Skip to main content

Posts

Showing posts from 2017

அஹோபிலத்தில் நம்முடை நம்பெருமாள்

ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் 750வது திருநட்சத்திரத் அன்று காலை அஹோபிலத்தில் இருந்தேன் ( அக்டோபர் 1, 2017 ) அஹோபிலம் என்றவுடன் நவ நரசிம்மர்கள் நினைவுக்கு வருவார்கள். தசாவதாரத்தில் நரசிம்ம அவதாரத்துக்கு தனி சிறப்பு உண்டு. ஒரே சமயத்தில் மனித ரூபம், மிருக ரூபம் இரண்டையும் இணைத்துக்காட்டியது நரசிம்ம அவதாரத்தில் மட்டுமே. ஹிரண்யன் கேட்ட வரம், பிரகலாதனின் நாராயண பக்தி பற்றி எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பெருமாள் ஏன் சிம்ம ரூபத்தை எடுத்துக்கொண்டார் ? புலி, கரடி என்று ஏதாவது ஒரு மிருக ரூபத்தை எடுத்துக்கொண்டிருக்கலாமே ? ஏன் சிங்கம் ? யோசித்துக்கொண்டே ஒண்ணரை நாளில் எப்படி ஒன்பது நரசிம்மர்களையும் சேவிக்க போகிறோம் என்று சுற்றி இருந்த மலையை பார்த்த போது மலைப்பாக இருந்தது.

அயோத்தியின் மனத்துக்கு இனியான்

அயோத்தியின் மனத்துக்கு இனியான் ! விக்கிபீடியாவில் அயோத்தியா பற்றி குறிப்பு இப்படி இருக்கிறது - ‘is an ancient city of India, believed to be the birthplace of Rama’ - அதாவது ஸ்ரீராமர் பிறந்த இடம் என்று ‘நம்பப்படுகிறது.’ அக்டோபர் 10 இரவு. பேருந்தில் தூங்கிக்கொண்டு இருந்தபோது “அயோத்தி வந்தாச்சு!” என்று எழுப்பப்பட்டேன். வெளிக்காற்று முகத்தை வருடிய நேரத்தில் எங்கிருந்தோ ராம பஜனை கேட்டது. டியூப் லைட் வெளிச்சத்தில் சில குரங்குகள் தென்பட்டன. மறுநாள் காலை சரயூ நதியில் குளிக்கச் சென்றபோது, பெரிய சைஸ் குலோப் ஜாமுன் போல் சூரியன் என்னை வரவேற்றது. சூரியோதயத்தைப் பார்ப்பதா குளிப்பதா என்ற தடுமாற்றத்தைத் தாண்டி, சூரியோதயத்தில் சரயூவில் மூழ்கி ரசித்தேன். ‘ஸ்ரஸ்-யூ’ என்பதையே சரயூ என்று நாம் கூறுகிறோம். அதாவது பிரம்மாவின் மனமே உருகி ஒரு பெரிய நதியாக மாறியதாம். படம்: (அயோத்தியா சரயு நதி) முக்தி தரும் ஷேத்திரங்கள் ஏழு. அவந்திகா - பாதங்கள், காஞ்சிபுரம் - இடுப்பு, துவாரகா - நாபி, மாயாபுரி (ஹரித்வார்) - இருதயம், மதுராபுரி - கழுத்து, காசி - மூக்கு, அயோத்தி - தல

