டு ஆழ்வார்களையும் வரைந்தான். மதுரகவி எப்பொழுதும் நம்மாழ்வாருக்கு அடியவர் என்பதையும் கூறினேன். நாதமுனிகள் காலத்தில் ஆழ்வார்களின் அருளிச் செயல் பாசுரங்கள் இல்லை. நாதமுனிகள் அதைத் தேடி அலைந்து ‘கண்ணிநுண் சிறுதாம்பை’ வைத்துக்கொண்டு நம்மாழ்வார் மூலம் திருமாய்மொழியையும் மற்ற ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களையும் நம்மாழ்வார் திருவாக்காலே பெற்றார். நம்மாழ்வார் நமக்கு ஆழ்வார் + ஆசாரியன் ஸ்தானத்தை வகிக்கிறார். நம் பூர்வாசாரியார்கள் நம்மாழ்வார் அவயவங்கள் தான் மற்ற ஆழ்வார்கள் என்று நிறுவியிருக்கிறார்கள். நம்மாழ்வாரின் அருளிச் செயல்கள் குறிப்பாகத் திருவாய்மொழி பகவத் விஷயம் என்று உயர்ந்த இடத்தில் இருக்கிறது. நம்மாழ்வாருக்கு வேதம் தமிழ் செய்த மாறன் என்று கூறுவர். பெருமாள் ஆழ்வாரின் நாக்கில் உட்கார்ந்துகொண்டு

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வெளியிட்ட மூன்றாம் பதிப்பு !

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வெளியிட்ட மூன்றாம் பதிப்பு ! ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தியுடன்,  ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை போன்ற ஆழ்வார்கள் ஆசாரியர்களின் திருநட்சத்திரமும் ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என்பது போல அமையத் திருமங்கை ஆழ்வார் வர்ணிக்கும் கிராமம் போல ஸ்ரீரங்கபட்டினம் பெலகோலாவில் வசிக்கும் ‘ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்’ இருப்பிடத்துக்குச் சென்று வந்தது இனிய அனுபவம். .  ’அந்தியம் போதில் அரியுருவாகி’ என்று பெரியாழ்வார் கூறிய படி அந்திசாய ஆஜர் ஆன சமயம்,’ ‘பாரதத் தேசம் சுபிட்சமாக’ இருக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை முன் வைத்து,  தேவலோகத்தில் நடைபெறும் மஹா யக்ஞம்(யாகம்) போன்று விமர்சையாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது. ’சார்ங்க முதைத்த சரமழையுடன் பூர்ணாஹுதி முடிவு பெற்று, கோயிலில் மங்கள ஆர்த்தி நடைபெற ’சுந்தரர் நெருக்க, விச்சாதரர் நூக்க’ கூட்டத்தின் ஓட்டைகளில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் முழுமையாகச் சேவை சாதிக்க, மெதுவாகக் கூட்டத்தில் ஊடுருவி முன் வரிசையில் ஸ்ரீராம் ஸ்வாமிகளிடம் ‘இன்று ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் மூன்றாம் பதிப்பு நம் நரசிம்மர் வெளியிட வேண்ட

சித்திர ராமாயணத்தின் சரித்திரம்

 சித்திர ராமாயணத்தின் சரித்திரம்  ’அந்தக் கால’ விகடன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் திருப்திப்படுத்தும். பல வருடங்களாக அதில் பிஸ்ரீ எழுதிய சித்திர ராமாயணம் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவல். பல பழைய புத்தகக் கடை, வாட்ஸ்ஆப் குழுக்கள் என்று பல வருடங்களாக தேடி அலைந்தேன். அந்த நூலைக் குறித்துச் சிறு குறிப்பு  பி. ஸ்ரீநிவாச்சாரி என்ற பி.ஸ்ரீ 1944 - முதல் 1957 வரை 13 வருடங்கள் தொடர்ந்து கம்ப ராமாயணத்தை ’சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் வெளிவந்தது. சில பக்கங்களைத் திரு பசுபதி அவர்களின் வலைப் பதிவில் படித்த போது என்னைப் போலவே அவரும் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று அறிந்து. அவரிடம் எங்கே கிடைக்கும் என்று கேட்டதற்கு  ”கிட்டாது ! பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்....  வர்த்தமானன் விளம்பரம் கொடுத்தனர்... பிறகு வரவில்லை.... 'சக்தி' விகடன் சுருக்கி வெளியிடத் தொடங்கியது.... பிறகு ஆரண்யக் காண்டத்துடன் நின்று விட்டது... நானும் கேட்டுச் சலித்து விட்டேன்.... என்னிடம் இருந்த சில அத்தியாயங்களை வெளியிட்டு விட்டேன். ....உங்களுக்கு வர்த்தமானனில் யாரேனும் தெரிந்தால்.... கேட்டுச் சொல்லுங்கள் ...”

