தானான திருமேனி
ஸ்ரீராமானுஜர் பல திவ்வியதேசங்களுக்குச் சென்றிருந்தாலும், அவர் பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்தது ஸ்ரீரங்கத்தில் தான். ஸ்ரீபெரும்புதூர்/காஞ்சி அவருடைய பிறந்த வீடு என்றால், ஸ்ரீரங்கம் அவர் புக்ககம் என்று கொள்ளலாம். ”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். கோயிலில் பல சீர்திருத்தங்களைச் செய்து ”ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா” என்று இன்றும் அதை நாம் அதைப் போற்றிக்கொண்டு இருக்கிறோம். ஸ்ரீராமானுஜரை எதிர் கொண்டு அழைத்து ‘உடையவர்’ என்ற திருநாமம் கிடைத்த இடம் திருவரங்கம்.
ஆயிரம் கால் மண்டபம் பல விசேஷங்களைக் கொண்டது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் வழியாக நம் பெருமாள் ஆழ்வார்கள், புடைசூழ வீற்றிருக்கும் மண்டபம். எதிரே உடையவர் தானான திருமேனி சன்னதி.
ஸ்ரீராமானுஜர் பரமபதித்த பின்பு அவர் ஸ்ரீரங்கத்திலேயே அதுவும் கோயிலுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காகப் பெரியபெருமாள் தம்முடைய வசந்த மண்டபத்தையே கொடுத்து அங்கேயே அவருடைய சரம திருமேனியை திருப்பள்ளிப்படுத்த நியமித்தார்.
ஸ்ரீராமானுஜர் திருப்பள்ளிப்படுத்தப் பெற்ற இடமே(பிருந்தாவனம்) தற்போது உடையவர் சன்னதியாக இருக்கிறது. அங்குப் பிரதிஷ்டை செய்யப்பெற்ற திருமேனிக்குக் கீழே தான் அவர் திருப்பள்ளிப்படுத்தப்பட்டுள்ளார். அங்கே பிரதிஷ்டை செய்யப் பெற்ற திருமேனி அவர் உபயோகித்த வஸ்திரங்கள் மற்றும் பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டு ’தானான திருமேனி’ என்று வழங்கப்பெறுகிறது.
துரதிர்ஷ்டவசமாக முகநூலில் மற்றும் அல்லாமல், முக்கிய ஊடகங்களிலும் இதைக் குறித்து தப்பான செய்திகள் உலாவந்துகொண்டு இருக்கிறது.
- சுஜாதா தேசிகன்
6.5.2024
இன்னும் ஸ்பாஷ்டமாக கூறலாம்.அது ஸ்ரீராமானுஜர் திருமேனி அல்ல என சொல்ல வேண்டும்
ReplyDeleteஉடையவர் தன் திருக்கரங்களால் செய்தது தான், நாம் இப்போது காணும் திருமேனி உருவம் (சிலை) என்றும் சொல்லப்படுகிறதே, அது நிஜமா?
ReplyDelete