ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வெளியிட்ட மூன்றாம் பதிப்பு !
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தியுடன், ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை போன்ற ஆழ்வார்கள் ஆசாரியர்களின் திருநட்சத்திரமும் ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என்பது போல அமையத் திருமங்கை ஆழ்வார் வர்ணிக்கும் கிராமம் போல ஸ்ரீரங்கபட்டினம் பெலகோலாவில் வசிக்கும் ‘ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்’ இருப்பிடத்துக்குச் சென்று வந்தது இனிய அனுபவம். .
’அந்தியம் போதில் அரியுருவாகி’ என்று பெரியாழ்வார் கூறிய படி அந்திசாய ஆஜர் ஆன சமயம்,’ ‘பாரதத் தேசம் சுபிட்சமாக’ இருக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை முன் வைத்து, தேவலோகத்தில் நடைபெறும் மஹா யக்ஞம்(யாகம்) போன்று விமர்சையாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது. ’சார்ங்க முதைத்த சரமழையுடன் பூர்ணாஹுதி முடிவு பெற்று, கோயிலில் மங்கள ஆர்த்தி நடைபெற ’சுந்தரர் நெருக்க, விச்சாதரர் நூக்க’ கூட்டத்தின் ஓட்டைகளில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் முழுமையாகச் சேவை சாதிக்க, மெதுவாகக் கூட்டத்தில் ஊடுருவி முன் வரிசையில் ஸ்ரீராம் ஸ்வாமிகளிடம் ‘இன்று ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் மூன்றாம் பதிப்பு நம் நரசிம்மர் வெளியிட வேண்டும்” என்றேன். யோசிக்காமல் நான்கு ஆயிரத்தையும் ஆசையுடன் கவர்ந்து இளஞ்சிவப்பு பட்டுத்துணியில் அலங்கரித்து ஸ்ரீநரசிம்மர் திருவடியில் வைத்து அருகில் அமர்ந்து இருக்கும் ஆழ்வார் ஆசாரியர்களின் ஆசியுடன் ஸ்ரீ உ.வே பட்டணா ஸ்வாமிகளின் திருக்கரத்தால் திருத்துழாய் பிரசாதத்துடன் கிடைக்க.. இவை எல்லாம் சில நிமிடங்களில் நடந்து முடிந்தது.
-சுஜாதா தேசிகன்
23.5.202
சில மணித்துளி அனுபவத்தை பெருக்கி பிரசாதமாக அருளிய நுமக்கு பல்லாண்டு
ReplyDelete