இனிய இராமானுச நூற்றந்தாதி

இனிய இராமானுச நூற்றந்தாதி ( கீழே வரும் இனிய இராமானுச நூற்றந்தாதி  108 பாசுரங்களின் சரமாக, ஒவ்வொரு வரியிலும் ‘இராமானுசன்’ என்ற வார்த்தையுடன் கிட்டதட்ட அந்தாதி சாயலில் இருக்கும். பிழைகளை பொறுத்தருள வேண்டும்) 1. அலர்மேல்மங்கை உறையும் மார்பனைப் பாடிய நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றிய இராமானுசனின் நாமங்களைச் சொல்லு உள்ளமே! 2. உள்ளத்தில் திருமங்கை ஆழ்வாரை வைத்திருக்கும் இராமானுசனின் சீல குணத்தை அறிந்துகொள் மனமே! 3.  மனமே! இதை அறிந்துகொண்டால் இராமானுசனின் அடியவர்களுக்குத் தொண்டு செய்யும் பேறு கிடைக்கும் 4. கிடைத்த பேறு ராமானுஜரின் திருவடி அதனால் திருமாலுடைய திருவடி அருள் பெற்று குறைகள் நீங்கும். 5. குறைகள் நீங்க நமக்குக் கிடைக்கும் இராமானுசன் என்ற பெரும் செல்வம் 6. பெரும் செல்வமான இராமானுசனைப் பற்றிய நூற்றந்தாதியை நாம் பக்தியுடன் பாடுவோம் தமிழ் மொழியில் 7. மொழிகளைக் கடந்த புகழுடைய கூரத்தாழ்வானின் திருவடிகளைப் பற்றினால் செருக்கு குழியில் விழாமல் தப்பிவித்து மேலும் இராமானுசனின் புகழ் பாடி இருள் நீங்கும் நம் மனத்தில். 8. மனத்தில் எப்போதும் பொய்கை ஆழ்வாரை வைத்திருக்கும் இராமானுசனே என் ஞான ஒளி விள

தான் உகந்த திருமேனி

தான் உகந்த திருமேனி எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் கத்யத்ரயம்  சாதித்து, கோயிலில் பல மாறுதல்களைச் செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு அவர் இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அசுயை அவர்களைக் கொலை செய்யவும் தூண்டியது. அவரது மாதுரகத்தில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தைத் திருக்காவேரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார். கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்சணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடிப் பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்ம

தானான திருமேனி

தானான திருமேனி  ஸ்ரீராமானுஜர் பல திவ்வியதேசங்களுக்குச் சென்றிருந்தாலும், அவர் பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்தது ஸ்ரீரங்கத்தில் தான். ஸ்ரீபெரும்புதூர்/காஞ்சி அவருடைய பிறந்த வீடு என்றால், ஸ்ரீரங்கம் அவர் புக்ககம் என்று கொள்ளலாம். ”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். கோயிலில் பல சீர்திருத்தங்களைச் செய்து ”ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா” என்று இன்றும் அதை நாம் அதைப் போற்றிக்கொண்டு இருக்கிறோம். ஸ்ரீராமானுஜரை எதிர் கொண்டு அழைத்து ‘உடையவர்’ என்ற திருநாமம் கிடைத்த இடம் திருவரங்கம்.   ஆயிரம் கால் மண்டபம் பல விசேஷங்களைக் கொண்டது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் வழியாக நம் பெருமாள் ஆழ்வார்கள், புடைசூழ வீற்றிருக்கும் மண்டபம். எதிரே உடையவர் தானான திருமேனி சன்னதி.  ஸ்ரீராமானுஜர் பரமபதித்த பின்பு அவர் ஸ்ரீரங்கத்திலேயே அதுவும் கோயிலுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காகப் பெரியபெருமாள் தம்முடைய வசந்த மண்டபத்தையே கொடுத்து அங்கேயே அவருடைய சரம திருமேனியை திருப்பள்ளிப்படுத்த நியமித்தார்.  ஸ்ரீராமானுஜர் திருப்பள்ளிப்படுத்தப் பெற்ற இடமே(பிருந்தாவனம்) தற்போது உடையவர் சன்னதி

தான் உகந்து, தமர்களுக்கு அளித்த திருமேனி !