மரப் பட்டை சொல்லும் கதை

படத்தில் பார்க்கும் இந்தச் சின்ன மரப் பட்டை பற்றி தெரிந்துகொள்ள சற்றே பெரிய கட்டுரை படிக்க வாசகர்களை அழைக்கிறேன். “கர்நாடகா” என்றவுடன் நினைவுக்கு வருவது ”காவிரி”. ஆழ் மனதில் ஸ்ரீரங்கத்தின் வரண்ட காவிரி மனதில் தோன்றி “அவர்கள்” திறந்துவிடவில்லை என்று தோன்றுவதை தவிர்க்க இயலாது. தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம் ? கர்நாடகா இருக்கும் திக்கில் இரண்டு அடி வைக்கலாம். காரணம் இருக்கு. பாகவதத்தில் ’பக்தி’ என்ற இளமையான பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் - ஞானம், வைராக்கியம். பக்தி இளமையுடன் இருக்க, குழந்தைகள் கிழவர்களாக இருப்பதைக் கண்ட நாரதர் வியப்புடன் ஏன் என்று விசாரிக்க, அதற்குப் பக்தி கூறிய பதில் இது. “நான் இளமையோடுதான் இருந்தேன். நான் பிறந்தது தமிழகத்தில். கர்நாடகத்தில்தான் வளர்ந்தேன். பிறகு அங்கிருந்து மஹாராஷ்டிரத்தை அடைந்து அங்கிருந்து குஜராத் … என்று பல இடங்களுக்குச் சென்ற எனக்கு வயதாகிவிட்டது. கூடவே வந்த ஞானமும், வைராக்கியத்துக்கும் வயதானது. கடைசியாக யமுனைக் க

கேசவா !

“இந்தப் பாட்டை கேட்டுப்பாருங்க” என்று இந்த லிங்க் இன்பாக்ஸில் எட்டிபார்த்தது ( https://www.youtube.com/watch?v=IFo4LTOuG9U ) கேசவாய நமஹ … மாதவாய நமஹ என்று பாடல் முழுவதும் பெருமாளின் நாம வேள்வி பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஓர்  mesmerizing அனுபவம். பாடலில் சேசவாய, மாதவாய என்று வருகிறது ஆண்டாள் திருப்பாவை முப்பதாம் பாட்டு நினைவுக்கு வந்தது. அதில் ”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை” என்று நாமங்களை மாற்றிப் பாடுகிறார். ஆண்டாள் செய்தால் அதற்குக் காரணம் ஏதாவது இருக்கும் !. ’கதை கதையாம் காரணமாம்’  என்பது போல நமக்குத் தெரிந்த கூர்ம அவதார கதையை ஆமை வேகத்தில் வேகமாகச் சொல்லி முடிக்கிறேன். ஸ்ரீவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரம். அமிர்தத்தை எடுக்க  தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை மந்தாரமலையினை அச்சாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர் அப்போது மந்தாரமலை கீழ்நோக்கி இறங்கப் பெருமாள் கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து உதவினார் என்பது உங்களுக்குத் தெரிந்த கதை. வீட்டில் போர் போடும் போது சேறு, களிமண் எல்லாம் வருவது போல பெருமாளின் முதுகின் மீது மந்தார மலையினை மத்தாக நிறுத்தி தேவர

பெங்களூருவில் தியாகராஜர்

பெங்களூருவில் தியாகராஜர் என்னுடைய சின்ன வயதில் பலருடைய உபன்யாசங்களுக்கு என் தகப்பனார் அழைத்துச் செல்வார். அருமையான தமிழில் புகுந்து விளையாடுவார்கள். ”இராமன் என்ன செய்தான் தெரியுமா ?” என்று பட்டிமன்றத்தில் பேசுவது போலவே இருக்கும். ராமாயணம், மஹாபாரதம் கதைகள் தெரிந்தது ஆனால் பக்தி வளரவில்லை. ஒரு முறை ஐஸ் அவுஸ் பக்கம் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு என் அப்பாவுடன் சென்றிருந்தேன். பக்த மீரா, சூர்தாஸ் பற்றிய அவர் உபன்யாசத்தின் போது கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. இதே இரண்டு சொட்டு கண்ணீர் என் பையனுக்கு வரவேண்டும் என்று அவனுடன் நேற்று ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் இசை நாடகத்துக்கு என் பையனுடன் சென்றிருந்தேன். நாடகத்தில் ஒரு காட்சி. இரவோடு இரவாகத் தியாகராஜ ஸ்வாமிகள் நித்தியம் ஆராதனை செய்யும் ஸ்ரீராம விக்ரகத்தை அவர் மூத்த அண்ணன் காவிரியில் போட்டுவிட, மறுநாள் காலை தியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகத்தைக் காணாமல் துடிதுடிக்க அந்தக் காட்சி முடிந்த பின் மேடையில் லைட் மெதுவாக fadeout ஆகி முழுவதும் இருட்டாக... அரங்கில் நிசப்தம். அந்தச் சமயம்.. அர