தான் உகந்து, தமர்களுக்கு அளித்த திருமேனி ! சிறு வயதில் என் அப்பா ஸ்ரீராமானுஜருடைய மூன்று முக்கியமான திருமேனி குறித்து அடிக்கடி சொல்லுவார். சுவாரசியமாக இருக்கும் . அந்த மூன்று திருமேனிகளின் படத்தை ஒன்றாக ஃபிரேம் போட்டு அதற்குக் கீழே  1 தமர் உகந்த(மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம்),  2 தான் உகந்த(ஸ்ரீபெரும்புதூர்),  3 தான் ஆன திருமேனி(ஸ்ரீரங்கம்) என்று எழுதி மாட்டியிருந்தேன்.  மேல் உள்ள வரிசைப் படி உடையவரின் திருமேனிகளை நமக்குக் கிடைத்தது. அதாவது முதல் திருமேனி மேல்கோட்டை, அடுத்து ஸ்ரீபெரும்புதூர், பிறகு ஸ்ரீரங்கம்.  இந்தப் பெயர்கள் எல்லாம் கொஞ்சம் குழப்பும். நினைவு வைத்துக்கொள்ளச் சுலபமான வழி ‘தமர்’ என்ற வார்த்தையைப் பிடித்துக்கொள்ளுங்கள்.  முதல் திருவந்தாதியில் ‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்று பொய்கையாழ்வார் கூறுகிறார். ‘தமர்’ என்றால் அன்பர்கள்/அடியார்கள் என்று பொருள். ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்குப் பயணமாவதற்கு ஆயத்தமான போது அவருடைய சீடர்கள் ஸ்ரீராமானுஜரைப் பிரிய வேண்டுமே என்று வருத்தமுற்றார்கள். ‘தேவரீரைப் பிரிந்து எப்படி நாங்கள் வாழ்வது? எங்களையும்

அயோத்தி ஸ்ரீராம் லல்லா தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அயோத்தி தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடியேனின் ஆசாரியரான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் இந்தக் குரோதி வருடத்தில் நல்லதே நடக்கும்; எல்லாவிதமான மனோரதங்கள் நிறைவேறும்… என்று அருளாசி வழங்கிய அதே வாரம் அயோத்தியா சென்று வந்தேன்.  வந்தவுடன், உற்றார் உறவினர்கள் எல்லோரும் அணிநகர் அயோத்தியில் குழந்தை ஸ்ரீராமர் சௌக்கியமா என்று கேட்கவில்லை,  ‘எப்படி சேவித்தீர்கள் ? திருப்பதி போலக் கூட்டமா ? தள்ளிவிடுகிறார்களா ?’  என்று வினவினார்கள்.  அதற்குக் காரணம் எல்லோருடைய மனோரதமும் அயோத்தி சென்று ஸ்ரீராம் லல்லாவை தரிசிக்க வேண்டும் என்பது தான். நம்  புண்ணிய பூமியான பாரதத் தேசத்தில் நம் வாழ்நாளில் அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் அவருக்கு ஒரு கோயில் என்பது 500 வருட இந்தியர்களின் மனோரதம். சென்ற சோபக்ருத் ஆண்டு தை மாதம் 8 ஆம் நாள் (ஜனவரி 22ஆம் ) அன்று ப்ராணப் பிரதிஷ்டை (ஸம்ப்ரோக்ஷணம்) இனிதே நடைபெற்றது.  ஆண்டாளின் ‘மனத்துக்கு இனியான்’ வீற்றிருக்கும் கோயில், பாரத மக்களின் மனங்களைப் பூட்டிய ’மனோ’ரதமாக  ப்ராணப் பிரதிஷ்டை அன்று காட்சி அளித்தது. அதன் பின் குழந்தை ஸ்ரீராமரின் ஆச்சரியமான அர்ச்சாவதாரத் த